துளி - 179 அழகியசிங்கர் ஒவ்வொருவருக்கும் கவிதை எழுத உந்துதல் வேண்டும். எனக்கு வள்ளலார்தான் கவிதை எழுத உந்துதல். எளிமையான வரிகளைக் கொண்ட அவர் பாடல்கள் என்னைக் கவர்ந்தன. பின் கணையாழி, தீபம் பத்திரிகைகளைப் படிக்கும்போது அவற்றில் பிரசுரமாகும் கவிதைகளையும் படிப்பேன். என்ஒன்றுவிட்ட சகோதரர் ஆரம்பித்த மலர்த்தும்பி என்ற சிற் றேடில்தான் என் கவிதைகள் முதலில் அரங்கேறின. அதற்கு முன்பே நான் கவிதைகள் எழுத ஆரம்பித்தாலும் எந்தக் கவிதையும் எந்தப் பத்திரிகையிலும் பிரசுரம் ஆகவில்லை. என் நண்பர் கவிஞர் எஸ்.வைத்தியநாதன் மூலம் ஞானக்கூத்தன், ஆர். ராஜகோபாலன் . ரா. ஸ்ரீனிவாஸன் , வைத்தியநாதன், ஆனந்த், காளி- தாஸ் , ஆத்மாநாம் போன்ற நண்பர்கள் நட்பு கிடைத்த பிறகு, நான் எழுதிக் கொண்டிருந்த கவிதைத் தன்மை மாறி விட்டது. ஆத்மாநாம் மறைவுக்குப் பின் ழ இதழைத் திரும்பவும் கொண்டு வர முயற்சி நடந்தது. அதில் நானும் பங்கெடுத்துக்கொண்டேன். ஆனால் ழ பத்திரிகையைத் தொடர்ந்து கொண்டு வர முடியவில்லை. எனக்குக் கவி...