Skip to main content

Posts

மருத்துவர்கள் பற்றிய நகைச்சுவைத் துணுக்குகள்

மருத்துவர்கள் பற்றிய நகைச்சுவைத் துணுக்குகள் அசோகமித்திரன் ஒரு காலத்தில் வார மாதப் பத்திரிகைகள் மிகவும் குறைவு. வெளிவருவதில் பக்கத்துக்குப் பக்கம் விகடத்துணுக்குகள் இருக்கும். திரும்பத் திரும்ப மருத்துவர்கள் பற்றிய துணுக்குகள். “டாக்டர் உன் நண்பர் என்று சொன்னாயே, பின் ஏன் ஃபீஸ் கொடுத்தாய்? ” “அவர் பிழைக்க வேண்டுமே? ” “அப்படிப் பணம் கொடுத்து வாங்கிய மருந்தை ஏன் குப்பையில் கொட்டினாய்? ” “நான் பிழைக்க வேண்டுமே? ” அந்த நாட்களில் டாக்டர்கள் பத்திரிகைகளைத் தொடாதவர்களாக இருக்க வேண்டும். அல்லது கோபமே வராதவர்களாக இருக்கவேண்டும். எந்தக் கலாச்சாரத்தில் நீண்ட மருத்துவப் பாரம்பரியம் இருக்கிறதோ, அங்கெல்லாம் ந்ம்பிக்கை-அவநம்பிக்கை இரண்டும் சேர்ந்தே இருக்கின்றன. பெரும்பாலானோர் கடவுளைப் பிரார்த்திகாதபடி டாக்டரிடம் செல்வதில்லை. கன்னட எழுத்தாளர் சிவராம் கரந்த் பிறப்பால் பிராமணரானாலும் ஒரு நாத்திகவாதி. ஒரு முறை அவருடைய குழந்தைக்குப் பெருவாரி நோய் கண்டு விட்டது. எழுபது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நாட்டிலும் அம்மை, பிளேக் முதலியன கால அட்டவணை அமைத்துக் கொண்டு மாறி மாறி வரும். அம்மைக்...

விருது

விருது முதுமையைத் தொட்டபோது ஒட்டிக் கொண்டன தனிமையும் தளர்வும். இளமையில் துணையிருந்த திறமைகளும் திடமும் விடை பெற்றிருந்த வேளையில், காலம் கடந்து அறிவிப்பான விருதை ஏற்க மறுத்தப் பெருமிதத்துடன் அவனது இரு கைகளும் இறுகப் பற்றிக் கொள்கின்றன மேசை இழுப்பறையில் பத்திரமாய்ப் பாதுகாத்து வந்த பேனாவையும் தூரிகையையும். எல்லோரும் கொண்டாடிய எத்தனையோ கவிதைகளுக்கான மையைச் சுரந்திருக்கிறது அந்தப் பேனா. புருவங்களை உயர வைத்த அழகோவியங்கள் பலவற்றைத் தீட்டியிருக்கிறது அந்தத் தூரிகை. மூதாதையர் கடிகாரத்தின் பெண்டுலச் சத்தம் பின்னணி இசைக்கச் சொட்டுச் சொட்டாகக் கசிகிறது பேனாவிலிருந்து மை. பெருகிப் பிரவாகிக்கிறது சமுத்திரமாக. மிதந்த பேனாவின் மேல் அமர்ந்து வேகமாகப் பயணிக்கிறது மனம் படைப்பாற்றலில் உச்சத்திலிருந்தக் கணம் நோக்கி. சிறிய பெரிய மீன்கள் யானையை விடப் பெரிய சுறாக்கள் திமிங்கலங்கள் ஆயிரம் வயதான ஆமைகள் ஆரவாரத்துடன் பின் தொடருகின்றன. தோலின் சுருக்கங்களைத் தாண்டிப் பிரகாசித்த முகத்திலிருந்து வெளிப்பட்ட வெளிச்சம் இன்னொரு கை...

ஐராவதம் பக்கங்கள்....

