Skip to main content

Posts

Showing posts from 2022

விருட்சம் நடத்திய கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி - 47

 23.12.2022 அன்று மாலை - வெள்ளிக்கிழமை - மாலை 6.30 மணிக்கு   அழகியசிங்கர் நிகழ்ச்சி எண் - 47 முதல் நிகழ்வு எழுத்தாளர் சி.சு.செல்லப்பா சிறு கதைகளைக் குறித்து  1.  இந்திர நீலன் சுரேஷ் - அதனதன் வாழ்வில் 2.  பானுமதி  -  அர்த்தம் உண்டா 3.  நாகேந்திர பாரதி - அர்த்தமற்ற அமைதி இரண்டாம் நிகழ்வு ராஜேஷ் குமார் சிறுகதைகளைக் குறித்து  1.இந்திர நீலன் சுரேஷ் - ஒரு நதியின் மூன்றாவது கரை 2. பானுமதி - சத்தமில்லாத யுத்தம் 3. நாகேந்திர பாரதி - ஒரே ஒரு நாள் சிறப்பாக நடந்த இக்கூட்டத்தின் காணோளியை கண்டு களியுங்கள்.

95வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்

  சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 95வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி. வெள்ளிகிழமை (16.12. 2022) - மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது. ஒவ்வொருவரும் அவரவர் கவிதைகளை வாசித்தார்கள். கூடவே பாரதியார் கவிதைகளை வாசித்தோம். தமிழ்ச்செல்வி பிரபா பாரதியார் கவிதைகளைக் குறித்துப் பேசினார். முபின் சாதிகா குயில் பாட்டு குறித்துப் பேசினார். புனித ஜோதி ஆத்மாநாமின் நிஜம் கவிதையை குறித்து விளக்கினார். ஒவ்வொருவரும் பத்து நிமிடங்கள் கவிதை வாசித்தார்கள். கவிதை வாசிப்பவர்கள் 10 வரிகளிலிருந்து 20 வரிகளுக்குள் கவிதை வாசித்தார்கள். மற்றவர் கவிதைகளைக் கேட்டு ஆர்.வி.சுரேஷ் அவர்கள் கருத்துகளை வழங்கினார்

விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி நடைப் பெற்றது.

  09.12.2022 (வெள்ளிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு நிகழ்ச்சி எண் - 46 முதல் நிகழ்வு எழுத்தாளர் க.நா.சு சிறு கதைகளைக் குறித்து 1. சதுர்புஜன் - தேள் 2. பானுமதி - ஒரு கடிதம் 3. ரேவதி பாலு - புழுதித்தேர் இரண்டாம் நிகழ்வு எழுத்தாளர் நாரணோ ஜெயராமன் சிறு கதைகளைக் குறித்து. 1. SRC - பூட்ஸைக் கழற்றி 2. இராமச்சந்திரன் - எதிரே ஆகாயம் 3. ரம்யா - வாசிகள் அனைவரும் வருக! காணொளியைக் கண்டு களியுங்கள்.

விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி - 45

 வெள்ளிக்கிழமை (25.11.2022) - மாலை 7 மணிக்கு விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி நடைப் பெற்றது   நிகழ்ச்சி எண் - 45 முதல் நிகழ்வு எழுத்தாளர் எஸ்ஸார்சி சிறு கதைகளைக் குறித்து  1. இந்திர நீலன் சுரேஷ் - ஜரகண்டி 2. வளவ.துரையன் - செய்தவம் 3. நாகேந்திர பாரதி - எலி இரண்டாம் நிகழ்வு எழுத்தாளர் ஆர்.வெங்கடேஷ்  சிறு கதைகளைக் குறித்து. 1. மீனாட்சி சுந்தர மூர்த்தி - பெருங் கூட்டத்தில் ஒருவன் 2.  ராஜாமணி  -  கரைந்தவர்கள் 3. H N ஹரிஹரன் - குவிந்த வாய் அதன் காணொளியை ரசித்துப் பாருங்கள் 

93வது விருட்சம் சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கிய 93வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி.

