Skip to main content

Posts

Showing posts from December, 2021

விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி.

  அழகியசிங்கர் சனிக்கிழமை (01.01.2022) அன்று மாலை 6.30 மணிக்கு விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி. புதுமைப்பித்தன் கதை - கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் மௌனி கதை - அழியாச்சுடர் இக் கதைகளைக் குறித்து எட்டு இலக்கிய நண்பர்கள் உரை நிகழ்த்துகிறார்கள். அனைவரும் வருக. Topic: விருட்சம் நடத்தும் Zoom Meeting Time: Jan 1, 2022 06:30 PM India Join Zoom Meeting https://us02web.zoom.us/j/88191437553... Meeting ID: 881 9143 7553 Passcode: 443775

சுந்தர ராமசாமி கதைகள் – பிரசாதம்/அழகியசிங்கர்

          இந்த முறை கதைஞர்களின் கூட்டத்தில் சுந்தர ராமசாமியின் கதைகளைப் பற்றிப் பேசினோம். எல்லோரிடம் மூன்று கதைகளைப்பிரித்துக் கொடுத்தேன்.           பிரித்துக் கொடுப்பதோடு அல்லாமல் நானும் கதைகளைப் படிப்பேன்.            ஜனவரி மூன்றாம் தேதி 1992 ஆம் ஆண்டு க்ரியா வெளியிட்ட புத்தகமான சுரா கதைகளை வாங்கினேன்.  அப்போது அந்தப் புத்தகம் விலை ரு.90.           என்னிடமிருந்த புத்தகத்தின் முதுகுப் பக்கத்தில் எலி   சற்று பதம் பார்த்து விட்டது.  இத்தனை வருடங்களில் அதன் தாள்கள் உடைந்து விழ ஆரம்பித்து விட்டன.           சரி, நான் புத்தகத்தில் உள்ள கதைகளை எப்போது எடுத்துப் படித்துப் பார்த்தேன்.  படிக்கலாம் படிக்கலாமென்று வைத்திருந்தேன் தவிர, புத்தகத்தைப் பிரித்துப் பார்க்கவில்லை. இன்னும் கேட்டால் அழகாக அடுக்கி வைத்திருக்கும் புத்தகங்களில் சுந்தர ராமசாமி கதைகளும் ஒன்று.           கதைஞர்கள் கூட்டம் ஆரம்பத்ததிலிருந்து கிடைக்கும் சி...

கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி - 26

  அழகியசிங்கர் சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 26வது கதை வாசிப்புக் கூட்டம். சனிக்கிழமை - 25.12.2021 அன்று மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடந்து முடிந்தது. அதன் காணொளிக் காட்சியை இப்போது கண்டு ரசிக்கலாம். 1. ந.பிச்சமூர்த்தி 2. சல்மா

கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி - 25

  அழகியசிங்கர்   சூம்  மூலமாக விருட்சம் நடத்தும் 25வது  கதை வாசிப்புக்  கூட்டம்.  சனிக்கிழமை - 11.12.2021 அன்று மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது. எடுத்துக்கொண்டு பேசிய  கதைஞர்கள்  1.  சுந்தர ராமசாமி     2. ஜெயந்தி  ஜெகதீஷ் அதன்  காணொளியைப்  பார்த்து ரசியுங்கள்.

