அழகியசிங்கர் நகுலனே தயாரித்தப் புத்தகம் நாய்கள் என்ற நாவல். அவருடைய பெயரிலியே வெளியிட்டுள்ளார். அதை புக் வென்சர் என்ற வாசகர் வட்ட அமைப்பில் விற்பனை உரிமை கொடுத்துள்ளார். 102 பக்கங்கள் கொண்ட நாவல் இது. அதில் அவர் எழுதியது சில வார்த்தைகள் என்ற பகுதி. இகர் முதல்விக்கு சமர்ப்பணம் செய்துள்ளார். அதில் அவர் எழுதியதைப் படித்தப்போது எனக்கு தாங்க முடியாத சிரிப்பு வந்து விட்டது. நீ யாரோ நான் யாரோ யார் யாரோ யார் இவரோ - '' நகுலன் '' - இதோ அவர் எழுதிய சில வார்த்தைகள். சில வார்த்தைகள் இது நான் எழுதிய நாவல்களில் ஆறாவது நாவல். இந்த ஆறு நாவல்களில் நிழல்கள்'', (நினைவுப் பாதை" இவ்விரண்டும் புஸ்தக -- ஸ்தாபனங்கள் வெளி யிட்டவை. (ரோகிகள்'' (குருஷேத்ரம்" என்ற தொகுப்பில் வந்தது. இரண்டு நாவல்கள் இன்னும் கையெழுத்துப் பிரதிகளாகவே இருக்கின்றன. இதைப் பற்றி நான் எவ்வித மனக்கிலேசமும் அடையவில்லை. ஒரு எழுத்தாளன் என்ற வகையில் எனது அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று - ஒரு எழுத்தாளனுக்கு மூலதனம் அவன் எழுத்துத்தான். ...