அழகியசிங்கர் நேற்று காலையில் வழக்கம்போல் (சமீப காலமாய்) நடை பயிற்சி செய்துவிட்டு ராஜாமணி வீட்டிற்குச் சென்றேன். என்னைப் பார்த்தவுடன் ராஜாமணி, üதி.க.சி இறந்துவிட்டார்,ý என்ற செய்தியைச் சொன்னார். எனக்கு தி.க.சியைப் பற்றிய எண்ணம் ஓடிற்று. காலையில் இந்தச் செய்தியைச் சொன்ன ராஜாமணியிடம் கோபம். பின் நான் வீட்டிற்கு வந்து, தினமணியைப் பார்த்தபோது அதில் செய்தி வந்திருந்தது. எனக்கு தி.க.சியை 20 ஆண்டுகளுக்கு மேல் தெரியும். நவீன விருட்சம் ஆரம்ப காலத்திலிருந்து அவர் என் நண்பர். வல்லிக்கண்ணனும், தி.க.சியும் நவீன விருட்சத்திற்குக் கடிதம் எழுதாமல் இருக்க மாட்டார்கள். நான் முதல் தடவை திகசியை அசோக மித்திரன் வீட்டில்தான் சந்தித்தேன். எந்தப் பத்திரிகையும், புத்தகத்தையும் விடாமல் படிப்பார். படித்தவுடன் ஒரு கார்டில் அழகான கையெழுத்தில் தன் அபிப்பிராயத்தை எழுதாமல் இருக்க மாட்டார். வல்லிக்கண்ணனும் அப்படித்தான். இருவர் கையெழுத்தும் அழக...