நான் இங்கே வந்தபிறகு 2 கவிதைகள் எழுத முடிந்தது. கவிதை என்று சொல்லும்போது ஒரு விஷயம் ஞாபகவருகிறது. இப்படி ஒரு இடத்திற்கு வந்தால், அந்த இடத்தை வைத்து கவிதை எழுத முடியும்? எழுத முடியும் என்றால் என்னவென்று எழுதுவது? க்ளியர் வாட்டர் பீச் என்ற இடத்திற்குச் சென்றேன். மதியம் நேரத்தில் படபடக்கும் வெயிலில், எல்லோரும் சத்தம்போட்டபடி நீச்சல் அடித்துக்கொண்டிருந்தார்கள். நானும் கடல்நீரில் நின்று கொண்டிருந்தேன். என் பக்கத்தில் நின்று கொண்டிருந்த நண்பர், இந்தக் காட்சியை வைத்துக்கொண்டு கவிதை எழுத முடியுமா என்று கேட்டார். முடியும் என்று சொல்ல முடியாது. இப்போது இல்லாவிட்டால் பின்னால் எழுதலாம் என்றேன். பாரதியார் காலத்தில் பாரதியாருக்கு கவிதை எழுதுவது எளிது. தேசம் விடுதலை ஆவதைப் பற்றி எழுதலாம். பக்தி பாடல்கள் எழுதலாம். மேலும் பாரதியாரே அவருடைய கவிதைகள் சினிமா பாடல்களாக பாட ஆரம்பித்தபிறகுதான் புகழ் அடைந்திருப்பார். இப்போது எழுதிக்கொண்டிருக்கும் பலருக்கு எந்தப் புகழும் கிடைக்குமா என்பது சந்தேகம். கவிதைத் தொகுதி அச்சிட்டால் அவர்கள...