Skip to main content

Posts

செப்டம்பர் மாத இலக்கியக் கூட்டம்

சா கந்தசாமி யைத் தொடர்ந்து யவனிகா ஸ்ரீராம் . எதைப் பேசினாலும் கருத்து முரண்பாடு இக் கூட்டங்களில் முக்கியமான அம்சம் . அப்படி இருந்தால்தான் கூட்டம் சிறக்கும் . பேசுபவரின் கருத்தையை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பது இல்லை . பேசுபவர் புதிய எல்லையில் கேட்பவரைக் கொண்டு செல்கிறார் . அதை வைத்துக்கொண்டு மற்றவர்கள் சிந்திக்கிறார்கள் . யவனிகா ஸ்ரீராமை தற்போதைய கவிதைகளைப் பற்றி பேசும்படி கேட்டுக்கொண்டேன் . அவர் இன்றைய நிலையில் கவிதைகள் எப்படியெல்லாம் வெளி வருகின்றன என்று பேச ஆரம்பித்தார் . இன்றைய கவிதையில் குடும்பம் இல்லை என்றார் . யாரும் குடும்பத்தைப் பற்றி கவிதைகள் எழுதுவதில்லை என்றார் . குடும்பத்தோடுதான் எல்லோரும் இருக்கிறோம் . ஆனால் யாரும் குடும்பத்தை கவிதையில் கொண்டு வரவில்லை என்றார் . என்னால் இக் கருத்தை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை . என்னைப் போன்ற பலரின் கவிதைகளில் குடும்பம்தான் கருப்பொருளாக உள்ளது . என் ஆரம்ப கவிதையில் அம்மா இல்லாத குடும்பத்தைப் பற்றி எழுதியிருப்பேன் . வயது முற்றிய பாட்டியை முற்றத்தில...

வந்தமர்ந்து கொண்டது பூனை

கவிதைக்கான குறியீடை இதனுள் பொருத்தும் முன்பே வந்தமர்ந்து கொண்டது பூனை அர்த்தப்படாத எழுத்துச்சிதறல்களில் அர்த்தமுணர நினைக்காது வால் வளைத்து ஓரமாய்த்தான் சுருண்டு படுத்துள்ளது உணரலில்லாது நிதானமாய் வரி தாண்டியிருக்கக்கூடும் தன்னைப்பதிவு செய்தலில் வேறெதும் நிச்சயப்படவில்லை கவிதை பூனையான சாத்தியம் தவிர்த்து

செப்டம்பர் மாத இலக்கியக்கூட்டம்

ந வீன விருட்சம் செப்டம்பர் மாதக் கூட்டம் 27.09.2009 மாலை 6 மணிக்கு ஆரம்பித்தது. நான் அடித்துப்பிடித்துக் கொண்டு ககஅ பில்டிங் சென்றேன். சுத்தமாக கூட்டத்திற்கு யாரும் வர மாட்டார்கள் என்பதில் பலமான நம்பிக்கையுடன் இருந்தேன். காரணம். மழை. அப்படி யாரும் வராவிட்டால் கொடுத்த காசுக்கு (ரூ.250) 3 மணி நேரம் அங்கு தனியாக இருந்துவிட்டு வருவது என்று தீர்மானித்தேன். நான் உள்ளே நுழைந்தவுடனே மழை பிடித்துக்கொண்டது. லாவண்யா என்கிற என் நண்பர், "நான் வீட்டைவிட்டு கிளம்பிவிட்டேன். மழை பிடித்துக்கொண்டது. வீட்டிற்குப் போகட்டுமா?" என்று கேட்டார். "வரவே வேண்டாம். வீட்டிற்குப் போய்விடுங்கள்," என்றேன். பழைய அழகியசிங்கராக இருந்தால், கூட்டம் ஏற்பாடு பண்ணிவிட்டு யாரும் வரவில்லை என்றால் பெரிதாக கவலைப்படுவேன். இப்போதோ தெளிவாக இருக்கிறேன். இந்தக் கூட்டம் ஏன் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டு அதற்கான பதிலையும் மனதிற்குள் வைத்திருக்கிறேன். பதில் என்ன தெரியுமா? வெறுமனே. இக் கூட்டத்தில் பேச சா கந்தசாமியையும், யவனிகா ஸ்ரீராமனையும் கூப்பிட்டேன். சா கந்தசாமி சிறிது நேரத்தில் வந்து...

பொம்மை செய்யப் பழகும் குயவர்கள்

வயலோர நீர்த்தொட்டியின் நிழலும் கலங்கிய குளத்து நீரின் சுவையும் பாதங்களை கறையாக்கும் செம்மண் பாதைகளும் தின்னத் தின்னத் திகட்டாத பனங்கிழங்கும், பனஞ்சுளையும் பௌர்ணமி நிலவாய் ஆகிப்போன கோடை விடுமுறையின் வெக்கையான பொழுதுகளும் நடசத்திரங்கள் வந்து குதித்து விளையாட ஆசைப்படும் கண்ணாமூச்சி ஆட்டங்களும் பத்து பைசா ஆரஞ்சு மிட்டாயின் ருசியில் பேரின்ப பேரானந்தத்தை அடைந்துவிடும் ஐம்பொறிகளும் பணத்தை வைத்து எவரையும் எடைபோடத் தெரியாத பளிங்குகளாய் உருளும் பால்யவெளிப் பயணங்களும் அனைவரையும் பிள்ளையாராய் பிடிக்க நினைத்து குரங்காக்கிய பள்ளியும்,சமூகமும்,ஊரும்,நாடு ம் ஒரு சில பிள்ளையாருக்காக குரங்கான நாங்களும்...

