Skip to main content

Posts

Showing posts from September, 2008

அண்ணாவின் உருக்கம்

அண்ணாவின் உருக்கம் என்ற பெயரில் ஒரு கவிதை எழுதியிருந்தேன். 2005 ஆம் ஆண்டு. இக் கவிதை என் தொகுதியில் வெளிவந்துள்ளது. கவிதையை அண்ணாவின் நூற்றாண்டின் போது இங்கு அளிக்க விரும்புகிறேன். மாப்படுகை வழியாகச் செல்லும் பாதையில் பெரும்பாலும் அபூர்வமாகவே வாகனங்கள் வரும் போகும் நடமாட்டம் இரவென்றால் குறைவு பள்ளிக்கூடங்கள் இருக்கும் நாட்களில் சிறு சிறு மாணவ மாணவிகள் அவர்களுக்குள்ளே தென்படுகிற கற்பனை உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருப்பார்கள்.... வண்டியில் செல்லும் நான் ஜாக்கிரதையாகப் பயணிப்பேன் ஒவ்வொருமுறையும் பார்த்துக் கொண்டே செல்கிறேன் ஒரு அண்ணாசிலையை கழக கண்மணிகளே உங்களுக்கு ஒரு வேண்டுகோள் நிச்சயமாய் அண்ணாசிலையிலிருந்து அண்ணா உயிரோடு தோன்றினால் சொல்லியிருக்கலாம் கம்பீரமான அச்சிலையில் ஆளுயுர அண்ணா கையில் புத்தகம் வைத்தபடி நடந்து செல்வதுபோல் தோற்றம்.... சிலை வடித்தவன் அண்ணாவைப் பார்த்திருக்கலாம் சிலையின் பக்கத்திலேயே கழக கண்மணிகளின் கூடாரம் ஆனால் சிலையோ கம்பீரத்தை இழந்து விட்டது கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று அண்ணா சொன்ன மந்திரம் என்று இவர்கள் சொல்லித்தான் தெரியும் ஒவ்வொருமுறையும் நான் போகும்

'எழுத்து' பேட்டி

ந. பிச்சமூர்த்தி 1900 ஆகஸ்ட் பதினைந்து அன்று தஞ்சை ஜில்லா கும்பகோணத்தில் பிறந்தவர். ஹரி கதை காலட்சேபம், நாடகத்துறை, ஆயுர்வேத வைத்யம், தாந்தீரிக உபாசனையில் ஈடுபாடு, நான்கு மொழிகளில் சாகித்யம் இயற்றல் இவைகளில் வல்லுநரும், சகலகலா வல்லவருமான அவரது தந்தை நடேச தீட்சதர் காலம்சென்றபோது அவருக்கு வயது ஏழு. தாயின் பராமரிப்பில் வளர்ந்த பிச்சமூர்த்தி கும்பகோணம் டவுன் உயர்தரப் பாடசாலையில் படித்து, கும்பகோணம் நேடிவ் கலாசாலையில் படித்து பிலாசபி எடுத்துக்கொண்டு பி.ஏ பட்டம் பெற்று பின் சட்டப்படிப்பு படித்து, பிளீடரானார். 1924 முதல் 1938 வரையில் கும்பகோணத்தில் வக்கீல் தொழிலில் ஈடுபட்டிருந்தவர். வக்கீல் தொழில் தனக்கு பொருந்தவில்லை என்று கருதி அதை விட்டுவிட்டார். வக்கீல் தொழில் செய்யும்போதே அரசியலில் காங்கிரஸ் சார்பான ஈடுபாடு உண்டு. கலாசாலையில் இண்டர்மீடியட் படிக்கும் போதே கலாசாலைப் பத்திரிகையில் கவிதைகள், வர்ணனைக் கட்டுரைகள், சிந்தனைக் கட்டுரைகள் எழுதினார். 1933-ல் 'கலைமகள்' நடத்திய சிறுகதைப் போட்டியில் பதினைந்து ரூபாய் பரிசுப்பெற்ற 'முள்ளும் ரோஜாவும்' என்ற சிறுகதை மூலம் எழுத்துலகத்துக்

