Skip to main content

Posts

Showing posts from August, 2008

சில குறிப்புகள் 4

எஸ் வைத்தியநாதன் என்ற என் நண்பரைப் பற்றி சொல்ல விருப்பப்படுகிறேன். எனக்கு சில இலக்கிய நண்பர்களை அறிமுகப்படுத்தியதற்கு வைத்தியநாதன் ஒரு முக்கிய காரணம். ஒரு இலக்கியச்சிந்தனைக் கூட்டத்தில்தான் வைத்தியநாதனை சந்தித்தேன். இந்தச் சந்திப்பை ஏற்படுத்தியவர் நடராஜ் என்ற நண்பர். வைத்தியநாதன் மூலம் ழ என்ற பத்திரிகை பற்றியும், அதில் அப்போது எழுதிக் கொண்டிருக்கும் சில நண்பர்களையும் அறிமுகப்படுத்தினார். பெரும்பாலும் கவிதைகளை எழுதிக் கொண்டிருக்கும் அந்த இலக்கிய நண்பர்கள் கவிஞர்கள் என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ள விரும்ப மாட்டார்கள்.எல்லோரும் கவிதைகள் எழுதுபவர்கள். கவிதைகளைப் பற்றி பேசுபவர்கள். வைத்தியநாதன் ஒரு கவிஞர். ழ பத்திரிகை நினைத்தபோது வரக்கூடிய பத்திரிகை. பத்திரிகை ஆசிரியர் ஆத்மாநாம் தற்கொலை செய்து கொண்டபோது, பெரிய அதிர்ச்சி அதில் ஈடுபட்ட நண்பர்களுக்கு ஏற்பட்டது. ஆத்மாநாமிற்காக நடந்த இரங்கல் கூட்டத்தில் அவருடைய நண்பர்கள் பெரிய வருத்தத்துடன் இருந்தார்கள். எனக்கு ஆத்மாநாம் அவ்வளவு நெருக்கம் கிடையாதென்றாலும், ஒன்றிரண்டு முறை சந்தித்திருக்கிறேன். அவருடைய புத்தகமான காகிதத்தில் ஒரு கோடில் அவ

சில குறிப்புகள் - 3

நவீன விருட்சம் என்ற இதழ் கடந்த 20 ஆண்டுகளாக வருவது இலகிய அபிமானிகளுக்குத் தெரியும் என்பது என் அபிப்பிராயம். பெரும்பாலும் கவிதைகளுக்கு முக்கியத்துவம் கொண்ட இதழ் நவீன விருட்சம். அந்த இதழில் வெளிவந்த முதல் ஐந்தாண்டுகளில் உள்ள கவிதைகளை கவிஞர்களின் பெயர்களை விடாமல் அவர்கள் எழுதிய ஒன்றுக்கும் மேற்பட்ட கவிதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து ஒரு தொகுப்பாகக் கொண்டு வந்தேன். அத் தொகுதியை விருட்சம் கவிதைகள் ஒன்று என்று பெயரிட்டு பிரசுரம் செய்துள்ளேன். 1988 ஆம் ஆண்டிலிருந்து 1992 ஆம் வரை உள்ள 94 கவிஞர்களின் 163 கவிதைகள் கொண்ட தொகுப்பு. இன்று கவிதை எழுத வேண்டுமென்று ஆசை படுபவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் இது. ஒரு பல்கலைக் கழகத்தில் பாடத் திட்டத்தில் வைக்க வேண்டிய புத்தகம். கவிதைக்கு முக்கியத்துவம் தரக்கூடிய இப் புத்தகத்தை யாரும் கண்டுகொள்ளவில்லை. எல்லாவற்றுக்கும் சிபாரிசு வேண்டி உள்ளது. அல்லது உரிய அதிகாரமுள்ளவர்கள் தகுதியான இடத்தில் சொன்னால் எல்லாம் நடக்கும். விருட்சம் கவிதைகள் தொகுதி 1 க்கு அதுமாதிரியான கொடுப்பினை இதுவரை கிடைக்கவில்லை. இப்போது அடுத்த 5 ஆண்டுகளுக்கான (1993/1998) வரை உ

