Skip to main content

Posts

Showing posts from February, 2016

ஏன் கடுமையாக இருந்தது இன்றைய பொழுது?

அழகியசிங்கர் இன்றைய பொழுது எனக்கு இவ்வளவு கடுமையாக இருக்குமென்று நினைக்கவில்லை.  காலையில் 2 மணிக்கு எழுந்து என் உறவினர் ஒருவரை டில்லி ராஜாதானி வண்டியில் சென்டரல் ரயில்வே ஸ்டேஷனலில் ஆறு மணிக்குள் கொண்டு விட முனைப்புடன் இருந்தேன்.  அதனால் தூக்கம் கெட்டு விட்டது. பின் சென்டரல் ஸ்டேஷனலிருந்து திரும்பி வந்தவுடன் தம்பியைப் பார்க்கச் சென்று விட்டேன்.  திரும்பவும் வீட்டுக்கு வரும்போது மணி மதியம் இரண்டாகி விட்டது.  அசதி.  தூங்கி விட்டேன்.  எழுந்தபோது மணி 4 ஆகிவிட்டது.  சென்டரல் ரயில்வே நிலையத்தில் நான் இருந்தபோது தினமணி பேப்பர் வாங்கினேன்.  கதிரில் என் நண்பர் நா கிருஷ்ணமூர்த்தியின் சித்ரா செம பிஸி என்ற கதையைப் படித்தேன்.  சா கந்தசாமியின் கலையில் ஒளிரும் காலம் என்ற கட்டுரையைப் படித்தேன். தினமணி பேப்பரின் நடுப்பக்கத்தை நான் எப்போதும் பார்க்காமல் இருக்க மாட்டேன்.  தமிழ் மணி என்ற பெயரில் வரும் எல்லாம் உபயோகமாக இருக்கும்.  குறிப்பாக நான் விரும்பிப் படிக்கும் பகுதி கலா ரசிகன் பகுதி. போனவாரம் அவர் எழுதிய குறிப்புகளைப் பட...

அங்கும் இங்கும்........2

அழகியசிங்கர் சமீபத்தில் நான் இரண்டு கூட்டங்களுக்குச் சென்றேன்.  ஒரு கூட்டம் ரவி சுப்பிரமணியனின் திருலோகம் என்றொரு கவி ஆளுமை. இன்னொரு கூட்டம் விசாரணை படத்தைப் பற்றிய பாராட்டு கூட்டம்.  இந்த இரண்டு கூட்டங்களிலும் உட்கார இடம் கிடைக்கவில்லை. ரொம்ப நேரம் நின்றுகொண்டு ஒரு கூட்டத்தை ரசிக்க முடியவில்லை.  ரவி சுப்பிரமணியன் கூட்டத்தில் உள்ளே இருப்பதை விட வெளியே பேசக் கிடைத்த நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன்.  பல நண்பர்களைச் சந்தித்தேன்.  ரொம்ப நாட்கள் கழித்து தமிழ் மணவாளனைச் சந்திந்தேன்.  தமிழ் மணவாளனைப் பார்த்தால் கட்டாயம் சில நண்பர்களைப் பற்றி விஜாரிப்பேன். குறிப்பாக ப்ரியம் என்ற நண்பரைப் பற்றி விஜாரிப்பேன்.  பிறகு அமிர்தம் சூர்யாவைப் பற்றி விஜாரிப்பேன்.  தமிழ் மணவாளன் பிஎச்டி முடித்ததை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார்.  மாதவரம் என்ற இடத்திலிருந்து அவர் ரவி சுப்பிரமணியன் கூட்டத்திற்கு வந்திருக்கிறார்.  அதுவும் டூ வீலரில் வந்திருக்கிறார்.  நான் அதுமாதிரி டூ வீலரில் வந்தால் என் ரத்த அழுத்தம் அதிகமாகக் காட்டும். ஒரு மாதிரி ...

