Skip to main content

Posts

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடி பதில் - 5

அழகியசிங்கர் 1. நீங்கள் யார்? ரமணர்தான் நான் யார் என்ற விசாரணையில் இறங்கினார்.  என்னைப் பார்த்து நீங்கள் யார் என்று கேட்டால் என்ன அர்த்தம்.  நான் உங்களைக் கேட்கிறேன். நீங்கள் யார்? 2. இப்போது என்ன புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறீர்கள்? தமிழவனின் ஆடிப்பாவைபோல என்ற நாவலில் 204வது பக்கம் படித்துக்கொண்டிருக்கிறேன்.  அந்த நாவலில் வரும் காந்திமதி என்ற பெண்ணைப் பார்க்க விரும்புகிறேன். 3.  யாருக்கு இந்த முறை சாகித்திய அக்காதெமி பரிசு கிடைக்கும். யாருக்கு என்று தெரியாது.  ஆனால் பலர் க்யூவில் நின்று கொண்டிருக்கிறார்கள். 4. உங்கள் பத்திரிகையில் வரும் கதை, கவிதை, கட்டுரையை யாரெல்லாம் படிக்கிறார்கள்.  யாரெல்லாம் என்பது தெரியாது.  ஒருவர் நிச்சயமாகப் படிக்கிறார். அது நான்தான். 5. துயரத்தின் உச்சம் என்ன? இன்னொரு துயரம். 6. நின்றுகொண்டே வாசிக்கப் போவதாக ஒரு திட்டம் வைத்திருக்கிறீர்களே? ஆமாம்.  கடந்த சில ஆண்டுகளாக நான் தரையில் அமருவதில்லை.  தரையில் பாயைப் போட்டுக்கொண்டு படுத்துக்கொள்வதுமில்லை.  டைன...

நீங்களும் படிக்கலாம் - 32

அழகியசிங்கர் பின் நவீனத்துவம் என்றால் என்ன? என்ற பெயரில் சமீபத்தில் மறைந்த எழுத்தாளர் 'எம் ஜி சுரேஷ்' ஒரு புத்தகம் எழுதி உள்ளார்.  அப் புத்தகத்தை எல்லோரும் வாங்கி வாசித்து அறிவை விருத்திச் செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.  நான் இதுவரை படித்த இதுமாதிரியான கோட்பாடு ரீதியாக எழுதப்பட்ட புத்தகங்களில் தெளிவாக எழுதப்பட்ட புத்தகங்களில் இதுவும் ஒன்று. உண்மையில் இது ஒரு பாடப் புத்தகம் என்று கூட சொல்லலாம்.  தமிழ் இலக்கியம் படிக்கும் ஒவ்வொரு மாணவனும் இதுமாதிரியான புத்தகத்தைப் படிப்பது அவசியம் என்றும் நினைக்கிறேன். இந்தப் புத்தகத்தின் ஆரம்பத்திலிருந்து எம் ஜி சுரேஷ் பின் நவீனத்துவத்தைப் பற்றி எழுதிக்கொண்டு போகிறார்.   போமோ என்றால் என்ன என்று சுரேஷ் முதலில் ஆரம்பிக்கிறார்.  போமோ என்கிற இந்த இரண்டெழுத்துப் பதம் போஸ்ட் மாடர்னிசத்தைக் குறிக்கிறது. போஸ்ட் மாடர்னிசம் என்று அழைக்கப்படும் பின் நவீன்த்துவத்துக்கு இப்போது வயது முப்த்தியெட்டு ஆகிறது என்கிறார். நான் உடனே உங்களை 'அதிகாரமும் பின் நவீனத்துவமும்' என்ற ஒன்பதாவது அத்தியாயத்திற்கு அழைத்துக்...

கவிதையைப் பற்றிய சில சிந்தனைகள்...1

அழகியசிங்கர் 1. எப்படி கவிதையைப் புரிந்து கொள்வது? மனதால்தான் புரிந்துகொள்ள முடியும் 2. ஒரு கவிதையை கவிதையா என்பது எப்படித் தெரிந்து கொள்வது? கவிதையைப் படித்துப் புரிந்துகொள்வதுதான் ஒரே வழி.  கவிதையைப் படிக்கப் படிக்க மனம் பக்குவம் அடையும்.  மனம் பக்கவமடைந்தால் கவிதையும் புரியும். 3. ஒரு கவிதை சரியில்லை அல்லது சரி என்று எளிதாக சொல்லிவிடலாமா? சொல்லி விடலாம். 4. ஆனால் சரியில்லாத கவிதை என்று எதுவுமில்லை இல்லையா? சரியில்லாத கவிதை என்று எதுவும் இல்லை.  படிக்கிற மனதிற்கு கவிதை எப்படி ஏற்றுக்கொள்ளப் படுகிறது என்பதுதான் முக்கியம். 5. கவிதை நூலிற்குப் பரிசு கொடுப்பது பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? ஒரே ஒரு புத்தகத்திற்குத்தான் பரிசு கொடுக்க முடியும்.  அப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிற புத்தகம் எந்த அளவிற்கு மற்ற கவிதைப் புத்தகங்களை விட சிறப்பாக இருக்க முடியும் என்று கண்டுபிடிப்பது சிரமம். 6. ஏன் கவிதைப் புத்தகங்கள் விற்க முடியவில்லை? ஏகப்பட்ட கவிதை புத்தகங்கள் வெளிவருவதால், எந்தப் புத்தகம் வாங்கி வைத்துக்கொள்வது என்பதில் குழப்பம் ஏற்படுகிறது. 7. ...

