Skip to main content

Posts

Showing posts with the label ஐராவதம்

ஐராவதம் பக்கங்கள்....

ஐராவதம் பக்கங்கள்.... நான்காவது சிங்கம் - செல்வராஜ் ஜெகதீசன் - கவிதைகள் - பக்கம் 71 - விலை ரூ.60 - பிரதிகள் 600 - காலச்சுவடு பதிப்பகம் இது கவிஞரின் நான்காவது கவிதைத் தொகுப்பு.  முன்னரே 'அந்தரங்கம் (2008)', 'இன்னபிறவும்' (2009), 'ஞாபகம் இல்லாது போகுமொரு நாளில்' (2010) ஆகிய மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளாராம் ஆசிரியர். தமிழ்ப்பட உலகில் ஒரு படம் எடுத்துவிட்டு ஓய்ந்துபோன இயக்குநர்கள் இருநூறுக்குமேல் உள்ளனராம்.   அதேபோலவே கைக்காசு போட்டு ஒரு புத்தகம் எழுதி ஓய்ந்துபோன கவிஞர்களும் நூற்றுக்கணக்கில் இருக்க வேண்டும்.  இத்தகைய சூழ்நிலையில் ஆசிரியர் காலச்சுவடு போன்ற பிரசித்துப் பெற்ற பதிப்பகம் மூலம் நாலாவது புத்தகம் வெளியிட முடிந்திருப்பது அவருக்கு கவிதைத் துறையில் உள்ள தொடர்ந்த ஈடுபாட்டைக் காட்டுகிறது.  ஆனால் பதிப்பாளர்களும் ஏமாந்தவர்கள் அல்ல.  அறுநூறு பிரதிகள்தான் அச்சிட்டு உள்ளார்கள்.  2009க்குப் பிறகு தமிழக நூலக துறையினர் புத்தகங்கள் எதுவும் வாங்காத சூழ்நிலையில் இதுவே அதிகம். 'எப்போதும்போல' (பக்கம் 68) என்ற கவிதை 6 வரிகள் கொண...

ஐராவதம் பக்கங்கள்

ஐராவதம் பக்கங்கள் நண்பனின் தந்தை - சிறுகதைகள், குறுநாவல்கள் - அசோகமித்திரன் - முதற் பதிப்பு-டிசம்பர் 2011 - பக்கம் 144 - விலை ரூ. 100/- நற்றிணை பதிப்பகம், சென்னை 5 தமிழ் இலக்கியத்தின் மகத்தான படைப்பாளுமையான (பதிப்பாளர் வரிகள்) அசோகமித்திரனின் சமீபத்திய படைப்புகளை நமக்குத் தருகிறது நண்பனின் தந்தை.  முதலில் பம்பாய் 1944 என்ற குறுநாவல் கல்கியில் தொடர்கதையாக 13 வாரம் வெளிவந்தது.  தொடர்கதை, நாவல் ஆகாது என்ற க.நா.சுவின் ஆட்கொல்லி முன்னுரை வரிகள் உடனடியாக என் நினைவுக்கு வந்தது.  இதில் வேடிக்கை என்னவென்றால் ஆட்கொல்லியே அகில இந்திய வானொலியில் வாரந்தோறும் தொடர்கதையாகப் படிக்கப்பட்டதுதான்.  தொடர்கதைக்கு உரிய லட்சணங்களை பரிபூர்ணமாகக் கொண்டது பம்பாய் 1944.  ஒவ்வொர அத்தியாயம் முடிவிலும் அந்தந்த வாரம் தொடர்ந்து கதையைப் படிக்க தூண்டும்  விதமான வரிகள்.ஆனால் அப்படி வாரப்பத்திரிகையில் வரும் தொடர்கதையை ஆவலுடன் படிக்க வாசகர் கூட்டம் இன்று உள்ளதா என்பது கேள்விக்குரியது.  சென்ற தலைமுறைக்காரர்கள் கல்கியை, அகிலனை, கொத்தமங்கலம் சுப்புவை அப்படி படித்தார்கள்.  ...

