Skip to main content

Posts

Showing posts from June, 2009

யோகிராம் சுரத்குமார் - ஓர் நினைவு

விசிறி சாமியார் யோகிராம் சுரத்குமார் குறித்த என் அனுபவம் ஒன்றை இங்கே பகிர்ந்து கொள்ள விருப்பம். பாலகுமாரன் புத்தகங்களில் (ஆசைக்கடல், குரு) இடம்பெற்ற விசிறி சாமியார் பற்றிய சம்பவங்களைப் படித்த பின், ஒரு சனிக்கிழமை கிளம்பி திருவண்ணாமலை போய் இருந்தேன். தியான மண்டபத்தில் (அப்போது பாதி கட்டப்பட்ட நிலையில் இருந்தது) நெடுநேரம் காத்திருந்த பலரோடு நானும் சேர்ந்து கொண்டேன். இரண்டு மணி நேரத்திற்கு மேலாகியும் அன்று விசிறி சாமியார் தியான மண்டபத்திற்கு வரவில்லை. சாமியார் தன் குடிலுக்கு கிளம்புவதாக,யாரோ ஒருவர் சொல்லிப்போனார்.குழுமியிருந்த மற்ற எல்லோரோடு நானும் வரிசையில் நின்று கொண்டிருந்தேன். ஒரு வெள்ளை நிற அம்பாசடர் காரில், கண்களில் குளிர் கண்ணாடியோடு விசிறி சாமியார் வெளிவந்து கொண்டிருந்தார். அப்போது நேரம் மதியம் மூன்று மணி இருக்கும். நல்ல சூட்டுடன் கூடிய சித்திரை வெயில். வலது கையை உயர்த்தி ஆசீர்வதித்தபடி வந்து கொண்டிருந்தார் விசிறி சாமியார். திடீரென்று கரு மேகங்கள் சூழ்ந்து தடதடவென மழை கொட்ட ஆரம்பித்தது. எல்லாம் ஒரு பத்து நிமிடமே. கார் அவர் குடிலைப் போய் சேர்ந்த அடுத்த நிமிடம், மழை நின்று மீண்டும் ...

நான்,பிரமிள்,விசிறி சாமியார்.......3

பிரமிள்தான் அடிக்கடி சாமியார்களைப் பற்றி குறிப்பிடுவார். விசிறி சாமியார் பற்றி பலமுறை தெரிவித்திருக்கிறார். அதனால் எனக்கும் விசிறி சாமியாரைப் பார்க்க ஆர்வம் ஏற்பட்டது. முதலில் நான், பிரமிள், லயம் சுப்பிரமணியன் (அவர் கோவையிலிருந்து வந்தார்) மூவரும் விசிறி சாமியார் அப்போது வசித்து வந்த ஒரு ஓட்டு வீட்டிற்கு முன் வந்து நின்றோம். ஏன்என்றால் அந்த வீட்டிற்குள் நுழையும்போது ஆணிகளில் மாலைகள் தொங்கிக்கொண்டிருந்தன. அவை எல்லாம் ஒட்டடைப் படிந்து அழுக்காக இருந்தன. எந்தக் காலத்திலோ யாரோ போட்ட மாலைகள் யாவும் தூக்கி எறியாமல் மாட்டியிருந்தன. உள்ளேயிருந்து விசிறி சாமியார் வந்தார். அவரைப் பார்த்தவுடன், ''உங்களைப் பார்க்க வந்திருக்கிறோம்...வரலாமா'' என்று பிரமிள் கேட்டார். உள்ளே வரச் சொன்னார் விசிறி சாமியார். முதன் முதலில் அவரைப் பார்க்கும்போது எனக்கு திகைப்பாக இருந்தது. அவர் ஒரு அழுக்கு வேஷ்டியைக் கட்டிக்கொண்டிருந்தார். அவர் உடலே அழுக்காக இருக்கும்போல் தோன்றியது. ஆனால் அவர் முகத்தில் பயங்கர தேஜஸ். தாடி வைத்திருந்தார். அந்த தேஜஸைப் பார்த்து எனக்கு ஆச்சிரியமான ஆச்சரியம். உள்ளே நுழையும்போது நா...

