Skip to main content

Posts

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 99

அழகியசிங்கர்   ஈனிப்பு ரா ஸ்ரீனிவாஸன் கண்ணாடிப் பெட்டகத்துள் கண்ணை ஈர்த்தது விற்பனைக்கிருந்த வண்ண இனிப்புகள் - இனிப்பின் மணம் அழைத்தது போல வந்து சேர்ந்தன ஈக்களிரண்டு- முட்டி மோதி எட்டாத இனிப்பை ஏங்கி கண்ணாடிப் பெட்டகத்தின் மேல் ஒட்டிக் கொண்ட ஈக்களுக்கு - இனிப்பை நாடி இனிப்பை உண்டு இனிக்க இனிக்க இனிப்பிற்குள்ளேயே மரித்துக் கிடக்கும் உடன்பிறப்பு ஈக்கள் - கண்ணில் பட்டது - கருத்தில் படாதது. நன்றி :  கணத் தோற்றம் - கவிதைகள் - ரா ஸ்ரீனிவாஸன்  - விருட்சம் வெளியீடு, சென்னை 33- மொத்தப் பக்கங்கள் : 42 - வெளியான ஆண்டு : 2001 - விலை : ரூ.20.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 98

அழகியசிங்கர்   தீவட்டித் திருடர்கள்                                                    லாவண்யா தீவட்டித் திருடர்கள் மூவர் பண்டொரு நாளில்  அம்மணி அம்மாளின் வீடு புகுந்தார்.  அரிவாளொருவன் கையில் இரும்புத்தடியும்  தீவட்டியும் மற்றிருவர் கையிலுமாக. மருமகளும் பேரனும் முற்றத்திலுறங்கினார்.  அகமுடையாரும் பிள்ளையும் அயலூர் சென்றவர்  அடுத்த நாள்தான் வரவிருந்தார்கள். அமைதியாய் இருக்கச் சொல்லி அரிவாளைக்  கும்பிட்டாளம்மணி.  நெல்லொரு சாக்கிலும்  கம்பங்கருதும் மல்லாக்கொட்டையும்  மற்றுமிரு சாக்கிலவர் முன் வைத்தாள்  தங்க வளையல்களிரண்டோடு. தண்ணீர் கேட்டதட்டினானொருவன்.  பயத்தில் வெண்கலச் சொம்பிலிருந்த பாலைத்  தந்தாள் நீரென்றெண்ணி.  பாலைக் குடித்தவன் தீமிதித்தவன் போலானான்.  புறப்பட்டானிருவரோடும். எதையும்  எடுத்துச் செல்லாமல். நல்லாயிரம் மண...

துளி : 15 - வெங்கட் சாமிநாதன் எழுதிய வாழ்க்கை வரலாறு..

துளி : 15 - வெங்கட் சாமிநாதன் எழுதிய வாழ்க்கை வரலாறு.. அழகியசிங்கர் சமீபத்தில் பிரமிளின் எல்லா எழுத்துக்களையும் 6 புத்தகங்களாக பிரமிளின் பக்தரும் நெடுங்கால நண்பருமான கால சுப்ரமணியம் கொண்டு வந்துள்ளார்.  இது அரியஞ்; பணி.  இதை சுப்ரமணியம் மாதிரி ஒரு தீவிரவாதிதான் செய்து காட்டமுடியும்.   இதேபோல் வெங்கட் சாமிநாதனுக்கு ஒருவர் முயற்சி செய்தால் 10 புத்தகங்களுக்கு மேல் ஒருவர் கொண்டு வர வேண்டும்.  அவ்வளவு எழுதியிருக்கிறார் வெங்கட் சாமிநாதன்.  ஆனால் இதை யாரால் செய்ய முடியும்?  அவர் எழுதிய எல்லாப் புத்தகங்களையும் சேகரிக்க வேண்டும்.  அதன் பின் அவர் எழுதாத கட்டுரைகள் ஆயிரக்கணக்கில் இருக்கும்.  அதையெல்லாம் கண்டு பிடிக்க வேண்டும்.  அவருடைய நண்பர்கள்தான் இதற்கெல்லாம் உதவி செய்ய வேண்டும்.  நான் முயற்சி செய்யலாமென்று அவர் புத்தகங்களை எல்லாம் வாங்கி வைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் எனக்குத் தெரியாமல் இன்னும் எத்தனைப் புத்தகங்கள் வந்திருக்கின்றன என்பது என்னால் ஊகிக்க முடியவில்லை.  பிரமிளுடைய எல்லாக் குணங்களும் வெங்கட் சாமிநா...