முகங்கள்

சில முகங்கள் வெகு சீக்கிரமாகவே முதுமை அடைகின்றன. ஏமாற்றங்கள் அவற்றில் எழுதி ஒட்டியிருக்கும். குழந்தைகளின் பிடிவாதத்தினால் தாடைகள் இறுகியிருக்கும் குடும்பத்தில் பல சாவுகளினால் மூக்கு எப்பொழுதும் விம்மிய நிலையிலிருக்கும் ஒவ்வொரு முகமும் கர்ப்பப்பையினுள்ளே நீண்டநேரம் தீர்மானித்திருக்கும் - லௌகீக விஷயங்கள் தன்னை எப்படி பாதிக்கும் என்பதை - பிரச்சினைகள் வரும்போது குப்புறப் படுப்பதா கண்காணாத ஊருக்கு ஓடிவிடுவதா என்பதை. சில முகங்கள் விட்டுக் கொடுக்கின்றன வேறு சிலவோ விடைத்து நிற்கின்றன சில முகங்கள் பிரகாசமாய் தெளிவாய் தெரிகின்றன வாழ்க்கையின் விடை தேடி அவற்றை நாம் ஆராய்கிறோம் முப்பத்தோரு வயதான முத்துப்பல்லழகி நிர்மலா சொன்னாள் üஎன் அப்பா பெயர் ராமச்சந்திரன்.நாங்கள் குழந்தைகள் கூட்டாக ராமோ, ராமா, ராமென என்று அவர் காதுபடி ராம சப்தம் சொல்வோம்.ý அவள் கண்களின் உற்சாகம் உங்களையும் பற்றிக்கொள்ளும் ரெடிமணியில் முப்பதாயிரம் இழந்த ராகவன் சொன்னான். üஉலகம் தர்ம நியாயத்திற்குக் கட்டுப்பட்டது. இந்த நம்பிக்கை இல்லாமல் வாழ்வதில் அர்த்தம் இல்லை. நம்மில் சிலருக்கோ வசவுகள்...

புத்தக விமர்சனம்

எழுத்து நாடகம் சினிமா - சோதனைகளும் சாதனைகளும் - ஒரு வரலாற்றுப் பதிவு - ஆசிரியர் எஸ் சுவாமிநாதன் - பக்கம் 176 - விலை ரூ.75 - வெளியீடு இயல் பதிப்பகம், சென்னை 4 கடந்த 45 ஆண்டுகளாக தொடர்ந்து படைப்பிலக்கியம், சினிமா, நாடகம், ஆய்வு ஆகிய தளங்களில் இயங்கி வருபவர் ஆசிரியர். 176 பக்கங்களில் ஒரு நூல் எழுதியுள்ளார். ஐம்பது பக்கங்கள் இலக்கியம், 25 பக்கங்கள் நாடகம், 100 பக்கங்கள் சினிமா பற்றி கணையாழியில் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார். தமிழ் கலாசாரத்தின் அதமப்பொது மடங்கு ரசனை (Lowest Common Denominator) பற்றி பொரிந்து தள்ளியுள்ளார். புத்தகமாக எடிட் பண்ணும்போது அந்த சாடுதல் பகுதிகளைக் கத்திரித்திருக்கலாம்.முதல் கட்டுரை கு.ப.ரா பற்றி. கு ப ரா பற்றி ல.ரா சொன்னது, ந பிச்சமூர்த்தி சொன்னது, சி சு செல்லப்பா சொன்னது, தி ஜானகிராமன் சொன்னது என்று மேற்கோள்களிலேயே பாதி கட்டுரையை ஓட்டி விடுகிறார்.நுருன்னிஸா, தாய், விடியுமா, பெண்மனம் ஆகிய நான்கு கதைகளை கு.ப.ரா எழுதிய கிட்டத்தட்ட எண்பது கதைகளில் சிறந்ததாக சிலாகித்துப் பேசுகிறார் ஆசிரியர்.அடுத்தக் கட்டுரை சுந்தர ராமசாமி பற்றியது. வாழ்க்கை முழுவ...

