Skip to main content

Posts

கவிதையும் ரசனையும் – 13

அழகியசிங்கர் சமீபத்தில் நகுலனைப் பற்றி பேச்சு வந்தது. நகுலன் சிறுகதை, கவிதை, நாவல், கட்டுரை என்று எழுதியிருக்கிறார். மிகக் குறைவான வாசகர்களுக்காகவே அவர் எழுதியிருக்கிறார். 1987ஆம் ஆண்டு வெளிவந்த ‘சுருதி’ என்ற புத்தகத்தின் பிரதி ஒன்று கிடைத்தது. இத் தொகுதியில் கடைசியில் இக் கவிதைத் தொகுதி பற்றி நகுலன் இவ்வாறு எழுதியிருக்கிறார். ‘சமீபத்தில் எனக்கு நேர்ந்த ஒரு அனுபவம் காரணமாகக் கவிதை, கதை, நாவல் இவைகளை எழுதுவது முக்கியமன்றி, அவைகளைப் பிரசுரிக்க வேண்டிய அவசியமில்லை என்று முடிவுக்கு வந்தேன்’ என்று எழுதியிருக்கிறார். அவருக்கு என்ன அனுபவம் கிடைத்தது அவர் அப்படி நினைத்தார் என்று தெளிவாகக் குறிப்பிடவில்லை. 36 கவிதைகள் கொண்ட தொகுப்பை தாரணி பதிப்பகத்தின் ஸ்தாபகர் நகுலன் கவிதைகளைப் பிரசுர்த்துள்ளார். இன்னொன்றையும் குறிப்பிடுகிறார் நகுலன். ‘ எனக்கு வரும் கடிதங்களிலிருந்து என் கவிதைகளுக்குத் தரமான வாசகர்கள் இருக்கிறார்கள் என்பது மாத்திரமில்லை (இவர்களை எனக்கு முன்பின் தெரியாது), இவர்களில் சிலர் நல்ல கவிஞர்கள் என்பதையும் – பரவலாக அவர்கள்...

42 வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சியின் ஒளிப்பதிவு

  அழகியசிங்கர் சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 42வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சியின் ஒளிப்பதிவு. கலந்துகொண்ட எல்லோரும் கவிதை வாசித்தார்கள்.

தேர்தல் காலத்து சிந்தனை கவிதைகள் - ஒன்று

  அழகியசிங்கர்  தேர்தல் காலத்தில் நம்மிடம் அவர்கள் கெஞ்சுவார்கள் பின் அவர் கேட்டு நாய்க்கூட நம்மை ஏறெடுத்துப் பார்க்காது.

வந்து விட்டது நவீன விருட்சம் இதழ்

 10.03.2021 துளி - 177 அழகியசிங்கர் கடந்த 6 மாதங்களாக பெரும் முயற்சி செய்து விருட்சம் 115 & 116வது இதழ் கொண்டு வந்து விட்டேன்.  ஏன் ஒரு இதழ் இவ்வளவு தாமதமாகிறது?  இது குறித்து இன்று இரவு பத்து மணிக்கு  அழகியசிங்கருடன்  உரையாற்ற உள்ளேன். இந்த இதழ் விருட்சம் 104 பக்கங்களுக்கு வந்திருக்கிறது.  தனி இதழ் ரூ.50.  இரண்டு இதழ்களின் சேர்க்கை. வழக்கம்போல நிறையா கதைகள், நிறையா கவிதைகள் என்றெல்லாம் இந்த இதழில் காணலாம்.  1. கேள்விகள் - பதில்கள்  உஷாதீபன் 2. கடற்கரை மத்த விலாச அங்கதம் கவிதைகள்  3. நீர் பள்ளம் - கவிதை -  லாவண்யா   சுந்தரராஜன்    4. க.சோமசுந்தரி கவிதை  5.  கணேஷ்ராமன்  கவிதைகள்  6. நாகேந்திர பாரதி கவிதை  7. இழப்பு - சிறுகதை - ஜெ.பாஸ்கரன் 8. ஒரு கவிதை -  அழகியசிங்கர்     9. நட்பின் அலைகள் - கவிதை -  ஜான்னவி 10.ஆயுள் - கவிதை -  பி.ஜெகந்நாதன் 11.இன்னாருக்கு இன்னாரென்று-சிறுகதை-ஜெயராமன்   ரகுநாதன்  ...

