Skip to main content

Posts

Showing posts from December, 2017

650 பக்கங்களுக்கு மேல்

அழகியசிங்கர் 62 சிறுகதைகள், 7 குறுநாவல்கள், ஒரு நாடகம் கொண்ட  üஅழகியசிங்கர் கதைகள்ý என்ற மொத்தப் படைப்புகளுக்கான புத்தகம் கொண்டு வருகிறேன்.  புத்தகக் காட்சிக்குள் வந்துவிடும். 650 பக்கங்களுக்கு மேல் உள்ள இப்புத்தகம் கெட்டி அட்டைப்ப்போட்டு தயாரிக்கப்பட உள்ளது.    இதன் விலையை ரூ.600 ஆக வைப்பதாக உள்ளேன்.  நான் இதுவரை 12 புத்தகங்கள் கொண்டு வந்துள்ளேன்.  இத் தொகுப்பு என் 13வது தொகுப்பு.   என் முதல் கதையின் பெயர் üசெருப்பு.ý  1978ஆம் ஆண்டு எழுதியது.  ஒரு சிறுபத்திரிகையில்தான் பிரசுரம் ஆனது. அந்தக் கதையைப் படித்துவிட்டு என் அலுவலகத்தில் உள்ள ஒரு பெண்மணி, 'உங்கள் செருப்பு நன்றாக இருக்கிறது,' என்றாள்.   உடனே நான் என் காலில் மாட்டியிருந்த செருப்பைப் பார்த்தேன்.   'உங்கக் கால் செருப்பைச் சொல்லலை, சார்..  உங்கக் கதையைச் சொல்றேன்,' என்றாள்.  அவள் சொன்னதைக் கேட்டு என் கையைக் கிள்ளிப் பார்த்துக்கொண்டேன். அந்த நேரத்தில அந்தப் பெண்மணி சொன்னது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.   அதேபோல் முதன் முதலாக ...

சமீபத்தில் பங்களூர் சென்றேன்

அழகியசிங்கர் இந்த மாத முதல் வாரத்தில் நான் பங்களூர் சென்றேன். நெருங்கிய உறவினரின் திருமண வைபவத்தில் கலந்துகொள்வதற்காக.  அங்கு மூன்று நாட்கள் இருந்தேன்.  ஒரு கல்யாணம் மூன்று நாட்கள் நடப்பதை அறிந்து ரொம்பவும் யோசனை செய்துகொண்டிருந்தேன்.  மூன்று நாட்களாக நடக்கும் திருமணத்தில் ஏற்படும் செலவுகளைப் பற்றிதான் யோசித்துக்கொண்டிருந்தேன்.  ஆனால் இது குறித்து யாரிடமும் எதுவும் பேசவும் இல்லை.  என்னைப் பொறுத்தவரை ஒரு திருமணம் ஒரு நாளிலேயே முடிந்துவிட வேண்டுமென்று நினைக்கிறேன்.   மூன்று நாட்கள் அங்கே இருக்கும்படி இருந்ததால் நான் லேப்டாப் எடுத்துக்கொண்டு போயிருந்தேன்.  அங்கே போய் விருட்சம் 104வது இதழைக்கொண்டு வந்தேன்.  லாப்டாப் மூலம் அச்சடிக்க அனுப்பி அச்சடித்தேன்.   மீதி நாட்களில் புத்தகக் கடைகளுக்குச் செல்ல தீர்மானித்திருந்தேன்.  முன்பு நான் பார்த்த பங்களூர் மாதிரி இல்லை.  முன்பு என்றால் நான் மெஜஸ்டிக் போய் அங்கிருந்து பஸ் பிடித்து எல்லா இடங்களுக்கும் செல்வேன்.  எங்கே போகவேண்டுமென்று ஒரு இலக்கிய நண்பரைக் கேட்டேன். ...

இன்னொரு முறை பார்க்க வேண்டும்....