ஒப்பனை நகரம்

பிரபு மயிலாடுதுறை அந்நகரம் ஒப்பனையாளர்களைக் குறைவாகவும் சுயமாக ஒப்பனை செய்து கொள்பவர்களை அதிகமாகவும் கொண்டு பரபரப்பாக ஒப்பனை செய்து கொண்டிருந்தது எதிரேயிருக்கும் மனிதர்களை ஆடிகளாய்ப் பெரும்பாலானோர் எண்ண எண்ண ஒவ்வொருவரின் பிம்பமும் முடிவிலா சாத்தியங்களுடன் பெருகியது நாடக மேடைகளின் பின்பக்கமென அந்நகரில் வஸ்திரங்களும் ஆபரணங்களும் விரவிக் கிடந்தன ஒரு சிறிய முக்கில் பாலகர்கள் பத்து பேர் ஒரு பாக்கெட் சீனி வெடியை மெழுகுவர்த்தி ஊதுவத்தி வைத்துக் கொண்டு வெடித்து வெடித்து ஆரவாரித்தனர் அவ்வப்போது அவர்களைப் பார்த்து மகிழ்ந்து மகிழ்ந்து சிரித்தான் சேலைத் தொட்டிலில் உட்கார்ந்திருந்த குழந்தை

துளி : 14 - மறக்க முடியாத இரண்டு புத்தகங்கள்

அழகியசிங்கர் ஒவ்வொரு முறையும் சாகித்திய அக்காதெமி அலுவலகத்தில் நடக்கும் கூட்டத்தில் கலந்துகொள்வதற்குச் செல்லும்போது அங்கு வைக்கப்பட்டுள்ள புத்தகங்களைத் தேடுவது என் வழக்கம்.   அப்படி தேடிய இரண்டு புத்தங்களைப் பற்றி இங்கே குறிப்பிடலாமென்று நினைக்கிறேன். ஒரு புத்தகத்தின் பெயர் வசவண்ணர் வாக்கமுது.  இப் புத்தகத்தின் முதல் பதிப்பு 1972ல் வெளிவந்துள்ளது.  மறுபதிப்பு 1993.  இப் புத்தகத்தின் விலை ரூ.85 தான்.  ஒவ்வொருவரும் கட்டாயம் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டிய புத்தகம். வசவண்ணர் எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய புத்தகம் இது.  வசவண்ணரால் பாரதத்தின் ஆன்மக் கருவூலம் வளர்ச்சி பெற்றது.  கன்னட இலக்கிய ரலாற்றில் ஒரு யுகபுருஷரான வசவண்ணர் உயர்ந்த இறை உணர்வை எளிமையும், சுவையும் மிக்க இனிய பாடல்களில் படைத்தவர்.  இப்புத்தகம் 500 வாக்கமுதுகளைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்துள்ளது சாகித்திய அக்காதெமி.  அதிலிருந்து சிலவற்றை இங்கு அளிக்கிறேன். வசவண்ணர் கூடல் சங்கம தேவாவை முன்வைத்து தன் வாக்கமுதுகளை வெளிப்படுத்தி உள்ளார். 1 ஐ...

திறந்த புத்தகம் பற்றி இந்திரா பார்த்தசாரதி

அழகியசிங்கர் என் திறந்த புத்தகம் பற்றி இந்திரா பார்த்தசாரதி அவர்கள் ஒரு நிமிடம்தான் பேசி உள்ளார்.  அந்த ஒளிப்பதிவை இங்கே அளிக்க விரும்புகிறேன்.  50 கட்டுரைகள் கொண்ட இப் புத்தகத்தின் விலை ரூ.170. 200 பக்கங்களுக்கு மேல்.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 97

7 அழகியசிங்கர்    ஏழுமணிச் சண்டை கல்யாணராமன் ஹிண்டு பேப்பர் காலை ஏழு மணிக்கு வரும் எடிட்டோரியல் படிக்க அப்பாவும் எண்டர்டெயின்மெண்ட் பார்க்கத் தங்கையும் மேட்ரிமோனியல் மேய அம்மாவும் வான்டட் காலத்தை அலச அக்காவும் ஸ்போர்ட்ஸ் புரட்டத் தம்பியும் இவர்கள் படிக்காத ஏதாவதொன்றை வெறுமனே கையில் பிடித்திருக்க நானும் ஒரே சமயத்தில் பரபரத்துப் பாய்வோம் மணியடித்து ஓயும் சுவர்க் கடிகாரத்துக்குத் தெரியும் இன்னும் சற்று நேரத்தில் சீந்துவாரின்றிப் பேப்பர் புரளப் போகும் வெற்றுத் தரைக்கும் கொஞ்சம் தெரியும் இந்த ஏழுமணிச் சண்டைக்குத்தான் எல்லாமுமென்று. நன்றி : நகரத்திலிருந்து ஒரு குரல் - கல்யாணராமன் - கவிதைகள் -பக்கங்கள் : 96 - பதிப்பாண்டு : ஜøன் 1998 - விலை : ரூ.30-தாமரைச் செலவி பதிப்பகம்.