அகிலாண்டேஸ்வரி

ஒருவரைப் பார்க்கப் புறப்படத் தெருவில் வந்தேன் எதிரே தென்பட்ட அஞ்சல் ஊழியர் அஞ்சல் அட்டை ஒன்றைத் தந்தார். அட்டையின் மூலையில் மஞ்சள் தடவி இருந்ததால் நல்ல சகுனம் என்றதைப் பார்த்தேன். அஞ்சல் அட்டையைப் படித்துப் பார்தேன். கைகால் எல்லாம் உதறத் தொடங்கின. 'அகிலாண்ட கோடி ஆனந்த மாரியின் அடியவன் எழுதும் பக்தி லிகிதம். அகிலாண்ட கோடி ஆனந்த மாரியே நமக என்று பத்துத் தடவை இதுபோல் எழுதி இன்றே 5 பேருக்கு அனுப்பி வையுங்கள் இந்தியன் போஸ்டல் செர்வீசைவிடக் கூரியர் செர்வீஸ் நல்லது. அனுப்பினால் உங்களுக்கு லாட்டரி சீட்டில் 5 லட்சம் பரிசு விழும். அல்லது நீண்ட காலமாய் வசூலாகாத பெரிய கடன் உடனே திரும்பும் பதவி உயர்வு ட்ரான்ஸ்பரும் கிடைக்கும். சொன்னதுபோல செய்யத் தவறினால் சொந்தக்காரர் செத்துப் போவார். பெண்டாட்டிக்கு மாதக் கடைசியில் ஆஸ்த்துமா தொந்தரவு கூடும். தெருவிலே கல்யாணமாகாத ஒரு பெண் கர்ப்பமானதற்கு நீதான் காரணம் இப்படி வதந்திகள் கிளம்பும். தாமதம் செய்யாமல் எழுதுங்கள் ஐந்தே ஐந்து பக்தி லிகிதங்கள் அகிலாண்ட கோடி ஆனந்த மாரியே நமக. சொந்தக்காரர் சாவைக் காட்டிலும் தெருப்பெண் கர்ப்பம் பற்றிய செய்தியால் எனக்குப்

ஜானகிராமன் படைப்புகள் ஒரு பார்வை

எப்போது ஜானகிராமனைப் படிக்க ஆரம்பித்தேன்? இப்போது ஞாபகத்தில் வரவில்லை. மற்ற நாவல்களைப் படிக்க ஆரம்பித்தபோதுதான், ஜானகிராமன் பெயரையும் கேள்விப்பட்டு படிக்க ஆரம்பித்தேன். அவருடைய 'அம்மா வந்தாள்' நாவலைத்தான் முதலில் படிக்க ஆரம்பித்தேன். எந்த ஆண்டு? ஞாபகமில்லை. ஆனால் ஜானகிராமனுடன் கூட இன்னும் சில நாவலாசிரியர்களின் நாவல்கள் ஏனோ என்னைக் கவரவில்லை. தனிப்பட்ட முறையில் இலக்கிய ஆசிரியர்களின் நாவல்களைப் படிக்கத் தொடங்கியபோது, ஜானகிராமனும் அதில் இருந்தார். கிட்டத்தட்ட தமிழில் இலக்கிய நாவல்கள் பல வெளிவந்துள்ளன. அப்படி ஒவ்வொன்றாகத் தேடிப் படிக்கும்போது ஜானகிராமனின் 'அம்மா வந்தாள்', 'மரப்பசு' நாவல்களையும் படித்தேன். பின்பு 'மோகமுள்' என்ற நாவலையும் படித்தேன். ஜானகிராமன் நாவல்களில் பெண் பாத்திரங்கள் படும்பாடை நினைத்துப் பார்த்ததுண்டு. பொதுவாக அவருடைய நாவல்களில் 'அடல்டிரி' விஷயம் முக்கியமாகக் கையாளப்படுகிறது. 'அம்மா வந்தாள்' நாவலில் பூடகமாகவும், 'மரப்பசுவில்' பகிங்கரமாகவும் வெளிப்படுகிறது. பிறகு அவருக்கு எழுதுவது என்பது கை