சிங்கம் -------

சிங்கம் என்றால் சிறுவயது முதலே எனக்கு பயம். கதை கதையாக கேட்டிருக்கின்றேன். சிங்கம் என்று சொல்லி ஊட்டிவிட்டால் முரண்டுபிடிக்காமல் வாங்கிக்கொள்வேனாம். தொலைக்காட்சிப் பெட்டிகளில் கூரான நகங்களால் மான்களின் வயிற்றை கிழித்துண்பதை பார்த்து நடுங்கியிருக்கின்றேன் பலமுறை. அடிக்கடி எனக்குள் வியர்க்கும். என்னை தின்றுவிடுமோ என்னும் பயம். பலநாள் கழித்து பரிதாப சிங்கமொன்றை பார்த்தேன். வண்டலூர் மிருகக்காட்சிசாலையில் முடிக்கொட்டி,உடல்மெலிந்து சிறுவர்கள் சப்பிப்போட்ட ஐஸ் குச்சிகளை எதிர்க்க திராணியற்று கம்பிகளுக்கு அப்பால். இப்போதும் எனக்குள் பயம். வேறுவிதமாக. என்னை தின்றிருந்தால் கூட வந்திருக்காது இந்த பயம்.

சில குறிப்புகள்

ச மீபத்தில் ஒரு பிரயாணத்தின்போது நான் படித்தப் புத்தகம் மகேஷ்பட் எழுதிய A Taste of லைப். இப்புத்தகம் யூ ஜி கிருஷ்ணமூர்த்தியின் கடைசி தினங்களைப் பற்றி விவரிக்கிறது. மகேஷ்பட், லாறி, சூசைன் மூவர்தான் கடைசிவரை யூ ஜி யைப் பார்த்துக்கொள்கிறார்கள். யூஜிக்கு அவர் மரணம் பற்றி நிச்சயம் தெரிந்து விடுகிறது. அவர் பார்க்க விரும்புகிற நண்பர்கள் அனைவரையும் அழைத்துப் பார்க்கிறார்கள். எல்லோரையும் உடனே உடனே போகவும் சொல்லி விடுகிறார். இதாலியில் உள்ள வலேக்ராஸியா என்ற இடத்தில் அவர் மரணம் நிகழ்கிறது. அவருடைய மரணம் குறித்து அவரிடமே உரையாடுகிறார்கள். "நீங்கள் இறந்தபிறகு உங்கள் உடலை என்ன செய்வது?" என்று கேட்கிறார்கள். "தூக்கி குப்பைத் தொட்டியில் போடுங்கள்,"என்கிறார் யூஜி. தன்னை ஒரு அவதார புருஷராக யாரும் கருதக் கூடாது என்பதில் யூஜி கறாராக இருப்பவர். மரணத்திற்குப் பிறகு யாரும் கொண்டாடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். மகேஷ்பட்டால் யூஜியின் மரணத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவருக்கு யூஜியின் மரணம் பல பாடங்களைக் கற்றுத் தருகிறது. இப் புத்தகம் இரண்டு பகுதிகளாகப் ...

மூன்று கவிதைகள்

கவிதை (1) கடவுளின் கனவுகளில் ஒன்றை திருடி என் அலமாரிக்குள் ஒளித்து வைக்கிறேன் காணாது தவிக்கும் கடவுள் மூளைக்குள் விஷமேறி துடிக்கிறார் ஜோதிமயமான கடவுள் காற்றுவெளியில் சில்லிட்டுப்போய் கருத்துப்போனார் ஒளித்து வைத்த கடவுளின் கனவை எடுத்துப்பார்க்கிறேன் கடவுளின் கடைவாயில் பற்கள் முளைத்து கோரக்குருதி வழிகிறது மீண்டும் அலமாரிக்குள் வைத்து பூட்டிவிடுகிறேன் கவிதை (2) பத்து வருடங்களுக்குப் பிறகு கடிதம் வந்தது உன்னிடம் இருந்து நிறைய எழுதியிருந்தாய் ... நீயும் நானும் விளையாடிய , கதை பேசிய , கனவு விதைத்த பொழுதுகளை ... நாம் தொடர்பற்று இருந்த நாட்களின் சிறு குறிப்பும் இல்லை உன் கடிதத்தில் மடித்து வைக்கிறேன் உனக்கு பதிலாய் நம் பழங்கதைகள் பேச ... கவிதை (3) சொந்தமாய் வீடு வாங்கி குடிபுகுந்தேன் ஒரு நகர அடுக்ககத்தில் ..! அப்பா வந்திருந்தார் வீட்டுக்கு ... என் மகனிடம் உங்க அப்பா சின்ன குழந்தையாய் இருந்த போது சூரிய , சந்திர , நட்சத்திரங்களுடன் வானம் இருந்தது ... புழுதி அப்பிய மண்ணும் இருந்தது ... மழை நனை...