Skip to main content

Posts

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 147

அழகியசிங்கர்   காணாமல் போன ஆறு சுரேஷ் பரதன்  ஆதியில் அந்த ஆறு ஓர் ஆறாகவே  இருந்தது. அதன் கரையில் படகுத்துறையும் இருந்தது. படகோட்டி ஒருவனும் இருந்தான் படகோட்டி காரோட்டியான  சில நாட்களில் படகுத்துறை ஆற்றோடு போயிற்று படகுத்துறை  போன பின்புதான் ஆறும் காணாமலேயே போய்விட்டது. நன்றி : ஊர் நடுவே ஒரு வன தேவதை - சுரேஷ் பரதன் - வெளியீடு : நான்காவது கோணம் வெளியீடு -  பக்  : 112 - விலை : ரூ.90 

சூம் மூலமாக நான்காவது கூட்டம்

அழகியசிங்கர் விருட்சம்  நான்காவது   சூம்   கவிதை வாசிக்கும் கூட்டம் நாளை 19.06.2020 அன்று  மாலை 7 மணி அளவில் நடைபெற உள்ளது.  கலந்து கொண்டு கவிதை வாசிக்க இசைந்தவர்கள் பெயர்களை இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கிறேன். இதுவரை கவிதை வாசித்தவர்களின் பெயர்களைக் குறிப்பிட விரும்புகிறேன். 29.05.2020 அன்று கவிதை  வசித்தவர்கள்  : 1.  தேவேந்திர  பூபதி  2. லக்ஷ்மி மணிவண்ணன் 3.  யவனிகா  ஸ்ரீராம்  4.  திருக்கூனன்  கண்டராதித்தன்.  05.06.2020 அன்று கவிதை வாசித்தவர்கள் : 1. தமிழ் மணவாளன் 2.  சொர்ணபாரதி    4. பானுமதி  5. உமா பாலு 6. வசந்த  தீபன்   7 ஆர்.கே  8 .  வேணுவேட்ராயன்  9. சுரேஷ்  ராஜகோபாலன் 12.06.2020 அன்று கவிதை வாசித்தவர்கள் : 1.  இராய  செல்லப்பா 2. கால  சுப்ரமணியம்  3.  ப்ரியம்  4. திருநாவுக்கரசு 5. புதிய மாதவி 6. தாமரைச் செல்வன் azhagiyasingar mouli is inviting you to a scheduled Zoom m...

வெட்டுக்கிளிகள்

அழகியசிங்கர் வெட்டுக்கிளிகளே“ வெட்டுக்கிளிகளே உங்களை  யாரு  கூப்பிட்டார்கள்? எங்கள் இடத்தில்தான் நீங்கள் இருக்கிறீர்கள் நாங்கள் ஏன் போக வேண்டும்? (16.6.2020)

பா.ராகவனின் யதி என்ற நாவலை முன் வைத்து ஓர் உரையாடல்..

அழகியசிங்கர் அழகியசிங்கர் : வணக்கம். ஜெகனும்  மோகினியும் வணக்கம் தெரிவிக்கிறார்கள்.  காணொளி மூலம் ஒன்றாக  சந்திக்கிறார்கள் . அழகியசிங்கர்  : எப்படி உள்ளீர்கள்? ஜெகன்  : நன்றாக உள்ளோம்.  ஆனால் வீட்டிலேயே இருக்கிறோம். மோகினி : நீங்கள் சொன்ன பா ராகவனின் யதியைப் படித்து விட்டேன். ஜெகன்  : நான் இன்னும் கொஞ்சம் பக்கங்கள் படிக்கப் பாக்கி இருக்கின்றன. அழகியசிங்கர்  : உங்களுக்கு என்ன தோன்றுகிறது அந்த நாவலைக் குறித்து  மோகினி : பக்கங்கள் அதிகம்.  இன்னும் குறைந்த பக்கங்களில் அவர் எழுதியிருக்கலாம். ஜெகன்  : ஒரு எழுத்தாளரை இத்தனைப் பக்கங்கள்தான் எழுத  வேண்டுமென்று  கட்டாயப்படுத்தவோ சொல்லவோ முடியாது. அழகியசிங்கர்  : அவ்வளவு பக்கங்களை உடைய ஒரு நாவலை ஒரு வாசகர் வாசிக்க வேண்டும்.  இன்றைய வாசகர்கள் அதற்குத் தயாராக இருக்கிறார்களாக என்று தெரியாது. மோகினி: அவ்வளவு பக்கங்கள் இருந்தாலும் இவர் நாவலை வாசிக்க வேண்டுமென்ற எண்ணம்  ஏற்படாமஙூல்லை . ஜெகன்  : என் நண...

