Skip to main content

Posts

Showing posts with the label ஷைலஜா

பார்வைகள்

          டெட்ராய்ட் நகரத்தின் ஒரு டிசம்பர்மாதக்  காலைப்பொழுது.   வழக்கம் போல ஜாக்கிங்கிற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் என்னைப் பற்றி சிறு அறிமுகம்.   பெயர் அரவிந்தன்.வயது இருபத்தி எட்டு,இந்தியாவிலிருந்து அலுவலக வேலையாய் அமெரிக்கா வந்திருக்கிறேன்.கார் நகரத்துக்காரிகைகளை ரசித்தபடியே ஆறுமாதங்களைக்கழித்துவிட்டேன்.. ஆயிற்று அடுத்தவாரம் தாய்மண்ணே வணக்கம் என்று கூவிக்கொண்டுசிங்காரச்சென்னைக் குப்போய்விடுவேன்.   தினமும் ஜாக்கிங் செய்யும் பாதையில்  என் கால்கள் செல்கின்றன. எங்கும் மூடுபனியின் ஆக்கிரமிப்பு.   மிச்சிகன் மாகாணத்தின் பிரசித்தி பெற்ற குளிருக்குப் பாதுகாப்பாய்த் தான் புறப்பட்டு வந்திருக்கிறேன்.   எல்லாவற்றிலும் எனக்கு முன்எச்சரிக்கை உணர்வு அதிகம். என் பார்வை கூர்மையானது. பள்ளி நாட்களிலிருந்தே கண்பார்த்ததை மனசு உள் வாங்கிக் கொள்ளும். எனது இந்தத் திறமைதான் என்னை இந்த உயர்நிலைக்கு வரவழைத்திருக்கிறது என்பதில் பெருமை எனக்கு!   எதேதோ நினனத்தபடி ஜாக்க்கிங் முடித்து என் அபார்ட்மெண்ட்டிற்குத் திரும்ப நடக்கிறேன்.   அப்போத...

நாளை.

    நாளைக்கு ஒரு நாடகம் நடிக்க வேண்டியிருக்கிறது நாடக ஸ்க்ரிப்ட் கைக்கு வரவில்லை நாள்முழுவதும் ஒத்திகை செய்ய வழியில்லை கதாபாத்திரம் அதே தான் என்றாலும் இன்றுபோட்டது நாளைக்கு இறந்ததாகிவிடும் புத்தம்புது நாடகம்தான் நித்தம்! க்ரீன் ரூமைவிட்டு வெளியே வந்து விளக்குபோட்டதும் வெளிச்சத்தில்தான் வசனம்பேசவேண்டும் இன்றையநாடகத்திற்கான ஒத்திகையை நேற்றைக்குப்பார்க்கவில்லை இன்றுதான் நேற்றின் நாளையாகி இருந்ததே. கைநழுவும் பாதர்சமில்லைதான் நாளை ஆனாலும் கைபிடிக்க இயலா காற்று நாளை பிறந்ததும்  மேடை ஏறியதும் தானாய் வருகின்றன வசனங்கள் நாளையின் தலை எழுத்ததினை அசலைப்பத்திரப்படுத்திக்கொண்டு நகலையாவது இறைநாயகன் நம்கைக்கு அனுப்பி வைத்தால் சரிபார்த்து நடிக்கலாம் அதற்கு வழி இல்லாததால் நாளை கதி என்ன என்று தெரியாமலே மேடை ஏறி நடிக்கத் தயாராகிக்கொண்டுதான் இருக்கிறோம்!

தேடிப்பற

          தேடித்தேடி அலைந்த என்னை குமபல்சேர்ந்து கேள்விகேட்டது.   தேடும்பொருளின் பெயர்தான் என்ன   என்றே என்னிடம் கேட்பவர்களிடத்தில் நானும்,   தேடும்பொருளின்  பெயரை அறியேன்   என்றதும் பார்வையாலே என்னை பரிகசித்துப் பைத்தியம் என்று பட்டமும் சூட்டி பரபரவென்று  கலைந்ததுகும்பல்!   பெயருள்ளபொருளையே தேடும் உலகில் பெயரற்ற பொருளைத் தேடுபவர்களுக்கு கிடைக்கும் பெயர்தான் பைத்தியம்போலும்!    

பானகம்.

