Skip to main content

Posts

அலையும் ஆவியொன்று

என் வீட்டுப்பரணில் கிடக்கும் பழைய டிரங்க் பெட்டியில் உடைந்துப்போன சிலேட் குச்சிகள், பச்சைநிற பிளாஸ்டிக் முனையுடன் தகர சிலேட்டொன்று, புழுக்கையாகிப்போன ‌ கலர் பென்சில்கள், பிலிம் துண்டுகள், ஒரு மயிலிறகு, இவற்றோடு ஒரு சிறுவயது ஆவியும் சுற்றிக்கொண்டு திரிகிறது. நான் எப்போது பெட்டியை திறந்தாலும் உயிர்கொள்ளத் துடிக்கும் அந்த ஆவி என் உடலின் நீள அகல பருமன்களை கண்டு திகைத்து மீண்டும் பெட்டிக்குள் உறங்கிவிடுகிறது

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்......17

பூனை ஆலா எலிமட்டும் பிடிப்பதில்லை எல்லோர் வீட்டிலும் பூனை பூரான், தேள், பல்லியென பசியெடுத்தால் நச்சுயிரியைப் பிடித்துத் தின்னும் எங்கள் வீட்டு வாசலில் ஒருநாள் கொம்பேறிமூக்கன் குட்டியொன்றை வாயில் கவ்வி வந்தது பூனை பின்னங்காலால் தூக்கியெறிந்து முன்னம் வேடிக்கைப் பார்த்தது. ஓடவிட்டு பாம்பைப் புரட்டி எடுத்தது துண்டாடித் துண்டாடித் தின்று தீர்த்தது பால் குடிப்பதும் பசிக்குச் சோறு தின்பதும் இயல்பல்லவே. யாரும் பார்க்காத நேரத்தில் குழித்தோண்டி மலம் மறைக்கும் இயற்கையின் எழில் உருவே பூனை புலியினம்தான் பூனையும் போனதெப்படி அதன் போர்க்குணம்? இந்தியாவில் ஒண்டி வாழும் தமிழர்களைப்போல் மரபணுவின் வீரம் மங்கி விட்டதோ அண்டிப் பிழைப்பது அழகல்ல ஆகவே எனக்குப் பூனையைப் பிடிக்காது புலியைப் பிடிக்கும்

நான்,பிரமிள்,விசிறி சாமியார்.......9

The Active side of infinity என்ற புத்தகம் Carlos Castenada எழுதியது. பல ஆண்டுகளுக்கு முன் இப் புத்தகத்தைப் படித்திருக்கிறேன். இப் புத்தகத்தில் ஒரு விஷயம் என் மனதை விட்டு நீங்கவில்லை. நாம் எத்தனையோ பேர்களை சந்திக்கிறோம். எத்தனையோ சம்பவங்கள் நம் முன்னால் நடக்கின்றன. நாமும் அதில் ஒரு பாத்திரமாக இருக்கிறோம். நம் முன்னால் நாமும் பாத்திரமாக மாறி நடக்கும் பல நிகழ்ச்சிகளில் சம்பவம் நடந்த சமயத்தில் நாம் எப்படி நடந்துகொள்கிறோம். அப்போது நாம் கோபமாக இருக்கிறோமா துக்கமாக இருக்கிறோமா? ஒரு சம்பவம் நடந்து முடிந்தபின் அந்தச் சம்பவத்திலிருந்து விலகி நாம் எப்படி அதை எதிர்கொள்கிறோம். Castenada சம்பவத்தை திரும்பவும் யோசிக்க சொல்கிறார். அந்தச் சம்பவத்தை ஞாபக அடுக்கிலிருந்து எடுக்கச் சொல்கிறார். எடுத்து அதை படத்திற்கு ப்ரேம் போடுவதுபோல் ஞாபகத்திலிருந்து கொண்டு வரச் சொல்கிறார். அந்தச் சம்பவத்தை ஒரு சட்டம் மாதிரி உருவாக்கி அதை ஞாபகத்தில் பத்திரப்படுத்தச் சொல்கிறார். ஞாபகத்திலிருந்து எடுக்கப்பட்ட அந்தச் சம்பவம் என்கிற சட்டத்தை திரும்பவும் பார்க்கச் சொல்கிறார். அதில் நாம் எப்படி நடந்துகொண்டிருக்கிறோம...

