Skip to main content

Posts

வழித்துணை?

ஞானக்கூத்தன்  வாழ்க்கையில் ஒ ரு கட்டத்தில் சுந்தரமூர்த்தி நாயனாருக்குக் கண் பார்வை போய்விட்டது. எதற்கெடுத்தாலும் மற்றவர்களுடைய உதவியை அவர் கேட்கத் தொடங்கினார். இதனால் வீட்டில் இருந்தவர்களுக்குக் கஷ்டம். அவரவர்களுக்கு வேலை இருக்கும்போது இவர் அடிக்கடி தனக்கு உதவி செய்யக் கூப்பிட்டால் எப்படி? நாயனாருக்கும் வருத்தம். திருவொற்றியூர் உறை சிவபெருமானிடம் தனக்கு நேர்ந்த குறையைச் சொல்லி முறையிட்டார். பத்துச் செய்யுளில் ஐந்தாவது செய்யுளில் சொல்கிறார்: கழித்தலைப்பட்ட நாயது போல ஒருவன் கோல் பற்றிக் கறகற இழுக்கை ஒழித்து நீ அருளாயின செய்யாய் ஒற்றியூர் எனும் ஊர் உறைவனே. தெருவில் அவருக்கு உதவி செய்ய வந்தவன் அவர் பிடித்துக்கொண்டிருந்த ஊன்றுகோலின் மறுமுனையைப் பிடித்துக் கறகற என்று இழுத்துச் சென்றானாம். நாயனார் அப்படி ஒன்றும் ஊர் அறியாத அநாமி அல்லர். இருந்தும் அவருக்குக் கிடைத்த மரியாதை இவ்வளவுதான் – கறகற இழுக்கை – வீட்டுக்கு வெளியில் இந்த நிலைமை என்றால் வீட்டிலும் அப்படித்தான். அகத்திற் பெண்டுகள் நான் ஒன்று சொன்னால் அழையேல்! போகுருடா! எனத் தரியேன் முகத்திற் கண்ணிழந் த...

பிப்ரவரி 4ஆம் தேதியை மறக்க முடியுமா?,,

அழகியசிங்கர் இரண்டு ஆண்டுகளுக்கு  முன் பிப்ரவரி நாலாம் தேதி, ஒரு மதிய வேளையில் டிபன் பாக்ஸிலிருந்து மதிய உணவை எடுத்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்.  கண்புரை காரணமாக அவதிப்பட்டுக் கொண்டிருந்தேன்.  அந்த மாதத்துடன் நான் பதிவு மூப்பு அடைகிறேன்.  ஆனால் அந்த மாதம் என்னவோ அலுவலகம் வருவதே பெரிய அவஸ்தையாக இருந்தது.  கம்ப்யூட்டரில் உள்ள எழுத்துக்கள் தெரியவில்லை.  பஸ் எண் தெரியவில்லை.  ஒன்றும் புரிபடாமல் இருந்தேன்.  சும்மா ஆபிஸ் வந்திருந்து, மதியம் வரை சும்மாவே ஆபிஸில் உட்கார்ந்து கொண்டிருந்தேன்.  மதியம் சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதுதான் போன் வந்தது. அந்தப் போன் நாயக்கன்மார் தெருவிலிருந்து மிஸஸ் ஐராவதம் போன் செய்தார்.  "என்ன?" என்று கேட்டேன்.  "என்னுடன் பேசிக்கொண்டிருந்தார்.. திடீரென்று கீழே சாய்ந்து விட்டார்...ஆஸ்பத்ரிக்குப் போக வேண்டும்....வர முடியுமா?" அதைக் கேட்டவுடன் பதட்டமாகி விட்டேன்.  என் வீட்டிலிருந்து ஐராவதம் வசித்த நாயக்கன்மார் வீடு பக்கம். வண்டியை இப்படித் திருப்பினால் நாயக்கன்மார் தெரு வந்து விடு...