இரு பத்திரிகைகள்

முதுமையின் மிகப் பெரிய சோகம் நம்முடைய நண்பர்கள் ஒவ்வொருவராக மறைந்து கொண்டிருப்பார்கள் என்று இங்கிலாந்து எழுத்தாளர் சாமர்சாட் மாம் கூறினார். இதையே வேறு பலரும் கூறியிருக்கிறார்கள். தொண்ணூற்றொரு ஆண்டுகள் வாழ்ந்த மாம் பழுத்த அனுபவத்தால்தான் கூறியிருக்கிறார். 'மணிக்கொடி இதழ் தொகுப்பு' படித்துக் கொண்டிருக்கும்போது எனக்கு மாம்மை நினைவுபடுத்தியவரை நண்பர் என்று கூற முடியாது. ஆனால் அவரை நிழலாகப் பல ஆண்டுகள் நான் அறிந்திருந்தேன். எனக்கு எட்டு அல்லது ஒன்பது வயதிருக்கும்போது, 'ஆனந்தவிடனி 'ல் ஒரு கதை என் மனதை மிகவும் சங்கடப்படுத்தியது. குடிகாரனான தன் அப்பாவை ஒரு சிறுமி படுக்க வைத்து, உணவு கொடுத்துப் பாதுகாப்பாள். அச் சிறு வீட்டில் அவளும், அவள் தகப்பன் மட்டும்தான். அவன் வியாதி முற்றிப்போய்ப் படுக்கையிலேயே இறந்து விடுகிறான். அவன் இறந்து விட்டான் என்று தெரியாது. அவள் அவனுக்கு உணவு தர முயற்சி செய்வாள். இந்தக் கதை தொடர்ந்து நினைவில் இருந்து வருவதற்கு இன்னொரு காரணம் அது ஒரு முஸ்லிம் கதை. அது முஸ்லிம் கதை என்று அடையாளப் படுத்த அப் பெண்ணின் பெயருடன் அவள் தன் அப்பாவை 'வாப்பா' என்று

ஒரு கதை இரு முடிவுகள்

பூர்வாங்கம் : சு ந்தரி ஒரு முடிவிற்கு வந்து விட்டாள். அவள் ஒரு முடிவிற்கு வந்துவிட்டால், பின் மாற்றுவது என்பது இயலாத காரியமாகிவிடும். அவளைப் பொறுத்தவரை இந்த முடிவு மோசமான முடிவு. ஏன் எல்லாவற்றுக்குமான முடிவு இது? அவளுக்கு ஆசையாகக் கொடுத்த சிங்கப்பூர் புடவையைக் கையில் வைத்துக் கொண்டிருக்கிறாள். அதை உத்தரத்தில் உள்ள கொக்கியில் மாட்டிக்கொண்டாள். அவள் ஏறி நின்று மாட்டிய ஸ்டூல் மீதே அவள் உட்கார்ந்து கொண்டாள். இனி அவ்வளவுதான். வாழ்க்கையை முடித்துக்கொள்ள வேண்டியதுதான். கழுத்தில் இறுக்கி இந்த ஸ்டூலை எடுத்துவிட்டால், எல்லாம் முடிந்து விடும். ஆனால் இது மாதிரி செய்வதற்கு துணிச்சல் வேண்டும். சுந்தரிக்கு துணிச்சல் இருக்கிறது. செய்தும் விடுவாள். அவளுக்குக் கோபம் வந்துவிட்டால், நன்றாகப் பழகியவர்களிடம் கூட பேசமாட்டாள். சுந்தரிக்கு 39வயதாகிவிட்டது. இன்னும் சில மாதங்களில் 40 வயதாகிவிடும். அவள் வீட்டில் 10 பேர்கள். எட்டுப் பெண்கள். இரண்டு ஆண்கள். சுந்தரிக்கு மேல் உள்ள இரண்டு அக்காள்களுக்குத் திருமணம் ஆகவில்லை. திருமணம் செய்துகொள்ளும் வயதுகளையும் கடந்து விட்டார்கள். சுந்தரிக்கு

