Skip to main content

Posts

இன்று அவர் நினைவு நாள்.

இன்று அவர் நினைவு நாள்.   அழகியசிங்கர் ஆத்மாநாமை நான் முதன் முதலாக நண்பர் வைத்தியுடன்தான் சந்தித்தேன்.  என்னை ஆத்மாநாமிற்கு அறிமுகப்படுத்தினார் வைத்தி. ழ வெளியீடாக வந்திருந்த காகிதத்தில் ஒரு கோடு, அவரவர் கை மணல், சூரியனுக்குப் பின் பக்கம் என்ற மூன்று கவிதைத் தொகுதிகளை வாங்கினேன்.  காகிதத்தில் ஒரு கோடு என்ற புத்தகத்தில் ஆத்மாநாமின் கையெழுத்தைப் போடும்படி கேட்டுக்கொண்டேன். அன்று ஆத்மாநாம் நான் வைத்தி மூவரும் ராயப்பேட்டையில் உள்ள ஆனந்த் வீட்டிற்குச் சென்றோம்.  அதன்பின்,  சாந்தி தியேட்டர் பக்கத்தில் உள்ள ஒரு துணிக்கடைக்குச் சென்றோம்.  ஆனால் ஒன்றும் வாங்கவில்லை.  ஏன் அங்கு சென்றோம் என்பது புரியாத புதிர்.  அவருடைய நிஜம் என்ற கவிதையைப் பற்றி விஜாரித்தேன். அவர் பதில் சொன்னது ஞாபகத்தில் இல்லை. அந்தக் கவிதை இதோ: நிஜம் நிஜத்தை நிஜமாக நிஜமாக நிஜம் நிஜத்தை நிஜத்தை நிஜமாக நிஜம் நிஜமே நிஜமோ நிஜம் நிஜமும் நிஜமும் நிஜமாக நிஜமோ நிஜமே நிஜம் நிஜம் நிஜம் நிஜம் இரண்டாவது முறையாக நான் ஆத்மாநாமை இலக்குக்...

நீங்களும் படிக்கலாம் 22

அழகியசிங்கர்  22) வேடிக்கைக் கவிதைகள்.. போன ஆண்டு பேயோன் என்ற எழுத்தாளரைப் பற்றி ஒரு இலக்கியவாதி சிலாகித்துப் பேசியதை அறிந்து யார் இந்தப் பேயோன் என்று யோசிக்கத் தொடங்கினேன்.  எனக்கு அதுவரை தெரியாத பெயராக இருந்தது.  செப்டம்பர் மாதம் மூன்றாம் தேதி 2015 ஆம் ஆண்டு பேயோன் என்பவரின் இரண்டு புத்தகங்களை வாங்கினேன்.  காதல் இரவு என்ற அவருடைய கவிதைத் தொகுதியும், பேயோன் 1000 என்ற சமகால ட்விட்டர் நுண்பதிவு புத்தகமும்.  வேற புத்தகங்கள் அவருடையது எதாவது உள்ளதா என்பது தெரியவில்லை.  இப்புத்தகங்களில் ஒன்று 2011 ஆம் ஆண்டிலும் இன்னொன்று 2009ஆம் ஆண்டிலும் ஆழி வெளியீடாக வந்துள்ளன.  கவிதைத் தொகுதிக்கு ஏன் காதல் இரவு என்ற பெயரை சூட்டினார் என்று யோசித்துக் கொண்டு அந்தப் புத்தகத்தைப் புரட்டினேன்.  சமீப காலத்தில் நான் படிக்க விரும்புகிற கவிதைத் தொகுதிகளை அவ்வளவு சுலபமாக நெருங்க முடிவதில்லை.  ஆனால் பேயோன் கவிதைத் தொகுதி வித்தியாசமான தொகுதியாக இருந்தது.  அவர் கவிதைகளில் தென்படும் அங்கத உணர்வு ரொம்பவும் இயல்பாக செயல்படுகிறது.  கவிதையி...

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்................