நானும் என் எழுத்தும்

நான் நான்காம் வகுப்பு முடிய திருச்சி ஜில்லாவில் லால்குடி தாலுகா ஆங்கரை என்னும் சிற்றூரில் படித்தேன். நான் படித்த பள்ளிக்கூடத்தில் ஐந்து வகுப்பு வரையே உண்டு. கிட்டத்தட்ட 200 மாணவர்கள் படித்தார்கள். அருள் புரிவாய் கருணைக் கடலே என்ற சுத்தானந்த பாரதியின் பாடல்தான் பிரார்த்தனைக்குரிய பாட்டு. ஊரில் 100 வீடுகள் போல உண்டு. நாங்கள் தெற்கு கோடியில் வசித்து வந்தோம். கர்ணம் மாமா (கணக்குப் பிள்ளை) வீட்டில்தான் தினமணி நாளிதழ் வாங்குவார்கள். அவர் யாருக்கும் வீட்டுக்கு எடுத்துப் போய்ப் படிக்க பேப்பர் தர மாட்டார். படிக்க ஆர்வமுள்ள பெரியவர்கள் அவர் வீட்டு கூடத்தில் கூடுவார்கள். ஒருவர் உரத்த குரலெடுத்து செய்திகளைப் படிப்பார். அப்பொழுது ஆளவந்தார் கொலை வழக்கு விசாரணையில் இருந்தது. தினமணி இரண்டாம் பக்கத்தில் வழக்கு விசாரணை விலாவரியாக அச்சிடப்பட்டிருக்கும். நான் அதைக் கேட்ட ஞாபகம் இன்னும் இருக்கிறது. இதுதான் பத்திரிகை உலகத்துடன் எனக்கு ஏற்பட்ட முதல் தொடர்பு. எங்கள் குடும்பம் வசதி குறைந்தது. ஆனால் சிறுதையூர் டூரிங் கொட்டகையில் சக்ரதாரி பார்த்தது, லால்குடி சினிமா தியேட்டரில் அந்தமான் கைதி (எம் ஜீ ...

புத்தக விமர்சனம் 2

ஆஸ்பத்திரி - நாவல் - ஆசிரியர் : சுதேசமித்திரன் - உயிர்மை பதிப்பகம் - சென்னை 18 - பக்கம் - 136 - விலை ரூ. ௮0 சங்கர் என்ற இயற்பெயர் கொண்ட ஆசிரியர் சுதேசமித்திரன் என்ற புனைபெயரில் எழுதி வருகிறார். நாற்பது வயதிற்குள் கவிதை, சிறுகதை, நாவல் எழுதியுள்ளார். சுதேசமித்திரன் என்ற பெயர் பழைய செய்தித்தாளையும், எழுத்தாளர் அசோகமித்திரனையும் நினைவுப் படுத்தினால் ஆசிரியர் பொறுப்பல்ல. பக்கம் 59 - இங்கே ஒரு இடைச்செருகல் அவசியமாகிறது. இந்த நாவல் ஏழைகளையோ, அரசாங்க ஆஸ்பத்திரிகளையோ அவலங்களையோ பற்றிப் பேசுவதில்லை என்று எப்போதாவது ஏதாவதொரு மூலையிலிரூந்து சர்ச்சை கிளம்பக்கூடும். இந்தக் காலத்தில் மட்டுமல்ல. எந்தக் காலத்திலும் ஏழைகள் எந்த நாவல்களையும் வாசிப்பதேயில்லை. ஏனென்றால் அவர்களிடம் அவற்றை வாங்குவதற்கு பணம் இல்லை. இந்தக் காலத்தில் மட்டுமல்ல எந்தக் காலத்திலும் பணக்காரர்களும் இந்த மாதிரி எந்தக் காலத்திலும் பணக்காரர்களும் இந்த மாதிரியான நாவல்களை வாசிப்பதே இல்லை. ஏனென்றால் அதற்கு அவர்களிடம் நேரமில்லை. இதே ரீதியில் இரண்டு பக்கங்கள் வாசகனை முன்னுறுத்தி பிரவசனம் செய்கிறார் ஆசிரியர். இந்த உத்தி மிகப் பிழைய உத்த...