அழகியசிங்கர் நான் இந்த 15வது சென்னை சர்வதேசப் பட விழாவில் பார்த்த ஒரே தமிழ்ப்படம் 'மனுசங்கடா'.  அம்ஷன்குமார் இயக்கியப் படம் இது. இப்படத்தைப் பார்த்துவிட்டு வந்த பிறகு எனக்குத் தோன்றியது இலக்கிய நண்பர் ஒருவருடன் பல ஆண்டுகளுக்கு முன் ராஜகுமாரி தியேட்டரில் பார்த்த குருதத்தின் படம்.  படம் முடியும் தருவாயில் என் பக்கத்தில் அமர்ந்திருந்த இலக்கிய நண்பர் கண்ணீர் விட்டு அழுதுகொண்டிருந்தார்.  அவருடைய அழுகை எனக்கு ஆச்சரியத்தை அளித்தது.  ஒரு சினிமாப்படம் என்பது என்ன? அது நமக்குத் தெரியாத இன்னொருவர் வாழ்க்கையைச் சொல்வது.  அதன் மூலம் நமக்கு மகிழ்ச்சியும் திகைப்பும் ஏற்படுகின்றன. சிலசமயம் தாங்க முடியாத வருத்தத்தையும் ஏற்படுத்தாமல் இல்லை. அம்ஷன்குமார் படம் நிஜ வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு துயரமான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது.   வாழ்க்கையில் தென்படும் சோகம் மனதின் துயரத்தை அதிகரித்துவிடும்.  படம் பார்த்தாலும் இந்த உணர்வு ஏற்படாமல் இருக்காது.  ஆனால் நாம் படம் பார்க்கிறோம் என்ற உணர்வு முக்கியம்.  மனுஷங்கடா படம் கூட ஆரம்பக் காட்சியிலிருந்து கடைசி வர...

தஞ்சை ப்ரகாஷ÷ம் நானும் - ஒளிப்படம் 1

தஞ்சை ப்ரகாஷ÷ம் நானும் - ஒளிப்படம் 1 அழகியசிங்கர் தஞ்சாவூர் கவிராயர் தஞ்சை ப்ரகாஷ் குறித்து 16.12.2017 அன்று  பேசிய பேச்சின் ஒரு பகுதியை இங்கு அளிக்கிறேன்.  இது மூன்று பகுதிகளாக உள்ளது. 

பத்து கேள்விகள் பத்து பதில்கள்

       அழகியசிங்கர்     சில தினங்களுக்கு முன் நான் பங்களூர் சென்றிருந்தேன். நெருங்கிய உறவில் ஒரு திருமணம்.  பங்களூரில் வசிக்கும் ஸிந்துஜாவைச் சந்தித்து அவரைப் பேட்டி எடுக்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டிருந்தேன்.  அந்தப் பேட்டி எடுத்த இடம் வேடிக்கையான இடம்.  அவரை கல்யாணத்திற்கு அழைத்திருந்தேன்.  கல்யாண சத்திரம் முழுவதும் எதாவது தனியாக அமர்ந்து பேச இடம் கிடைக்குமா என்று பார்த்தோம்.  ஒரு இடமும் கிடைக்கவில்லை.  சரி வேற வழி இல்லை என்று ஸிந்துஜா அவர்களின் காரில் அமர்ந்து பேட்டி எடுத்தேன்.       அந்தப் பேட்டியில் சில இடங்களில் எடிட் செய்ய வேண்டியிருந்ததால் நான் உடனடியாக அதை வெளியிட முடியாமல் தவித்தேன்.  அமெரிக்காவிலிருந்து வந்த பையனிடம் கொடுத்து இதைச் சரி செய்து தரும்படி கேட்டுக்கொண்டேன்.  அவன் அதைச் செய்ததோடு அல்லாமல் என்னைத் திரும்பவும் பேசச் செய்து அதையும் ஏற்கனவே எடுத்தப் பேட்டியுடன் சேர்த்துவிட்டான்.   என்னதான் முயன்றாலும் இதை என்னால் கற்றுக்கொள்ள முடியுமா என்பது தெரியவில்...

என்னுடைய 'திறந்த புத்தகத்திற்கான' அறிமுக உரை பகுதி 3

அழகியசிங்கர் என் 'திறந்த புத்தகம்' பற்றிய அறிமுக உரையை 14.11.2017 அன்று ராஜேஷ் சுப்பிரமணியன் என்பவர்  பேசி துவக்கி வைத்தார்.  எல்லோரும் கேட்டிருப்பீர்கள்.  அதன்பின் வ வே சுப்ரமணியன் அவர்கள் இந்தப் புத்தகத்தைப் பற்றி பேசியதையும் கேட்டிருப்பீர்கள்.     இன்னும் பலர் பேச உள்ளார்கள். எல்லோரும் 5 நிமிடங்களிலிருந்து 10 நிமிடங்களுக்குள் பேச உள்ளார்கள்.  .இப்போது ஆர் கே ராமனாதன் என்கிற என் நண்பர்.  ஆந்திரா வங்கியில் பணிபுரியும் ஆர் கே ஒரு நாடக நடிகர். திறமையாக நடிப்பவர். நாடகங்களை இயக்குபவர்.  அவர் என் புத்தகத்தைக் குறித்துப் பேசுவதைக் கேட்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.  புத்தகத்தின் விலை ரூ.170.  புத்தகம் வேண்டுபவர் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண். 9444113205.