  93வது விருட்சம் சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கிய 93வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி. வெள்ளிகிழமை - (18.11. 2022) - மாலை 6.30மணிக்கு நடைபெற்றது. தமிழ் ஒளியின் கவிதைகள் குறித்து அழகியசிங்கர் பத்து நிமிடங்களுக்குக் குறைவாகவே பேசினார். ந.பிச்சமூர்த்தியின் கவிதை ஒன்றை எடுத்து ந.பானுமதி பேசினார். கவிதை 10 வரிகளிலிருந்து 20 வரிகளுக்குள் கவிதை வாசித்தோம். நிகழ்ச்சியின் காணொளியை கண்டு மகிழுங்கள்

கொக்கு/ந.பிச்சமூர்த்தி

  படிகக் குளத்தோரம்  கொக்கு செங்கால் நெடுக்கு.  வெண்பட்டுடம்புக் குறுக்கு முடியில் நீரை நோக்கும்  மஞ்சள் கட்டாரி மூக்கு, உண்டுண்டு அழகுக் கண்காட்சிக்குக்  கட்டாயக் கட்டணம். சிலவேளை மீனும்  பலவேளை நிழலும்... வாழ்வும் குளம்  செயலும் கலை  நாமும் கொக்கு.  சிலவேளை மீனழகு  பலவேளை நிழலழகா?  எதுவாயினென்ன? தவறாது குளப்பரப்பில்  நம்மழகு -  தெரிவதே போதாதா?

92வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்

  அழகியசிங்கர் சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 92வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி. 04.11. 2022 அன்று - மாலை 6.30மணிக்கு நடைபெற்றது . ஒவ்வொருவரும் அவரவர் கவிதைகளை வாசித்தோம். கூடவே இன்குலாப் கவிதைகளையும் வாசித்தோம். . இன்குலாப் கவிதைகள் குறித்து அம்ஷன் குமார் உரை நிகழ்த்தினார்.

கவிதைத் தொகுப்பு நூல்கள்

  அழகியசிங்கர்   கவிதைத் தொகுப்பு நூல் முதன் முதலாக யார் கொண்டு வந்தார்கள்? இதைப் பற்றி யோசிக்கும்போது புதுக்கவிதை என்ற வகைமை தமிழில் முதன் முதலாக உருவானபோது, சி.சு செல்லப்பாதான் புதுக்குரல்கள் என்ற தொகுப்பு நூல் கொண்டு வந்தார். எழுத்து என்ற சிற்றேட்டில் வெளிவந்த புதுக்கவிதைகளைத் தொகுத்து சி சு செல்லப்பா வெளியிட்டுள்ளார். முதல் தொகுப்பு நூலாக அது இருக்குமென்று தோன்றுகிறது. கடந்த சில தினங்களாகப் ‘புதுக்குரல்கள்’ தொகுப்பை என் நூல் நிலையத்தில் தேடிக்கொண்டிருக்கிறேன்.  ஏனோ என் கண்ணில் அது தென்படவில்லை.  அதன்பின் எழுபதுகளில் புதுக்கவிதைத் தொகுப்பு நூல்கள்தான்   அதிகமாக வெளிவந்ததாகத் தெரிகிறது. ‘இலக்கியச் சங்க வெளியீடாக’ ‘புள்ளி’ என்ற தொகுப்பு நூல்  டிசம்பர் 1972ல்  வெளிவந்துள்ளது.  என் இலக்கிய நண்பர் ஒருவர் மூலம் ‘புள்ளி’ என்ற தொகுப்பு நூல் கிடைத்தது. அதைப் பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாக  இருந்தது. அந்த வடிவத்தில் ஒரு தொகுப்பு கொண்டு வர முடியுமா?  விரல்  சைஸில்.    அது மாதிரி ஒரு தொகுப்பு நூலை நானும்  கொண் வரவேண்டுமென்ற ஆர்வம் எனக்குள் ஏற்பட்டது.  திரும்பவும் புள்ளியை 2015ல் நானும் முயற்ச

விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி எண் - 42

எல்லோருக்கும் வணக்கம் , சகலமானவர்களுக்குத் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால், இரு கதைஞர்கள் குறித்து ( 1. ஆர்வி 2. ஜே.வி.நாதன்) 6 எழுத்தாள நண்பர்கள் உரை. அதன் காணொளியை கண்டு மகிழுங்கள் சிறப்பாக நடந்து முடிந்தது

91வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்

அழகியசிங்கர்  சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன்  வழங்கும் 91வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி 21.10. 2022  -  மாலை 6.30மணிக்கு சிறப்பாக நடந்து முடிந்தது  ஒவ்வொருவரும் அவரவர் கவிதைகளை வாசித்தார்கள்.  கூடவே கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை கவிதைகளும் வாசித்தார்கள்    .  கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை கவிதைகள்  குறித்து  ஆ. மீனாட்சி சுந்தரமூர்த்தி அவர்கள் பத்து நிமிடங்கள் உரை நிகழ்த்தினார்    இதன் காணொளியைக் கண்டு ரசியுங்கள் 

நேற்று எழுத்தாளர் சிவசங்கரியின் பிறந்த நாள்

  அழகியசிங்கர்  இலக்கியம் மூலம் இந்தியா இணைப்பு என்ற நான்கு பாகங்கள் கொண்ட புத்தகத்திற்க்காக நான் எழுத்தாளர் சிவசங்கரியை மதிக்கிறேன்.  இது  ஒரு  ஆசாத்தியமான முயற்சி. அவருடைய சிறுகதைகளை  விருட்சம் கூட்டத்தில் அலசினோம்.  அதை இங்கு மறுபடியும் பதிவு செய்ய விரும்புகிறேன்.  

விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி எண் - 42

  அழகியசிங்கர்   வெள்ளிக்கிழமை (14.10.2022)  மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடந்தது  அதன் காணொளியை ரசித்துப் பார்க்கவும்  எழுத்தாளர் கல்கி சிறு கதைகளைக் குறித்து  1. எஸ் ஆர் சி  - அருணாசலத்தின் அலுவல் 2. ஆர்க்கே - நம்பர் 888 3. சுரேஷ் ராஜகோபால் - தற்கொலை எழுத்தாளர் பஞ்சாட்சரம் செல்வராஜன் சிறு கதைகளைக் குறித்து. 1. இராய செல்லப்பா - பிராயச்சித்தம்  2. பானுமதி - தந்தை என் நோற்றான் 3. கலாவதி பாஸ்கரன் - கடைக்குட்டி தீராஜ்

90வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்

 அழகியசிங்கர் சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன்  வழங்கும் 90வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி சிறப்பாக 07.10.2022 வெள்ளி அன்று நடந்து முடிந்தது. ஒவ்வொருவரும் அவரவர் கவிதைகளை சிறப்பாக வாசித்தார்கள். கூடவே புதுக்கவிதையின் தந்தை ந.பிச்சமூர்த்தி கவிதைகளையும் வாசித்து மகிழ்ந்தார்கள். ந.பிச்சமுர்த்தி கவிதைகள்  குறித்து க.வை.பழனிசாமி  பத்து நிமிடங்கள்  சிறப்பாக உரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியை  காணொளியில் கண்டு மகிழுங்கள்.

