Skip to main content

Posts

அண்ணாவின் உருக்கம்

அண்ணாவின் உருக்கம் என்ற பெயரில் ஒரு கவிதை எழுதியிருந்தேன். 2005 ஆம் ஆண்டு. இக் கவிதை என் தொகுதியில் வெளிவந்துள்ளது. கவிதையை அண்ணாவின் நூற்றாண்டின் போது இங்கு அளிக்க விரும்புகிறேன். மாப்படுகை வழியாகச் செல்லும் பாதையில் பெரும்பாலும் அபூர்வமாகவே வாகனங்கள் வரும் போகும் நடமாட்டம் இரவென்றால் குறைவு பள்ளிக்கூடங்கள் இருக்கும் நாட்களில் சிறு சிறு மாணவ மாணவிகள் அவர்களுக்குள்ளே தென்படுகிற கற்பனை உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருப்பார்கள்.... வண்டியில் செல்லும் நான் ஜாக்கிரதையாகப் பயணிப்பேன் ஒவ்வொருமுறையும் பார்த்துக் கொண்டே செல்கிறேன் ஒரு அண்ணாசிலையை கழக கண்மணிகளே உங்களுக்கு ஒரு வேண்டுகோள் நிச்சயமாய் அண்ணாசிலையிலிருந்து அண்ணா உயிரோடு தோன்றினால் சொல்லியிருக்கலாம் கம்பீரமான அச்சிலையில் ஆளுயுர அண்ணா கையில் புத்தகம் வைத்தபடி நடந்து செல்வதுபோல் தோற்றம்.... சிலை வடித்தவன் அண்ணாவைப் பார்த்திருக்கலாம் சிலையின் பக்கத்திலேயே கழக கண்மணிகளின் கூடாரம் ஆனால் சிலையோ கம்பீரத்தை இழந்து விட்டது கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று அண்ணா சொன்ன மந்திரம் என்று இவர்கள் சொல்லித்தான் தெரியும் ஒவ்வொருமுறையும் நான் போகும்...

'எழுத்து' பேட்டி

ந. பிச்சமூர்த்தி 1900 ஆகஸ்ட் பதினைந்து அன்று தஞ்சை ஜில்லா கும்பகோணத்தில் பிறந்தவர். ஹரி கதை காலட்சேபம், நாடகத்துறை, ஆயுர்வேத வைத்யம், தாந்தீரிக உபாசனையில் ஈடுபாடு, நான்கு மொழிகளில் சாகித்யம் இயற்றல் இவைகளில் வல்லுநரும், சகலகலா வல்லவருமான அவரது தந்தை நடேச தீட்சதர் காலம்சென்றபோது அவருக்கு வயது ஏழு. தாயின் பராமரிப்பில் வளர்ந்த பிச்சமூர்த்தி கும்பகோணம் டவுன் உயர்தரப் பாடசாலையில் படித்து, கும்பகோணம் நேடிவ் கலாசாலையில் படித்து பிலாசபி எடுத்துக்கொண்டு பி.ஏ பட்டம் பெற்று பின் சட்டப்படிப்பு படித்து, பிளீடரானார். 1924 முதல் 1938 வரையில் கும்பகோணத்தில் வக்கீல் தொழிலில் ஈடுபட்டிருந்தவர். வக்கீல் தொழில் தனக்கு பொருந்தவில்லை என்று கருதி அதை விட்டுவிட்டார். வக்கீல் தொழில் செய்யும்போதே அரசியலில் காங்கிரஸ் சார்பான ஈடுபாடு உண்டு. கலாசாலையில் இண்டர்மீடியட் படிக்கும் போதே கலாசாலைப் பத்திரிகையில் கவிதைகள், வர்ணனைக் கட்டுரைகள், சிந்தனைக் கட்டுரைகள் எழுதினார். 1933-ல் 'கலைமகள்' நடத்திய சிறுகதைப் போட்டியில் பதினைந்து ரூபாய் பரிசுப்பெற்ற 'முள்ளும் ரோஜாவும்' என்ற சிறுகதை மூலம் எழுத்துலகத்துக்...