சிறியதே அழகானது

பிரபு  மயிலாடுதுறை 30.01.2016 அன்று சென்னையில் நடைபெற்ற – எனது நண்பரும்  எழுத்தாளருமான அழகியசிங்கரின் மனைவி திருமதி. மைதிலி அவர்களின்  பணி நிறைவு விழா நிகழ்ச்சியில் பங்கு பெற்றேன்.  நெகிழ்வான உணர்வு  பூர்வமான நிகழ்வாக அது அமைந்திருந்த்து.  தமிழ் இலக்கியம், வாழ்வை  அகம் புறமென பகுத்து வகுத்துக் கொள்கிறது.  குடும்ப உறவுகளை  அகமென்றும் சமூக உறவுகளை புறமென்றும் கூறமுடியும்.  வீட்டினை  அகம் என்கிறோம்.  வீட்டிற்கு வெளியே புறம் என குறிக்கிறோம்.  இந்த  நூற்றாண்டிலும் சென்ற நூற்றாண்டிலும் தமிழர்களின் சமூக  வாழ்க்கையைப் பற்றி யோசித்துப் பார்த்தால், விவசாய வாழ்க்கை  முறையிலிருந்து பகுதியளவு வியாபார-வணிக வாழ்வுக்கும் பகுதியளவு  தொழில் சார்ந்த வாழ்வுக்கும் நகர்ந்திருப்பதைக் காண முடியும்.     இன்றும் பெருமளவு மக்கள் விவசாயம் சார்ந்த வாழ்க்கை முறையிலும்,  மனோபாவத்திலும் நீடித்திருப்பதைக் காண முடியும். சுதந்திர இந்தியாவில்,  இந்திய தேசிய காங்கிரஸ் தமிழ்நாட்டை ஆண...

ஜெயமோகனின் அறம்

டாக்டர் ஜெ.பாஸ்கரன் அறம் என்பது நல்ல பண்பை உணர்த்துவது, நீதி வழுவாத் தன்மையைக் குறிப்பிடும் சொல் - ஒரு மனிதக்குழு அல்லது ஒரு தனி மனிதன் தனக்குள் உருவாக்கிக் கொள்ளும் நெறிகள், இறுதியாக வகுத்துக் கொண்ட நடத்தைகள், செய்யக் கூடியவை, செய்யக் கூடாதவை, செய்தே ஆக வேண்டியவை அடங்கிய ஒரு வழி காட்டித் தொகை - அதுவே  அறம் .  2014, ஜனவரி புத்தகக் கண்காட்சியில் எல்லா ஸ்டால்களிலும் அழகாக அடுக்கிவைக்கப் பட்டிருந்தது அந்தப் புத்தகம். இரண்டு முறை கையிலெடுத்து, நானூறு பக்கங்கள் என்றவுடன் கீழே வைத்துவிட்ட புத்தகம் - நண்பர் சந்துரு, எதிர்பாராத ஒரு நொடியில், பரிசாகக் கொடுத்து என்னை வியக்க வைத்த புத்தகம் ஜெயமோகனின் “ அறம் “ ! வம்சி வெளியீட்டில் ‘ சிறுகதைகள் ‘ தொகுப்பு - தனது இணையதளத்தில் தொடர்ச்சியாக எழுதி வாசகர்களைக் கட்டிப்போட்ட உண்மைக் கதைகள். நேரடியாகவும், மறைமுகமாகவும் நம் கண்முன்னே ரத்தமும், சதையுமாக உலவிய பல ஆளுமைகளின் ‘ அறநெறி ‘ சார்ந்த கதைகள். அவற்றில் புனைவு என்பது, ஜெயமோகன் கதை சொல்லும் முறை மட்டுமே! பத்துப் பக்கம் படித்தால், கண்மூடி, இதயத்தினூடே கசியும் ஏதோ ஒன்று - வரு...

மறந்து போன பக்கங்கள்....

அழகியசிங்கர் தி சோ வேணுகோபாலனின் கோடை வயல் தொகுப்பில் உள்ள நான்காவது கவிதை சிறை.  சில கவிதைகள் வாசித்தால் எளிதாக நம்மை நோக்கி வரும். மிகக் குறைவான வரிகள் கொண்ட இக் கவிதை எதை நோக்கி எழுதப் பட்டிருக்கிறது. கனிக்குள்ளே இருந்து பிரிந்த தரு.  திரும்பவும் கருவாய் உருவாகிறது.  அதேபோல் நமது சிந்தை, சொற்கள், செயல் வாழ்க்கை மூலம் நம் வாழ்க்கையின் தத்துவத்தை நாம் சிலசமயம் தாண்டி வந்து விடுகிறோம். சிலசமயம் தத்தவத்துள் அடங்கி விடுகிறோம்.  ஏதோவிதத்தில் நாம் சிறையில் இருக்கிறோம்.  விரும்பினால் சிறையிலிருந்து விடுபடலாம்.  சிறை தருவின் பிரிந்த கனிக்குள்ளே தருவே கருவாய் உருவாச்சு. தத்துவத்தைத் தாண்டிவந்தோம்; தத்துவத்துள் தடைப்பட்டோம் ஆம், நமது சிந்தை, சொற்கள், செயல், வாழ்க்கை எல்லாம் தான்!