வாசலுக்குக்கோலம் போட வந்த  ஜனகா   அந்தக்காலைப்பொழுதில்  தெருவில்  கோலிக்குண்டு விளையாடிக்கொண்டிருந்த தன் மகன்களைக் கண்டு திகைத்தாள். ஆறுவயதிலும், நான்கு வயதிலுமாக  இரண்டுஆண்குழந்தைகளும் ஒன்றரை வயதில்ஒருபெண் குழந்தையும்  இருக்கிறது இருபத்தி ஒன்பதுவயது ஜனகாவிற்கு.  வேறெந்த செல்வம் இருக்கிறதோ இல்லையோ ஏழைகளுக்கு புத்திர செல்வத்திற்கு மட்டும் தடையில்லை’ என்று  அவளே அடிக்கடி அலுத்துக்கொள்வாள். "ஆம்பிளை சிங்கமா ரெண்டுபேரும்  அழகுக்கிளியா  ஒர் பொண்ணும் நமக்கு  இருக்குன்னு பெருமைப்படறதவிட்டு அலுத்துக்கிறயே  ஜனகா...” என்பான் அவள் கணவன் பத்ரி பெருமையாக. வறட்டுப்பெருமை பேசுவதும் சீட்டு ஆடுவதும் வெட்டியாக வீட்டில் அமர்ந்து மனைவியின் சமையல் வேலைவருமானத்தில் வாழ்வதும் பத்ரிக்கு திகட்டாத விஷயங்கள். ’நீ போய்ட்டுவா  ..நான் குழந்தைகளைப்  பார்த்துக்கொள்கிறேன்’  என்று வீட்டில் உட்கார்ந்துகொண்டு சகாககள் நாலைந்து  பேரோடு சீட்டுவிளையாடுவான். கல்யாணம் ஆனபுதிதில் சாயிராம் காட்ரிங் சர்வீசில்  சமையல்பணி செய்துகொண்டிருந்தா...

விட்டு விடுதலையாகி....

பரசுவிற்கு இன்று விடுதலை.சட்டம் வழங்கிய மூன்றுமாத தண்டனை இன்று பூர்த்தியாகிறது. "நாளையிலிருந்து நீ சுதந்திரமனிதன்!" என்று நேற்று படுக்கப்போகும்போது ஆறுமுகம் பரசுவைப் பார்த்து சொன்னான். "ஜெயிலு விட்டு போனதும் எங்களை எல்லாம் மறந்துடுவே, இல்லியா பரசு?' வரதன் வேதனையுடன் அவன் விரலைப்பற்றியபடி கேட்டான். மூன்றே மாதத்தில் எல்லாருடைய மனத்திலும் இடம் பிடித்து விட்ட பரசு, சிறைக்குள் நுழைந்த முதல்நாள் நடுங்கித்தான் போனான். இருபத்துமூன்றுவயதில் சிறைவாசம்! படிப்பைமுடித்து வேலை பார்க்க வேண்டிய வயதில் சிறையில் கல்லுடைத்து, களிதின்று என்று நாட்களைக் கழிக்கும்படி விதியாகிவிட்டது. முதல்வாரம் முழுவதும்தூக்கமே வரவில்லை. ஆனால் நாளாவட்டத்தில் பக்கத்தில் இருந்த இதரகைதிகளின் அன்பான பார்வையில், பரிவான பேச்சில் சிறை வாழ்க்கைக்குத் தன்னைப் பழக்கிகொண்டான். அவன் நினைத்தமாதிரி சிறையில் உள்ளவர்கள் எல்லாருமே கெட்டவர்களாய்த் தெரியவில்லை. அவர்களில் பலர் தனது பிரியமுள்ளவர்களுக்காக ஏங்கி சோகக் கதைகளைச் சொல்லி அழும்போது பரசு நெகிழ்ந்துதான் போனான் . "பரசு !வெளியே போனதும் உன்கிட்ட எல்லாரும் ந...

காணவில்லை!

தேடி மிகச் சோர்ந்துவிட்டேன் இனி தெய்வம்தான் எனக்குத்துணை. நாடி எனை எதுவென்று கேட்போர்க்கு நான் சொல்வேன் தொலைத்தகதை. ஐந்து விரல் பதிந்த அடையாளச்சின்னமாய் அதற்குக்கன்னம். முகமும்அதுவே. அதைத்தாங்கும் கைபோல சின்னப்பிடி. அதன் பெயரின் முதல்பாதியில் அமைதிக்குப்பெயர்போன அன்னம் இருக்கிறது. என் புகுந்தவீட்டு சொத்து. தொலைத்துவிட்டதால் என் மாமியாரிடமிருந்து கிடைக்கலாம் மொத்து! கல்வைத்த தங்க அட்டிகையாயிருந்தால் கள்வர் கொண்டுபோயிருக்கமுடியும் அள்ளி அமுது படைக்கும் ஆகிவந்த அன்னக்கரண்டியை தள்ளிக் கொண்டு போனது யாராயிருக்கும்? தோழியைப்பிரிந்த ஏக்கத்தில் குழைந்து கூழாகிவிட்டது சாதம். கடத்திச் சென்றவர்களைக் கண்டுபிடித்து அன்னக் கரண்டியை மீட்டுத்தருபவர்கள், கைத்தொலைபேசியில் எனக்கு தகவல் தருக! தக்க பரிசு உண்டு!