மதிமை சாலா மருட்கை

திரு . ஆனந்த்தின் கவிதைத் தொகுப்பான 'அளவில்லாத மலர்' ஐப் படிக்க எடுத்துக்கொண்டபோது அதற்கு முன்பாக இரண்டு கவிதைத் தொகுப்புகளைப் படித்திருந்தேன். ஒன்று, கவிதாவின் 'சந்தியாவின் முத்தம்'. மற்றது சூரியநிலாவின் 'இன்றும் நிகழ்கிறது உனக்கான காத்திருப்பு'. பின்னது இரண்டும் இவ்வாண்டு (2008) வெளிவந்தவை. ஆனந்த்தின் தொகுப்பு டிசம்பர் 2007லேயே வெளிவந்துவிட்டது. ஆனால் தொகுப்பு எனக்குத் தற்போதுதான் கிடைத்தது. டிசம்பர் 2007ல்தான் தமிழச்சி தங்கபாண்டியனின் 'தனப் பேச்சி'யும் வெளிவந்தது. இந்தத் தொகுப்புகளை எல்லாம் இங்கே ஒருசேர நான் குறிப்பிடுவதற்குக் காரணம் ஆகஸ்ட் 2008ல் நான் உணர்ந்துகொண்ட சில வரலாற்று சலனங்கள். திரு. ஆனந்த்தின் கவிதைத் தொகுப்பான 'அளவில்லாத மலர்' ஐப் படிக்க எடுத்துக்கொண்டபோது அதற்கு முன்பாக இரண்டு கவிதைத் தொகுப்புகளைப் படித்திருந்தேன். ஒன்று, கவிதாவின் 'சந்தியாவின் முத்தம்'. மற்றது சூரியநிலாவின் 'இன்றும் நிகழ்கிறது உனக்கான காத்திருப்பு'. பின்னது இரண்டும் இவ்வாண்டு (2008) வெளிவந்தவை. ஆனந்த்தின் தொகுப்பு டிசம்பர்...

நான்,பிரமிள்,விசிறி சாமியார்.......8

பிரமிள் இதற்கு பிறகு பலதடவைகள் விசிறி சாமியாரைப் போய்ப் பார்த்தார். ஆனால் நான் அதன்பின் பார்க்கவில்லை. பாலகுமாரன் மூலம் விசிறி சாமியார் புகழ் எங்கும் பரவி விட்டது. தனியாக அவர் ஆஸ்ரமம் வைத்துக்கொண்டு போனபின், அவரைச் சுற்றிலும் கூட்டம். அக் கூட்டத்தில் அவரை நெருக்கமாக பார்த்துப் பேச வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. பல ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்தோடு நான் அந்த ஆஸ்ரமத்திற்குப் போயிருக்கிறேன். ஆனால் விசிறி சாமியாரைப் பார்க்கக் கூட முடியவில்லை. என் மூட் மாறிவிட்டதை பிரமிள் நன்றாக அறிந்திருந்தார். அடுத்தநாள் பிரமிளிடம், இன்னொரு முறை விசிறி சாமியாரைப் போய்ப் பார்க்கலாமா என்று கேட்டேன். இன்னொரு முறை நம்மைப் பார்க்க விரும்ப மாட்டார் என்றார் பிரமிள். பின் நாங்கள் மூவரும் திருவண்ணாமலையைச் சுற்றி வந்தோம். தவம் புரியும் குகை போன்ற இடங்களைப் பார்த்தோம். விசிறி சாமியாரிடமிருந்து விடைபெற்று வரும்போது, எஙகள் மூவருக்கும் விசிறி சாமியார் கி.வா.ஜா அவர்கள் விசிறி சாமியார் பற்றி எழுதிய கவிதைகள் அடங்கிய நூலைக் கொடுத்தார். நானும் பிரமிளும் சென்னை திரும்பும்போது, என் மனதில் சாமியார் என்றால் யார்? அவ...

அது கூட

வரட்டுமென்று அனுமதிப்பதா அதனை வாராது தடுப்பதா....... வந்து போய்விட்டது விட்டுவிடு.

தனிமை

நூறாண்டுக்கு முந்தைய பாழடைந்த வெறுமை படர்ந்த கோயில்களுக்கு தனியாக செ‌ன்று திரும்பும்போதெல்லாம் முதுகுக்கு பிறகு சன்னமாக கேட்கிறது விசும்பலொலி அடு‌த்த முறையாவது உன்னிப்பாகப் பார்க்க வேண்டும்