ஐராவதம் பக்கங்கள்.... நான்காவது சிங்கம் - செல்வராஜ் ஜெகதீசன் - கவிதைகள் - பக்கம் 71 - விலை ரூ.60 - பிரதிகள் 600 - காலச்சுவடு பதிப்பகம் இது கவிஞரின் நான்காவது கவிதைத் தொகுப்பு.  முன்னரே 'அந்தரங்கம் (2008)', 'இன்னபிறவும்' (2009), 'ஞாபகம் இல்லாது போகுமொரு நாளில்' (2010) ஆகிய மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளாராம் ஆசிரியர். தமிழ்ப்பட உலகில் ஒரு படம் எடுத்துவிட்டு ஓய்ந்துபோன இயக்குநர்கள் இருநூறுக்குமேல் உள்ளனராம்.   அதேபோலவே கைக்காசு போட்டு ஒரு புத்தகம் எழுதி ஓய்ந்துபோன கவிஞர்களும் நூற்றுக்கணக்கில் இருக்க வேண்டும்.  இத்தகைய சூழ்நிலையில் ஆசிரியர் காலச்சுவடு போன்ற பிரசித்துப் பெற்ற பதிப்பகம் மூலம் நாலாவது புத்தகம் வெளியிட முடிந்திருப்பது அவருக்கு கவிதைத் துறையில் உள்ள தொடர்ந்த ஈடுபாட்டைக் காட்டுகிறது.  ஆனால் பதிப்பாளர்களும் ஏமாந்தவர்கள் அல்ல.  அறுநூறு பிரதிகள்தான் அச்சிட்டு உள்ளார்கள்.  2009க்குப் பிறகு தமிழக நூலக துறையினர் புத்தகங்கள் எதுவும் வாங்காத சூழ்நிலையில் இதுவே அதிகம். 'எப்போதும்போல' (பக்கம் 68) என்ற கவிதை 6 வரிகள் கொண...

ரயிலோடும் வீதிகள்..

ரயிலோடும் வீதிகள்..                                           அமைதிச்சாரல் கயிற்று வளையத்துள் அடைபட்டிருந்த பெட்டிகளெல்லாம் அலுத்துக்கொண்டனர், ரயில் மெதுவாகச்செல்வதாக.. குதித்துக் கும்மாளமிட்டுச் சூறாவளியாய்க் கிளம்பிய ரயில் பெட்டிகள் ஒன்றுக்கொன்று இடித்துத் தள்ளியதில் தடம்புரண்டோடிய உற்சாக ஊற்று சற்றுச்சுணங்கிற்று அவ்வப்போது. பிள்ளையார் கோவில் நிறுத்தம் இந்நேரம் தாண்டப்பட்டிருக்க வேண்டுமென்ற மூன்றாவது பெட்டி காளியப்பனை ஆமோதித்தாள் ஐந்தாவது பெட்டியான வேலம்மாள். “வெரசாத்தான் போயேண்டா” விரட்டிய குரலுக்குத்தெரியாது, ரயிலோட்டுனருக்கு அன்றுதான் காலில் கருவை முள் தைத்ததென்பது. அலுத்துப்போன கடைசிப்பெட்டி சட்டென்று திரும்பிக்கொண்டு இஞ்சினாகியதில் வேகம் பிடித்த ரயிலில் இழுபட்டு அலைக்கழிந்து வந்தது முன்னாள் இஞ்சின் வலியில் அலறிக்கொண்டு..

ஐராவதம் பக்கங்கள்

ஐராவதம் பக்கங்கள் நண்பனின் தந்தை - சிறுகதைகள், குறுநாவல்கள் - அசோகமித்திரன் - முதற் பதிப்பு-டிசம்பர் 2011 - பக்கம் 144 - விலை ரூ. 100/- நற்றிணை பதிப்பகம், சென்னை 5 தமிழ் இலக்கியத்தின் மகத்தான படைப்பாளுமையான (பதிப்பாளர் வரிகள்) அசோகமித்திரனின் சமீபத்திய படைப்புகளை நமக்குத் தருகிறது நண்பனின் தந்தை.  முதலில் பம்பாய் 1944 என்ற குறுநாவல் கல்கியில் தொடர்கதையாக 13 வாரம் வெளிவந்தது.  தொடர்கதை, நாவல் ஆகாது என்ற க.நா.சுவின் ஆட்கொல்லி முன்னுரை வரிகள் உடனடியாக என் நினைவுக்கு வந்தது.  இதில் வேடிக்கை என்னவென்றால் ஆட்கொல்லியே அகில இந்திய வானொலியில் வாரந்தோறும் தொடர்கதையாகப் படிக்கப்பட்டதுதான்.  தொடர்கதைக்கு உரிய லட்சணங்களை பரிபூர்ணமாகக் கொண்டது பம்பாய் 1944.  ஒவ்வொர அத்தியாயம் முடிவிலும் அந்தந்த வாரம் தொடர்ந்து கதையைப் படிக்க தூண்டும்  விதமான வரிகள்.ஆனால் அப்படி வாரப்பத்திரிகையில் வரும் தொடர்கதையை ஆவலுடன் படிக்க வாசகர் கூட்டம் இன்று உள்ளதா என்பது கேள்விக்குரியது.  சென்ற தலைமுறைக்காரர்கள் கல்கியை, அகிலனை, கொத்தமங்கலம் சுப்புவை அப்படி படித்தார்கள்.  ...

