அழகியசிங்கர் திருக்குறளை ஒவ்வொன்றாக எடுத்துப் படிக்க வேண்டுமென்ற என் எண்ணம் என்னை அறியாமலேயே தவடுபொடியாகிவிட்டது. கவனம் வேறு எங்கோ போக ஆரம்பத்துவிட்டது. ஆனாலும் திருக்குறள் ஞாபகம் வந்து விடுகிறது. இதோ ஒரு குறள். சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின் வகைதெரிவான் கட்டே உலகு இந்த இடத்தில் வகைதெரிவான் என்ற வார்த்தை சிறப்பாக இருப்பதாகப் படுகிறது. சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐந்து உணர்ச்சிகளையும் புரிந்துகொண்டு, அறிந்து அவற்றை வெல்லத் தெரிந்தவனாக இருக்கவேண்டும். அப்படிப்பட்டவர்களைத்தான் அறிவுடையோர் போற்றுவார்கள். இதில் ஓசை என்ற ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள் இதைப் பூரணமாக உணருபவர்கள் பக்கத்தில் வண்டி வருவதைக் கூட சத்தத்தால் உணர்ந்து அது வருகிற பாதையியிருந்து விலகிப் போவார்கள். இந்த ஓசையைப் பற்றி நான் ஒரு கவிதை எழுதியிருக்கிறேன் : கவிதையின் பெயர், üஒலிபெருக்கியின் அவலம்.ý ஒருமுறை பிள்ளையார் சதூர்த்தி அன்று, ஏகப்பட்ட சத்தம். ஒலிபெருக்கியின் அலறல். ஒரு நிமிடம் கூட வீட்டில் நிம்மதியாக இருக்க முட...