Skip to main content

Posts

Showing posts from July, 2016

மனதுக்குப் பிடித்த கவிதைகள் 1

அழகியசிங்கர்  புத்தர் அழுதார் வெய்யில் யாரோ தினமும் ஒரு பூவைக் கொன்று புத்தரின் கையில் வைத்துவிடுகிறார்கள் விரல்கள் நடுங்க... பூ அதிர்வதாய் சொன்னேன் காற்றென்று காரணம் சொன்னார்கள் கடந்த வாரத்திலோர் நாள் புத்தர் அழுததாய் சொன்னபோது மழை என்று மறுத்தார்கள் நேற்று அதிகாலையிலும் கூட கண்ணீர் கசிவதாய் பதறினேன் பனித்துளிகள் என்று சிரித்தார்கள் மாலை நேரத்து மந்திர உச்சாடனத்தில் புத்தரின் விசும்பல் யாருக்கும் கேட்காமல் போக இன்றும் கூட யாரோ ஒர பூவைக் கொன்று. நன்றி : குற்றத்தின் நறுமணம் - வெய்யில் - கவிதைகள் - விலை : ரூ.80 - வெளியீடு : புது எழுத்து,  2/205 அண்ணா நகர். காவேரிப்பட்டினம் 635 112 தொலை பேசி : 98426 47101

விருட்சம் இலக்கியச் சந்திப்பு 22

அழகியசிங்கர் இந்தக் கூட்டம் விருட்சம் நடத்தும் 22வது கூட்டம்.  ஏன் இதுமாதிரி கூட்டங்கள் நடத்த வேண்டுமென்ற கேள்வியை நானே கேட்டுக்கொண்டேன்.  கீழ்க்கண்டவாறு அதற்கான பதில்களை சொல்ல விரும்புகிறேன் : 1. எழுத்தாளர்கள் அவர்களுடைய நண்பர்களை சந்திப்பதற்கு.   நான் வாசகர்கள் என்று சொல்வதைத் தவிர்க்கிறேன்; 2.  ஒரு படைப்பாளியின் படைப்புகளைப் பற்றிப் பேச; 3.  ஒரு படைப்பாளி அவர்களுடைய படைப்புகளைப் பற்றி அவர்களே அறிமுகப் படுத்திக்கொள்ள; 4. இதுமாதிரியான கூட்டங்களை எப்படி எதிர்கொள்வது என்று பார்வையாளர்கள் தங்களுக்குள் பயிற்சி எடுததுக்கொள்ள கடந்த 22 கூட்டங்களாக இதை ஓரளவுக்கு நடைமுறையில் சாத்தியப் படுத்த முயற்சி செய்துள்ளோம் என்று நினைக்கிறேன். இப்போது நடைபெறுவது பெருந்தேவியின் கவிதைகள் குறித்த கூட்டம். கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஞானக்கூத்தன் இனி இல்லை

அழகியசிங்கர் இன்றைய தினமணி இதழில் ஞானக்கூத்தன் குறித்து 'ஞானக்கூத்தன் இனி இல்லை' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி உள்ளேன். படிக்கவும். இன்னும் விரிவாக ஒரு புத்தகம் போடும் அளவிற்கு அவரைப் பற்றி எழுத முயற்சி செய்ய உள்ளேன்.  அதேபோல் நான், பிரமிள், விசிறி சாமியார் என்ற புத்தகத்தை 65 பக்கம் முடித்துள்ளேன்.  80 பக்கங்களில் அந்தப் புத்தகத்தை முடிப்பதாக உள்ளேன்.  

