Skip to main content

விடுமுறையில் இருப்பவன்

அடையாள அட்டை

கைக்குட்டை

கடிகாரம் இப்படி

ஏதாவதொன்றை

மறந்து வைத்துவிட்டு

அலுவலகம் வருவது

எனக்குப் பழக்கமாயிருந்தது

இன்று நடந்ததோ

எல்லாவற்றையும்விட உச்சம்

என்னையே

மறந்து வைத்துவிட்டு

வந்துவிட்டேன்!

Comments

அட்டகாசம் !