நான்,பிரமிள்,விசிறி சாமியார்.......2

நான் நேற்று இதை டைப் அடிக்கும்போது இரவு பத்து மணி ஆகிவிட்டது. இப்போதும் 10 மணி. அதனால் கொஞ்சம் அடித்துவிட்டு நிறுத்தி விட்டேன். நானே பல விஷயங்களை இப்படி blogல் அடிப்பது சந்தோஷமாக உள்ளது. இதை சிலபேர்கள் படிக்கிறார்கள். இப்படி அடிப்பது முன்பெல்லாம் கிடையாது. பெரும்பாலும் பத்திரிகையில் பிரசுரம் ஆவது நடக்காது. நான் கவிதைகள் எழுதி அதைப் பிரசுரம் செய்ய சரியான பத்திரிகை இல்லை என்பதால்தான் நவீன விருட்சம் ஆரம்பித்தேன். என்னைப்போல் பல நண்பர்கள் கவிதைகளையும் பிரசுரம் செய்ய வழி தெரியவில்லை. அப்படி ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகைதான் நவீன விருட்சம். அந்தப் பத்திரிகை ஆரம்பித்த பிறகுதான் எனக்குத் தெரிந்தது. பெரிய படைப்பாளிகளின் படைப்புகளையும் பிரசுரம் செய்ய வழி இல்லை என்பதுதான். என் பத்திரிகையின் 2 வது இதழின்போது க.நா.சுவை மயிலாப்பூரில் சந்தித்தேன். எனக்கு அவரிடம் அளவுகடந்த மரியாதை உண்டு. அவரிடம் விருட்சத்திற்கு எதாவது விஷயதானம் செய்ய முடியுமா என்று கேட்டேன். உடனே ஒரு கட்டுரையை பையிலிருந்து எடுத்துக்கொடுத்தார். எனக்கோ ஆச்சரியமான ஆச்சரியம். நான் அந்தக் கட்டுரையைப் பிரசுரம் செய்யவில்லை. புதுக்கவிதைக்கு முக்க...

நான், பிரமிள், விசிறி சாமியார்........1

ஒரு சனிக்கிழமை திருவண்ணாமலையில் இருக்கும் விசிறி சாமியாரைப் போய்ப் பார்க்கலாம் என்றார் பிரமிள். அலுவலகத்தில் விடுமுறை எடுக்க வேண்டாமென்பதால் சம்மதித்தேன். லயம் சுப்ரமணியனும் இந்தப் பயணத்தில் கலந்துகொண்டார். சாமியார்களைப் பார்ப்பதில் பிரமிளுக்கு அலாதியான பிரியம் உண்டு. சாமியார்களுடன் நெருக்கமான உறவை வைத்துக்கொண்டிருந்ததால் அவருக்கும் சாமியார்களின் குணம் இருக்குமென்று சிலசமயம் எனக்குத் தோன்றும். பிரமிளை என்னால் புரிந்துகொள்ளவே முடியாது. சிலசமயம் என்னுடன் நன்றாகப் பேசுபவராகத் தோன்றும். அப்படி நினைத்துக்கொண்டிருக்கும் போதே அவர் என்னை விட்டு விலகியும் போயிருக்கிறார். அவருடன் பழகிக்கொண்டிருக்கும்போதே எதிர்பாராதவிதமாக என்னை அடிக்கடி சந்திக்க வந்து கொண்டிருப்பார். சந்திக்காத நாட்களில் கார்டில் கடிதம் போடுவார். ஒருமுறை என் சட்டையைப் பார்த்து, 'சட்டை நன்றாக இருக்கிறது,' என்று குறிப்பிட்டார். அன்றே என் சட்டை ஒரு ஆணியில் மாட்டி கிழிந்து விட்டது. ஒரு முறை, 'என்ன நன்றாக சாப்பிட்டீர்களா?' என்று வயிற்றைத் தட்டினார். அன்று எனக்கு வயிற்று வலி. பிரமளுடன் நட்புடன் பழகுவது என்பது கடினம். இத...