படித்ததில் பிடித்தது.....1

அழகியசிங்கர் புதுமைப் பித்தன் புதுமைப் பித்தன் இருந்த வீட்டைத் தாண்டிச் செல்லும் போது இந்த வீட்டு முன் கூடத்தில் வெற்றிலைச் செல்லமும் உற்சாகமுமாக எத்தனையோ கதைத்து எத்தனையோ நாட்கள் போக்கியாகி விட்டது. எத்தனையோ கதைகள் சொல்லி புஸ்தகங்கள் படித்து முடித்தாகி விட்டது ரெண்டு கப் காபிக்கு காசு இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டு காபியும் சாப்பிட்டுவிட்டு மீதி கையில் காசிருந்தால் வீட்டுக்கும் எதாவது வாங்கிக்கொண்டு பேசிக்கொண்டே திரும்பி வந்து உட்கார்ந்து பேசிப்பேசி பொழுதைத் தீர்த்த இடம் இது இரவாகியும் வீடு திரும்பாமல் பேச்சின் சுவாரஸ்யத்திலே இரவு பூரா தங்கிவிட்டு காலையில் காபி சாப்பிட்டு விட்டுத் திரும்புவதுண்டு ! ‘ இப்போது இந்த வீட்டுக்குள்ளே போனால் எங்கள் பேச்சை கேட்டிருந்த அந்த சாஷி பூதமான சுவர்கள் எங்கள் பேச்சை எனக்குத் திருப்பி சொல்லுமா...? சொல்வதாக வேண்டுமானால் நான் கதை யெழுதலாம் சுவர்கள் பேசாது. நன்றி கெட்ட சுவர்கள் - அவை வீட்டுக் காரன் கட்சி தான் - எழுத்தின் அருமை தெரியாதவை, உலகமே எழுத்துக்கு - நல்ல எழுத்துக்கு எதிரியாய் இருக்கும்பொழுது  - வேறு சொல்ல எ...

PLEASE ATTEND THE MEETING

DEAR FRIEND, PLEASE ATTEND THE MEETING WITHOUT FAIL. AFTER THE LAPSE OF 2 MONTHS VIRUTCHAM AGAIN CONDUCTS THIS MEETING. PL ATTEND WITHOUT FAIL. AZHAGIYASINGAR

ஒரு கதை ஒரு கவிதை கூட்டம் அல்லது ஐந்து பேர்கள் கூட்டம்

ஒரு கதை ஒரு கவிதை கூட்டம் அல்லது ஐந்து பேர்கள் கூட்டம் அழகியசிங்கர் இனி இக்கூட்டத்தின் பெயரை மாற்ற உள்ளேன்.  ஐந்து பேர்கள் கூட்டம் என்று.  ஒரு இடத்தில் கூடி ஐந்து பேர்கள் மட்டும் அமர்ந்து கதை கவிதைகள் வாசிக்கும் கூட்டமாக இது இருக்கும்.  பெரும்பாலும் போஸ்டல் காலனியில் உள்ள என் இடத்தில்தான் இருக்கும்.  இலக்கியக் கூட்டம் என்று (வர மாட்டார்கள் என்பதில் நம்பிக்கை உள்ளவன்) அதிகம் பேர்கள் வந்தால் சமாளிப்பது கடினம்.  ஞாயிற்றுக்கிழமை நடந்த கூட்டத்தில் நாங்கள் பேசியதை இங்கே ஆடியோவில் உங்களுக்கு பதிவு செய்து அனுப்பி உள்ளேன். கேட்டு உங்கள் கருத்துகளை தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். https://youtu.be/elDdL4WFsZ4

அங்கும் இங்கும் 4...........

