Skip to main content

Posts

குட்டிக்கதைகள்

ஏழு பேர் ஆர். ராஜகோபாலன் அங்கே மொத்தம் ஏழு பேர் இருந்தார்கள். அவர்களில் பெரியவனாகத் தெரிந்த ஒரே ஒரு பையன் மட்டுமே கால்சிராயும் சட்டையும் அணிந்திருந்தான். மற்றவர்களில் சிலர் மேலேயோ கீழேயோ மட்டு஧மை அணிந்திருந்தார்கள். இரு பொடியன்கள் ஒன்றுமே இல்லாது இருந்தார்கள். ஒரு சிறுமிகூட ஒரு கிழிந்தபாவாடை ஒன்றையே இடுப்பு வரை கட்டியிருந்தாள். அவள் மடியிலிருந்த குழந்தை வாயில் விரலைப் போட்டுக்கொண்டு அவள் மார்பில் தலையை சாய்த்துக் கொண்டிருந்தது. இவன் உட்கார்ந்த திண்ணைக்கு நான்கு வீடுகளுக்கப்பால் அவர்கள் இப்போது வந்திருந்தார்கள். நன்றாகவும் தெளிவாகவும் அவர்கள் செய்கை இவனுக்குத் தெரிந்தது. கீழே கிடந்த ஒரு அறுந்த மாலையை அவர்களில் ஒருவனுக்குப் போட்டுக் கைதட்டி பெருஞ்சத்தம் செய்து கொண்டிருந்தார்கள். ஒரு பையன் நழுவி விழும் கால்சிராயை ஒரு கையில் பிடித்துக்கொண்டே கூச்சல் போட்டுக்கொண்டிருந்தான். அவர்களுக்குச் சுற்றுப்புற பிரக்ஞையே இல்லாதது போல இவனுக்குப் பட்டது. பொழுது போகாமல் வெளியே வந்து உட்கார்ந்திருந்த இவனுக்கு அது மிகுந்த வேடிக்கைக்குரியதாகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூட இருந்தது. ஒரு அயலானின் ப...

கையறு நிலை

வானவெளியெங்கும் நட்சத்திரக் கூட்டங்கள் இடைவெளியின்றி ஜொலிக்கின்றன காற்று வெளியெங்கும் பூ வாசம்மன வெளியை மயக்குகின்றன வெளியினூடே வெளிச்சம் பாய்ச்சும் கிரணங்கள் முயங்கிக் கிடக்கின்றன பேரவஸ்தையானதொரு விசும்பல் ஆகாயமெங்கிலும் எதிரொலிக்கின்றன குட்டியை பறிகொடுத்த யானையின் பிளீறிடல் சத்தம் வனமெங்கிலும் ஆக்ரமிக்கின்றன இரவுக்கு முத்தம் தந்து வழியனுப்பி வைக்கின்றன குழந்தைகள் தனது வாழ்வினூடே குட்டி குட்டி கதைகளை சேகரித்து வைத்திருக்கின்றார்கள் பாட்டிமார்கள் அநீதியை எதிர்த்து சமர் செய்யாமல் கையறு நிலையில் நின்று கொண்டிருந்தார் கடவுள் அவரது கட்டற்ற கட்டற்ற அற்புதசக்தியை கடன் வாங்கிப் போயிருந்தது சாத்தான்.

கடவுள் ஆடிடும் ஆட்டம்

கடவுளுக்கு முன்னதான ஜாதகக் கட்டங்களில் இடையறாது சுழலும் சோழிகள் திரும்பி விழுகின்றன சதுரங்க ஆட்டங்களில் சிப்பாய்களை இழந்த ராஜாக்கள் பயந்திருக்கின்றனர் ராணிகள் அருகில். வண்ணம் மாறிவிழும் சீட்டுக்கள் கோமாளியாக்கிக் கொண்டிருக்கிறது பிரித்தாடும் கடவுளை. மனிதர்களின் ஆட்டத்தின் சூட்சுமங்கள் புரியாது தெறித்தோடுகிறார் மனிதர்களுடனாடும் கடவுள். o ஒரு விளையாட்டின் இடைவேளையில் தேநீர் அருந்தும் கடவுளை கடவுளைச் சந்தித்தேன். இருவருக்கும் பேசுவதற்கு ஒன்றுமில்லை புன்னகைத்தோம் பிரிந்தோம். அவர் சொல்லாத உண்மைகளும் நான் கேட்காத கேள்விகளும் ஒன்றுடன் ஒன்று பேசிக்கொண்டிருந்தன பின்பு. o மரணத்தறுவாயில் என்னை வரச் சொல்லியிருந்தார் கடவுள் ரகசியம் எதாவது உடைக்கப்படலாம் என்றோ காதல் எதாவது சொல்லப்படலாம் என்றோ புலம்பல்கள் சேரலாம் என்றோ நினைத்திருந்தேன். நான் போய் சேருவதற்குள் கடவுள் போய்சேர்ந்திருந்தார். o கடவுள் பொம்மைகளை வைத்து விளையாடிய குழந்தைகளை பழிவாங்குவார் பிறிதொருநாள்.