அப்பனாத்தா நீதான்

வெயிலடிச்சு ஊரு காஞ்சு கெடக்கும் நேரம் கையை மழை நனைச்சுப் போனதுன்கண் ஈரம் ஊரு பாக்க மீச முறுக்கி போன எ(ன்) ஐயா உன் வீரமெல்லாம் போயி கண்ணீர் விட்டது ஏ(ன்)ய்யா காரு புடிச்சு பத்திரமா ஏத்திவிட்டு கதவு ஓசபடாம பக்குவமா சாத்திப்புட்டு துண்டெடுத்து வேர்வையோட கண்ணீரும் தொடச்சுபுட்டு மீசைய முறுக்கினதுன் வீரம் அம்மா அம்மான்னு பலசொல்லு காதில்விழும் ஐயா ஐயான்னு இந்தப்புள்ள மட்டும் அழும் கண்ணு போன பெரியாத்தா ரெண்டாம் கல்யாணத்துக்கு சொல்லிப் பாத்தா பொஞ்சாதி பொண்ணு ஆத்தா எல்லாமே நாந்தான்னு பெருமையா நீ சொன்னப்ப கலங்குனது என்கண்ணு வயித்தப் புடிச்சுகிட்டு வழியேதும் தெரியாம சமஞ்ச சேதி உன்கிட்ட சொன்னது இந்தமக ஊருகூட்டிப் பந்தலிட்டுக் கெடா வெட்டுன தங்க வளையலும் தோடுமா நக பூட்டுன சந்தி முக்குல என்ன கேலி பேசுன பையல நீ பந்தாடுனதப் பார்த்துபொறவு வார்த்தையேதும் வரல மெத்தப் படிக்க டவுனுக்குப் போனே(ன்) என்னத் தேடி நீயும் மெலிஞ்சுப் போன. பொண்ணுங்ககூட பெருசா அரட்டையடிச்சேன் பையகள கொஞ்சம் கேலிசெஞ்சு வச்சேன் கூத்துக் கேலி கும்மாளத்தோட காதலும் வந்து சேந்துக்கிட வீட்ட விட்டு வருவியா என்கூடன்னு கேட்டுப்புட்டான் கேள்விய

ரொட்டியும் மீன்களும்

கரையிலிருந்து வெகுதூரம் கடலுக்குள் சென்றேன் படகிலிருந்து குதித்து நீருக்குள் நுழைந்தேன் கீழே, கீழே இன்னும் கீழே போய்க்கொண்டே இருந்தேன் முடிவில் காலில் தட்டுப்பட்டது தரை என்றுதான் சொல்லவேண்டும் நிறைய மீன்கள். வேறு என்னவெல்லாமோ ஜீவராசிகள் அவர்கள் என்னை பார்க்கவில்லை. அல்லது பார்த்ததாகக் காட்டிக்கொள்ளவில்லை. பொட்டலத்திலிருந்து விடுவித்த ரொட்டியின் முதல் துண்டை மேலே வீசினேன் ஆயிரம் மீன்கள் பாய்ந்து வந்தன அடுத்த துண்டுக்கு இன்னும் இரண்டாயிரம் இப்போது என்னை சுற்றி நீங்கள் எல்லாம் பார்க்காத வண்ணங்களில் சிறியதும் பெரியதும் அழகுடனும் மேலும் அதி அழகுடனும் பல்லாயிரம் மீன்கள் இப்போது அவர்களின் கண்கள் என்மீது மட்டுமே. ஒரு தேவகுமாரனைப்போல் உணர்ந்தேன். அங்கேயே இருந்துவிட ஆசையுற்றேன் ஆயினும் எனக்கான ஜூடாஸ்கள் காத்துக்கொண்டு இருந்ததால் நீந்தி மேலெழுந்து கரை சேர்ந்தேன் எனது சிலுவையை சுமக்கத் துவங்கினேன் (81வது நவீன விருட்சம் இதழ் செப்டம்பர் மாதம் தயாராகப் போகிறது. இதழுக்குப் படைப்புகளை அனுப்ப வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். படைப்புகளை navina.virutcham@gmail.com மூலம் அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன்.

பச்சை விளக்கு சிவப்பு வெளிச்சம் !

இரண்டு பகலில் ஒன்று இருண்டு போனது இரண்டு சுடரில் ஒன்று உருண்டு போனது இரண்டு வாழ்வில் ஒன்று துவண்டு போனது இரண்டு வழியில் ஒன்று புரண்டு போனது விரும்பா வாழ்வில் திரும்பாப் பயணம் உருகித் திரும்ப திரளும் மரணம் தொலைந்த சாவி நுழையும் பிரதிகள் பூட்டுப் பழுதாகும் நாளை நோக்கி கதவின் தியானம் வாயைக் கட்டி வயிற்றைக் கழுவி ஆடை மறைத்து மானம் துறந்து கற்பின் மேல் பக்தி நெருங்க மனமில்லை அதை விட்டே ஓடிப் போகிறேன் ஒருவனுக்கு ஒருத்தி ஒருத்திக்கு ஒருவன் ஒரு நேரத்தில் ஒரு இடத்தில் ஒருவர் தான் நன்றி கடவுளே வாழ்வு ஒன்று தான் சாவும் ஒன்று தான் நீயும் ஒன்று தான்...

