டாக்டர் பாஸ்கரன் எட்டாம் வகுப்பு வரை நான் சிதம்பரத்தில் தாத்தா, பாட்டிவீட்டிலிருந்துதான் படித்தேன் – மாலைகட்டித் தெரு, முனிசிபாலிடி ஹயர் செகண்டரி பள்ளிக்கூடம் – என்பெற்றோர் சென்னையில் இருந்தனர். சிறு வயது முதலேடாக்டர், மருந்து என்றாலே ஒரு பயம்; அதிலும் ஊசிஎன்றால், மரண பயம் ! ஒரு நாள் முனிசிபாலிடியிலிருந்து சின்ன அம்மைக்கு(நீர்க்குளுவான் – CHICKEN POX.) தடுப்பூசி போடுவதற்குப்பள்ளிக்கு வந்தனர். (அப்போதெல்லாம் பொது சுகாதாரம்அரசின் முக்கியமான பணிகளில் ஒன்றாக இருந்தது). ஒருசொட்டு வாக்சினை முழங்கைக்குக் கீழே, நிமிர்த்திய கைமேல் வைத்து, அதன் மேல் மெல்லிய ஊசிகள் கொண்டசிறிய திருகாணியால் சுழற்றி விடுவர் – மருந்தும்தோலுக்குள் சென்றுவிடும் ! எறும்புக்கடியை விட குறைவானவலிதான். இந்த ஊசிக்குப் பயந்து நான் பிரேயர் மைதானம்முழுவதும் அலறியபடி ஓடியதும், ஹெட்மாஸ்டர் திருஉமாபதி அவர்கள் என்னைத் துரத்திப் பிடித்ததும் இன்றும்நினைவிலிருக்கிறது ! (ஊசி போட்டுக் கொண்டேனாஎன்பது நினைவில் இல்லை !) ஊசியை விட என்அலறலுக்கு மிரண்ட குழந்தைகளே அன்று அதிகம் ! இன்றுபள்ளிகளில் அந்த தடுப்பூசிகள் இல்லை – சின்ன அ...