ஐந்து கவிதைகள்

அழகியசிங்கர் 1 . நாற்காலி நாற்காலியில் அமர்ந்திருந்தேன் நாற்காலியோடு நானும் நிறைந்திருந்தேன் நாற்காலியை விட்டு எழுந்து நின்றேன் இப்போது நாற்காலி மட்டும் தனியாக அமர்ந்திருக்கிறது. 2. பிள்ளையார் மனதில் உருவாகியிருக்கும் பிள்ளையாருக்கு பல்லாயிரக்கணக்கான கைகளும் பல்லாயிரக்கணக்கான முகங்களும் ஓர் அதிசய உருவமாய்க் கண்ணில் தென்படுகிறார் 3. வார்த்தைகள் நான் எழுதிக்கொண்டே போகிறேன் நீ வாசித்துக்கொண்டே போகிறாய் இருவருக்கும் இடையில் வார்த்தைகள் புரண்டு போய்க் கொண்டிருக்கின்றன 4.. ஊஞ்சல் எனக்கு ஊஞ்சலில் உட்கார பயம் அதுவும் ஆடிக்கொண்டிருக்கும் ஊஞ்சல் என்றால் பயமோ பயம் என் மனதில் எப்போதும் ஒரு ஊஞ்சல் ஆடிக் கொண்டிருக்கிறது எப்போதும்.... 5.. ரவாதோசை க.நா.சு மயிலாப்பூரில் வசித்து வந்தார் அவர்தான் ராயர் ஓட்டலை அறிமுகப்படுத்தினார் நாங்கள் இலக்கியவாதிகள் ரவாதோசை ஆர்டர் செய்து சாப்பிட்டோம். க.நா.சு போனபிறகு இன்னும் கூட ரவாதோசை நாவில் கரைந்து கொண்டிருக்கிறது ஏனென்றால் நாங்கள் இலக்கியவாதிகள் ரொம்பவும் கற்பனை செய்வோம் (தமிழின் முதல் இண...

ஜெயந்தி ஜெகதீஷ்ஷின் ‘ரெஜித்தர் ஆபிஸ் மசிக் குண்டு’

  அழகியசிங்கர் உணர்வுகளில் சிக்குண்ட கதைத் தொகுப்பு எல்லாச் சிறுகதைகளையும் படித்துவிட்டேன். ஒரே மூச்சாக. 15 கதைகள் கொண்ட தொகுப்பு. இந்தச் சிறுகதை ஆசிரியர் ஒரு பெண். இவருடைய சிறுகதைகள் எந்தப் பத்திரிகையிலும் பிரசுரமாகவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் அகல் என்ற மின்னிதழில் பிரசுரமாகியிருக்கிறது. மேற்கு மாம்பலத்தில் விஎம்எ ஹாலில் நூல் வெளியீடு. நானும் ஒரு பேச்சாளன். முதலில் தயக்கமாக இருந்தது. புது சிறுகதை எழுத்தாளராக இருக்கிறாரே எப்படி சிறுகதை இருக்குமென்று. ஆனால் எதிர்பார்த்ததை விடச் சிறப்பாகவே எழுதியிருக்கிறார். நாம் எதிர்பார்க்கிற மாதிரிதான் கதைகள் எழுதப் பட வேண்டுமென்பதில்லை. உதாரணமாக ‘ரெஜித்தர் ஆபிஸ் மசிக்குண்டு’ என்ற கதையை எடுத்துக்கொள்வோம். இந்தக் கதையை நான் எழுதுவதாக இருந்தால் வேற மாதிரி எழுதியிருப்பேன். நான் எழுதுவதுதான் சரி என்று சொல்ல வரவில்லை. இந்தக் கதையில் ஒரு வரி வருகிறது. ‘வாசல்ல கிடந்த திண்ணையிலேயே உக்கார்ந்து கிடந்தோம். உள்ள டொம் டொம்முன்னு அந்த மசிகுண்ட வெச்சு அடிச்சுக்கிட்டே இருக்காக’ எத்தனை வயல், எத்தனை வீடு ரெசிஸ்தர் ஆபீஸ்சுல இருக்கிற மசிக்குண்டு அத்தனைய...

72வது விருட்சம் நேசிப்புக் கூட்டத்தின் காணோளி

    அழகியசிங்கர் சூம்  மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 72வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி  மாலை 6.30மணிக்கு (04.12.2021)   சனிக்கிழமை நடந்த கூட்டத்தின் காணொளியைப் பார்த்து ரசிக்கவும். 

விருட்சம் பெருமையுடன் வழங்கும் 72வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி

  அழகியசிங்கர் சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 72வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி மாலை 6.30மணிக்கு (04.12.2021) சனிக்கிழமை நடைபெற உள்ளது. எல்லோரும் கலந்துகொண்டு நிகழ்ச்சியைச் சிறப்புச் செய்யும்படி கொள்கிறேன். Topic: விருட்சம் பெருமையுடன் வழங்கும் 72வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி Time: Dec 4, 2021 06:30 PM India Join Zoom Meeting https://us02web.zoom.us/j/82816517029?pwd=SFhURWUzYjRsNnVEa2QwVEluTWRCdz09 Meeting ID: 828 1651 7029 Passcode: 334937