நேற்று (17.04.2020) நிஸகர்தத்தா பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் பதிவை இன்று வெளியிடுகிறேன். ஆங்கிலத்திலிருந்து தமிழில் : அழகியசிங்கர்) ( Sri Nisargadatta Maharaj எழுதிய 1 am that' என்ற புத்தகமும், அவரைப்பற்றியும் என் நண்பரும், கவிஞருமான எஸ்.வைத்தியநாதன் மூலம் தெரியவந்தது. என் நண்பர் நேரில் அவரை தரிசித்திருக்கிறார். இப்புத்தக படிக்க வேண்டுமென்று நினைத்தபோதெல்லாம், தமிழில் மொழிபெயர்க்க வேண்டுமென்றும் நினைத்துக் கொள்வேன். என் விருப்பப்படியே தமிழில் மொழிபெயர்த்துள்ளேன்.) ஸ்ரீ நிஸர்கதத்தா மஹாராஜின் வாழ்க்கைக் குறிப்புகள் : பிறந்ததேதியைக் குறித்து கேட்கும்போது, நான் பிறக்கவே இல்லை என்று பதில் அளித்தார் மஹாராஜ். அவரைப்பற்றி எழுதுவது அவ்வளவு எளிதான விஷயமாகத் தெரியவில்லை . அவருடைய சில மூத்த உறவினர்களும், நண்பர்களும் அவர் மார்ச் மாதம் 1897-ல் பிறந்திருப்பதாகச் சொன்னார்கள். அவருடைய இயற்பெயர் மாருதி. அவருடைய தந்தை, ஷிவ்ராம்பன்ட் ஏழை. அவர் பம்பாயில் ஒரு வீட்டில் பணியாளாகப் பணிபுரிந்தவர். அதன்பின் கான்டல்கானில் ஒரு சிறிய கிராமத்தில் விவசாயியா...