சனிக்கிழமை நடந்த கூட்டம்

அழகியசிங்கர் ஒவ்வொரு மூன்றாவது சனிக்கிழமையும் (16.12.2017) நான் கூட்டம் நடத்துவது வழக்கம். நான் என்று சொல்வதை விட என் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து நடத்தும் கூட்டம் என்பதால் நாங்கள் என்று சொல்வது  சரியாக இருக்குமென்று தோன்றுகிறது.   மூகாம்பிகை காம்பௌக்ஸில் ஏழுôவது கூட்டமாக 16ஆம் தேதி ஒரு கூட்டம் நடத்தினேன்.  தஞ்சாவூர் கவிராயர் தஞ்சை ப்ரகாஷ் பற்றி பேசினார்.   வழக்கத்தைவிட கூட்டத்திற்கு வருபவரைவிட இந்த முறை அதிகமாகவே கூட்டத்திற்கு வந்திருந்தார்கள்.  தஞ்சாவூர் கவிராயரைப் பார்க்கும்போது எனக்கு ஜெயகாந்தான் ஞாபகம் வருவதுண்டு.  அதேபோல் தஞ்சை ப்ரகாஷ் ஸ்டெல்லா புரூûஸ ஞாபகப்படுத்துவார்.   இக் கூட்;டத்தை முழுவதும் நான் பதிவு செய்து வைத்திருக்கிறேன்.  தஞ்சாவூர் கவிராயர் கூட்டத்தில் பேசும்போதும் ஜெயகாந்தனை ஞாபகப்படுத்தினார். நெகிழ்ச்சியான கூட்டம் இது.  கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் தஞ்சை ப்ரகாஷ் குறித்துப் பேசினார்.  ப்ரகாஷ் தஞ்சாவூரில் ஆற்றிய இலக்கியப் பணியைப் பற்றி கோர்வையாகப் பேசினார்.  ப்ரகாஷ் குறித்து சில புதிய தகவல்க...
தஞ்சை ப்ரகாஷ÷ம் தஞ்சாவூர் கவிராயர்ரும் அழகியசிங்கர் நாளை மாலை 6 மணிக்கு நடைபெறும் விருட்சம் இலக்கியச் சந்திப்புக் கூட்டத்தில் தஞ்சாவூர் கவிராயர் தஞ்சை ப்ரகாஷ் குறித்துப் பேசப் போகிறார். எல்லாவிதங்களிலும் தஞ்சாவூர் கவிராயர் பேசுவது சிறப்பாக இருக்கும்.  ஏனென்றால் ப்ராகஷை பக்கத்ரில் இருந்து பார்த்துப் பழகியவர்.   நான் ப்ராகாஷை இரண்டு மூன்று முறைகள் சந்தித்திருக்கிறேன்.  அவர் உடல்நிலை சரியில்லாதபோது டாக்டர் ரெட்டியிடம்தான் சிகிச்சை எடுத்துக்கொண்டார்.  டாக்டர் ரெட்டி ஒரு இயற்கை மருத்துவர்.  அவரிடம் போய் சிகிச்சைப் பெறுகிறாரே என்ற எண்ணம் அப்போது எனக்கிருந்தது. கடைசிவரை இலகத்தியத்தைப் பற்றி சிந்தித்திருப்பவர் ப்ராகாஷ்.  சும்மா இலக்கியக் கும்பல் என்ற பெயரில் தஞ்சாவூரில் கூட்டம் நடத்தினார்.  இக் கூட்டதில் கலந்துகொண்டவர்கள் கதைகளைப் படிப்பார்கள்.  பேசுவார்கள்.  எனக்குத் தெரிந்து அவர் ஒரு பத்திரிகை நடத்தினார்.  அந்தப் பத்திரிகையின் பெயர் வெ சா எ.  வெங்கட்சாமிநாதன் ஒருவரே அந்தப் பத்திரிகையில் எழுதியிருக்கிறார். ...
விருட்சம் இலக்கியச் சந்திப்பு 32வது கூட்டம் பற்றிய அறிவிப்பு. அழகியசிங்கர் தஞ்சை ப்ரகாஷ் குறித்து அவருடைய நெருங்கிய நண்பரான தஞ்சாவூர் கவிராயர் அவர்கள் உரை ஆற்றுகிறார்.  வரும் சனிக்கிழமை -16.12.2017.  எல்லோரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.  இதோ அதற்கான அழைப்பிதழ்.