அழகியசிங்கர் 24.07.2916 (சனிக்கிழமை) அன்று குவிகம் என்ற இலக்கிய அமைப்பு கதை சொல்லும் கூட்டம் ஒன்று நடத்தியது.  10 பேர்களுக்கு மேல் கதை சொன்னார்கள்.  எல்லோரும் உற்சாகமாக  சொன்னார்கள். ஒவ்வொருவரும் விதம்விதமாக கதை சொன்னது  நன்றாக இருந்தது.  முடிவில் ஒரு சிறுமி அவளுக்குத் தெரிந்த கதையைச் சொன்னாள். எனக்குத் தெரிந்து இரண்டு முக்கிய நண்பர்கள் கதை சொன்னதுதான் தனிப்படட முறையில் எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது.  ஒருவர் என்னுடன் கல்லூரியில் படித்த நண்பர்.  சுரேஷ் என்ற பெயர்.  அதேபோல் இன்னொருவர் உமா பாலு. அலுவலக நண்பர். அவருக்கு ஏற்பட்ட தனிப்பட்ட அனுபவத்தை உருக்கமாக விவரித்தார். இருவரும் தனிப்பட்ட அனுபவத்தை கதைபோல் சொன்னார்கள்.  ஆனால் இருவராலும் சொன்னதை கதையாக எழுத முடியுமா என்பது தெரியவில்லை.  எழுதுவது என்பது வேறு; கதை சொல்வது என்பது வேறு.  இதுமாதிரியான கூட்டத்திற்கு நிச்சயமாக அதிகமாக கூட்டம் வரும். ஏன்என்றால் பார்வையாளர்களே கூட்டத்தில் பங்கு பெறுகிறார்கள்.  விடாமல் தொடர்ந்து இலக்கியக் கூட்டம் நடத்தும் குவிகம் இலக்கிய அமைப்...

எனக்குப் பிடித்த தலையங்கம்....

அழகியசிங்கர்  அக்டோபர் 1988 ஆம் ஆண்டிலிருந்து 28வது இதழுடன் ழ என்ற பத்திரிகை நின்று விட்டது.  1978 ஆம் ஆண்டு மே மாதம் கவிதை மாத ஏடு என்ற பெயரில் ஆத்மாநாம் ஆசிரியர் பொறுப்பில் தொடங்கப்பட்ட இதழ்.  ஒவ்வொரு மாதமும் சரியாக வந்திருந்தால் 120 இதழ்கள் வரை வந்திருக்க வேண்டும்.  தமிழில் இதுமாதிரியான இதழ் தொடர்ந்து வராமல் போனது துரதிருஷ்டம் என்று கூட சொல்லலாம். ழ பத்திரிகை தொடர்ச்சியாக வராமல் போன தாமதத்தால் அதையே பார்த்து இன்னும் சில பத்திரிகைகள் உருவாகமல் இல்லை.  பிரம்மராஜனின் மீட்சி, ராஜகோபாலன் அவர்களின் மையம் என்ற பத்திரிகை, என்னுடைய விருட்சம் பத்திரிகை எல்லாம் ழ பத்திரிகையைப் பார்த்துதான் உருவாகி இருக்க வேண்டும். ஸ்வரம் என்ற பத்திரிகைக் கூட ழ மாதிரி இருக்கும். ழ பத்திரிகையைப் போல் எளிமையான பததிரிகையை நான் இதுவரை பார்த்ததில்லை.  கடைசி இதழான 28வது இதழ் வெளிவந்தபோது அது மாத இதழா காலாண்டு இதழா என்று குறிப்பிடப்பட வில்லை.   ழ வில் பொதுவாக கவிதைகளும், மொழிபெயர்ப்புக் கவிதைகளும், கவிதைகளைக் குறித்து கட்டுரைகளும் தொடர்ந்து வந்து கொண்...