நவீன விருட்சம்....நவீன விருட்சம்.....நவீன விருட்சம்.......நவீன விருட்சம்........நவீன விருட்சம்.......நவீன விருட்சம்......நவீன விருட்சம்.....நவீன

நிதானமாக மாலை 5 மணிக்குமேல் அழகியசிங்கரை ஜெகனும். மோகினியும் சந்திக்கிறார்கள். ஜெகன் : வெயில் கடுமையாக இருக்கிறது. மோகினி : அக்னி நட்சத்திரம் போனபிறகும் வெயில் கொடுமை தணியவில்லை. அழகியசிங்கர் : அலுவகத்திலிருந்து வீட்டிற்கு வந்துவிட்டால் தொப்பென்று விழுந்துவிடத் தோன்றுகிறது. எங்கும் போக முடியவில்லை. ஜெகன் : இலங்கைப் பிரச்சினை... மோகினி : எனக்கு ஒன்று புரியவில்லை. இந்தியா போன்ற நாட்டில் பல மொழிகள் பேசுபவர்கள், பல இனத்தவர்கள் வாழ்கிறார்கள். ஆனால் இலங்கையில் இரண்டே இரண்டு மொழி பேசுபவரிடம் ஏன் சுமுகமான நிலை ஏற்படவில்லை? அழகியசிங்கர் : சில நாட்களுக்கு முன் எனக்கு ஒரு கனவு வந்தது. எல்லோரும் ஓட்டமாய் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். மேலே விமானங்கள் சீறிப் பறந்து கொண்டிருக்கின்றன. அவற்றிலிருந்து குண்டுகள் பொழிந்தவண்ணம் இருக்கின்றன. குண்டுகளுக்கு இரையாகி மக்கள் சரிந்து சரிந்து விழுகிறார்கள்... போர் நடக்கும்போது தமிழர்கள் பட்டப்பாட்டை நினைத்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஜெகன் : நாமெல்லாம் சாதாரண மனிதர்கள். மோகினி : ஏன் பலவீனமானவர்கள் என்று கூட சொல்லலாம். அழகியசிங்கர் : எழுத்தாளர்கள் என்றால் இன...

அக்காவின் அன்பளிப்பு..........

இடுப்பில் அரவம் சுற்றிய பிள்ளையார் படம் என்றால் அதை வீட்டில் வைக்கக் கூடாது என்பதால் கோவிலுக்கு அதை தந்து விடுவதாக முடிவு செய்தாள் அக்கா.. எனினும் அந்தப் படத்தின் கீழ் எழுதிக் கொடுத்தாள்........ அன்பளிப்பு : ம.தனலட்சுமி என்று.......

போலிப் பா(ர்)வை

(இதோ ஒரு சிலேடைக் கவிதை. இதில் வேசியையும், கண்ணாடியையும் சிலேடைப் பொருளாக்கி எழுதியிருக்கிறேன். படம் ஒரு பெண் கண்ணாடி அருகில் இருப்பது போல இருந்தால் நலம். இன்றேல் எது பொருத்தமோ அதை இடுங்க ள் .) யாருமற்ற வெளியில் உன்னைக் கடந்தபோது ஒரு வினாடி என்னை பூசிக்கொண்ட போலி நீ. என்னை உள்ளிறக்கிக் கொள்வது போல் பாசாங்கு காட்டுகிறாய். நான் தள்ளிப் போனதும் அடுத்த பிம்பத்திற்குத் தயாராய் நீ!