சி சு செல்லப்பா.....

சி சு செல்லப்பா.....                                          நான் சந்தித்த இரு முக்கிய இலக்கிய ஆளுமைகளைப் பற்றி இங்கு குறிப்பிடலாமென்று நினைக்கிறேன்.  ஒருவர் க.நா.சு.  இன்னொருவர் சி சு செல்லப்பா.  இவர்கள் இருவரையும் நான் சந்திக்க முடியுமென்றோ உரையாடமுடியுமென்றோ நினைத்துக்கூடப் பார்க்க வில்லை.  இவர்கள் இருவரைத் தவிர இன்னொரு படைப்பாளியையும் நான் சந்தித்திருக்கிறேன். அவர் சிட்டி.  இவர்கள் மூவரும் மணிக்கொடி எழுத்தாளர்கள்.   க.நா.சுவும், சி சு செல்லப்பாவும் இருதுருவங்கள்.  இருவரும் நேர் எதிரான இலக்கியக் கொள்கை உடையவர்கள்.  க.நா.சு ரசனை அடிப்படையில் தன் விமர்சனக் கொள்கையை வகுத்துக்கொண்டவர்.  சி சு செல்லப்பா புத்தக விமர்சனத்தைப் பகுத்துப் பார்க்கும் கொள்கையைக் கொண்டவர். ஏன் இவர்களைப் பற்றி சொல்கிறேனென்றால் இவர்கள் மூத்தத் தலைமுறை படைப்பாளிகள்.  க.நா.சுவை மயிலாப்பூரில் உள்ள ஒரு வீட்டில் சந்தித்தேன்.  அவரைச் சந்த...

நவீன விருட்சம் 92வது இதழ்

நவீன விருட்சம் 92வது இதழ் வெளிவந்துவிட்டது.    படைப்புகள்வெளிவந்த விபரம் கீழே தரப்பட்டுள்ளது. 1.கோட்டுப்பையும் குடிசைத் தொழிலும் - லாவண்யா   2 2. பிரமிடுகள் - கவிதை - லாவண்யா 3 3. க.நா.சு - கவிதை - எஸ் வைதீஸ்வரன் 4 4. கூழாங்கற்கள் - கவிதை - ராமலக்ஷ்மி 6 5. ஐராவதம் பக்கங்கள் 7 6. நதி ஈந்த எறும்பு - ந. பெரியசாமி 10 6. ஹலோ - சிறுகûú- அழகியசிங்கர் 11 7. நதியும் நானும்....- மொ.கவிதை 14 8. எனக்குப் பிடித்த முன்னுரை 15 9. கல் எறிந்தவர்கள் - ரவி உதயன் 19 10. வட்டம் - கவிதை - கணேஷ் 20 11. தோற்பாவைக் கூத்து - சின்னப்பயல் 21 12. அசோகமித்திரன் பக்கங்கள் 23 13. இரு கவிதைகள் - அழகியசிங்கர் 26 14. மரணப்படுக்கையில் வயதான பெண்மணி                             - குமரி எஸ் நீலகண்டன் 27 15. இரவு விழித்திருக்கும் வீடு - எம் ரிஷான் ஷெரீப்  29 16. பூனைகள் உலகம் - ஐயப்பன் கிருஷ்ணன் 30 17. நகுலனைப் பற்றி சில குறிப்புகள் - அழகியசிங்கர்  33 18. காக்கைச் சி...