இரண்டு கவிதைகள்

1.கவிதையின்றி அலைதலின் அவஸ்தைகள் கவிதைகளை துறந்துவிட்டு சில காலமாய் திரிந்துகொண்டிருந்தேன். கற்பனைகள் தூர்ந்து, கனவுகள் தகர்ந்து, பாதாளத்தின் வாய்பிளந்து என்னை உள்ளிழுத்துக்கொண்டது. இருள் கவிந்திருந்த அவ்விடத்தில் தொலைந்த பேனாக்களை தேடிக்கொண்டிருந்தனர் எந்திரத்தனம் நிறைந்த என்னையொத்த மனிதர்கள் சிலர். 2. சுயத்தை எரித்தல் மிகுந்த வெம்மையாயிருந்தது ஒரு சொல். வெம்மையின் கதிர்கள் முதலில் நுழைந்தது செவியில். செவிக்குள் நுழைந்த அச்சொல்லின் வெட்பம் இதயத்திற்கு இடம்பெயர்ந்திருந்தது வலியின் நீட்சியில். இதயம் கருகி கண்ணீராய் வெளியேறுகையில் மறுசொல்லுக்காய் காத்திருக்க ஆரம்பித்தது சுயம்

சியாட்டல் விற்ற நிலம்

அ மெரிக்கா பல்வேறு பூகோளப் பிரதேசங்களிலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் நாடாதலால் அதன் மாநிலங்கள் நகரங்கள் ஆகியவற்றிற்கு தங்கள் சொந்த நாட்டின் இடப் பெயர்களைக் குடியேறியவர்கள் சூட்டினர். மேரிலாண்ட், நியு ஹாம்ஷையர், நியுயார்க் போன்ற ஆங்கிலப் பெயர்கள்; லூசியானா, வெர்மான்ட் போன்ற பிரெஞ்சுப் பெயர்கள்;மான்டானா, ப்ளோரிடா போன்ற ஸ்பானிஷ் பெயர்கள்; இவை தவிர இண்டியானா, கனெக்டிகட், ஐயோவா, சியாட்டல் போன்ற ஏற்கனவே இருந்த பூர்விக அமெரிக்க இந்தியப் பெயர்களும் அவற்றிற்கு இடப்பட்டன. மேலே குறிப்பிடப்பட்ட பெயர்களில் சியாட்டல் ஒரு தனி மனிதனின் பெயர்.சியாட்டல் வாஷிங்டன் மாநிலத்தில் அமைந்துள்ள நகரம். ஒரு பூர்விகக் குடித் தலைவரின் பெயர்தான் சியாட்டல். அவரது இனத்தவர்கள் வசமிருந்த சுமார் இரண்டு மில்லியன் ஏக்கர் நிலப் பரப்பை அமிரிக்க அரசாங்கம் தந்துவிடுமாறு கேட்டது. தானமாக இல்லை. ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் டாலர்கள் அதற்கு விலையாகத் தர முன்வந்தது. சியாட்டலால் முடியாது என்று கூற இயலவில்லை. ஒரு பூர்விகக் குடியால் ஒரு நாட்டை எதிர்க்க முடியாது என்று அவருக்கு அனுபவ பூர்வமாகத் தெரியும். ஆனால் மக்கள் நேசித்து வாழும் ஒரு பூமி