ஓர் உரையாடல்

ஓர் உரையாடல்  அழகியசிங்கர் பால்கனியிலிருந்து வேடிக்கைப் பார்ததுக் கொண்டிருந்தார் அழகியசிங்கர்.  தெருவில் தூரத்தில் ஜெகனும், மோகினியும் வந்து கொண்டிருந்தார்கள்.  அவர்களைப் பார்த்து கையை ஆட்டினார்.  அவர்களும். வீட்டிற்குள் வந்தவுடன் முதல் கேள்வி ஜெகனிடமிருந்து.   ஒரு முக்கியமான விஷயத்திற்காகத்தான் வந்திருக்கிறோம். அழகியசிங்கர் :   என்ன?  மோஹினி :  100வது இதழ் நவீன விருட்சம் குறித்துப் பேசுவதற்குத்தான்.   அழகியசிங்கர் :  கூடிய விரைவில் வந்துவிடும்.  அதற்கான முயற்சியை கடுமையாக செய்து கொண்டு வருகிறேன்.  இதுவரை 150 பக்கங்கள் வரை டம்மி தயார் செய்து கொண்டிருக்கிறேன். ஜெகன் :  அப்படியென்றால் 200 பக்கங்கள் வரை வந்து விடுமா? மோஹினி :   இதுவரை நீங்கள் கொண்டு வராத அளவிற்கு பக்கங்கள் அதிகம் உள்ள விருட்சம் வெளிவருகிறதா? அழகியசிங்கர் :  கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் எனக்கே பயமாகத்தான் இருக்கிறது.  200 பக்கமா?  நான் எப்போதுமே மிகக் குறைவான பக்கங்களில் நம்பிக்கைக் கொண்டவன். ...

வடகிழக்கு மற்றும் தென்னிந்திய எழுத்தாளர்கள் சந்திப்பு

அழகியசிங்கர்  சாகித்திய அகாதெமி நடத்திய வடகிழக்கு மற்றும் தென்னிந்திய எழுத்தாளர்கள் சந்திப்பிற்கு இன்று சென்றேன்.  சிறுகதை வாசிப்பை அமர்ந்திருந்து கேட்டேன்.  அஸ்ஸôமியிலிருந்து மணிகுண்டல பட்டாச்சார்யா, மணிபுரியிலிருந்து ஹவோபம் சத்யபதி, தமிழிலிருந்து கீரனூர் ஜாஹிர் ராஜா தெலுங்கிலிருந்து சம்மெட உமாதேவி முதிலிய எழுத்தாளர்கள் அவர்கள் எழுதிய கதைகளை ஆங்கிலத்தில் வாசித்தார்கள்.   ஆங்கிலத்தில் வாசித்த எந்தக் கதையையும் உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை.  என் பக்கத்தில் அமர்ந்திருந்த கிருபானந்தன் என்ற நண்பர் புரிந்தது என்று தலை ஆட்டிக் கொண்டிருந்தார்.  எனக்கு சந்தேகம் அவருக்குப் புரிந்திருக்குமாவென்று.   தெலுங்குக் கதையை ஆங்கிலத்தில் வாசித்த விதம் படு மோசமாக இருந்தது. ஏன் இந்தக் கதைகளை எல்லாம் தமிழிலும் வாசிக்கக் கூடாது? வாசித்திருந்தால் ரொம்பவும் ரசித்திருக்கலாம்.  ஆங்கிலத்தில் கேட்க நரக வேதனையாக இருந்தது.    எனக்கு கூட்டம் திருப்தியாக இல்லாவிட்டாலும்,  சாகித்திய அகாதெமி கூட்டத்திற்கு வந்தால் எப்போதும் புத்தகம் வாங்காமல்...

விட்டுப் போன கவிதைகள்.....