மேகத்திலுன் முகம்

இறுதி நிராகரிப்பின் இறுதிச் சொல்லைச் சொல்லிவிட்டு நீ செல்கையில் உன் முகத்தைக் காட்டியபடியே மேகம் பேய்மழையின் கோரத் துளிகளால் கிழித்தெறிந்தது பெயர் தெரியாத பூவிதழ்களை அவை சேற்றில் கலந்து எங்கோ முகவரியற்ற இடங்களுக்கெல்லாம் இழுத்துச் செல்லப்பட்டபோது நடை பிணமாய் நடக்கலானேன் நானும்

மூன்று கவிதைகள்

கவிதை : ஒன்று சிலருடன் பேச விரும்புகிறோம் ஆனால் பேச முடிவதில்லை சிலரைப் பார்க்கவே விரும்புவதில்லை சிலரைத் தேடிப் போகிறோம் அகப்படுவதில்லை சிலர்முன்னால் தேவைப்படாமல் தட்டுப் படுகிறோம் வானத்தில் கோலம் போடுவதுபோல் பறவைகள் பறந்து கொண்டிருக்கின்றன தினமும் அப்படி எதிர்பார்க்க முடியுமா? ஒருநாள் மகிழ்ச்சியாக இருக்கிறோம் ஒருநாள் துக்கமாக இருக்கிறோம் காரணம் புரிவதில்லை உருண்டோடிப் போகும் காலப் பந்து புரியாத புதிராக எட்டி உதைக்கப் படுகிறது கவிதை : இரண்டு ஹஸ்தினாபுரத்தின் கிளை அலுவலகத்தில் காலை வைத்ததும் ஒரே இருட்டு ஜெனரேட்டர் இன்னும் பிக்அப் பண்ணவில்லை பல்லைக் கடித்தபடி சீட்டில் அமர்ந்திருந்தேன் கணினியில் எண்களைத் தடவி தடவி தட்டினேன் விழுந்தனதப்புத் தப்பாய் எண்கள் வாடிக்கையாளர் முன்னாள் தலையில் அடித்துக்கொண்டேன் வாசலில் போய்தனியாக வெயிலின் புழுக்கத்தைப் போக்கிக்கொள்ள நின்று கொண்டிருந்தேன் புழுக்கமில்லாத வெளி இதமாய் இருந்தது இப்போதெல்லாம் ஏனோ எனக்கு சிரிப்பே வருவதில்லை கவிதை : மூன்று கூட்டங்களில் நான் தூங்குவது வழக்கம் இலக்கியக் கூட்டங்களில் நன்றாய் தூக்கம் வருகிறது வகுப்புகளில் மாட்டிக்கொண்டால் த...
கவிதையை முன்வைத்து நர்சரி படிக்கும் மகன் இன்று விளையாட தேர்ந்து கொண்டது நான் வாசிக்க வைத்திருந்த கவிதைப் புத்தகங்களில் ஒன்றை. தொலைதூர பயணமொன்றில் டேப் ரெகார்டரில் ஒலித்த பாடலின் வரிகள் எங்கோ படித்த கவிதை வரிகளின் இன்னொரு வடிவம். முதல் முதல் பார்த்த தோழியின் கணவரிடம் சகஜமாக உரையாட முடிந்தது என் முதல் கவிதைத் தொகுதியை முன்வைத்து. மகன் பிறந்த நாள் கொண்டாண்டத்தின் இடையில் நண்பனின் மனைவி ஒருவர் நான் எழுதிய கவிதை ஒன்றை வரி மாறாமல் சொல்லி வாழ்த்தியது பாராட்டு முகமாய். நிகழ் கணங்கள் யாவிலும் நிறைந்து நடை பயிலும் கவிதையின் கால்தடங்கள் வேறு ஒன்றும்... இன்னொரு முறை பத்திரமாய் தரையிறக்கித் தரப்பட்டிருக்கிறது இந்த வாழ்வு என்பதைத் தவிரவேறு ஒன்றும் விசேசமாய் சொல்வதற்க்கில்லை இந்த இன்னொரு விமானப் பயணம். சிறகடித்து... காரின் முன்புறம் அமர்ந்தபடி காலையில் கண்ட வெண்புறா திறந்த கதவுச் சத்தத்தில் தாவிப்போய் தன் இருப்பிடமாய் கொண்டது இன்னொரு காரின் இரு சக்கரங்களுக்கு இடைப்பட்ட இடமொன்றை. அலுவலக வேலைகள் அத்தனைக்கும் இடையில் இன்னமும் சிறகடித்து மனதில் இம்சையாய் அந்த வெண்புறா இடம் மாறி இருக்குமா - அந்த இன்னொரு ...