இரண்டு கவிதைகள்

1. சற்றைக்கு முன் ஜன்னல் சட்டமிட்ட வானில் பறந்து கொண்டிருந்த பறவை எங்கே? அது சற்றைக்குமுன் பறந்து கொண் டிருக்கிறது. 2. பறந்து செல்லும் பறவையை நிறுத்திக் கேட்டான் : பறப்பதெப்படி? அமர்ந்திருக்கையில் சொல்லத் தெரியாது கூடப் பறந்து வா சொல்கிறேன் என்றது. கூடப்பறந்து கேட்டான் : எப்படி? சிரித்து உன்போலத்தான் என்றது. சிரித்து உன்போலத்தான் என்றது. அட ஆமாம் ஆனால் எப்படி எனக் கீழே கிடந்தான் பறவை மேலே பறந்து சென்றது. (பிப்ரவரி - மே 1979 ழ இதழில் வெளிவந்த கவிதை)

ஜன்னல் வழியே

சம்பவம் 1 எ னக்கு வயிற்றுப்போக்கு கண்டிருந்தது. எங்கள் வீட்டின் அருகாமையில் இருக்கும் மருந்துக்கடைக்கு, என் பிரச்சினைத் தீர மாத்திரைகள் வாங்கச் சென்றிருந்தேன். கடையின் உரிமையாளர் நிவாரண மாத்திரைகளைத் தந்துவிட்டு, மிகவும் மென்மையாகவும், பொறுமையாகவும், "ஒரு முறை அவசரத்தில் ஐந்து ரூபாய் பெறுமானமுள்ள மாத்திரைகளை நீங்கள் வாங்கிச் சென்றது நினைவில் இருக்கிறதா?" என்று கேட்டார். அவர் பேசிய தொனி நலன் விசாரிப்புத் தொனி. எனக்கும் நினைவுக்கு வந்து நான் காசு கொடுத்தேன். பேருந்து நிறுத்தத்துக்குப் போக வேண்டுமானால் அந்தக் கடையைத் தாண்டித்தான் போக வேண்டும். எத்தனையோ முறை கடையைக் கடந்து சென்றிருந்தும் என்னை அழைக்காமல் கடைக்கு மீண்டும் சென்றபோதுதான் பாக்கி கேட்ட கடைக்காரரின் இங்கிதமும், பெருந்தன்மையும் என்னைத் தொட்டன. சம்பவம் 2 நா ன் தேனீர் அருந்தும் கடையில் பீடி சிகரெட்டும் விற்கிறார்கள். ஒரு முறை ஒரு ரூபாய்க்குக் காஜா பீடி கேட்டபோது, கடையை நடத்திவரும் பெரியவர் ஐந்து பீடிகளைக் கொடுத்தார். ஒரு ரூபாய்க்கு நான்கு பீடிகள்தான். கூடுதலாகப் பெற்ற ஒரு பீடியைத் திருப்பித் தந்தேன். பெரியவர் மிகுந்த நன்

சில குறிப்புகள் / 8

ழ கவிதைகள் மே மாதம் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த ழ என்ற பத்திரிகைக்கும் எனக்கும் தொடர்பு உண்டு. ழ பத்திரிகையைப் பார்த்துதான் நான் நவீன விருட்சம் பத்திரிகையைத் தொடர்ந்தேன். ழ பத்திரிகை கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் தொடர்ந்து வெளிவந்தது. அப் பத்திரிகையைப் பற்றி ஞானக்கூத்தன் பேசும்போது அம்மணப் பத்திரிகை என்பார். பத்திரிகைக்கு என்று தனியாகப் பளபள அட்டை இருக்காது. நியூஸ் பிரிண்டில் 16 பக்கம்தான் இருக்கும். இந்த எளிமையெல்லாம் ஆத்மாநாம் ஆசிரியராக இருந்து கொண்டு வந்தபோது. ழ பத்திரிகையில் ஈடுபட்ட பலர் எதாவது ஒரு பணியில் இருந்துகொண்டு, ஒழிந்த நேரத்தில் இலக்கியம் பேசிக்கொண்டு பத்திரிகையை நடத்திக்கொண்டிருந்தார். கவிதைகளைப் பற்றி பேசுவது, கவிதையை இயற்றுவது என்று ஒரு சிறிய கூட்டமே இருந்தது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சென்னை கடற்கரையில் உள்ள திருவள்ளூவர் சிலை பக்கத்தில் அமர்ந்து இலக்கிய உரையாடலைத் தொடர்ந்து நடத்திக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் பேச்சு பல விஷயங்களைக் குறித்து இருக்கும். அங்கு ஆத்மாநாமை நான் பார்க்கவில்லை. ஆத்மாநாமின் தற்கொலை அந்த எளிமையான கூட்டத்திற்குப் பெரிய அதிர்ச்சியே ஏற்படுத்தியது. ஆத்மா