விட்டுப் போன கவிதைகள்..... அழகியசிங்கர் நான் முதலில் யாருடனும் இல்லை என்ற கவிதைத் தொகுதி கொண்டு வந்தேன்.  அப்போது அந்தத் தொகுதியை யாரும் திட்டவில்லை.  தமிழவன், வெங்கட்சாமிநாதன், நகுலன், ஞானக்கூத்தன், ரிஷி பாராட்டி எழுதியிருந்தார்கள்.  அதன்பிறகு இன்னொரு கவிதைத் தொகுதி கொண்டு வந்தேன்.  தொலையாத தூரம் கவிதை நூலின் தலைப்பு.  பெரும்பாலோருக்கு அப்படி ஒரு தொகுப்பு வந்ததே தெரியவில்லை.  இந்த இரண்டு கவிதைத் தொகுதியில் உள்ள கவிதைகளைச் சேர்த்து இன்னும் கவிதைகளைச் சேர்த்து ஒரு முழுத்தொகுதியாக அழகியசிங்கர் கவிதைகள் என்ற புத்தகம் கொண்டு வந்தேன்.  ஓவியர் வரதராஜன் பிரமாதமாக அட்டைப் படம் அளித்திருந்தார்.  இந்தக் கவிதைத் தொகுதியைக் கொண்டு வரும் போது ஒரு பிரச்சினை ஏற்பட்டது.   மொத்தம் 180 கவிதைகள்.  ஒரு கவிதைத் தொகுதி 18ல் முடிவதில் எனக்கு விருப்பமில்லை.  அப்போது பிரமிளுடன் பேசிக் கொண்டிருந்ததால் 18ல் முடியும் எண் ஓமனின் எண்.   அது கவிதைத் தொகுதிக்கு நல்லதிலலை என்ற முடிவுடன், இன்னும் சில கவிதைகளைச் சேர்த்துக் கொண்டு வந்தேன. ...

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்  அழகியசிங்கர் இன்றைய கவிதையின் முன்னோடி க. நா. சு.  ஆனால் எல்லோரும் க நா சுவை மறந்து விடுகிறார்கள்.  அப்படிப்பட்ட ஒருவர் கவிதை ஒன்றை எழுதினாரா  என்பதுகூட பலருக்குத் தெரிவதில்லை.பூனைக் குட்டிகளைப் பற்றி க நா சு அற்புதமாக கவிதை எழுதியிருக்கிறார்.  அதைத்தான் இங்கு அளித்துள்ளேன். 'கவிதையின் சரித்திரத்தை நோக்கினால் அது மிகவும் சிக்கலான மொழிப் பண்பாட்டு மதச் சிக்கலிலிருந்து விடுபட்டு மொழிக்கு அப்பாற்பட்ட ஒரு சுதந்திரத்தை நாடியே செல்ல முயன்றிருக்கிறது என்று சொல்லத் தோன்றுகிறது.  குறுகிய அளவில் இலக்கணம், செய்யுள் போக்கு என்று ஏற்பட்ட விதிகள் மட்டும் மொழி எல்லைகள் அல்ல.  நல்ல கவிஞன் எவனும் இலக்கிய விதகளாலோ, செய்யுள் மரபிலோ தடுத்து நிறுத்தப்படுவதில்லை.  அதை சுலபமாகவே அவனால் மீறிவிட முடியும்.  ஆனால் மொழி, பண்பாடு, கலாச்சாரம், மதம் விதிக்கிற விதிகளை, எல்லைகளை மீறுவது அத்தனை சுலபத்தில் நடக்கிற காரியம் அல்ல என்றெல்லாம் குறிப்பிடுகிறார் க.நா.சு.  இன்றைய கவிதையின் தந்தை க நா சுதான்.   பூனைக்குட்டிகள்...

அங்கும் இங்கும் 3...........

