அழகியசிங்கர் நந்தாகுமாரன் என்ற கவிஞர் üமைனஸ் ஒன் - 1ý என்ற கவிதைத் தொகுப்பை எனக்கு அனுப்பியிருந்தார். உடனே நானும் அவர் கவிதைகளைப் படித்து அது குறித்து சில குறிப்புகளை எழுதி வைத்திருந்தேன். பின் அத் தொகுப்பையும், குறிப்பையும எங்கோ வைத்துவிட்டேன். உடனே எழுத முடியாமல் போய்விட்டது. இத் தொகுப்பைப் பற்றி எதாவது எழுதியே தீர வேண்டுமென்ற எண்ணத்துடன் திரும்பவும் அவருடைய புத்தகத்தையும், நான் எழுதி வைத்த குறிப்புகளையும் தேடிக் கண்டுபிடித்தேன். இந்தப் புத்தகத்தில் அவர் 89 கவிதைகள் எழுதி உள்ளார். அவருடைய கவிதைகள் எல்லாம், எல்லாப் பத்திரிகைகளிலும் பிரசுரம் ஆகி இருக்கின்றன. வெகு சுலபமாக வார்த்தைகளை வைத்து கவிதைகளில் விளையாடி இருக்கிறார். அவர் இப்படியே எழுதிக்கொண்டு போனல் ஒரு ஆயிரம் கவிதைகளாவது எழுதி இருப்பார். நான் அப்போது ...