பிரிவு

ச ரியாக மூன்று பதினேழுக்கு டிக்கட்டுடன் பிளாட்பாரத்தில் நுழைந்தார் தினகரன். எப்போதும் 'ராஜதானி' எக்ஸ்பிரஸ் முதற் ஃபிளாட்பாரத்திலிருந்துதான் புறப்படும். ஆனால் இப்போது, இன்று, மூன்றாவது ஃபிளாட்பாரத்திலிருந்து புறப்படுகிறது. 'இன்னமும் இரண்டே மணி நேரங்களில் அவள் என்னை விட்டுவிட்டு கன வேகத்தில் 'ஹவ்ரா' பக்கம் போய்க்கொண்டிருப்பாள்,' என்று நினைத்தார் தினகரன். தன்னில் ஏதோ செத்துக்கொண்டிருப்பதாக அவருக்குப் பட்டது. பத்மாவைப் பற்றி இவ்வளவு தீவிரமாக எப்போதாவது நினைத்திருப்போமா? என்று பட்டது. "தீவிரங்களெல்லாம் சொல்லிக்கொண்டா வருகிறது?' என்று சொல்லி எதையெல்லாமோ சபித்தார். அவரும் நினைத்து நினைத்துப் பார்த்தார். 'எது என்னை கல்பனாவிடம் இவ்வளவு தீவிரமடையச் செய்தது?' அவள் முதன் முதலில் எல்லோருக்கும் நடுவே உட்கார்ந்து, நாலுமணி மாலை இருக்கும், பாட ஆரம்பித்தாள். அவள் உட்கார்ந்த விதம், அவளுடைய சிரிப்பு, அவளுடைய நாசியும், கண்களில் மிளிர்ந்த அகலமும்! இதுதான் அவரை முதன்முதலில் அவளிடம் ஈர்ப்பித்தது. இருந்தும் இதெல்லாம் தப்பு என்று அவர் அவள் பக்கம் கூட போகாமல் தலைதெறிக்க

என்னைச் சுற்றும் ஏழு நிலவுகள்

முதல் நிலவை எப்போதும் எறும்புகள் மொய்த்தவண்ணம் உள்ளன இரண்டாவது நிலவு குழந்தைகளால் மட்டுமே ரசிக்கக்கூடியது மூன்றாவது நிலவு போலீஸ்காரனின் துப்பாக்கிச் சூட்டுக்குக் காத்திருக்கும் ஒரு போராளியின் இதயம் நான்காவது நிலவு எப்போதும் என்னை அழைத்துக்கொண்டேயிருக்கும் வறண்ட மலையின் குன்று ஐந்தாவது நிலவு மதுக்கோப்பையாகத் தளும்பிக்கொண்டிருக்கிறது ஆறாவது நிலவுக்குள் சிவை உருவாகிக்கொண்டிருக்கிறாள் ஏழாவது நிலவு எனக்குப் பிடிபடாமல் நழுவிக் கொண்டிருக்கும் ஒரு சொல்.