சமீபத்தில் பார்த்த இரண்டு படங்கள்

அழகியசிங்கர் சமீபத்தில் நான் இரண்டு தமிழ்ப் படங்களைப் பார்த்தேன்.  ஒன்று இறுதிச் சுற்று.  இன்னொன்று விசாரணை.  என்னால் விசாரணையை விட இறுதிச் சுற்று என்ற படத்தை ரொம்பவும் ரசிக்க முடிந்தது. விசாரணை என்ற படம் பார்ப்பவர்களை தலை கீழாக கவிழ்க்கும் தன்மை கொண்டது.   பொதுவாக சினிமாப் படங்களை யாரும் பொழுது போக்கும் அம்சமாகக் கருதிதான் பார்க்கிறார்கள்.  நான் இந்த இரு படங்களையும் பார்த்துவிட்டு வரும்போது, இறுதிச் சுற்று பார்த்த திருப்தியை விசாரணை பார்க்கும்போது எனக்கு ஏற்படவில்லை.  வெற்றிமாறன் துணிச்சலாக இந்தப் படத்தை எடுததிருப்பதாக சொல்கிறார்கள்.  ஆனால் படம் பார்க்க வருபவர்களுக்கு இந்தப் படம் என்ன சொல்கிறது?  இதன் மூலம் நாம் என்ன தெரிந்து கொள்ள முடிகிறது.  போலீஸ்காரர்கள் எல்லோரும் மோசமானவர்கள் என்றா?    இறுதிச் சுற்று ஒரு மெல்லிய காதல் கதை.  எப்போதும் போல உள்ள காதல் கதை.  மீனவக் குப்பத்தில் உள்ள சுட்டிப்பெண்ணான ரித்திகாசிங்கை பாக்ஸராக்கி வெற்றி பெற செய்கிறார் மாதவன்.  எல்லா பொழுது போக்கு அம்சங்களையும் கொண்ட ஒரு...

என் நாடக முயற்சி

அழகியசிங்கர் இந்த மாதம இருபதாம் தேதி  அதாவது நேற்று விருட்சம் இலக்கியச் சந்திப்பில் üநானும் என் நாடகங்களும்ý என்ற தலைப்பில் எஸ் எம் ஏ ராம் சிறப்பாகப் பேசினார்.  அன்று முழுவதும் எனக்கு நேரமே சரியாகக் கிடைக்கவில்லை.  என் வீட்டில் உள்ளவர்கள் மகாமகத்திற்குக் கிளம்ப ஆயுத்தமாக இருந்தார்கள்.  அவர்களுக்கு உதவி செய்யும் சூழலில் நான் மாட்டிக்கொண்டிருந்தேன்.  ராம் நாடகங்கள் புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு படித்துக் கொண்டிருந்தேன்.  இன்னும் முழுதாகப் படித்து முடிக்கவில்லை.  முதல் மூன்று நாடகங்கள் படித்து விட்டேன்.  எப்போ வருவாரோ நாடகம் படிக்க ஆரம்பிக்கும்போது படிக்க நேரம் கிடைக்காமல் அவதிப்பட்டேன்.    விருட்சம் கூட்டத்தில் ராம் எப்படி ஒவ்வொரு நாடகத்தையும் எழுத நேர்ந்தது என்பதைப் பற்றி பேசினார்.  நானும் ஒரு காலத்தில் நாடகப் பித்து, சினிமாப் பித்து.  அந்தக் காலத்தில் சோ நாடகங்களை ரசித்துப் பார்ப்பேன். ராணி சீதையம்மாள் அரங்கில் பல வங்கிகள் சேர்ந்து பல நாடகங்களை போட்டிக்காக அரங்கேற்றம் செய்யும்.  பார்த்து ரசித்திருக்கி...

நானோ காரும், நானும், நவீன விருட்சம் 99வது இதழும்....