அழகியசிங்கர்  ஒரு கதை ஒரு கவிதை கூட்டம் நடத்துவதாக இருந்தேன்.  திடீரென்று தமிழச்சி தங்கபாண்டியன் வீட்டு திருமண வரவேற்பு விழா ஞாபகத்திற்கு வந்தது.  கதை கவிதைக் கூட்டத்தை அடுத்த வாரம் தொடரலாம் என்று விட்டுவிட்டேன்.   வரவேற்பு நிகழ்ச்சியில் கூட்டம் என்றால் அப்படி ஒரு கூட்டம்.  மணமக்களை வாழ்த்த பல மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.  பல எழுத்தாள நண்பர்களைப் பார்த்தேன்.  என் பக்கத்தில் இரா முருகன் இருந்ததால் பேசிக்கொண்டே வந்தேன்.  நான் இதுவரை அவருடைய மூன்று நாவல்களை வைத்துக்கொண்டு ஒவ்வொன்றாகப் படிக்க நினைத்துக்கொண்டிருக்கிறேன்.   ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்து விட்டேன்.  திறமையான எழுத்தாளர். நான் தற்போது ஆங்கில நாவல்கள் சிலவற்றைப் படித்துக் கொண்டு வருகிறேன்.  ஒன்று  ITALO CALVINO  எழுதிய      IF ON A WINTER’S NIGHT A TRAVELER  இன்னொன்று   அதேபோல்    If Tomorrow comes என்று பரபரப்பாகப் பேசப்படும் எழுத்தாளரின்  புத்தகமும், அதேபோல் KISS  - ...
ஆடியோ ஒலிபரப்பு - ஒரு கதை ஒரு கவிதை கூட்டம் 10.07.2-16 அன்று நடந்த ஒரு கதை ஒரு கவிதை கூட்டத்தில் நாங்கள் பேசியதை ஒலிபரப்பு செய்துள்ளேன்.  உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

மறந்து போன பக்கங்கள்....

அழகியசிங்கர் தி சோ வேணுகோபாலனின்  கோடை வயல் என்ற தொகுதி மட்டுமல்ல, மீட்சி விண்ணப்பம் என்ற தொகுதியிலிருந்தும் கவிதைகளை மறந்து போன பக்கங்கள் என்ற தலைப்பில் புத்தகமாகக் கொண்டு வர எண்ணம். விசாரணை தத்துவம்தானே?  வெங்காயம்...! போடா! போ! மூடியதை மூடிப் பின்மூடி?....முடிவா?.... உரித்தால்?  மேலும் உரித்தால்? கண்ணீர் கொட்டும் முட்டாளுக்கு உருக்கம்; மூளை மோதினால் தலைக்குத் தேங்காய்! உனக்கும் எனக்கும்  முடிந்தால் இதயத்துக்கு மருந்து; அநேகருக்கு வயிற்றை நிரப்ப வேகும் கூத்துத்தான்! வெட்டித் தனமாய் வேடிக்கையாய் அட வீம்புக்குத்தான் வைத்தாலும் தோலுரிக்கும் தொல்லையின்றி வேறென்ன கண்டபயன்? முட்டிமோதி முடிந்தமட்டும் பார்த்து முக்கித் திணறி முடிவில் சிக்காத சிக்கல் என்று நடையைக் கட்டும் வேலை!

ஞாபகச் சிற்பம் என்கிற பிரம்மாராஜனின் கவிதைகள்.....

அழகியசிங்கர் பிரம்மராஜனின் ஞாபகச் சிற்பம் என்ற கவிதைத் தொகுதியை தற்செயலாக மிகவும் தற்செயலாகப் பார்த்தேன்.  1988 ஆம் ஆண்டு வந்த இந்தப் புத்தகத்தின் விலை ரூ 12 தான்.  தன்யா பிரம்மா பதிப்பகம் மூலம் வந்திருக்கிறது.  இதில் முக்கியம் நாகார்ஜøனனின் முன்னுரை.  அந்த முன்னுரையைப் பயன்படுத்த வேண்டுமென்றால் அவருடைய அனுமதியைப் பெற வேண்டுமென்று புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.   ஒருவர் பிரம்மராஜன் புத்தகத்திற்கு நாகார்ஜøனன் முன்னுரையைப் படிப்பதற்கு அலாதியான திறமை பெற்றவராக இருக்க வேண்டும். ஒரு காலத்தில் வேகம் என்றால் அதை பிரம்மராஜன் என்றுதான் குறிப்பிடுவார்கள்.  கவிதைகளாக எழுதிக் குவிப்பவர் பிரம்மராஜன்.  அழகான அவர் கையெழுத்தில் அவர் அனுப்பிய பல கவிதைகளைப் படித்திருக்கிறேன். ஆனால் சமீபத்தில் அவர் கவிதைகள் எழுதுகிறாரா என்பது தெரியவில்லை.  தன்னை கவிதை மூலம் வெளிப்படுத்திக் கொண்டவர், இப்போது மௌனமாக இருப்பது ஏன் என்று தெரியவில்லை.  அவர் கவிதை எழுதுவதோடல்லாம் இரண்டு முக்கியமான புத்தகங்களைக் கொண்டு வந்துள்ளார்.  ஒன்று ஆத்மாநாம...

