அழகியசிங்கர் ஒரு கவிதைப் புத்தகத்திலிருந்து இரண்டு கவிதைகளை எடுத்து ஆராய வேண்டுமென்று நினைக்கிறேன்.கடற்கரய்யின் ‘காஃப்காவின் கரப்பான் பூச்சி.’ பிப்ரவரி 2021 அன்று வெளிவந்த புத்தகம். காஃப்காவின் கரப்பான் பூச்சி என்று ஏன் தலைப்பு வைத்தார் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். சமீபத்தில் கடற்கரய் எழுதிய கவிதைத் தொகுப்பு இது. ‘தேவதைகள் அல்லர்’ என்ற கவிதையை எடுத்துக்கொள்வோம். பொதுவாக ஒரு கவிதையை எடுத்து எழுதினால் போதும் எல்லா வரிகளும் நமக்குப் புரிந்து விடும். அதன்பின் அதற்கு விளக்கத்தைத் தர வேண்டுமென்பதில்லை. ‘தேவதைகள் அல்லர்’ என்ற கவிதையை இங்குத் தருகிறேன். தேவதைகள் அல்லர் எனது பிள்ளைகளை நான் தேவதைகள் எனச் சொல்ல மாட்டேன். ஏனெனில்; தேவதையை எனக்குத் தெரியாது. என் பிள்ளைகளை ராஜா என்று நான் கொஞ்ச மாட்டேன். ஏனெனில் மன்னர்கள் மக்களுடன் இருப்பதில்லை . என் பிள்ளைகளை நான் வைரம் என்று ஒப்பிட மாட்டேன் ஏனெனில் அதைப் பாமரர்கள் பார்த்ததில்லை என் பிள்ளைகள் எப்போதும் என் பிள்ளைகள்தான். பிறப்பால், பின் தங்கியவர்கள். வரலாற்றால், ஒ...