Skip to main content

தமிழ் இலக்கியத்தில் பக்தி இலக்கியம முக்கியப் பங்கு வகிக்கிறது.


அழகியசிங்கர்





நானும் நட்ராஜனனும் தினமும் காலையில் நடை பயிற்சி செய்து கொண்டிருப்போம்.  ஒரு நாள் அவர் திருவாசகத்தைப் பற்றிப் பேச அது குறித்து ஆழ்ந்தத் தேடல் அவரிடம் உருவாகியது.  உடனே நானும் என் புத்தக நூல் நிலையத்திலிருந்து திருவாசகப் புத்தகங்களைத் தேடினேன்.  சுவாமி சித்பவானந்தர் திருவசாகம் எனக்குக் கிடைத்தது.
திருவாசகத்தை போப் அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்துள்ளார்.  நடராஜன் போப் எழுதிய ஆங்கில பிரதியைப் படிக்க ஆரம்பித்தார்.  போப்பின் சிறப்பான மொழி ஆற்றலை அறிந்து நட்ராஜனுக்கு ஆச்சரியம். உண்மையில் பரவசம் அடைந்து விட்டார். 
பக்தி இலக்கியம் நம் வாழ்க்கைக்குத் தேவையா என்ற கேள்வியைக் கேட்டு அவரை மடக்குவேன்.  அவர் அதற்கெல்லாம் பதில் சொல்லி என்னை அடக்கி விடுவார்.
சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறும் உரையாடலில் பலரும் பங்கு கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். 

Comments