புத்தக விமர்சனம் -1

அந்தரங்கம் - ஆசிரியர் செல்வராஜ் ஜெகதீசன் - பக்கம் 112 - விலை ரூ.60 - வெளியீடு - அகரம், தஞ்சாவூர் கவிஞர்கள் கல்யாண்ஜிக்கும் , விக்ரமாதித்தியனுக்கும் இந்த நூலை சமர்ப்பித்துள்ளார் ஆசிரியர். கவிஞர் விக்கிரமாதித்யனின் முப்பது பக்க முன்னுரை தமிழ் புதுகவிதை வரலாற்றை கரைத்துப் புகட்டுகிறது நமக்கு. பாரதிதாசனின் கவிதை கூறல் முழுக்க முழுக்க மரபின்பாற்பட்டதே தவிர, புதிதானதுமில்லை. மிகுந்த பெயரும் புகழும் பெற்ற அவருடைய கொடை என்ற ஒன்று யோசித்தால் வெறுமேதான் இருக்க வேண்டி வரும். புதுக்கவிதை என்பதே பார்ப்பனர்களின் கொடைதான். கவிதை சோறு போடாது. கவிஞர்கள் கண்டு கொள்ளப்பட மாட்டார்கள். முப்பதாண்டுக் காலமாவது ஒருவன் கவிதை எழுதிக்கொண்டே இருக்க வேண்டும். பிறகு கவிதை ஊற்றுக்கண். அவ்வளவு காலம் தூர்ந்து போகாதிருக்க வேண்டும். இப்படியெல்லாம் இருந்தாலும் தமிழ்ச் சமூகம் அங்கீகரித்துவிடும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. விக்கிரமாதித்தனின் வரிகள் ஒவ்வொன்றும் அட்சர லட்சம் பெறும். நவீன தமிழ்கவிதையின் EZRAPOUND ஆன விக்கிரமாதித்யன் என்ற நம்பிராஜனால்தான் இந்த வரிகளை 2009-ல் எழுத முடியும். இந்த முன்னுரைக்காகவே இந்தப் ப...

இன்ன பிற

காலச்சுவடு கதைகள் 1994-2000 படிக்கக் கிடைத்தது। மனுஷ்ய புத்திரன் தொகுத்திருக்கிறார்। 5 நெடுங்கதைகள், 18 சிறுகதைகள் உள்ளன। ஜி நாகராஜனின் 'ஆண்மை' என்ற கதைதான் என்னை முதல் வாசிப்பிலேயே அசாத்தியமாக தாக்கியது। ஒரு வேசியின் பின்னால் போகிற ஆண்மகன் ஒருவன் சொல்வதாக கதை அமைந்துள்ளது। இருபது வயது நிரம்பிய அந்த வேசியைப் பார்த்ததும் ஆண்மகன் எண்ணுகிறான்। 'கடவுளை மன்னித்துவிட வேண்டியதுதான்। எத்தனை விகாரமான உருவங்களுக்கிடையே இப்படியும் அழகான ஒரு உருவத்தைப் படைத்திருக்கிறாரே! அவளது மோகனச் சிரிப்பையும், மலர்ந்த கண்களையும், உலகத்து அழகையெல்லாம் வடித்திறக்கிய அவளது மார்பகத்தையும் பார்த்தபோது எனது இரத்த நாளங்கள் விரிந்தன,'ரொமாண்டிக்கான வர்ணனைதான்। எட்டு வயது மகனுடன் அந்த வேசியின் அப்பா அவளை பஸ் ஸ்டாப்பு வரை கொண்டு விடுகிறார்। தம்பி அக்காகூடப் போவேன் என்று படுத்துகிறான்। அப்பா அவனைச் சமாதனப்படுத்தி அழைத்துப் போகிறார்। பேரம் பேசப்படுகிறது। பணத்தைப் பெறுவதில் அவள் குறியாக இருக்கிறாள்। ஆண்மகன் நினைக்கிறான்। 'எதற்கும் ஏதாவது கொடுத்தாக வேண்டும்। கொடுக்காமல் எதுவும் கிடைப்பதில்லை। மனைவி மட்ட...