மரபு கவிதைகளை ஒழித்தவர் பாரதியார்

அழகியசிங்கர் பாரதியின் பிறந்த தினம் இன்று.  எல்லாவிதங்களிலும் இன்று எழுதிக்கொண்டிருக்கிற கவிஞர்கள் பாரதியாருக்குக் கடமைப் பட்டவர்கள். மரபு கவிதைகளை எழுதிக் குவித்த பாரதியார் ஒரு மாற்றாக வசன கவிதைகளை எழுதினார்.  அதவாது சுதந்திரமான கவிதைகள்.  அக் கவிதைகள்தான் பெரிய மாற்றத்தை தமிழில் இன்று ஏற்படுத்தி உள்ளது. பாரதியாரின் வசன கவிதைகளைத் தொடர்ந்து ந பிச்சமூர்த்தி கொஞ்சம் மரபு கொஞ்சம் புதுவிதமான கவிதை என்று எழுதினார்.  க நா சு முழுவதும் மரபைத் தவிர்த்துவிட்டார். கவிதையில் புதிய உத்தியை கநாசுவும் நகுலனும் ஆரம்பதில் ஏற்படுத்தியவர்கள்.  இன்றும் சிலர் மரபு கவிதைகளை எழுதுவது வேடிக்கையாக இருக்கிறது.  ஏன்னெனில் புதுவிதமான கவிதைகள் எழுதுவதில் உள்ள சுதந்திரம் மரபு கவிதைகளில் இல்லை. இன்று அதன் எல்லை தாண்டி எங்கோ போய்க்கொண்டிருக்றது. என்னிடம் 400க்கும் மேற்பட்ட கவிதைத் தொகுதிகள் உள்ளன.  எல்லாக் கவிதைப் புத்தகங்களும் மரபு கவிதையை உதறிவிட்டு எழுதப்பட்ட புதுவிதமான கவிதைகள். பாரதியாருக்குப் பின் பாரதிதாசன், சுரதா, நாமக்கல் கவிஞர் என்று பலர் மரப...

104வது இதழ் நவீன விருட்சம் வெளிவந்துவிட்டது

அழகியசிங்கர் செப்டம்பர் மாதம் நவீன விருட்சம் 103வது இதழ் வெளிவந்தது. 3 மாதங்களுக்குள் விருட்சம் இதழை எப்படியாவது கொண்டுவர நினைத்துக் கொண்டிருந்தேன்.  இதோ 104வது இதழ் டிசம்பர் மாதம் கொண்டுவந்துவிட்டேன்.   கீழே குறிபபிடப்படுகிற படைப்பாளிகள் நவீன விருட்சத்தை அலங்கரித்துள்ளார்கள். அசோகமித்திரன் - புதிய மரபினைத் தோற்றுவித்த எழுத்தாளர் - கட்டுரை -அம்ஷன்குமார் மரங்களும் மனிதர்களும் - சிறுகதை - வையவன்        வான உள்ளம் - கவிதை -   பிரபு மயிலாடுதுறை       தாமரை பாரதி கவிதைகள்        ஒற்றை வார்த்தை - கவிதை - அதங்கோடு அனிஷ்குமார் எம்.ஜி சுரேஷ் சில நினைவுகள் - அழகியசிங்கர்   நடந்தது என்ன? - சிறுகதை - ஜி பு சதூர்புஜன் லாரா - சிறுகதை - ஜெயராமன் ரகுநாதன் வானிலை அறிக்கை - கவிதை - சிபிச்செல்வன் சுந்திரமித்திரன் கவிதை நெட்டிப் பந்து - கவிதை - லாவண்யா சுந்தர்ராஜன் புதிர் - கவிதை - ஜான்னவி       எழுத்துச் சுவர் - சிறுகதை - பிரபு மயிலாடுது...