சில குறிப்புகள் -- 1

ஒரு புத்தகத்தை ஆழமாகப் படிப்பது என்பது இல்லாமல் போய்விடும்போல் தோன்றுகிறது. அதற்கு முக்கிய காரணம் நேரம் கிடைக்காமல் போவது. தற்போது புத்தகங்களைப் புரட்டிப் பார்க்கும் நேரமே கிடைக்கிறது. அப்படிப் புரட்டிப் பார்க்கும்போது அந்தப் புத்தகத்தைப் பற்றி சிலவற்றை மட்டுமே குறிப்பிட வேண்டும்போல் தோன்றுகிறது. மேலும் புத்தகம் படிக்கும்போது இன்னார் எழுதியுள்ளார் என்பதைப் பார்க்கக் கூடாது. அப்படிப் பார்க்க ஆரம்பித்தால், புத்தகத்தை விட புத்தகம் எழுதியவர்க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும்படி ஆகிவிடும். தமிழைப் பொறுத்தவரை எழுத்தாளர்களை உபதேசிப்பவர்களாக மாற்றி விடுகிறோம். பின் அவர்கள் எழுதுவது, பேசுவதெல்லாம் பிரமிப்பு கலந்த மரியாதையுடன் வரவேற்கிறோம். இந்த பிரமிப்பை முதலில் உடைக்க வேண்டும். ஒரு புத்தகக் கண்காட்சியின்போது, சமீபத்தில் அதிகமாக எழுதி புகழ்பெற்ற ஒரு எழுத்தாளர் பின்னால் ஒருவர் வால் மாதிரி தொடர்ந்து சென்றதைப் பார்த்தேன். என் பக்கத்தில் இருந்தவர், அது அவருடைய வாசகர் என்றார். என்னைப் பொறுத்தவரை ஒரு வாசகன் என்பவன் எழுத்தாளனை விட மேலானவன். அல்லது அவனுக்குச் சமமானவன். சினிமாவைப் பொறுத்தவரை நடிகர்கள்,

மரணத்தின் பிரதிபலிப்பு

சமீப காலங்களில் எங்களுக்குள் இந்த ஊடல்; எவ்வளவு நாள் காதலித்திருக்கிறேன்! என்னை அழகு என்று எப்பொழுதும் சொல்லியதும் நினைவுக்கு வருகிறது. ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே எவ்வளவு கணங்கள் கழிந்திருக்கும் மணமான பின்னும் தொடர்ந்த காதலில் இப்போதெல்லாம் பிணக்குதான்; அருகே செல்லவே பிடிக்கவில்லை. ஒரு மாதிரி அலுத்துவிட்டது - இருவருக்கும்தான். வாழ்க்கையின் சுவையும் ரசமும் போயே விட்டதாக உணர்ந்தோம். தனியே ஒரு நாள் சந்தித்தோம் நிறைய பேசினோம் தேய்ந்துபோய் சாதலைவிட நடுவயது மரணம் மேலானது இயற்கை மரணத்தைவிட விபத்துக்கள் சுலபமானவை என்றெல்லாம் சொல்லியபோது பெரிதாய் சட்டை செய்யவில்லை தற்கொலைவரை போகும் என்று எண்ணவில்லை அடுத்த நாள் காலை சுக்குநூறாக சிதறி இருந்ததில் என் நூறு முகங்கள்.