விஸ்வரூபம்

மூன்றடி நிலம்தானே என்றிருந்த மஹாபலியின் கர்வத்துடன் இருந்துவிட்டேன் வெறும் பார்வைதானே என்று வானளந்து மண்ணளந்து அவன் தலை அளந்த வாமனன்போல் உன் காதல் என்னுயிர் அளந்து உடலளந்து இன்னும் ஓர் அடிக்கு எதை அளக்க உன்னில் எனக் கேட்டபடி......... .........

சி மணி

இ ந்த ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி சி மணி சேலத்தில் மரணமடைந்தார் என்ற செய்தி எனக்குத் துக்கம் தந்தாலும் நான் எதிர்பாராதது அல்ல. உத்தமமான அவருக்குத் தன் உடல் நிலையைக் கவனித்துக்கொள்ளத் தெரியாது. யாருக்குத்தான் தெரிகிறது என்று கேட்கலாம். நான் 'எழுத்து' பத்திரிகைக்கு முதலாம் ஆண்டு என் மகத்தான நண்பர்களில் ஒருவரான கி.ரா . அவர்களால் சந்தாதாரன் ஆனேன். (இது கரிசல் கி.ரா அல்ல). அப்போதே சி மணியுடையது அப் பன்னிரண்டு இதழ்களில் வந்திருக்கும். எனக்குப் பத்திரகையே ஒரு சோர்வு தந்தது. எழுத்தின் முக்கியக் கூறுகளைத் தவிர்த்து தவிர்க்கக்கூடியது மீத கவனம் செலுத்துவது போலிருந்தது. நான் சந்தாதாரனாக இல்லாத போதிலும் அவ்வப்போது அது பார்க்கக் கிடைக்கும். நானும் சி சு செல்லப்பாவுமாகச் சேர்ந்து எது எதற்கோ நிதி, பேச்சாளர் என்று ஏற்பாடு செய்ய நிறைய அலைந்திருக்கிறோம். எஸ்.எஸ் வா சன், கிரிஷ் கர்னாட், எஸ்.கிருஷ்ணன், ஆருத்திரா என ஒரு நாளைக்கு ஒருவராகத் தடாலென்று போய் நிற்போம். அப்போது டெலிபோன் சாதாரண மக்கள் புழக்கத்துக்கு வரவில்லை. செல்லப்பா ஒரு முறை கூட அவருடைய பத்திரிகையின் ஆதாரமாக விளங்கியவர்களை...

உச்சத்தின் அருகில்

முன்னூறு கண்கள் உற்றுப் பார்த்தாலும் சட்டை செய்யாத இயந்திரம் பத்தாயிரம் அடி உயரத்தில் மிதக்கிறது முன்னும் பின்னும் அலட்சியப் புன்னகையுடன் ; குதிகாலில் குறுக்கிட்ட குழந்தையின் பார்பியால் தடுமாறி விழுபவளைத் தாங்கிப் பிடிப்பவன் கண்களிலிருந்தும் அதரங்களிளிருந்தும் சில பூக்கள் அவளைச் சூழ்ந்த நேரத்தில் மீண்டும் பெண்ணானவளின் கன்னச் சிவப்பிற்கு அவள் செலவழித்த கணங்கள் புரிகிறது பலருக்கு இப்போது ; வேறு தளத்திற்கு நகர்ந்திருந்த கவிதை ஒருவனுக்கு ; கேட்கும் ராகத்தின் புது இழை ஒருத்திக்கு ; எல்லாமே உச்சத்தின் அருகில் சில மணித்துளிகளே ஆயினும்.