என்னுடைய 'திறந்த புத்தகத்திற்கான' அறிமுக உரை பகுதி 2

என்னுடைய  'திறந்த புத்தகத்திற்கான'  அறிமுக உரை பகுதி 2 அழகியசிங்கர் என் üதிறந்த புத்தகம்ý பற்றிய அறிமுக உரையை 14.11.2017 அன்று ராஜேஷ் சுப்பிரமணியன் என்பவர்  பேசியதை எல்லோரும் கேட்டிருப்பீர்கள்.  இதோ வ வே சுப்ரமணியன் அவர்கள் இந்தப் புத்தகத்தைப் பற்றி பேசுகிறார்.  இன்னும் பலர் பேச உள்ளார்கள். எல்லோரும் 5 நிமிடங்களிலிருந்து 10 நிமிடங்களுக்குள் பேச உள்ளார்கள்.  வ வே சுப்ரமணியன் விவேகானந்தா கல்லூரியில் முதல்வராக இருந்து பணி மூப்பு பெற்றவர்.  சிறந்த பேச்சாளர்.பல புத்தகங்கள் எழுதி உள்ளார்.  கவிஞர்.  தமிழ் வளர்த்த சான்றோர் என்ற சிறப்பு நிகழ்ச்சியை விடாமல் வெற்றிகராமாக நடத்துபவர்.  புத்தகத்தின் விலை ரூ.170.  புத்தகம் வேண்டுபவர் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண். 9444113205.

மாம்பலம் டாக் பார்த்தீர்களா?

அழகியசிங்கர் இன்று வந்துள்ள மாம்பலம் டாக் என்ற பத்திரிகையில்  போஸ்டல் காலனியில் துவங்கியுள்ள நூல் நிலையத்தைப் பற்றி எழுதியிருந்தது.  இன்னும் சில தகவல்களை சரியாகப் பத்திரிகையில் தரவில்லை.   புத்தகம் படிக்க விரும்புவோர் பதிவு செய்துகொண்டு வரவேண்டும்.  ஒரு மணி நேரத்திற்கு மேல் ஒருவர் இருக்கக் கூடாது.  புத்தகம் படிக்க ஒரு மணி நேரத்திற்கு ரூ.10 செலுத்த வேண்டும்.  புத்தகம் படித்துவிட்டு அங்கயே வைத்துவிடவேண்டும்.  இரவல் கொடுக்கப்பட மாட்டாது.  யாராவது இலவசமாக தங்களுடைய புத்தகங்களை நூல்நிலையத்திற்குக் கொடுக்கலாம்.   விருட்சம் புத்தகங்கள் விற்கப்படும்.  கூடவே மற்றப் பதிப்பாளர்களின் புத்தகங்களும் விற்கப்படும்.  ஆனால் முன்னதாகவே சொல்ல வேண்டும். 10பேர்கள் கொண்ட கூட்டம் நடக்க அனுமதி உண்டு.  ஒரு மணி நேரக் கூட்டத்திற்கு ரூ.100 தரவேண்டும்.   தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் : 9444113205 மற்றும் 9176613205.   

விசிறி சாமியாரின் பிறந்த தினம் இன்று

அழகியசிங்கர் நான் பெரிய மனிதர்களைப் பார்ப்பதில் சங்கடப்படுவேன்.  அவர்கள் முன் எப்படி நடந்துகொள்வது என்பது எனக்குத் தெரியாது.  அதாவது சரியாக வராது. அதைவிட நான் போய் பார்க்க விரும்பாதது.  சாமியார்களைப் பார்ப்பது. அவர்கள் முன் நிற்பது எனக்கு சங்கடத்தைத் தரும்.  எதாவது சொல்லி விடுவார்களோ என்று யோசனை ஓடும். ஆனால் தீவிர இலக்கியவாதியான பிரமிள் சாமியார் பின்னால் போனது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.  பார்த்தால் இலக்கியத்தைப் பற்றி பேசுவார் என்றால், ஜே கிருஷ்ணமூர்த்தி, ஷீரிடி சாய்பாபா, ரமணர், யோகி ராம்சுரத் குமார் என்று பேசிக்கொண்டிருப்பார்.  எனக்கு ஆச்சரியமாக இருக்கும். பூக்கோ, தெரீதா என்றெல்லாம் பேசுவதை விட்டு, சாய்பாபா, ராம்சுரத் குமார் ஜே கிருஷ்ணமூர்த்தி என்று பேசுகிறாரே என்று தோன்றும். ஒருமுறை என்னை திருவண்ணாமலைக்கு அழைத்துக் கொண்டு போய்விட்டார்.   யோகி ராம்சுரத்குமாரைப் பார்க்கலாம் என்றார்.  அவருடன் போனதால் சாமியார் என்னைப் பார்த்து எதுவும் சொல்லிவிட மாட்டார் என்ற நம்பிக்கை இருந்தது.  நான் வீட்டிலேயே கூட சொல்ல...