அரண்மனைக்குச் சென்ற துறவி

ஓர் ஊரிலே அரசன் ஒருவன் அரசாட்சி செய்து கொண்டிருந்தான். அவன் செல்வச் செருக்கில் மூழ்கி அறிவை அடியோடு இழந்திருந்தான். அரசனைவிட அவனுடைய மனைவி ஆணவத்தில் ஒரு பங்கு உயர்ந்தவளாக இருந்தாள். இருவரும் அறநெறியைச் சிறிதும் எண்ணிப் பார்க்கவில்லை. தங்களுக்குமேல் ஒன்றுமே இல்லை என்னும் போக்கில் உள்ளங் களித்திருந்தார்கள். 'அரசன் எவ்வழி அவ்வழி குடிகள்' என்பது பெரியோர்களின் உரையல்லவா? அந்த அரசனுடைய ஆட்சிக்குக் கீழ் வாழ்ந்த மக்களும், யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை. உலகம் நிலையாமை முதலியவைகளை அறவே மறந்துவிட்டுச் செருக்கியிருந்தார்கள். அரசனுக்கோ குடிகளுக்கோ அறிவுரை கூறுவார் எவருமிலராயினர். இவர்கள் இவ்வாறிருக்கையில் உலகவாழ்வின் மெய்மையை உள்ளவாறுணர்ந்த துறவியொருவர் ஒருநாள் அவ்வூர் வழியே சென்றார். அவ்வூர் அரசனும் குடிமக்களும் அடைந்திருக்கும் அறிவுமயக்கம் அத்துறவிக்கு மனவருத்தத்தை உண்டாக்கியது. அவர் அவ்வூரார்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்று எண்ணினார். அன்றிரவில் அரசனுடைய அரண்மனைக்குள் ஒருவரும் அறியாவாறு நுழைந்து ஓரிடத்தில் ஒரு புலித் தோலை விரித்துக் கொண்டு படுத்தார். தமக்குப்

நூலகங்களின் தேவை

ஒ ரு காலத்தில் சில தனியார் நூலகங்களில்தான் நல்ல புத்தகங்கள் இருக்கும். அரசு நூலகங்கள் மிகவும் குறைவு. நகரங்கள், சில முக்கிய ஊர்கள்தான் இந்த நூலகங்களைப் பெற்றிருக்கும். இந்தியா சுதந்திரம் பெற்றவுடனேயே நூலகங்கள் பெரிய அளவில் வளர்ச்சி பெறவில்லை. ஐம்பதாண்டுகள் முன்பு கூட மொத்தமாக நூறு பிரதிகளுக்கு நூலக உத்தரவு கிடைக்காது. ஒவ்வொரு மாவட்ட கல்வி அதிகாரியின் அங்கீகாரம் கிடைத்த பிறகுதான் அந்த மாவட்டத்திலுள்ள நூலகங்கள் சிலவற்றுக்குப் பிரதிகள் வாங்கப்படும். பதிப்பாளரே அந்த முப்பது நாற்பது நூலகங்களுக்கு தனித்தனியாக நூலும் நூலுக்கான விலை உத்தரவு ரசீதையும் அனுப்ப வேண்டும். இதைத் தவிர அந்த ரசீதின் நகலையும் அந்தக் கல்வி அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். எல்லா நூலகங்களுக்கும் பிரதிகள் கிடைத்து விட்டன என்ற தகவல் கிடைத்தபிறகு பதிப்பாளருக்கு முதலில் ஓர் ஒப்பந்தங் கடிதம் அனுப்பப்படும். அவர் இப்போது மொத்தப் பிரதிகளுக்கும் சேர்த்து ஒரு ஒப்புதல் ரசீதை அனுப்ப வேண்டும். அதன்பிறகு பணத்திற்குக் காத்திருக்க வேண்டும். அந்த நிலை இப்போதில்லை. இப்போது பிரதிகளும் நிறைய வாங்கப் படுகின்றன.