நகுலனைப் பற்றி சில நினைவுக் குறிப்புகள்

முதன்முதலாக நகுலனைப் பற்றி எப்போது நான் தெரிந்துகொண்டேன். ஒருமுறை வைத்தியநாதனுடன் (தீவிர வாசகர், ழ, விருட்சம் இதழ்களில் கவிதைகள் அதிகம் எழுதியவர்)நான், ஆத்மாநாம், மூவரும் ஆனந்த் வீட்டிற்குச் சென்றோம். எனக்கு வைத்தியநாதனைத் தெரியும். அவருடைய கவிதைகள் சில ழ வில் அப்போது வெளிவந்து கொண்டிருந்தன. நான் அப்போது வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். கதை, கவிதைகள் எழுதத் தெரிந்தவன். ஆனால் தமிழில் தீவரத்தன்மை கொண்ட படைப்புகளை ஆர்வமாய் தேடிப் போய் வாசிப்பவன். என்னை தீவிர எழுத்துக்கு அறிமுகப்படுத்தும் நோக்கமாகத்தான் வைத்தியநாதன் என்னை ஆனந்த் வீட்டிற்கு அழைத்து வந்தார். கூடவே எங்களுடன் வந்துகொண்டிருந்த ஆத்மாநாமிடம் என்னை அறிமுகப் படுத்தினார். ஆனந்த் வீட்டிற்கு வந்தவுடன், வைத்தியநாதன் சொல்லியபடி, ஆனந்த் நாலைந்து 'ழ' வெளியீடு புத்தகங்களைக் கொடுத்தார். நான் மகிழ்ச்சியுடன் அவற்றை விலைக் கொடுத்து வாங்கினேன். ழ புத்தகங்கள் எல்லாம் விலை குறைவாக இருந்ததோடல்லாமல் நல்ல தரத்துடன் தயாரிக்கப்பட்டிருந்தன. உயர்ந்த தாளில் அச்சிடப்பட்டிருந்தன. அதில் ஒரு புத்தகம், 'கோட் ஸ்டான்ட் கவிதைகள்

உயிரோவியம்..

ஓவியம் வரைந்துகொண்டிருந்த அந்தக் கிழவனின் கைகளில் சிறிதேனும் நடுக்கத்திற்கான அறிகுறி தென்படவில்லை. புகை கக்கி இரைச்சலுடன் செல்கின்ற வாகனத்தினாலும் தோள்மீது எச்சமிட்டு பறக்கின்ற காக்கையினாலும் கலைத்துவிட முடியவில்லை ஓவியத்துள் கரைந்துவிட்ட கிழமனதை. பசித்தழும் குழந்தையின் கண்ணீர்த்துளியில் தெரிந்தது ஓவியத்தின் நேர்த்தியும் கிழவனின் ரசனையும்... ஓவியத்தின் மீது ஒற்றை ரூபாய் எறிகையில் கரம் நடுங்கியதைக் கண்டு அழுகை நிறுத்தி ஏளனப் புன்னகை சிந்தியது அக்குழந்தை.

வைரமோதிரம்

தாம்பரத்திலிருந்து வரும் போக்குவரத்து வண்டியில்தான் அந்தப் பெண் குரோம்பேட்டையில் ஏறிக்கொண்டாள். முகமெல்லாம் மிணுமிணுக்க புத்தாடை அணிந்திருந்தாள். கண்களில் ஏகப்பட்ட மகிழ்ச்சி. அவள் உடை உடுத்தியிருக்கும் விதத்தை பஸ்ஸில் இருந்த சிலரும் ரசித்துக்கொண்டி ருந்தார்கள். இடது கை மோதிர விரலில் வைர மோதிரமொன்றை அணிந்திருந்தாள். தாங்க முடியாத ஜ்வலிப்புடன் அது காட்சி அளித்துக்கொண்டிருந்தது. வைரமோதிரத்தின் ஜ்வலிப்பு அவள் நிறத்தை இன்னும் மெருகூட்டிக் கொண்டிருந்தது. அவளுக்குப் போனவாரம்தான், திருமணம் நிச்சயம் ஆனது. அந்தச் சந்தோஷத்தை அவளுடைய வகுப்புத் தோழி ஒருவளுடன் பகிர்ந்துகொள்ளத்தான் குரோம்பேட்டையிலிருந்து தி.நகர் வரைச் செல்லும் வண்டியில் புறப்பட்டுச் சென்றுகொண்டிருக்கிறாள். தி நகரில் இருக்கும் அவளுடைய நெருங்கிய தோழி என்ன காரணத்தாலோ அவள் திருமணம் நிச்சயம் செய்த நாளன்று வர முடியவில்லை. பையில் கல்யாண நிச்சயம் ஆன புகைப்பட ஆல்பமும், ஒரு சீடியும் வைத்திருக்கிறாள். புறப்படும்போது அம்மாவிடம் அடுத்தநாள் வருவதாகச் சொல்லியிருந்தாள். பல மாதங்கள் முயற்சி செய்து இந்த வரன் கிடைத்ததால், அவள் அம்மாவிற்கும் மகிழ்ச்சி.