எனக்கு பத்து விழிகள்

எனக்கு பத்து விழிகள் ஒவ்வொன்றும் என் விரல் நுனிகளில் இமைக்கின்றன தொடுதல் எனது பார்வை தடவுதல் எனது கண்மணிச் சுழற்சி எனதான உலகத்தில் இறந்த காலங்கள் எவையும் காட்சிகளால் ஆனவையல்ல நினைவுகள் எவையும் நிறங்களால் சூழ்ந்தவையல்ல எனக்குரிய தேசம் பல வர்ணங்கள் பூசப்பட்டதல்ல வசந்தம் செறிந்த காலத்தில் வாசனை பல வீசும் பூஞ்சோலையுமல்ல அது இருளினால் மட்டுமேயான தனியொரு உலகம் வானவில் என்ற ஒன்று ஏழு வர்ணங்களினாலாகி மேகத்தினிடை எட்டிப் பார்க்குமென நீங்கள் சொன்ன கணத்தினில் எனது வானிலுமொரு வானவில் தோன்றியது இருளை மட்டும் உடுததுக் கொண்டு இருள் எனக்கு அச்சமூட்டுவதில்லையெனினும் இருண்டு கல்லாகிப் போன இதயததுடனுலவும் விழிப்புலனுள்ளவர்களிடம்தான் எனது அச்சங்களெல்லாம்

எதிர்பாராத மரணம்...

சனிக்கிழமை தேவிபாரதி ஒரு SMS அனுப்பியிருந்தார். ஒரு விபத்தில் ராஜமார்த்தாண்டன் மரணம் அடைந்துவிட்டதை. அறிந்தபோது வருத்தமாக இருந்தது. இந்த எழுத்தாளர்களுக்கெல்லாம் போறாத காலம் போல் தோன்றுகிறது. குறிப்பாக கவிஞர்களுக்கு..வரிசையாக சுகந்தி சுப்பிரமணியன், அப்பாஸ், சி மணி, இப்போது ராஜமார்த்தாண்டன். அவர் தினமணியில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது அடிக்கடி சந்திப்பேன். கொல்லிப்பாவையில் அவர் ஒவ்வொரு கவிஞராக எடுத்து அவர்களுடைய தொகுதியைப் படித்து அது குறித்து விமர்சனம் எழுதுவார். அதே பாணியில் நவீன விருட்சத்தில் எழுதும்படி கேட்டுக்கொண்டேன். அதன்படி உமாபதி, வைதீஸ்வரனுக்கு கட்டுரைகள் எழுதிக் கொடுத்தார். கவிதையைக் குறித்து கட்டுரைகள் எழுதுபவராகத்தான் எனக்கு அவரை முதலில் தெரியும். நவீன விருட்சத்திற்கு அவர் கவிதைகள் அனுப்பிய பிறகுதான் அவர் கவிதைகளும் எழுதுவார் என்பதைத் தெரிந்துகொண்டேன். ஆனால் மிகக் குறைவாகவே அவர் கவிதைகள் எழுதி உள்ளார். தினமணி அலுவலகத்திற்கு அவரைப் பார்க்கச் செல்லும்போது, சிரித்த முகத்துடன் வரவேற்று பேசத் தொடங்குவார். நான் அங்குப் போனால், ராஜமார்த்தாண்டனைத்தான் தேடிப் போவேன். பின் இருவரும் அ...