அழகியசிங்கர் இது மாதிரி தலைப்பில் எழுதிப் பார்க்கலாம் என்று தோன்றியது.  நவீன விருட்சம் 99வது இதழ் வந்து விட்டது.  கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்கு மேல் நவீன விருட்சம் இதழுடன் பயணம்.   திங்கட்கிழமை காலையில் அச்சகத்தாருடன் போனில் பேசினேன். "இதழ் ரெடியாய் இருக்கு.  வந்து எடுத்துக்கொள்ளுங்கள்," என்றார் அச்சகத்தார். "எப்படி வருது?  ஆட்டோவில் போட்டு எடுத்துக்கொண்டு வந்துடலாமா?" என்று கேட்டேன். "ஏன் சார், உங்க கிட்டேதான் நானோ கார் இருக்கே..அதில கொண்டு போங்களேன்,"என்றார். நானோ காரை எடுத்துக்கொண்டு திருவல்லிக்கேணியில் உள்ள பிரஸ்ஸிலிருந்து விருட்சம் இதழ் பிரதிகளை அள்ளிக்கொண்டு வருவதை நினைத்து யோசனையாக இருந்தது. ஏனென்றால் நான் நானோ கார் ஓட்டும் ஜாம்பவானாக இருந்தாலும், திருவல்லிக்கேணி சந்துகளில் ஓட்டும திறமைசாலியா என்பது தெரியவில்லை. என்னை தைரியப் படுத்தவே என் மனைவி பக்கத்தில் இருந்து கொண்டிருப்பாள். "ஏன் நானோவில் போகிறீர்கள்?  ஆட்டோவை எடுத்துக்கொண்டு போங்கள்...பீக் ஹவர்ஸில் உங்களுக்கு கார் ஓட்ட வராது," என்று பிரேக் போட்டாள். எனக்க...

விருட்சம் இலக்கியச் சந்திப்பு - 20

நானும் என் நாடகங்களும் பேசுவோர் : எஸ் எம் ஏ ராம் இடம் : அலமேலு கல்யாண மண்டபம அகஸ்தியர் கோயில் பின்புறம் 19 ராதாகிருஷ்ணன் தெரு தி நகர், சென்னை 600 017 தேதி 20.02.2016 (சனிக்கிழமை) நேரம் மாலை 6.00 மணிக்கு பேசுவோர் குறிப்பு : எஸ் எம் ஏ ராம் என்கிற பெயரில் எழுபதுகளின் ஆரம்பத்தில் சிறுகதைகள் எழுதத் தொடங்கிய இவரது முழுப் பெயர் எஸ் மோகன் அனந்தராமன்.1979 ஆம் ஆண்டு வெளி வட்டங்கள் என்ற பெயரில் நாவல் எழுதி உள்ளார்.70 களின் இறுதியில் நவீன நாடகங்கள் என்ற அடையாளத்தோடு, வடிவம், உள்ளடக்கம், இவை இரண்டிலும் மரபு நாடகங்களிலிருந்து மாறுபட்டனவாய்த் தமிழில் புதிதாய்க் கிளர்ந்தெழுந்த நாடக மறுமலர்ச்சி இயக்கத்தில் இவர் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது. சமீபத்தில் எஸ் எம் ஏ ராம் நாடகங்கள் என்ற புத்தகம் கொண்டு வந்துள்ளார். விற்பனைக்கு அப் புத்தகம் கூட்டத்தில் கிடைக்கும். அனைவரும் வருக, அன்புடன் அழகியசிங்கர் - ஆடிட்டர் கோவிந்தராஜன் கூட்டம் பற்றிய அறிவிப்பை எ...

புத்தக விமர்சனம் 17

புத்தக விமர்சனம் 17 அழகியசிங்கர் சோ சுப்புராஜ் எழுதிய துரத்தும் நிழல்கள் என்ற சிறுகதைத் தொகுதியை எடுத்து வைத்துக்கொண்டேன்.  20 சிறுகதைகள் கொண்ட 196 பக்கங்கள் கொண்ட புத்தகம் இது.  சுப்புராஜின் இந்தத் தொகுப்பில் உள்ள எல்லாக் கதைகளும் பல பத்திரிகைகளில் பிரசுரமான கதைகள்.  இதிலிருந்து ஒன்று தெரிகிறது.  சுப்புராஜ் அவர்களுக்கு அவருடைய கதைகள் எல்லாம் பத்திரிகைகளில் பிரசுரமாகும் சூட்சுமம் தெரிந்திருக்கிறது.  அவர் எது எழுதினாலும் எதாவது ஒரு பத்திரிகைக்கு அனுப்பினால் போதும் பிரசுரமாகி விடுகிறது.  அவரும் விடாமல் பல கதைகள் எழுதிக் கொண்டிருக்கிறார். உன்னதம் பத்திரிகையில் ஒரு கதையும், நவீன விருட்சம் பத்திரிகையில் ஒரு கதையும் பிரசுரமாகி உள்ளன.  அக் கதைகளை வேறு எங்காவது அனுப்பி இருந்தாலும் பிரசுரமாகி இருக்கும். சரி, அப்படியென்றால் தரம் இல்லாத கதைகளையா அவர் எழுதுகிறார் என்றால் அப்படி சொல்லவில்லை.  பலவிதமான கதைகளை அவர் எழுதிக்கொண்டு போகிறார்.  பலவிதமாக கற்பனை செய்கிறார்.  அவர் எழுத்து சமுதாயத்தின் மீது அவருக்கு ஏற்பட்டுள்ள கோபத்தை வெளிப்பட...