என் சில கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ராஜேஷ் சுப்பிரமணியன்....

அழகியசிங்கர்              Shifting Shadows என்ற பெயரில் 92 கவிதைகளை ஆங்கிலத்தில் ராஜேஷ் சுப்பிரமணியன் மொழிபெயர்த்துள்ளார்.  அவர் மொழி பெயர்த்தது சிறப்பாக இருக்கிறது.  அதில் ஒரு கவிதையை இங்கு அளிக்க விரும்புகிறேன். Book The book lay in front of me. Have not opened and read it. The cover was excellent. The printed pages looked wonderful. The book caused much ecstasy In imagination. The one who had given me the book asked “Have you read the book in full?”. “Not yet”. The book still remained closed. Numerous books are being published, every day.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 146

அழகியசிங்கர்   யானை என்ன யானை கிருஷ்ணன் நம்பி  யானை என்ன யானை?  யானை கொம்பன் யானை!  யானை மீது யாரோ?  யானை மீது ராஜா!  யானை என்ன ஆச்சு?  யானை செத்துப் போச்சு!  ராஜா என்ன வானார்?  நாட்டு மன்னர் ஆனார்!  நாட்டு மன்னர் எங்கே?  நாட்டு மன்னர் நாமே! நாமும் அவரும் ஒன்றோ ?  நம்முள் ஒருவர் ராஜா! நன்றி : கிருஷ்ணன் நம்பி ஆக்கங்கள் (முழுத்தொகுப்பு) - தொகுப்பாசிரியர் : ராஜமார்த்தாண்டன் - காலச்சுவடு பதிப்பகம் - பக்கம் : 480 - விலை ரூ.350 - முதல் பதிப்பு : நவம்பர் 2009

அஞ்சலட்டைக் கதைகள் 15

அழகியசிங்கர் இது என் 15வது கதை.  இந்தக் கதையைப் படிக்கும்போது  ஒரு நிமிடத்திலிருந்து இரண்டு நிமிடம் வரை ஆகும்.  முகநூல் நண்பர்களுக்கு வாசிக்க அளித்துள்ளேன்.    கீரை கிளம்புவதற்குமுன் பாரதி  செல்லம்மாவைப்  பார்த்து, 'சகுந்தலா எங்கே?' என்று கேட்டார்.   'அவளுக்கு உடம்பு சரியில்லை.  படுத்துத்   தூங்கறா,'  என்றாள்  செல்லம்மா .   பாரதி 'இந்தியா' பத்திரிகை அலுவலகத்திற்குக் கிளம்பிவிட்டார்.  அவர் போவதற்கு முன், 'வரும்போது மறக்காமல் கீரை வாங்கிக்கொண்டு வாருங்கள்,' என்றாள்  செல்லம்மா . ஏதோ ஞாபகமாய், 'சரி' என்று தலை ஆட்டிவிட்டுக் கிளம்பினார் பாரதி. இந்தியா பத்திரிகை அலுவலகம் வந்தவுடன் ஒரு  மேசை  மீது உட்கார்ந்துகொண்டு,  நமஸ்தே  வாயோ.. த்வ்மேவ   ப்ரத்யஷம் ,, ப்ரஹமாஸி  என்றார் உரத்தக்  குரலில் .   யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.  இந்தியா பத்திரிகை அலுவலகத்தில்  பாரதியார்  சுதந்திரமானவர்....