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்................ அழகியசிங்கர் தளம 14வது இதழில் இருந்து பொன் குமாரின்  பூனையைப் பற்றி எழுதிய கவிதையை அளித்துள்ளேன்.  தளம் பத்திரிகை பாரவி என்ற தனிப்பட்ட மனிதரின் முயற்சியால் தொடர்ந்து நடந்து வருகிறது.  அவருக்கு என் வாழ்த்துகள்.  எந்தச் சிறுபத்திரிகை என்றாலும் தனிப்பட்ட படைப்பாளியின் முயற்சியின் பேரிலேயே நடப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.  கூட்டாக நடத்த வேண்டுமென்று நினைத்தால் சிறுபத்திரிகை நின்றுவிடும்.  அதற்கு உதாரணமாக கசடதபற, பிரஞ்ஞை போன்ற பத்திரிகைகளைக் குறிப்பிடலாம். சிறப்பாக தனிப்பட்ட மனிதரின் முயற்சியால் நடந்த பத்திரிகை சி சு செல்லப்பாவின் எழுத்து. 120 இதழ்கள் வரை வந்துள்ளன.  தளம் இப்படி பாரவி என்ற தனிப்பட்வரின் முயற்சியில் 14 இதழ்கள் வரை கொண்டு வர முடிந்துள்ளது.  இதே அவர் கூட்டாக சிலரை சேர்த்தால் இது சாத்தியம் இல்லாமல் போயிருக்கும்.  ஏன் நானே என் தனிப்பட்ட முயற்சியால் விருட்சம் பத்திரிகையின் 99வது இதழ்கள் வரை கொண்டு வந்துள்ளேன். 100வது வரும் இந்தத் தருணத்தில் என்னால் தளம் மாதிரி ...

நானும் பார்க்கிறேன் சினிமாக்களை......

அழகியசிங்கர் டாம் டைக்வேர் எடுத்த ரன் லோலா ரன் என்ற படம் சற்று வித்தியாசமானது.  இது ஒரு சுவாரசியமான படமும் கூட.  படம் முழுவதும் லோலா என்பவள் ஓடிக்கொண்டே இருக்கிறாள்.  லோலாவின் ஓட்டத்தை ஒட்டி இந்தப் படத்தை எடுத்துள்ளார்.  ஓட்டத்துடன் காலத்தையும் கட்டிப் போடுகிறார். லோலாவின் காதலன் மானி அவளுக்குப் போன் செய்கிறான்.  அவளை  போனில் திட்டுகிறான்.  குறிப்பிட்ட நேரத்திற்கு லோலா அவனைச் சந்திக்காமல் சென்றதால், மானி சோதனை அதிகாரிகளிடமிருந்து தப்பிக்க கடத்தல் தொழிலில் கிடைத்த வைரங்களை ஓரிடத்தில் ஒப்படைத்து பணத்துடன் வருகிறான்.  அவன் எதிர்பார்த்த இடத்தில் லோலா சரியான நேரத்தில் வராததால் பை நிறைய பணத்துடன் ரயிலில் பயணம் செய்ய நேரிடுகிறது.  சோதனை அதிகாரிகளைப் பார்த்தபோது, எடுத்துக்கொண்டு வந்த பணப்பை ரயிலில் ஒரு மூலையில் வைத்துவிட்டு இறங்கி ஓட வேண்டியிருந்தது.  அவனுடன் அந்தச் சமயத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு தாடிக்காரர் பணப்பையை எடுத்துக் கொண்டு விடுகிறார்.   அந்தப் பணப் பையில் இருந்த பணத்தை திருப்பி கடத்தல்காரர்களிடம்  கொ...

தோன்றும் கவிதை வரிகள்

அழகியசிங்கர் காலையில் வாக் போகும்போது எனக்கு கவிதை வரிகள் தோன்றினால் வீட்டில் உள்ள கர்னாடக வங்கி டைரியில் எழுதி வைப்பேன்.  தேதி எழுதுவேன்.  நேரம் எழுதுவேன்.  ஆனால் யாரிடமும் இதுமாதிரி எழுதுவதை காட்ட மாட்டேன்.  கிட்டத்தட்ட 30 க்கு மேல் கவிதைகள் எழுதியிருப்பேன். நானே படித்து ரசிக்கக் கூடிய கவிதைகள் இவை.  அவற்றில் ஒன்று ஜெயமோகன் என்ற தலைப்பில் ஒரு கவிதை.  இதோ உங்களுக்குப் படிக்க அளிக்கிறேன். ஜெயமோகன் ஆயிரக்கணக்கான பக்கங்களில் மஹாபாரதம் எழுதிக்கொண்டே போகிறார் படிக்க படிக்க வளர்ந்துகொண்டே போகிறது எது மாதிரியான எழுத்தளார் இவர் எப்படியெல்லாமோ யோஜனை செய்கிறார் என்பது ஆச்சரியம்தான் எழுத்து அவரை எழுதிக்கொண்டே போகிறதா ஆனால்  என்ன செய்வது அவர் எழுதும் வேகத்திற்கு என்னால் படிக்க முடியவில்லையே.......

