Skip to main content

மனதுக்குப் பிடித்த கவிதைகள் 27

அழகியசிங்கர் 



போகன் சங்கர் கவிதை



முத்தம் செய்வதெப்படி
எனக் கேட்ட
முதிரா முலைப் பெண்ணே...

முத்தத்தைப்
பலவகைகளில் செய்யலாம்

தெய்வத்தைத் தொழுவதைப் போல
பக்தியுடன்
சிலர் செய்வார்
பழம் சாப்பிடுவது போல
பசியுடன் சிலர் செய்வார்
பட்டாம்பூச்சி
பிடிப்பது போல்
பயத்துடன் சிலர் செய்வார்
முள்கரண்டியில்
இறைச்சியைக்
குத்துவது போல
இன்னும் சிலர் செய்வார்
நான் எப்போதும்
முத்தத்தை
யுத்தத்தைப் போலதான்
செய்வேன்

நன்றி : எரிவதும் அணைவதும் ஒன்றே - கவிதைகள் - போகன் சங்கர் - பக்கம் : 112 - விலை : ரூ.90 - சந்தியா பதிப்பகம், புதிய எண் : 77, 53வது தெரு, 9வது அவென்யூ, அசோக்நகர், சென்னை 600 083, தொலைபேசி : 044-24896979 


Comments