இசையாடிக்கிடத்தல்

சொடுக்கிய பொத்தானின் கணத்தில் முகத்திலாடும் வண்ணத்துடிப்புகளுடன் விருப்பப்பாடலினை இசைக்கிறது மின்குயிலி கண்கள் மூடியதொரு மங்கியவெளியில் சட்டெனப் பூக்கும் பெருவிருட்சம் நளினக் கிளைகள் சுழற்றி ஓங்கியாடுகிறது நாதங்கள் விளையும் ஆதிப்பிளவினின்று பெருகுமிசை பிரவாகமெடுத்தோடுகிறது உள்வெளியெங்கிலும் நெகிழ்ந்தோடிக் கரைகின்ற ஆன்மாவினை கைகோதிப் பார்க்கிறேன் காற்றினில் மெலிதாய் விரவுகிற சிறுகுழந்தையின் சிரிப்பினை ஒத்திருக்கிறது கரையொதுங்கித் தளும்பிக் கிடப்பது தெய்வீகமெனப்படுவதான ஒன்று திடமென ஏதுமில்லாப் பரவெளியிது புறஞ்சூழ்ந்திருக்கும் யாவருக்கும் நான் தூங்கிப்போய்விட்டாலும் பரவாயில்லாமல் வேய்சரீரத்தை தொந்தரவிக்காது ஆடிக்கிடத்தலும்

கோபங்களின் நிமித்தம்

வழமை போலவே உனது அளவிடமுடியாக் கோபங்களையும் எல்லாப்பழிகளையும் என்னிலேற்று வழியிறங்கிப்போகிறேன் ஒவ்வொரு துணிக்கையிலும் அன்பைக் கொண்டு எனக்காய்ச் செய்ததான சுவர்களுக்குள் உன் சகாப்பிசாசுகளை ஏவுகிறாய் மிகுந்த அச்சம் கொண்ட பார்வையினை மீண்டும் மீண்டும் உன்னிலெறிகையில் அலட்சியத்தின் சலனமற்ற மொழி உன் முகத்தில் உறைகிறது நாற்திசைகளிலும் ஊசலாடும் நூலாம்படைகளினிடையில் சிதறும் மனதின் சூனியங்களுக்குள் நிரம்பி வழிகிறது நிராகரிப்பின் பெருவலி நான் அகல்கிறேன் உனது இப்பெருங்கோட்டையை விட்டும் நீயுன் வழித்துணைகளை மூலைக்கொன்றாய்க் குடியமர்த்திப் பாடச் சொல்லி ரசி இறுதியாக வழமை போலவே உனது அளவிடமுடியாக் கோபங்களையும் எல்லாப்பழிகளையும் என்னிலேற்று வழியிறங்கிப்போகிறேன் வாழ்க்கை அது மீண்டும் அழகாயிற்று

பூட்டிய வீட்டினுள் அலையும் தனிமை

பூட்டிய வீட்டினுள் மெல்ல மெல்ல உருவம் பெற்று அறை அறையாய் அலைய தொடங்குகிறது வீட்டின் தனிமை விட்டெறிந்த காலுறையின் நெடி சுவாசித்து கழிவறையின் மூத்திர நாற்றம் நுகர்ந்து நாள்முழுதும் வலம் வந்த அது பின்னிரவில் திரும்பும் என் கரம்பற்றி அமர்த்தி சொல்ல ஆரம்பிக்கிறது மதியம் ஜன்னல்கண்ணாடிக் கொத்தி அதனுடன் பேசிச் சென்ற சிட்டுக்குருவி ஒன்றின் கதையை!

அஞ்சலி : கிருத்திகாவும், சுகந்தியும்............

