Skip to main content

இன்றைய கூட்டம்



அழகியசிங்கர்


சில தினங்களுக்கு முன்னால் எழுத்தாளர் வையவன் கூப்பிட்டு காசியபனின் அசடு பற்றிப் பேச முடியுமா என்று கேட்டார்.  சரி என்றேன். அந்த சிலநாட்கள் வந்து முடிந்து விட்டன.  கூப்பிட மறந்து விட்டார் என்று நிம்மதியாக இருந்தேன்.
ஒரு நாள் அவரிடமிருந்து தொலைப்பேசி.  உங்கள் சிறுகதைகள், கவிதைகள் குறித்து கூட்டம் நடத்துவதாக உத்தேசம் என்றார்.  எனக்கு ஆச்சரியம்.  ஒருவரை ஒருவர் பார்த்தால் கூட முகத்தைத் திருப்பிக் கொண்டு போகும் உலகம் இது.  
என்னை விட முத்த எழுத்தாளர் என்னைக் கௌரவப்படுத்த நினைத்தபோது ஆச்சரியம் பொங்கியது.  நானும் கிட்டத்தட்ட அவர் மாதிரிதான்.  கூட்டங்கள் நடத்திக்கொண்டிருக்கிறேன்.
என் நண்பர்கள் சிலபேர்களைக் கூப்பிட்டேன்.  மனைவியை அழைத்தேன். வருகிறேன் என்றாள்.  பொதுவாகப் புத்தகங்களைப் படிப்பதில்லை. எழுத்தாளர்களின் உன்னதம் தெரிவதில்லை என்று முணுமுணுத்துக் கொண்டிருக்கிறோம்.  ஆனால் அங்கங்கே சில கூட்டங்கள் இப்படி நடந்து கொண்டுதான் இருக்கின்றன. 




Comments