Skip to main content

Posts

இரங்கல் கூட்டங்கள் நடத்துவது வருத்தமான ஒன்று...

அழகியசிங்கர்                                                                                             பல ஆண்டுகளாக நான் விருட்சம் இலக்கியச் சந்திப்பு கூட்டங்கள் நடத்தி வருகிறேன்.  அப்படித் தொடர்ந்து நடத்திக்கொண்டு வரும்போது, சில மாதங்கள் தொடராமல் நிறுத்தி விடுவேன்.  சில சமயம் இலக்கியச் சந்திப்பு கூட்டங்கள் ஆண்டுக் கணக்கில் நின்று விடும்.  சமீபத்தில் 24 கூட்டங்கள் நடத்திய நானும் என் நண்பரும் அதைத் தொடராமல் நிறுத்தி விட்டோம்.  ஆனால் ஜøன் மாதம் திரும்பவும் நடத்த நினைக்கிறேன்.    இப்போது ஒரு கலகலப்பான சூழ்நிலை இலக்கிய உலகில் நடந்து கொண்டிருக்கிறது.    பலர் இலக்கியக் கூட்டங்களை நடத்துகிறார்கள்.  பெரும்பாலும் சனி ஞாயிறுகளில் இலக்கியக் கூட்டம் இல்லாமல் இருப்பதில்லை.   அக் கூட்டங்களில் விடாமல் ஒவ்...

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 69

அழகியசிங்கர்    நீ மணி; நான் ஒலி! கவிஞர் கண்ணதாசன் பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் அறிந்து பாரென இறைவன் பணித்தான் அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன் அளித்துப் பாரென இறைவன் பணித்தான் பாசம் என்பது யாதெனக் கேட்டேன் பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான் மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன் மணந்து பாரென இறைவன் பணித்தான் பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன் பெற்றுப் பாரென இறைவன் பணித்தான் முதுமை என்பது யாதெனக் கேட்டேன் முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான் வறுமை என்பது என்னெனக் கேட்டேன் வாடிப் பாரென இறைவன் பணித்தான் இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன் இறந்து பாரென இறைவன் பணித்தான்; 'அனுபவித் தேதான் அறிவது வாழ்வெனில் ஆண்டவ னேநீ ஏன் எனக் கேட்டேன் ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி அனுபவம் என்பதே நான்தான்' என்றான்! நன்றி : கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் - தொகுப்பு : சி ஆர் ரவீந்திரன் - மொத்தப் பக்கங்கள் : 365 - விலை : ரூ.150 - இரண்டாம் பதிப...

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 68

அழகியசிங்கர்   அவ்வளவுதான் எல்லாம் ரவிசுப்பிரமணியன்                                                                                                                                                                                      மின்சாரம் போய் விட்டது கதவுகளைச் சார்த்தாதே மெழுகுவர்த்தி வேண்டாம் சீமெண்ணை விளக்கைத் தேடாதே புகையும் வேப்பிலை போதும் கொசுக்களுக்கு எதிர்பாரா இருள் பிரசாதம் ஏற்றுக் கொள் அதனுடன் சிநேகம் கொள் கண்களை மூடு இருள் திகில் கலந்த அமானுஷ்யமானதால் காற்று நின்று விடுகிறதா என்ன? ஒளி அடங்கிய...

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 67

அழகியசிங்கர் வீடு அய்யப்பமாதவன்                                                                                        அந்தரத்தில் தேடுகிறேன் ஒரு வீடு சதுரம் சதுரமாய் நீள்கின்றன குறுகுகின்றன வைரங்களுக்குப் போல் விலைகள் இன்னும் இன்னும் சுற்றுகின்றேன் கற்பனையில் சொந்தமாகும் வீடுகளில் புத்தக அலமாரிகளை நிர்மாணிக்கின்றேன் பால்கனியில் மனைவி பூந்தொட்டிகள் வாங்கி பராமரிக்கின்றாள் சமையலறை அவள் விருப்பத்திற்கு விட்டுவிட்டேன் நடு கூடத்தில் கலர் டிவி இரண்டு சேர் வைத்தாகிவிட்டது குழந்தை படங்கள் மாட்டியாகிவிட்டது சாமி அறையைத் தீர்மானிப்பதில் குழப்பம் படுக்கையறையில் பீரோக்கள் வைத்தாயிற்று கட்டில் போட இடமில்லை நானும் அவளும் புனையும் கற்பனையில் வீடுகளை சொந்தமாக்கிக் கொண்டே இருக்கிறோம். நன்றி : நீர்வெளி - கவிதைகள் - அய்யப்ப மாதவன் - வெளியீடு: அகரம், மனை எண் 1. நி...