புத்தக விமர்சனம் 16

அழகியசிங்கர் சுருதி என்கிற நகுலனின் கவிதைத் தொகுதி ஏனோ என் புத்தகக் குவியலில் கண்ணில் பட்டது.  எடுத்து வைத்துக் கொண்டேன்.  தாரணி பதிப்பகமாக இப் புத்தகம் 1987ஆம் ஆண்டு வந்துள்ளது.  அப்போது இந்தப் புத்தகத்தின் விலை ரூ. 10/-.  உடனே இப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன்.  மொத்தம் 42 பக்கங்கள்.  ஆரம்பத்திலிருந்து நகுலனின் என்ற எழுத்துகளின் வாசகன் நான். தொடர்ந்து நகுலன் நாவல்களைப் படித்து வந்தால், ஒருவித குழப்பம் ஏற்படும். எல்லா நாவல்களிலும் ஒருவிதத் தொடர்ச்சி இருப்பதுபோல் படும்.  அவருடைய எழுத்து எளிமையான எழுத்து.  நினைவோடை தன்மை கொண்ட எழுத்து.  அவருடைய படைப்புகளைப் படிக்கத் தொடங்கும்போது நம்மிடம் நகுலன் நேரிடையாகவே பேசுவதுபோல் தோன்றும்.  நகுலன் எழுத்தில் காணப்படும் குழப்பம் அல்லது படிப்பவர்களுக்கு ஏற்படும் மன சஞ்சலம் அசோகமித்திரன் எழுத்தில் காணப்படுவதில்லை.  அசோகமித்திரன் எல்லாவற்றையும் தெளிவாக சொல்ல வல்லவர்.   சுருதி என்ற இக் கவிதைத் தொகுதியைப் படிக்கும் போது, திரும்பவும் இன்னொரு முறை இன்னொரு முறை என்று படிக்கத் தூண்ட...

பாஜிராவ் மஸ்தானி

பிரபு மயிலாடுதுறை சில ஆண்டுகளுக்கு முன்னால், மயிலாடுதுறையிலிருந்து சென்னைக்கு பேருந்தில் பகல் நேரத்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன்.  அது செல்ஃபோன் பிரபலமாகிக் கொண்டிருந்த காலம்.  நான் பேருந்தின் கடைசி வரிசைக்கு முன்னால் இருந்த இடதுபக்க இருக்கையில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்தேன்.  புதுச்சேரி பேருந்து நிலையத்தில் ஓர் இளைஞன்  ஏறினான்.  கடைசி வரிசையின் நடுவில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான்.  அவனது தோற்றம், கைப்பை, காலணிகள் மற்றும் அவன் கையிலிருந்த புத்தகங்கள் இவற்றைக்கொண்டு அவன் பொறியியல் மாணவனாக இருக்கக் கூடும் என கணித்தேன்.  பேருந்து கிழக்கு கடற்கரை சாலையில் சென்ற போது இரண்டு கல்லூரி மாணவிகள் புதுச்சேரி பொறியியல் கல்லூரி அருகே ஏறினர்.  கடைசி வரிசையில் மட்டுமே இடம் இருந்தது.  அம்மாணவனுக்கு அருகே அமர்ந்து கொண்டனர்.  ஒரே வகுப்பில் படிப்பவர்களாக இருக்கக் கூடும்!   புதுச்சேரியிலிருந்து சென்னை வரை உரையாடிய வண்ணம் இருந்தனர்.  ஒரு பெண் அவ்வப்போது தூங்கி எழுந்து உரையாடலில் இணைத்து கொண்டாள்.  அவள் உரையாடும் போது இன...