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்

அழகியசிங்கர் ஒருநாள் காலையில் வாயில் ஒரு எலியைக் கவ்விக்கொண்டு  ஒரு பூனை எங்கள் அடுக்கக வளாகத்தில் நுழைந்து விட்டது. பூனையைத் துரத்தும்போது வாயில் வைத்திருந்த எலியைப் போட்டுவிட்டு ஓடிவிட்டால் என்ன செய்வது?  ஜாக்கிரதையாக பூனையை வெளியே எலியுடன் துரத்தவேண்டும்.  அப்படித்தான் மெதுவாக துரத்தி விட்டேன்.   நாயைவிட பூனை மனிதர்களிடம் எளிதில் பழகாது.  மேலும் ஒருவர் வீட்டில் நாய் வளர்க்கிறார்கள் என்றால் அவர்கள் வீட்டிற்குப் போவதற்கே விரும்ப மாட்டேன்.  தெருவில் நாய்கள் நடமாடினால், நாய்களை உற்றுப் பார்க்க மாட்டேன்.  உற்றுப் பார்த்தால் போதும் நம்மைத் தொடர்ந்து வர ஆரம்பிததுவிடும்.  பிஸ்கட் கட்டாயம் வாங்கிப் போட மாட்டேன். அதே சமயம் பூனையைப் பார்த்தால் அதை அடித்துத் துரத்துவதுதான் என் முதல் வேலை. அதன் முன் பெரிய சத்தத்துடன் குதிப்பேன்.  என் சத்தத்தைக் கண்டு அது ஒன்றும் கவலைப் படாது.  அப்போதுதான் கையில் எதாவது கிடைக்கிறதா என்று பார்ப்பேன்.  இந்தச் சமயத்தில்தான் அது நகர ஆரம்பிக்கும்.  காலையில் தெருவில் மீனு மீனு என்று கூவி வ...

ஒரு கதை ஒரு கவிதை வாசிப்புக் கூட்டம் 7

வழக்கம் போல் நடைபெறும் ஏழாவது கூட்டம் இது.  நடேசன் பூங்கா இல்லை.  வேற இடத்தில் கூட்டத்தை மாற்றி உள்ளோம்.  யாவரும் வந்திருந்து கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம். புதியதாக எழுதுபவர்கள் அவர்களுடைய படைப்புகளையும் படிக்கலாம்.  அதற்கு முக்கியத்துவம் தரப்படும். மயிலாப்பூரில் உள்ள நாகேஸ்வரன் பூங்காவில் கூட்டம் நடைபெறுகிறது.  மாலை நான்கு மணியிலிருந்து ஐந்தரை வரை. சிறுபத்திரிகைகளால் கதைகளின் தன்மை மாறியிருக்கிறதா என்ற தலைப்பில் உரையாடல் நடக்கிறது. கலந்து கொள்பவர்கள் : அழகியசிங்கர், கிருபானந்தன், சுந்தர்ராஜன், நீங்களும்.