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 66

அழகியசிங்கர்    இன்னும் சில பிணங்கள் ந பிச்சமூர்த்தி பணமென்றால் பிணமும் வாய்திறக்கும் எனக்குத் தெரியாது பணமென்றால் ந. எண்ணையும் தே. எண்ணையும் கத்திரிக்காயும் கல்யாண மண்டபமும் இன்னம் என்னவெல்லாமோ வாய்பிளப்பது எனக்குத் தெரியும் நாமும் வாயைப் பிளக்க வேண்டியது தான். நன்றி : ந பிச்சமூர்த்தியின் தேர்ந்தெடுத்த கவிதைகள் - தொகுப்பு : ஞானக்கூத்தன் - வெளியீடு ; சாகித்திய அக்காதெமி, தலைமை அலுவலகம், ரவீந்திர பவன், 35 பெரே8ôஸ்ஷா சாலை, புதுதில்லை 110 001 - மொத்தப் பக்கங்கள் : 176 - விலை : 65 - முதல் வெளியீடு : 2000

நீங்களும் படிக்கலாம் - 30

நீங்களும் படிக்கலாம் - 30 அழகியசிங்கர் நேற்று குங்குமத்தில் என் பேட்டி வெளியாகி உள்ளது.  பேட்டி   எடுத்த குங்குமம் ஆசிரியர் குழுவிற்கு என் நன்றி.  பேட்டியை எடுப்பதை விட  பேட்டியைச் சரியாகக் கொண்டு வருவது என்பது சாதாரண விஷயம் இல்லை.  அதைத் திறமையாக குங்குமம் பொறுப்பாசிரியர் கதிர் திறன்பட செய்து முடித்துள்ளார். புகைப்படங்கள் எடுத்த வின்சன்ட் பால் அவர்களுக்கும் என் நன்றி.  இப் பேட்டியைப் பற்றி கே என் சிவராமன்  எழுதி உள்ளார்.  அவருக்கும் என் நன்றி. சில தினங்களாக நான் ஒரு நேர்காணல் புத்தகத்தை எடுத்துப் படித்து முடித்தும் விட்டேன்.  260 பக்கங்கள் கொண்ட புத்தகம் அது.  மறுதுறை மூட்டம் என்பது புத்தகத்தின் பெயர்.  நாகார்ஜ÷னனைப் பேட்டி எடுத்தவர் எஸ். சண்முகம். செம்மையாக்கம் செய்தவர் முபீன் சாதிகா.   இந்தப் புத்தகத்தைத் தயாரிப்பதற்குள் போதும் போதுமென்று ஆகியிருக்கும்.  அந்த அளவிற்குக் கடினமான ஒன்றாக இருந்திருக்கும். இந்தத் தருணத்தில் பிரேமிளைப் பேட்டி எடுத்த மீறல் 4 சிறப்பிதழைப் பற்றியும் குறிப்பிட வேண்டும...

ஏன் இந்தக் குழப்பம்?

அழகியசிங்கர் நேற்று மாலை 7 மணிக்கு என் சம்மந்தி அவர்களின் அம்மா உடல்நலம் குன்றி இறந்து விட்டார்.  கடந்த பல மாதங்களாக அவர் படுக்கையிலேயே இருந்தார்.  மாலை 4 மணிக்கு காப்பி குடித்தப் பிறகு அவர் சிறிது நேரத்தில் இறந்து விட்டிருக்கிறார்.  என் உறவினர் டிபன் எடுத்துக்கொண்டு போய்க் கொடுக்கும்போது அவர் அசைவற்று இருப்பதைப் பார்த்து பக்கத்தில் யாராவது மருத்துவர் இருந்தால் அழைத்து வரலாமென்று எண்ணித் தவித்திருக்கிறார்.  எந்த மருத்துவரும் வரவில்லை என்பது பெரிய சோகம்.  அதை விட அவரை அழைத்துக்கொண்டு போய் பக்கத்தில் உள்ள மருத்துவ மனையில் சேர்க்கலாமென்று நினைத்து ஒரு ஆம்புலன்ஸிற்கு போன் செய்தார்கள்.  அந்த ஆம்புலன்ஸிலிருந்து வந்த ஒரு நர்ஸ் நோயாளியைப் பார்த்துவிட்டு, üபல்ஸ் நின்று போய்விட்டது.  அழைத்துக்கொண்டு போக முடியாது.  லோக்கல் டாக்டரைப் பாருங்கள்ý என்று சொல்லிவிட்டு சென்று விட்டாள்.  நான் அப்போது உறவினர் வீட்டில்தான் இருந்தான்.  என்னடா இப்படி ஒரு சங்கடம் என்று தோன்றியது.  மருத்துவர் வர விரும்பவில்லை. மருத்துவ மனைக்கு அழைத்துச் செல...