ஒரு வழியாக 2011 போய்விட்டது. ஓராண்டு ஆரம்பிக்குமுன் எதையெல்லாமோ செய்ய வேண்டுமென்ற எண்ணம் ஓடிக்கொண்டிருக்கும். ஆனால் ஒன்றும் செய்ய முடியாத இயலாமை இல்லாமல் இருக்காது. கடந்த ஆண்டில் 10 புத்தகங்கள் கொண்டு வரவேண்டுமென்று நினைத்துக்கொண்டிருந்தேன். பெரிய ஏமாற்றமாகப் போய்விட்டது. பின் பத்திரிகையைத் தொடர்ந்து 3 மாதங்களுக்கு ஒருமுறை கொண்டு வர வேண்டுமென்று நினைப்பேன். ஒன்றும் நடக்கவில்லை. இந்த ஆண்டு நான் ரொம்ப குறைவாகவே எழுதியிருக்கிறேன். என் நாவல் முயற்சி பாதியில் நிற்கிறது. கவிதைகள் சிலவற்றை மட்டும் எழுதினேன். ஆனால் சிறுகதை எழுத முடியவில்லை. ஏன் மனம் அதில் செல்ல மறுக்கிறது? அதேபோல் தினசரி செய்தித் தாள்களைத் தவிர நான் எந்தப் புத்தகமும் படிக்கவில்லை. ஒரு கட்டத்தில் சர்க்கரை நோய் பற்றி பயம் வந்துவிட்டதால், தினமும் நடக்க ஆரம்பித்துவிடுகிறேன். காலையில் எழுந்தவுடன், ஓட்டலுக்குச் சென்று காப்பி குடித்துவிட்டு, நடக்க ஆரம்பித்துவிடுவேன். பின் கொஞ்சமாக சாப்பிடுவேன். அலுவலகம் ஓடுவேன். அதைவிட்டு திரும்பி வருவதற்குள் 9 மணி ...