பேட்டி

(நவீன விருட்சம் 66வது இதழில் (ஜøன் 2005ல் வெளிவந்தது) அசோகமித்திரன் எழுதிய கட்டுரையைத் தந்திருக்கிறேன் வாசிக்க.  100வது இதழ் கொண்டு வரும்போது இன்னொரு திட்டமும் உள்ளது.  முதல் இதழிலிலிருந்து நூறாவது இதழ் வரை பிரசுரமானவைகளிலிருந்து ஒவ்வொரு இதழிலிருந்தும் முக்கியமான ஒரு படைப்பு விதம் எடுத்து புத்தகமாகக் கொண்டு வர எண்ணம்.)  அசோகமித்திரன்                                                                                           பேட்டி ஒரு புது மாதப் பத்திரிகைக்காக நண்பர் ஒருவர் என்னைப் பேட்டி கண்டார்.  கேள்விகள் அவருடையது.  பதில்களை எழுதிக் கொடுத்து விட்டேன்.  அச்சில் எப்படி வரப் போகிறது என்று காத்திருந்து பார்க்க வேண்டும். கடந்த பத்தாண்டுகளாகத்தான் நான் பேட்டி காணக் கூடியவனாக நினைக்கப் பட்டிருக்கிறேன்.  பேட...

வலலிக்கண்ணன் கடிதம்....

அழகியசிங்கர்     நவீன  விருட்சம் என்ற இதழைப் பார்த்தவுடன் இருவர் எனக்குக் கடிதம் எழுதாமல் இருக்கமாட்டார்கள். ஒருவர் வல்லிக்கண்ணன்.  இன்னொருவர் தி.க.சி. அவர்களுடைய கடிதங்களைப் பார்த்தால்தான் எனக்குத் தெரியும், விருட்சம் எல்லோருக்கும் போய் சேர்ந்திருக்குமென்று. நவீன விருட்சத்தைப் புரட்டிக்கொண்டு வந்தபோது இக் கடிதம் கண்ணில் பட்டது.  உடனே இங்கு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். காங்கிரஸ் தலைவர் மூப்பனாருடன் ந பிச்சமூர்த்தி நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்ட புகைப்படத்துடன்... வல்லிக்கண்ணன்                                                                                      29.09.2004 சென்னை                                       ...

எப்படி இந்தப் பெண்கள் சமாளிக்கப் போகிறார்கள்

எப்படி இந்தப் பெண்கள் சமாளிக்கப் போகிறார்கள் அழகியசிங்கர் சமீபத்தில் நடந்த ஒரு பெண்ணின் கொடூரமான கொலையிலிருந்து பல விஷயங்கள் ஞாபகத்திற்கு வருகின்றன.  பெண்களைத் துரத்துவது என்பது காலம் காலமாக நடந்து வருகிறது.  எழுபது வாக்கில் என் உறவினர் பெண்ணை என்னுடன் கல்லூரியில் படித்தப் பையன் துரத்துவான்.  எதாவது கிண்டலாகப் பேசுவான்.  அவனுக்குத்  தெரியாது அந்தப் பெண் எனக்கு உறவினர் என்று. அவனிடம் இதுமாதிரி செய்யாதே என்று சொல்ல நினைத்தேன்.  அதற்குள் அவனுக்கு ஒரு அசம்பாவிதம் நடந்து விட்டது. மின்சார வண்டியில் அவன் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தான். மீனம்பாக்கம் வரை அவன் சென்று கொண்டிருக்கும்போது, அவன் முன் பக்கம் உள்ள பெண்கள் பெட்டியில் இருந்த பெண்களைக் கிண்டல் செய்தபடி தலையை அளவுக்கு அதிகமாக நீட்டியபடி வந்திருக்கிறான்.  மீனம்பாக்கத்தில் ரொம்பவும் குறுகலாக இருந்த மின் கம்பத்தில் அவன் தலை மோதி, சம்பவம் இடத்திலேயே இறந்து விட்டான். நாற்பது ஆண்டுகளுக்கு முன் மேற்கு மாம்பலம் இப்போது இருக்கிற வசதி இல்லாத காலத்தில் தெரு விளக்குகள் பளிச்சென்று...