மறந்து போன பக்கங்கள்....

அழகியசிங்கர் தி சோ வேணுகோபாலனின் கோடை வயல் தொகுப்பில் உள்ள ஆறாவது கவிதை பழம்பெருமை.  நெளிந்தது புழு என்று ஏன சொல்கிறார்? குலப்பெருமை பேசி என்ன பயன் என்கிறாரா?  ஒரு புதுக்கவிதையைப் படிக்க படிக்க பலவிதமாக யோசனை செய்துகொண்டே இருக்கலாம்.  ஆனால் இப்படி நினைப்பதுதான் இறுதி என்று சொல்ல முடியுமா என்பது தெரியவில்லை.          பழம்பெருமை குழம்பு மாங்கொட்டை குலப் பெருமை பேசிற்று; நட்டுவைத்துக் காத்திருந்தேன்; நெடுமரமும் மரக்கனியும் நிழலாச்சு ! நெளிந்தது புழு!

கிராமீயப் பாடல்கள்

தொகுப்பாசிரியர் : வானமாமலை தெய்வ கணங்கள் கிராம மக்கள் நூற்றுக்கணக்கான தெய்வங்களை பெயர் கொடுத்து அழைக்கிறார்கள்.  ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு குறிப்பிட்ட சக்தி உண்டென்று நம்புகிறார்கள்.  கோயில்பட்டி அருகிலுள்ள சிறறூர்களில் மக்களால் வணங்கப்படும் தேவதைகளின் பெயர்பளை இப்பாட்டில் நாம் காண்கிறோம்.  முனியசாமி, ஐயனார், கண்ணாத்தா, பாப்பாத்தி, உலகம்மன், பெத்தனாட்சி ஆகிய பெயர்களை இப்பாட்டிலிருந்து நாம் அறிகிறோம். கிராம மக்கள், மேலே குறிப்பிட்ட தேவதைகளை மட்டுமின்றி முஸ்லிம் தர்க்காக்களுக்கும் நேர்ந்து கொள்வதுமுண்டு.  விசேஷக் காலங்களில் முஸ்லிம்களது யாத்திரை ஸ்தலங்களுக்கும் போவதுண்டு. முத்து முனிய சாமி மூர்க்கமுள்ள தேவதையே சத்தத்தை நீ கொடய்யா சரளி விட்டு நான்பாட ஊருக்கு நேர் கிழக்கே உறுதியுள்ள ஐயனாரே சத்தத்தை நீ கொடய்யா சரளி விட்டு நான் படிக்க. நாட்டரசன் கோட்டையிலே நல்ல தொரு பாப்பாத்தி வயித்தவலி தீர்த்தயானால் வந்திருவேன் சன்னதிக்கு ஒட்டப் பிடாரத்திலே உலகம்மன் கோயிலிலே பூக்கட்டிப் பா...