இன்று ஞானக்கூத்தன் பிறந்த நாள்

  அழகியசிங்கர் 1980 ஆண்டிலிருந்து கடந்த 40 ஆண்டுகளாக ஞானக்கூத்தனை அறிவேன். அவரைச் சந்திக்கும் சந்தர்ப்பத்தை என் நண்பர் எஸ். வைத்தியநாதன் ஏற்படுத்திக் கொடுத்தார். வைத்தியநாதனை முதன் முதலாக ஒரு இலக்கியச் சிந்தனையின் ஆண்டு விழா அன்று சந்தித்தேன். அப்போதுதான் எனக்குப் பல நண்பர்களை வைத்தியநாதன் அறிமுகப்படுத்தினார். அவர் அறிமுகப்படுத்திய நண்பர்களில் ஒருவர்தான் ஞானக்கூத்தன். அவரைச் சந்திக்கும்போது நானும் கவிதை எழுதுபவனாகத்தான் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். அப்படி அறிமுகப்படுத்திக் கொள்வதில் எனக்குச் சற்று கூச்சமாக இருந்தது. ஞானக்கூத்தன் திருவல்லிக்கேணியில் வசித்து வந்தார். மேற்கு மாம்பலத்தில் இருக்கும் நான், ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை மாலை நேரத்தில் அவரைச் சந்திப்பது வழக்கம். நான் திருவல்லிக்கேணி போவதற்கு முன் மயிலாப்பூரில் உள்ள வைத்தியநாதனையும் அழைத்துக் கொண்டு போவேன். அப்போது நான் லாம்பி என்ற ஸ்கூட்டர் வைத்திருந்தேன். கடற்கரையில் திருவள்ளுவர் சிலைக்கு அருகில் எங்கள் சந்திப்பு நடக்கும். குறிப்பிட்ட நேரத்தில் அங்குப் பல நண்பர்களுடன் சந்திப்பது வழக்கம். கவிதையை மட்டுமன்றி உலகத்தில் நடக்கிற வ

விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி எண் - 41

  அழகியசிங்கர்  வரும் வெள்ளிக்கிழமை அன்று- (30.09.2022)  மாலை 6.30 மணிக்கு இரண்டு  எழுத்தாளர்களின் கதைகளை எடுத்துப் பேசினார்கள். 1. எழுத்தாளர் வைக்கம் முஹம்மது பஷீர் 2. எழுத்தாளர் இந்திரநீலன் சுரேஷ்

புத்தகம் அறிமுகம்...1

அழகியசிங்கர் 23ஆம் செப்டம்பர் மாதம் 6 புத்தகங்களை குவிகம் வெளியிட்டது.  அது ஒரு மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சி.   அன்று மதியம் டாக்டர் பாஸ்கரனிடமிருந்து ஒரு போன்.  'சார், மேடையில் என் புத்தகம் ஒன்றை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியுமா?' என்று கேட்டார். 'சரி' என்றேன்.  அன்றைய நிகழ்ச்சியில் எனக்கு முக்கியத்துவம் கிடைத்து விட்டது. டாக்டரின் புத்தகம் பெயர் 'குவிகம் கடைசிப் பக்கம் பகுதி ௨'. புத்தகத்தின் அமைப்பு கைக்கு அடக்கமாக இருந்தது. 185 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தின் விலை ரூ.200.  30 கட்டுரைகள் கொண்ட புத்தகம்.    குவிகம் மின்னிதழில் மாதம் ஒரு கட்டுரை எழுதித் தொகுத்தது.  நான் முழுப் புத்தகத்தைப் படிக்காவிட்டாலும் என்னால் ஓரளவு இந்தப் புத்தகம் பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது. இப்புத்தகத்தின் பெரும்பாலான கட்டுரைகள் ஏற்கனவே முகநூலில் வாசித்தித்திருக்கிறேன். என்றாலும் மொத்தப் புத்தகத்தையும் முழுவதும் படிப்பது தனி அனுபவம்தான்.  முதலில் சில கட்டுரைகளை நான் வாசிக்காமலில்லை.  பரணீதரன் என்ற தலைப்பில் பல துறைகளில் வித்தகராக இருந்த எழுத்தாளர் பரணீதரன் பற்றி எழுதியிர