நாய் ஜாக்கிரதை!

கடைக்குள் நுழையும்போதே ,”நான் சொன்ன வாசகத்தை எழுதிமுடிச்ச அந்தப்பலகை ரெடியாகலியா இன்னும்?” என்று வள் என்று சீறி விழுந்தபடியே வந்தாள் அந்தப்பெண்மணி. 'நல்வரவு 'என்று கொட்டையாய் பெயர்ப்பலகையில் எழுதிமுடித்த சிகாமணி அந்தப்பெண்மணியைக்கண்டதும் பெயிண்டையும் ப்ரஷையும் அப்படியே கீழே வைத்துவிட்டு கடையின் உள்பக்கமாய் ஓடினான். “முதலாளீ” என்றான் மூச்சிறைக்க “என்னடா சிகா?” மரப்பலகை ஒன்றினைத்தரம் பார்த்துக்கொண்டிருந்த குமரவேல் இப்படிக்கேட்டதும் சிகாமணி,”முதலாளி! அந்தம்மா கடைசில நம்ம கடைக்கே வந்திட்டாங்க இப்ப” என்றான் பதட்டமான குரலில். முதலாளி இல்லாத நேரங்களில் எல்லாம் கடையின் டெலிபோன் ரிசிவரை சிகாமணிதான் எடுப்பது வழக்கம், அப்படி இரண்டுமூன்றுதடவைகளில் எடுக்க நேர்ந்தபோது இந்தப்பெண்மணி போனில் ” இன்னுமா நான் சொன்ன போர்டை எழுதி முடிக்கல வாட் நான்சென்ஸ் ஈஸ் திஸ்?” என்றும்,” ரோஸ்வுட்பலகையின் நாலுமூலையிலும் பித்தளைல விளிம்புகட்டி நடுல அழகா எடுப்பா எழுதச்சொல்லி ஒருவாரமாச்சு இன்னும் போர்டை ரெடி பண்ணாம இருக்கீங்கஒரு வேலைகொடுத்தா பொறுப்பா செய்யறதில்லையா? இதே அமெரிக்காவா இருந்த...

பந்து.

“பாட்டீ! யாரோ ’பத்தி ராஜம்மா’ளாம் , அவங்களப்பத்தி சுவாரஸ்யமா இண்டர்நெட்ல ஒரு தமிழ் க்ரூப்ல விவரம் போட்டுருக்காங்க....உனக்குத்தான் இந்தமாதிரி செய்தின்னா ஆர்வம் ஜாஸ்தியே படிக்கறேன் கேக்கறியா?” என்று கம்ப்யூட்டர் முன் அமர்ந்திருந்த தன் பேத்தி மீனா கூவவும் புளியில் கோதினை நீக்கியபடி கூடத்தில் உட்கார்ந்திருந்த விசாலம் தனது அறுபதுவயதினை மீறி சிறுபெண்ணைப்போல உற்சாகமாய் அறைக்குள் ஓடி,” சொல்லு சொல்லு” என்றாள். மீனா திருச்சியில் ஒருபெண்கள் உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறாள். சமீபமாய் கணிணியில் தமிழில் தட்டச்சக் கற்றுக்கொண்டுவிட்டாளாம். தமிழ் இணையதளங்களை எல்லாம் தினமும் எட்டிப்பார்த்துவிடுவாள். இணைய மகாசமுத்திரத்தில் வலைப்பூக்களில் மடலாடற்குழுமங்களில் தமிழ் மொழி ஆற்றும் பெரும் பணியினைக்கண்டு மகிழ்ந்துபோவாள். .அதனைப் பெருமை தாங்காமல் முதலில் பாட்டியிடம் தான் அதை சொல்லிக்கொண்டாள். அப்பாவும் அம்மாவும் ,”போதுமே, தமிழாடி உனக்கு பின்னாடி சோறுபோடும்? ஃப்ரெஞ்ச்படி, ஜெர்மன் படி, உன் பாட்டி அந்தகாலத்தில் கிராமத்தில் தமிழில் கவிதை கிறுக்கி பரணில் போட்டுவைச்...