Skip to main content

Posts

99வது இதழில் வெளிவந்த ஞானக்கூத்தன் கவிதை

அழகியசிங்கர் நவீன விருட்சம் இதழ் வந்தவுடன் அதை எப்படி தீர்த்துக் கட்டுவது என்று உடனே பரபரப்பாக செயல்பட்டேன்.  முதலில் நான் நடை பயிற்சி செய்யும் இடத்திற்கு சில இதழ் பிரதிகளை எடுத்துக் கொண்டு போனேன். அங்கு எனக்கு அறிமுகமானவர்களைப் பார்த்து ஒவ்வொன்றாய் கொடுத்தேன்.  அதில் ஒருவர் சீனாவிலிருந்து பொருள்களை வாங்கி விற்பவர். நவீன விருட்சத்தை நீட்டியவுடன்,  "சார்...எனக்கு வேண்டாம்...நான் தமிழ் பத்திரிகை புத்தகம் படிப்பதில்லை," என்றார்.   எனக்கு அதிர்ச்சி.  முதன் முதலாக ஒருவரிடம் கொடுக்கச் சென்றபோது, அவர் இப்படி சொலகிறாரே என்று தோன்றியது. நான் கேட்டேன்.  "தமிழ்ல பேப்பர் புத்தகம் படிப்பதில்லையா?".  "இப்போ இல்லை...முன்பு படித்ததுதான், எனக்கு நேரமில்லை," "என்ன நேரம்...நீங்க மனசு வைச்சா நேரம் இருக்கும் சார்," என்றேன்.  "என்னால முடியாது, சார்."என்றார். "இதன் விலை ரூ 15 அதற்கா யோஜனை செய்யிறீங்க...அதைத் தர வேண்டாம்...ஆனா பத்திரிகை வாங்கிப் படிங்க...எனக்கு அது முக்கியம்.." "இல்ல சார்...அதுக்காக...

புத்தக விமர்சனம் 18

அழகியசிங்கர் சமீபத்தில் சாருநிவேதிதாவின் புத்தக வெளியீட்டுக் கூடட்டத்திற்கு நான், அசோகமித்திரன், வைதீஸ்வரன் மூவரும் சென்றோம்.  7 புத்தகங்களின் வெளியீட்டுக் கூட்டம்.  ராஜா அண்ணாமலை மன்றம் என்ற இடத்தில்.  அவ்வளவு பெரிய இடத்தில் கூட்டம் எவ்வளவு வரும் என்ற சந்தேகம் கூட்டம் நடக்கப் போகும்வரை என்னால் கற்பனை செய்ய முடியாமல் இருந்தது.  ஆனால் 500 அல்லது 600 பேர்கள் கூடி இருந்தார்கள்.  கூட்டத்தில் பெரும்பாலோர் இளைஞர்களாக இருந்தார்கள்.  சாருநிவேதிதாவின் சாதனையாகத்தான் இதை நினைக்கிறேன்.  அவருடைய வாசகர்கள் எல்லா இடங்களிலும் சுழன்று சுழன்று கூட்டத்தினரை வரவேற்றனர்.   அந்த விழாவில் வெளிவந்த புத்தகங்களில் மூன்று புத்தகங்கள் எனக்குப் படிக்கக் கிடைத்தன.  1. கடைசிப் பக்கங்கள் 2. எங்கே உன் கடவுள் 3. பழுப்பு நிறப் பக்கங்கள்.  இதை என் பாக்கியமாகக் கருதுகிறேன்.  முதலில் நான் கடைசிப் பக்கங்கள் என்ற புத்தகத்தை எடுத்துப் படித்தேன்.  120 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தை 2 நாட்களில் முடித்து விட்டேன்.  உண்மையில் இன்னும் சீக்கிரம் கூட முட...

என்றோ நடந்த சுந்தரராமசாமியின் விருட்சம் கூட்டம்

அழகியசிங்கர்   08.12.2002 அன்று விருட்சம் சார்பில் சுந்தர ராமசாமியின் கூட்டம் நடந்தது.   அக் கூட்டத்தில்   ஆடியோவில் பேசியதை  இங்கு எல்லோரும் கேட்பதற்கு யு ட்யூப்பில் பதிவு செய்துள்ளேன்.

கசடதபற இதழ்

மூன்று கவிதைகள் நகுலன் 1. நாலும் நடந்தபின் நானாவிதமாக என் மனம் போன பின் நானொரு மரமானேன் 2. நின்றநிலை தவறாமல் சென்றவிடம் சிதறாமல் ஈன்ற தாயினும் இறந்து மறைந்த தந்தையினும் சாலச் சிறந்தது ஒன்றுன்றுன்றுன்று இன்று வரை காலஞ் செல்லச் செல்லச் செல்லக் கோலங்கள் கலையும் கைவல்ய ஞானம் கிட்டும் இன்று வரை 3. நானொரு பேயானேன் ஆனபின் ஏனோ நான் சூடாகப் பிணந்தின்னச் சுடுகாட்டைச் சுற்றுகின்றேன் ஒரு குரல் கூறும் "ஆசை, மச்சான் ஆசை" ஏதோ தாள் கண்ணில் பட்டது.  பார்த்தால் கசடதபற என்ற இதழின் ஒரு பக்கம்.  பெரிய அளவில் வந்த கசடதபற மாறினபிறகு சின்ன அளவில் கசடதபற சில மாதங்கள் வெளிவந்தன. அதன் ஒரு பக்கம் மட்டும் கண்ணில் பட்டது.  அட்டைப் படம் நன்றாக இருந்தது.  உள்ளே வித்தியாசமான நகுலன் கவிதை.  இரண்டையும் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