தொலைந்துபோகும் ஒருவனுக்கு

ஆங்கிலத்திலிருந்து தமிழில் : அழகியசிங்கர் தொலைந்துபோன ஒரு பையனைப்பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறேன் மாலை 5.35 மணிக்கு என்ன செய்து கொண்டிருந்தான் தெரு ஓரத்தில் ரானிகட் என்ற இடத்தில் இருக்கும் தபாவில் அவன் டம்பளர்களையும், தட்டுக்களையும் கழுவிக் கொண்டிருந்தானா மலை உச்சிக்குச் சென்று விட்டானா? மறைவாக தீவிர வாதிகள் வசித்துவரும் காட்டிற்குப் போனானா? பத்து நிமிடங்களுக்குமுன் அந்தப் பையனை ரயில் விட்டுச் சென்றிருக்கும் கிராம ஒன்றின் வயலில் விளைந்திருக்கும் பச்சைப்பசேலென்ற நெற்கதிர்களைப் பார்க்கிறானா அவனுக்குத் தெரியுமா அவனுடைய தந்தை கடந்த மூன்று மாதங்களாய் பென்சன் வாங்கவில்லை என்பது. தெருவில் நின்றுகொண்டு பாதையைப் பார்த்துக்கொண்டிருந்தார் கிராமத்தைத் தாண்டி எத்தனை தூரம் இந்தப் பாதை செல்லும் என்று யோசித்தபடியே. அவனுக்குத் தெரியுமா அவனுடைய அம்மா ரொட்டியைச் சுட்டுக்கொண்டிருக்கும்போது வெளியே தெரியும் இருட்டைப் பார்த்துக்கொண்டு யோசனை செய்கிறாள் என்று இதுதான் அவள் முதல் இருட்டு அவளுடைய முதல் கர்ப்பம்போல ஒருநாள் அவளுடைய விருப்பத்திற்குரிய மகனை எப்படியாவது அழைத்துக்கொண்டு வந்துவிடும் அவனுக்குத் தெரியுமா

வார்ஸாவில் ஒரு கடவுள்/1

சில மாதங்களாக நான் நாவல்கள், சிறுகதைத் தொகுதிகள் படிப்பதில்லை. எனக்கு நேரம் கிடைப்பதில்லை. காலை 7.30மணிக்குக் கிளம்பினால் வீடு வர இரவு 8 மணி ஆகிவிடுகிறது. நான் எப்போதும் மின்சார வண்டியில் பயணம் செய்யும்போதுதான் தினமணி, The Times of India பத்திரிகைகளைப் படிக்கிறேன். அதனால் நான் நாவல்கள், சிறுகதைத் தொகுதிகளை வாங்குவதை நிறுத்தியிருக்கிறேன். ஆனால் Non Fiction ஐ விரும்பிப் படிக்கிறேன். The Other side of Belief என்ற முகுந்த ராவ் எழுதிய ஆங்கிலப் புத்தகத்தை கடந்த ஒரு மாதமாகப் படித்துக்கொண்டிருக்கிறேன். நான் மயிலாடுதுறையில் இருந்தபோது தினமும் ஒரு சிறுகதையைப் படிக்க வேண்டுமென்று ஆரம்பித்தேன். ஒருசில நாட்கள் என் முயற்சி தொடங்கி அப்படியே நின்றுவிட்டது. சென்னைக்கு தற்காலிகமாக நான் வந்திருக்கிறேன். இங்கு எந்த முயற்சியும் என்னால் தொடங்க முடியவில்லை. நவீன விருட்சம் (1988) ஆரம்பித்த கால கட்டத்தில் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு மேல் மாதா மாதம் இலக்கியக் கூட்டங்களை நடத்தியிருக்கிறேன். எல்லோரும் சந்திப்பதற்கு ஒரு இடமாகவும், பல புத்தகங்களைப் பற்றி விமர்சனக் கூட்டங்களாகவும் அவை திகழ்ந்திருக்கின்றன