அசோகமித்திரனின் காந்தியைப் பற்றி ஒரு கவனம்

அழகியசிங்கர்  அசோகமித்திரனின் காந்தி கதை அவருடைய மற்ற எல்லாக் கதைகளை விட வித்தியாசமான கதை என்று எனக்குத் தோன்றுகிறது.  ஒருவர் இக் கதையைப் படிக்கும்போது ஒருவருக்கு இயல்பாக தோன்றக் கூடியது, இக் கதை காந்தியைப் பற்றிய கதையா அல்லது இரு நண்பர்களைப் பற்றிய கதையா அல்லது ஒரு ஓட்டலில் சர்க்கரைப் போடாத காப்பியை குடிக்காமல் வைத்துக்கொண்டிருக்கும் ஒருவரின் கதையா என்ற சந்தேகம் எழாமல் இருக்காது.  இக் கதையை இப்படி மூன்று விதமாக யோசிக்கலாம்.  ஒருவர் ஒரு காபி சாப்பிட ஒரு  அசைவ ஹோட்டலுக்கு வருகிறார்.  காபி ஒன்றை ஆர்டர் செய்கிறார்.  அந்தக் காபியில் சர்க்கரை வேண்டாம் என்கிறார்.  பின் அதைக் குடிக்காமல் வைத்துக்கொண்டிருக்கிறார். கதை ஆரம்பத்தில் இப்படி ஆரம்பிக்கிறது.   'அன்று காபி அவனுக்கு மிகவும் கசப்பாக இருந்தது.  கசப்பு அவனுக்கு என்றுமே பிடித்தமானதொன்று.' இப்படி ஆரம்பிக்கிற இக் கதை காப்பியைப் பற்றி முதலில் மட்டும் சொல்லிவிட்டு கதை நடுவில், 'ஒரு இடத்தில் காபிக் கோப்பை மீது உட்கார வந்த ஒரு ஈயைச் சட்டென்று விரட்டினான்.  அரைக் கோப...

புத்தக அறிமுகம் 1

அழகியசிங்கர்   அழகியசிங்கரின் இரண்டாவது கவிதைத் தொகுதியின் பெயர்தான் வினோதமான பறவை என்ற கவிûத் தொகுதி.  ஆரம்பத்திலிருந்து வெளியிடப்பட்ட சிறு சிறு கவிதைத் தொகுதிகள் ஆன யாருடனும் இல்லை, தொலையாத தூரம் எல்லாம் ஒன்றாக்கி அழகியசிங்கர் கவிதைகள் என்ற தொகுதியை 2006ஆம் ஆண்டு கொண்டு வந்துள்ளார்.  அதைத் தொடர்ந்து கொண்டு வரப்பட்ட தொகுதிதான் 2013ல் வெளிவந்த வினோதமான பறவை என்ற தொகுப்பு.  70 கவிதைகள் கொண்ட தொகுப்பு நூல் இது. 110 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தின் விலை ரூ. 80.   மாடுகள் வழியை மறித்துக்கொண்டு நின்ற மாடுகளிடம் கேட்டேன் : போகட்டுமா என்று... நீ நகரப் போகிறாயா நாங்கள் நகர வேண்டுமா என்றன அவைகள் வால்களை ஆட்டியபடி 

மலர்த்தும்பியும் நானும்

மலர்த்தும்பியும் நானும் அழகியசிங்கர் 1979ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு பத்திரிகை உதயமானது.  மலர்த்தும்பி என்பதுதான் அந்தப் பத்திரிகையின் பெயர்.  பெயரைப் பார்க்கும்போது இது ஒரு சிறுவர் பத்திரிகை போல் தோன்றும்.  உண்மையில் இது இலக்கியப் பத்திரிகை.  32 பக்கங்களில் க்ரவுன் அளவில் பத்திரிகை முடிந்து விடும்.  அதில் கவிதைகள் கதைகள் எல்லாம் உண்டு.  இதன் ஆசிரியர் ஸ்ரீதர்-சாமா என்கிற என் ஒன்றுவிட்ட சகோதரர்.   இதில்தான் முதன்முதலாக என் கவிதைகள் பிரசுரமாயின.  அக் கவிதைகளை இப்போது எடுத்துப் படிக்குமபோது ஆச்சரியமாக இருக்கிறது.       இந்த மலர்த்தும்பியைத் தொடர்ந்துதான் என் பயணம் சிறுபத்திரிகைகளுடன்  ஆரம்பித்தது.   எதிர்பாராதவிதமாய் இந்தப் பத்திரிகை என் கண்ணில் தட்டுப்பட்டது.  என் ஆசைக்கு ஒரு 32 பிரதிகள் அச்சடித்து வைத்தக்கொண்டேன். 1979ல் இப் பத்திரிகையின் விலை ரு.50 காசு.   இப்போது அச்சடித்த இந்தப் பத்திரிகையின் விலை ரூ.9.  இதோ என் கவிதைகளை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.  இக் க...

திருவாசகமும் நானும் - ஒளிப்படம் 3

அழகியசிங்கர் இது மூன்றாவது உரை.  முதல் இரண்டு உரைகளை ரசித்தவர்கள் இதையும் ரசிப்பார்கள் என்று நினைக்கிறேன்.   இந்த உரையைக்  கேட்பவர்கள் திருவசாகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தால், இந்தக் கூட்டம் நடத்துவதற்கான அர்த்தத்தைக் கொடுக்கும் என்று நினைக்கிறேன்.