இரு பத்திரிகைகள்

முதுமையின் மிகப் பெரிய சோகம் நம்முடைய நண்பர்கள் ஒவ்வொருவராக மறைந்து கொண்டிருப்பார்கள் என்று இங்கிலாந்து எழுத்தாளர் சாமர்சாட் மாம் கூறினார். இதையே வேறு பலரும் கூறியிருக்கிறார்கள். தொண்ணூற்றொரு ஆண்டுகள் வாழ்ந்த மாம் பழுத்த அனுபவத்தால்தான் கூறியிருக்கிறார். 'மணிக்கொடி இதழ் தொகுப்பு' படித்துக் கொண்டிருக்கும்போது எனக்கு மாம்மை நினைவுபடுத்தியவரை நண்பர் என்று கூற முடியாது. ஆனால் அவரை நிழலாகப் பல ஆண்டுகள் நான் அறிந்திருந்தேன். எனக்கு எட்டு அல்லது ஒன்பது வயதிருக்கும்போது, 'ஆனந்தவிடனி 'ல் ஒரு கதை என் மனதை மிகவும் சங்கடப்படுத்தியது. குடிகாரனான தன் அப்பாவை ஒரு சிறுமி படுக்க வைத்து, உணவு கொடுத்துப் பாதுகாப்பாள். அச் சிறு வீட்டில் அவளும், அவள் தகப்பன் மட்டும்தான். அவன் வியாதி முற்றிப்போய்ப் படுக்கையிலேயே இறந்து விடுகிறான். அவன் இறந்து விட்டான் என்று தெரியாது. அவள் அவனுக்கு உணவு தர முயற்சி செய்வாள். இந்தக் கதை தொடர்ந்து நினைவில் இருந்து வருவதற்கு இன்னொரு காரணம் அது ஒரு முஸ்லிம் கதை. அது முஸ்லிம் கதை என்று அடையாளப் படுத்த அப் பெண்ணின் பெயருடன் அவள் தன் அப்பாவை 'வாப்பா' என்று...

ஒரு கதை இரு முடிவுகள்

பூர்வாங்கம் : சு ந்தரி ஒரு முடிவிற்கு வந்து விட்டாள். அவள் ஒரு முடிவிற்கு வந்துவிட்டால், பின் மாற்றுவது என்பது இயலாத காரியமாகிவிடும். அவளைப் பொறுத்தவரை இந்த முடிவு மோசமான முடிவு. ஏன் எல்லாவற்றுக்குமான முடிவு இது? அவளுக்கு ஆசையாகக் கொடுத்த சிங்கப்பூர் புடவையைக் கையில் வைத்துக் கொண்டிருக்கிறாள். அதை உத்தரத்தில் உள்ள கொக்கியில் மாட்டிக்கொண்டாள். அவள் ஏறி நின்று மாட்டிய ஸ்டூல் மீதே அவள் உட்கார்ந்து கொண்டாள். இனி அவ்வளவுதான். வாழ்க்கையை முடித்துக்கொள்ள வேண்டியதுதான். கழுத்தில் இறுக்கி இந்த ஸ்டூலை எடுத்துவிட்டால், எல்லாம் முடிந்து விடும். ஆனால் இது மாதிரி செய்வதற்கு துணிச்சல் வேண்டும். சுந்தரிக்கு துணிச்சல் இருக்கிறது. செய்தும் விடுவாள். அவளுக்குக் கோபம் வந்துவிட்டால், நன்றாகப் பழகியவர்களிடம் கூட பேசமாட்டாள். சுந்தரிக்கு 39வயதாகிவிட்டது. இன்னும் சில மாதங்களில் 40 வயதாகிவிடும். அவள் வீட்டில் 10 பேர்கள். எட்டுப் பெண்கள். இரண்டு ஆண்கள். சுந்தரிக்கு மேல் உள்ள இரண்டு அக்காள்களுக்குத் திருமணம் ஆகவில்லை. திருமணம் செய்துகொள்ளும் வயதுகளையும் கடந்து விட்டார்கள். சுந்தரிக்கு ...