கசடதபற ஜøலை 1971 - 10வது இதழ்

தெலியலேது ராமா  ஜாதுஷ்டிரன்                                                                                                 'ப்ராங்க்ளின் கொட்டைப்ராந்து முத்துச்சாமி செத்த எலி' செல்லப்பா சொல்லி விட்டார் நாப்பா போட்டு விட்டார் IDENTITY CRISIS ALIENATION FEELING 'இழப்பில்' இதுவெல்லாம் எங்கேயும் இல்லையாம் செல்லப்பா சொல்லிவிட்டார் நாப்பா போட்டுட்டார். தமிழ்நாட்டில் தமிழ்க் குலத்தில் தமிழ்ச் சரித்திர வரலாற்றில் சோகத்துக்கிடமில்லை - இதயச் சோரத்துக் கிடமில்லை ஸந்தோஷம் ஸல்லாபம் ஸம்போகம் தார் மீகம் சத்தான சொல்லடுக்கு தமிழ்க் கதைக்கு மிக மிடுக்கு செல்லப்பா சொல்லிட்டார் நாப்பா போட்டுட்டார் இனி - ஆறடி உயரம் அழகான பெண்மைமுகம் (மேற்கொண்டு வர்ணனைக்கு நாப்பாவைக் கேளுங்கள்) சத்தான கருத்துக்கள் நாயகன் அவிழ்த்துவிட ஐந்த...

மறந்து போன பக்கங்கள்....

அழகியசிங்கர் தி சோ வேணுகோபாலனின் கோடை வயல் தொகுப்பில் உள்ள ஐந்தாவது கவிதை ஞானம்.   காலக் கழுதை கட்டெறும்பான இன்றும் சாளரத்தின் கதவுகள், சட்டம் காற்றுடைக்கும்.  அறப்பணி ஓய்வதில்லை.  தொடர்கிறது. எந்த மாற்றமும் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது வாழ்க்கை என்கிறாரா?                                                 ஞானம் சாளரத்தின் கதவுகள், சட்டம்; காற்றுடைக்கும். தெருப்புழுதி வந்தொட்டும். கரையான் மண் வீடு கட்டும. அன்று துடைத்தேன், சாயம் அடித்தேன், புதுக்கொக்கி பொருத்தினேன். காலக் கழுதை கட்டெறும்பான இன்றும்  கையிலே வாளித்தண்ணீர், சாயக்குவளை, கந்தைத்துணி, கட்டைத் தூரிகை; அறப்பணி ஓய்வதில்லை ஓய்ந்திடில் உலகமிலலை!  

13வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ரசித்தப் படங்கள்...3

டாக்ஸி என்ற ஈரானியப் படம்.... அழகியசிங்கர் விக்டோரியா என்ற படமும் டாக்ஸி என்ற படமும்தான் பார்க்க வேண்டிய படங்கள் என்று சொன்னார்கள். டாக்ஸி படம் காட்டிய அன்று அந்தப் படம் மட்டும்தான் என்னால் பார்க்க முடிந்தது.   டாக்ஸி என்ற இந்தப் படத்தைப் பற்றி பல சுவாரசியமான தகவல்கள் உண்டு.  இரானியன் இயக்குநர் ஜாவர் பன்னஹி அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக 2010லிருந்து படம் எடுக்கத் தடை செய்யப்பட்டவர்  மேலும் வீட்டுக் காவலில் உள்ளவர்.   அவர் தடைகளை மீறி எடுத்தப் படம்தான் டாக்ஸி. இந்தப் படம் டாக்ஸிக்குள்ளிருந்து எடுக்கப்பட்ட படம்.  டெஹ்ரான் தெருக்களை இந்தப் படம் டாக்ஸியின் வழியாகப் பார்த்தபடி காணப்படும் காட்சிகளை சொல்வதாக எடுக்கப்பட்டுள்ளது.   டாக்ஸியில் வெவ்வேறு தருணங்களில் ஏறி அமரும் வாடிக்கையாளர்களை வைத்தும் படம் எடுக்கப்பட்டுள்ளது.  படத்தைத் தயாரித்து இயக்கியவரே டாக்ஸி ஓட்டுபவராக நடித்துள்ளார்.  வெவ்வேறு தரப்பட்ட மனிதர்கள் டாக்ஸியில் ஏறி இறங்குகிறார்கள்.  அவர்கள் நடத்தும் உரையாடல்கள் இயற்கையாக போரடிக்காமல் அமைகிறது. அரசாங்கத்திற்குத் தெரி...