பிப்ர. 11ஆம் தேதி சுகந்தியும் (வயது 41), 13ம் தேதி கிருத்திகாவும் (வயது 93) மறைந்து விட்டனர். அவர்களுக்கு 'அஞ்சலி'க்கு ஏற்பாடு செய்தனர், மாலதி மைத்ரியும், சுகிர்தராணி போன்ற சிலர் 'அணங்கு' அமைப்பின் மூலம் அஞ்சலிக்கான கூட்டம் சந்திரலேகா (நடனக் கலைஞர்) இல்லத்தில் பிப்ரவரி 28ம் தேதி மாலை நடைப்பெற்றது. இருவரின் உருவப்படங்களும் (கோட்டோ வியங்களாக) அஞ்சலியன்ற திறக்கப்பட்டன. கிருத்திகாவின் உருவத்தை மணிவண்ணனும், சுகந்தியின் உருவத்தை யோகநாதனும் உருவாக்கி இருந்தனர். சுகந்தியின் சில கவிதைகள் பிரசன்னா ராமசாமியால் நாடக வடிவாக்கப்பட்டன. அசோகமித்திரன், மங்கை, சிட்டியின் மகன் வேணுகோபால், இளம்பிறை, ஏ எஸ் பன்னீர்செல்வம் மற்றம் சிலரும் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டனர். மாலதி மைத்ரி தனது ஆரம்ப உரையில் கிருத்திகாவின் எழுத்துக்களை வாசித்ததில்லை. சுகந்தியின் எழுத்துக்களையும் இப்போதுதான் வாசிக்க நேர்ந்தது. அதற்காக தான் மிக மனவருத்தம் அடைவதாகவும், பெண்களின் எழுத்துக்களையாவது பெண்கள் தவற விடாமல் படித்து அதன் தொடர்ச்சிப் பற்றி மனதில் கொள்ள வேண்டும் என்றார். சித்தர் மரபு சுகந்தி என்றார். சுகந்த...

இந்தச் சாலையும்

இன்று கொலையேதும் நடக்கவில்லை. ரத்த வாடை வீசாத சாலைகளில் வழிந்தோடுகிறது அமானுஷ்யம். குழுக்களாய் கிசுகிசுக்காத சாலைகளில் வீசுகிறது நிசப்தம் போடும் சப்தம். அம்புக்குறி சுட்டாத சாலைகளில்பொழிகிறது அமைதி தரும் அதிர்வு. கொலை நடந்த எல்லா சாலைகளையும் போல இந்தச் சாலையும் நீள்கிறது பயங்கரமாய்…

Cheer leaders

லிப்டிலோ டிரெயினிலோ சினிமா தியேட்டரிலோ பாப்கார்ன் வாங்கும்போதோ கோவில் கூட்டத்திலோ ஷேர் ஆட்டோவிலோ பெற்றோர் ஆசிரியர் மீட்டிங்போதோ கல்யாண ஊர்வலத்திலோ வீட்டிலோ தூக்கத்திலோ முன் பக்கமோ பின் பக்கமோ உரசித்தான் போகிறது திரும்பிப் பார்க்கவும் செய்கிறார்கள் வெட்கத்துடன்

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்......16

பூனை மழலை கல்யாண்ஜி சமீப வார நாட்களில் அலுவலகத்தில் பூனைச் சத்தம் அதிகமாகக் கேட்கிறது. உணவு இடைவேளையில் முன்பு ஒரே ஒரு பூனைதான் மீன் முள்ளுக்கும் மிச்ச மாமிசத்துக்கும் சாப்பாட்டு மேஜையைச் சுற்றிவரும். சேவை / வாடிக்கைக்கு மத்தியில் இருபுறமும் இருந்து சிந்துகிற வணிகமொழிக்கிடையில் பூனைக்குட்டிகளின் குரல் இப்படிக் கேட்பது புத்துணர்வு தருவதுதான் என்னைப் போன்ற ஒருவனுக்கு. எனினும் - அந்த ஒற்றைப் பூனையைப்போல இந்த மூன்றோ நான்கோ சாப்பாட்டு மேஜையடியில் பசித்துக் கெஞ்சுகிற காட்சியின் கற்பனை பதற்றம் கொள்ள வைக்கிறது ஒவ்வொரு பூனை மழலை ஒலிக்கும் போதும்.