இரண்டு கவிதைகள்

1.கவிதையின்றி அலைதலின் அவஸ்தைகள் கவிதைகளை துறந்துவிட்டு சில காலமாய் திரிந்துகொண்டிருந்தேன். கற்பனைகள் தூர்ந்து, கனவுகள் தகர்ந்து, பாதாளத்தின் வாய்பிளந்து என்னை உள்ளிழுத்துக்கொண்டது. இருள் கவிந்திருந்த அவ்விடத்தில் தொலைந்த பேனாக்களை தேடிக்கொண்டிருந்தனர் எந்திரத்தனம் நிறைந்த என்னையொத்த மனிதர்கள் சிலர். 2. சுயத்தை எரித்தல் மிகுந்த வெம்மையாயிருந்தது ஒரு சொல். வெம்மையின் கதிர்கள் முதலில் நுழைந்தது செவியில். செவிக்குள் நுழைந்த அச்சொல்லின் வெட்பம் இதயத்திற்கு இடம்பெயர்ந்திருந்தது வலியின் நீட்சியில். இதயம் கருகி கண்ணீராய் வெளியேறுகையில் மறுசொல்லுக்காய் காத்திருக்க ஆரம்பித்தது சுயம்

சியாட்டல் விற்ற நிலம்

அ மெரிக்கா பல்வேறு பூகோளப் பிரதேசங்களிலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் நாடாதலால் அதன் மாநிலங்கள் நகரங்கள் ஆகியவற்றிற்கு தங்கள் சொந்த நாட்டின் இடப் பெயர்களைக் குடியேறியவர்கள் சூட்டினர். மேரிலாண்ட், நியு ஹாம்ஷையர், நியுயார்க் போன்ற ஆங்கிலப் பெயர்கள்; லூசியானா, வெர்மான்ட் போன்ற பிரெஞ்சுப் பெயர்கள்;மான்டானா, ப்ளோரிடா போன்ற ஸ்பானிஷ் பெயர்கள்; இவை தவிர இண்டியானா, கனெக்டிகட், ஐயோவா, சியாட்டல் போன்ற ஏற்கனவே இருந்த பூர்விக அமெரிக்க இந்தியப் பெயர்களும் அவற்றிற்கு இடப்பட்டன. மேலே குறிப்பிடப்பட்ட பெயர்களில் சியாட்டல் ஒரு தனி மனிதனின் பெயர்.சியாட்டல் வாஷிங்டன் மாநிலத்தில் அமைந்துள்ள நகரம். ஒரு பூர்விகக் குடித் தலைவரின் பெயர்தான் சியாட்டல். அவரது இனத்தவர்கள் வசமிருந்த சுமார் இரண்டு மில்லியன் ஏக்கர் நிலப் பரப்பை அமிரிக்க அரசாங்கம் தந்துவிடுமாறு கேட்டது. தானமாக இல்லை. ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் டாலர்கள் அதற்கு விலையாகத் தர முன்வந்தது. சியாட்டலால் முடியாது என்று கூற இயலவில்லை. ஒரு பூர்விகக் குடியால் ஒரு நாட்டை எதிர்க்க முடியாது என்று அவருக்கு அனுபவ பூர்வமாகத் தெரியும். ஆனால் மக்கள் நேசித்து வாழும் ஒரு பூமி...

இரண்டு கவிதைகள்

1. சற்றைக்கு முன் ஜன்னல் சட்டமிட்ட வானில் பறந்து கொண்டிருந்த பறவை எங்கே? அது சற்றைக்குமுன் பறந்து கொண் டிருக்கிறது. 2. பறந்து செல்லும் பறவையை நிறுத்திக் கேட்டான் : பறப்பதெப்படி? அமர்ந்திருக்கையில் சொல்லத் தெரியாது கூடப் பறந்து வா சொல்கிறேன் என்றது. கூடப்பறந்து கேட்டான் : எப்படி? சிரித்து உன்போலத்தான் என்றது. சிரித்து உன்போலத்தான் என்றது. அட ஆமாம் ஆனால் எப்படி எனக் கீழே கிடந்தான் பறவை மேலே பறந்து சென்றது. (பிப்ரவரி - மே 1979 ழ இதழில் வெளிவந்த கவிதை)