விருட்சம் சூம் மூலமாக 42வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி

அழகியசிங்கர் சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 42வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி வருகிற சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு 13.03.2021 அன்று நடைபெற உள்ளது. சும்மா என்ற தலைப்பைப் பாடுபொருளாக எடுத்துக்கொண்டு கவிதைகள் வாசிக்க உள்ளார்கள். இந்த முறை ஒவ்வொருவரும் குறைந்தது ஒரு முறை கவிதை வாசிக்க வேண்டும். ஒவ்வொரு கவிதையும் 20 வரிகளுக்குமேல் போகக் கூடாது. வ.வே.சுவும், பானுமதி அவர்களும் கருத்துரைகளை வழங்குவார்கள். சும்மா வாருங்கள். சும்மா கவிதை வாசியுங்கள். Topic: 42nd Virutcham Poetry Reading Zoom Meeting Time: Mar 13, 2021 06:30 PM India Join Zoom Meeting https://us02web.zoom.us/j/86588469762?pwd=d1lBU3o0M2RlSkt0UmtHTnEvUFRvUT09 Meeting ID: 865 8846 9762 Passcode: 751770

ஒரு வழியாகத் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டோம்..

  10.03.2021 துளி - 176 அழகியசிங்கர் எல்லோருக்கும் வணக்கம்.  இன்று தடுப்பு ஊசி போய்ப் போட்டுக்கொண்டு வந்துவிட்டேன்.  “இதில் சொல்வதற்கு என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். உண்மைதான். ஆனால் எனக்குச் சொல்வதற்கு இருக்கிறது. கோவிந்தன்  ரோடில்  உள்ள ஒரு  கார்ப்பரேஷன்  மருத்துவமனைக்கு  முதலில்  போனேன்.  நானும் மனைவியும். பிபியும்   சுகரையும்  நான் எப்போதும் சுய பரிசோதனை செய்து கொண்டிருப்பேன். அவை இரண்டும் என் உடன் பிறப்புகள். இன்று காலையில் அப்படி சுயப்  பரி சோதனை   செய்தபோது சரியாக இருந்தது எல்லாம். நாங்கள் இருவரும் மருத்துவ மனைக்குச் சென்றோம். கூட்டம் சுமாராக இருந்தது. எங்கள் இருவருக்கும்  பிபியைப்  பார்த்தார்கள்.  அதிகமாகக் காட்டியது.  சிறிது நேரம் உட்காரச் சொன்னார்கள். உட்கார்ந்தோம்.  திரும்பவும் சோதித்தார்கள்.  முன்பு இருந்ததை விட  ரீடிங்  அதிகமாகக் காட்டியது.  எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.  எனக்காவது பரவாயில்லை.  என் மனைவிக்கு ஏன் அப்படிக்...

ஒரு கதை ஒரு கருத்து

  அழகியசிங்கர் ஸ்டெல்லா புரூஸ்ஸின் ஐ லவ் எவ்ரிதிங் அண்டர் த ஸன் மார்ச் ஒன்றாம் தேதி ஸ்டெல்லா புரூஸ் தற்கொலை செய்துகொண்ட தேதி. 18.05.1995ஆம் ஆண்டு ஸ்டெல்லா புரூஸ் ஒரு புத்தகம் கொடுத்தார். அது ஒரு சிறுகதைத் தொகுப்பு. அப்புத்தகத்தின் தலைப்பின் பெயர் கற்பனைச் சங்கிலிகள். 10 கதைகள் கொண்ட தொகுப்பு நூல். நான் உண்மையிலேயே இந்தப் புத்தகத்தை மறந்து விட்டேன். இது ரொம்ப மோசமான விஷயம் என்று எனக்குத் தோன்றுகிறது. 95ல் கொடுத்த புத்தகத்தை ஏன் படிக்காமல் விட்டேன்? இது மாதிரி பல புத்தகங்களை நான் படிக்காமல் வைத்திருக்கிறேன். யாராவது கொடுக்கிற புத்தகம் மட்டுமல்ல, நான் வாங்குகிற புத்தகங்களையும் நான் மறந்து விடுகிறேன். இந்தப் புத்தகத்தின் முதுகில் எலி கடித்து சற்று வீனாகிவிட்டது. சரி, இந்தக் கதையைப் பார்ப்போம். இந்தக் கதை எப்போது வந்தது என்று தெரியாது. இதுதான் ஞானரதத்தில் வந்த ஸ்டெல்லா புரூஸின் முதல் கதை என்று நினைக்கிறேன். ஜே.கிருஷ்ணமூர்த்தியின் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. ஸ்டெல்லா புரூஸ் ஆரம்பத்தில் கிருஷ்ணமூர்த்தியின் தத்துவத்தில் நம்பிக்கை உள்ளவர...