பூனைகள்.....பூனைகள்.......பூனைகள்.....பூனைகள்...28

பூனையின் பிடிவாதம் எழுத எழுத… எழுத மறுத்தப் பேனா முனை காகிதப் பாதையில் எங்கோத் தட்டிற்று. ஓடும் மோட்டார் சக்கரத்தில் சிக்கிய சேலைத் துண்டாய் பேனா முனையின் இரு கம்பீர கம்பங்களைப் பிளந்து அதற்குள் ஒரு காகிதத் துணுக்கு. ஜீரணிக்க இயலாமல் கக்கிய மைக்குள் மிதந்து வந்த ஒரு பூனை பிடிவாதமாய் வரைமுறையின்றி கத்திற்று ஒரு எலியினை வரை வரை என்று. குமரி எஸ். நீலகண்டன்

கானல்

கா ற்றோடு கூடிய அடர்த்தியான சாரல் மழை ஊரையே ஈரலிப்புக்குள் வைத்திருந்தது. மேகக் கருமூட்டம் பகல் பொழுதையும் அந்திவேளையைப் போல இருட்டாக்கியிருந்தது. விடுமுறை நாளும் அதுவுமாய் இனி என்ன? உம்மா சமைத்து வைத்துள்ள சுவையான சாப்பாட்டினைச் சாப்பிட்டுவிட்டு அடிக்கும் குளிருக்கு ஏதுவாய்ப் போர்த்தித் தூங்கினால் சரி. வேறு வேலையெதுவும் இல்லை. ஒருமுறை வெளியே வந்து எட்டிப்பார்த்தேன். வீட்டுக்கு முன்னேயிருந்த வயல்காணி முழுதும் நீர் நிறைந்து வெள்ளக் காடாகியிருந்தது. நாளை கொக்குகளுக்கு நல்ல நண்டு வேட்டை இருக்கிறது என எண்ணிக் கொண்டேன். இந்தக்கிழமை போயா தினத்துக்கும் சேர்த்து மூன்று நாட்கள் விடுமுறை. மழை வெளியே எங்கும் இறங்கி நடமாட விடாது போலிருக்கிறது. "நானா உங்களுக்கு போன்'' தங்கை சமீனா கொண்டு வந்து நீட்டினாள். " யாரு ? " " வஜீஹா மாமி ஊட்டுலீந்து " ஹாரிஸாக இருக்க வேண்டுமென நினைத்துக் கொண்டேன். அவன் என்னுடன் கூடப்படித்த நெருங்கிய சினேகிதர்களில் ஒருவன். கொழும்பில் வேலை செய்யும் அவனும் விடுமுறைக்காக வீட்...

எதையாவது சொல்லட்டுமா / 28

எதையுமே எப்படி வெற்றி கொள்ள முடியும் என்பதை சிலர் அறிந்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். எந்திரன் படத்தின் விளம்பரத்தை நான் டிவியில் பார்த்தவுடன், உடனே அந்தப் படத்தைப் போய்ப் பார்க்க வேண்டும் என்ற எண்ணமே என்னிடம் எழவில்லை. இப்போதெல்லாம் சினிமாவை விழுந்து விழுந்து முன்பு மாதிரி பார்ப்பதில்லை. பார்க்காமலே கூட இருந்து விடுவேன். பின் படத்தைப் பார்த்துவிட்டு எந்தக் கருத்தையும் குறிப்பிடுவதில்லை. பொதுவாக சினிமாப் படங்களெல்லாம் அபத்தமாகத்தான் எனக்குத் தோன்றும். அதில் எந்த லாஜிக்கையும் கொண்டு வர முடியாது. நம்முடைய பொழுதுபோக்கிற்காகத்தான் அதைப் பார்க்கிறோம். சினிமாவில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள், அதில் பணிபுரியும் ஏராளமான தொழிலாளிகள் என்றெல்லாம் பார்க்கும் போது, சினிமா என்பது ஒரு அசுரரின் உலகத்தைச் சார்ந்ததாகத் தோன்றும். இந்த அசுரர் உலகத்தில் நடப்பதை வெறும் பார்வையாளனாகத்தான் பார்க்கிறோம். இந்த சலன உலகத்தை நாமும் பார்த்து சலனமடைகிறோம். குருதத் படம் ஒன்றை என் நண்பர் பார்த்துவிட்டு கண் கலங்கியதை நினைத்து வியந்திருக்கிறேன். வேறு நண்பர் ஒருவர் சிவந்த மண் என்ற ஒரு படத்தை 8 தடவைகளுக்கு மேல் பார்த்த...

விலகிப் போனவன்

பூக்களை ஏந்திக் கொண்டவன் வாழ்வின் இனிய நாதத்தைக் கற்றுத்தந்தவன் தனித்த பசிக்குச் சுய சமையலையும் விரக்தி நிரம்பிய ஏகாந்தப் பொழுதுகளில் மனதோடு இசைக்கப் பாடல்களையும் அருகிலிருந்து சொல்லித் தந்தவன் சொல்லியோ சொல்லாமலோ அன்பின் பிடியிலிருந்து யாரோவாகி அவன் நகர்ந்தவேளை தெரியாமலே போயிற்று இறுதியில் தெரிந்தது ஆழ்கிணறுகளின் பழுப்பு தோய்ந்த சிதிலங்களுக்கிடையில் துளிர்க்கும் பசுந்தளிர், சிறு மலர்களைப் போன்று பார்த்துப் பார்த்து மகிழும்படியான வாழ்வினை அவன் விட்டுச் செல்லாதது சிலவேளை வெயிலும் சிலவேளை மழை இருட்டுமாக இப்பொழுதெல்லாம் காலம் வாழ்வியலைக் கற்றுத்தருகிறது சிலவேளை பனியைத் தூவியும் சிலவேளை பழைய நினைவுகளைச் சுட்டி இம்சித்தும்