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்

அழகியசிங்கர் உமாபதியின் வெளியில இருந்து வந்தவன் என்ற கவிதைத் தொகுதி விருட்சம் வெளியீடின் நான்காவது தொகுதி.  வெளிவந்த ஆண்டு நவம்பர் 1991. கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் ஓடி விட்டன.  அவரும் என்னைப் போல் வங்கியில் பணிபுரிந்தவர்.  இப்போது எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை.  அவருக்கு வயது எழுபதாவது இருக்கும். இந்தத் தொகுதிக்கு சுந்தர ராமசாமி முன்னுரை எழுதியிருக்கிறார். அவருடைய கவிதைகள் குழப்பமில்லாமல் ஆழ்ந்து யோசனை செய்ய வைக்கும். இந்தத் தொகுதி வரும்போது ஒரு முறை என்னைப் பார்க்க வீட்டிற்கு வந்திருக்கிறார்.  அன்று ஒரு பண்டிகை தினம்.   நான் வீட்டில் அவருக்கு விருந்தளித்தேன்.  இப்போது அவர் முகமே எனக்கு மறந்து விட்டது.   ஓசைகள் என்ற இக் கவிதைக்கு ஓவியர் பாஸ்கரன் ஒரு பூனை படம் வரைந்திருக்கிறார்.  பூனை படங்களை வரைவதில் பாஸ்கரன் திறமையானவர் என்று கேள்விப்ப்ட்டிருக்கிறேன். இத் தொகுப்பை திரும்பவும் கொண்டு வர உத்தேசித்துளளேன். உமாபதி ஓசைகள் ஓசைகளின் உபத்திரவம்  தாங்க முடியாமல் போச்சு இன்ன இடமென்றில்லாமல் வீட...

ராம் காலனி என்ற மர்மக் குறுநாவல்

அழகியசிங்கர் அப்போது நாங்கள் போஸ்டல்காலனி முதல் தெருவில் குடியிருந்தோம்.  இன்னும் கூட ஞாபகம் இருக்கிறது.  தீபாவளி அன்றுதான் நடந்தது.  எங்கள் வீடு இருந்த தெரு முனையில் உள்ள ஒரு வீட்டில் ஒரு ரிட்டையர்டு ஸ்கூல் டீச்சர் தனியாக இருந்தாள்.  வயதான பெண்மணி. அந்தப் பெண்மணிக்கு சொந்தமான தனி வீடு. அந்தப் பெண்மணி கொலை செய்யப்பட்டிருந்தாள். பயங்கரமான அதிர்ச்சி அது.  இவ்வளவு அருகில் ஒரு கொலை நடந்திருக்கிறது என்பதை என்னால் நம்ப கூட முடியவில்லை.   கொலை செய்தவன் அந்தப் பெண்மணியின் நகைக்காக கொலை செய்து விட்டான்.  தனிமையில் இருக்கும் அந்தப் பெண்மணி நகைக்காக கொலை செய்ய வருபவனிடம், கேட்டவுடன் நகைகளைக் கழட்டிக் கொடுத்திருக்கலாம்.  அந்தப் பெண்மணி எரிர்ப்பு தெரிவித்ததால் இது மாதிரி நிகழ்ந்து விட்டது. போலீசுகாரர்கள் திறமையானவர்கள்.  ஒருவாரத்தில் அந்தக் கொலையாளியைப் பிடித்து விட்டார்கள். நம் அருகில் இது மாதிரி நிகழ்ச்சி நடக்கும்போது நம்மை அறியாமலேயே ஒரு அதிர்வு ஏனோ ஏற்படுகிறது.  மனம் நிம்மதி இல்லாமல் தவிக்கிறது.  நாங்கள் அன்று அப்பட...