விமோசனம் என்ற கதை

அழகியசிங்கர் சமீபத்தில் அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள் என்ற நாவலை எடுத்து வைத்துக்கொண்டேன்.   அந்த நாவல் எனக்கு முழுவதும் மறந்து விட்டது.  கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு முன்னால் படித்தது.  அதேபோல் 18வது அட்சக் கோடு, தண்ணீர், ஆகாயத் தாமரை போன்ற நாவல்களும்.  மானசரோவர் என்ற நாவலை  இரண்டு முறை படித்திருக்கிறேன்.  2011ல் அதைப் படித்து அதைப் பற்றி எழுதியிருக்கிறேன்.   நேற்று திரும்பவும் எடுத்து கரைந்த நிழல்கள் நாவலைப் படிக்கத் தொடங்கினேன்.  படித்த ஞாபகமே வரவில்லை.  அதேபோல் ஏகப்பட்ட சிறுகதைகள், கட்டுரைகள் எல்லாம் படித்திருக்கிறேன்.  திரும்பவும் படிக்கும்போது புதியதாக படிப்பது போல் உள்ளது.  இது ஏன்? எந்தப் புத்தகம் படித்தாலும் நான் விமர்சனம் மாதிரி எனக்குத் தோன்றுவதை எழுதி வைத்து விடுகிறேன்.  கிட்டத்தட்ட 17 புத்தகங்களுக்கு நான் எழுதி விட்டேன்.  என் நோக்கம் நாம் படிக்கும் புத்தகங்களைப் பற்றி நான் எழுதியதை வாசிப்பவர்களும் படிக்க வேண்டும் என்ற நல்ல நோக்கம்தான்.   அசோகமித்திரனின் சமீபத்தில் வெளிவந்த நடைவெளி...

பிரேதத்துடன் ஒரு பயணம்

ராஜகோபாலன்  குறிப்பு : பிரேதத்துடன் ஒரு பயணம் என்ற கதை நவீன விருட்சம் 99வது இதழில் வெளிவந்துள்ளது.  இதை எழுதியவர் ராஜகோபாலன்.  என் நீண்ட கால நண்பர். கல்லூரியில் படிக்கும் காலத்தில் 'காரைத் தொழுவீர் களித்து' என்ற ஈற்றடியில் 10 வெண்பாக்கள் எழுதி என்னை ஆச்சரியப்படுத்துவார்.  நாங்கள் இருவரும் சேர்ந்து 'பாரத வேலை இல்லாதவர் சங்கம்' என்ற ஒன்றை 1978ஆம் ஆண்டில் ஆரம்பித்தோம்.  அதில் ராஜகோபாலன் தலைவர்.  நான் செயலாளர்.  அந்தச் சங்கத்தில் நாங்கள் இருவரும்தான் இருந்தோம். உறுப்பினர் யாரும் சேரவில்லை. கொஞ்ச நாட்களில் எனக்கும் வங்கியில் வேலை கிடைத்துவிட்டது.  தலைவர் ராஜகோபாலன் தடுமாறிக்கொண்டிருந்தார். அப்போது எந்த வேலையில் வேலை இல்லாதவர் சங்கம் ஆரம்பித்தோமோ தலைவருக்கு மட்டும்  வேலை கிடைக்கவில்லை என்று கிண்டல் செய்வேன். இன்னும் சில ஆண்டுகளில் அவருக்கும் நான் பார்த்த வங்கியில் வேலை கிடைத்துவிட்டது.  அவருக்கு ஒரு கண் தெரியாது.           புத்தகம் எல்லாம் படிக்க மாட்டார்.  எனக்கு ஒரு கதை எழுதி அனுப்பினார். அந்த...

புரியவில்லை

ஸிந்துஜா அந்தப் பெண் வந்து கொண்டிருந்தாள். வெகு தூரத்தில் அவள் தலை தெரிந்தது. அது ஒரு மத்தியான வேளை வெய்யில் வழக்கம் போல அவ்வளவு அதிகமாக இல்லை. சோம்பேறித்தனத்துக்கு  வரவேற்பு கொடுத்துக் கொண்டிருந்த சூழல். சாப்பாட்டை  முடித்து விட்டு  திண்ணையில் சண்முகம் சாய்ந்து கொண்டிருந்தான். வேலைக்குப் போய் இரண்டு  மாதங்களாகி  விட்டது. அது என்னவோ வேலைக்குப் போவது என்றாலே அவனுக்கு வேப்பங்காயாக இருந்தது. அவன் நண்பர்கள் எல்லாரும் பெரிய வேலையோ , சின்ன வேலையோ  போய் வந்து கொண்டிருந்தார்கள். ஆனால் அவனைப் பார்க்கும் போதெல்லாம் நீ கொடுத்து வச்சவன்டா என்று சொல்லிக்  கொண்டிருந்தார்கள். அவன்கள் சொல்லுவது கேலியாகவா அல்லது பொறாமையினாலா என்று  தெரியவில்லை. தெருவில் இரண்டு நாய்கள் ஒன்றை ஒன்று விரட்டிக் கொண்டு ஓடின. ஒன்று ஆண்  நாயாகவும், இன்னொன்று பெண் நாயாகவும்  இருந்தன. இந்தத் தெரு நாய்கள்தான் அவை என்று சண்முகம் சலிப்புடன் நினைத்துக் கொண்டான். ஒவ்வொரு வீட்டிலும் எதையாவது போட்டு அவற்றின் பசியை ஆற்றி விடுகிறார்கள். அவை செய்யும் ஒரே வேலை இந்த விரட்டல்தான்...