அகியசிங்கர் மாம்பலத்தில் ஆர்யாகவுடர் ரோடு என்றுழ உள்ளது. அந்த ரோடு ஒருவர் நடந்து போனல் போதும், பொழுது நன்றாகப் போய்விடும். மாலை நேரத்தில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும். எளிதில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் போக முடியாது. நான் கிட்டத்தட்ட அநத ரோடு வாசி. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக போஸ்டல் காலனி முதல் தெருவில்தான் இருந்தேன். நல்ல சென்டரான இடம். ரோடு அகலமாக இருக்கும். ரொம்ப குறைவான அடுக்ககத்தில் நாங்கள் இருந்தாலும், எந்த இடத்திற்கும் அங்கிருந்து போய்விட முடியும். அந்தத் தெருவை ஒட்டித்தான் ஆர்யாகவுடர் ரோடு உள்ளது. அயோத்தியா மண்டபத்தில் ஒவ்வொரு வருடமும் கூட்டம் நடக்கும். பாட்டுக் கச்சேரி நடக்கும். கதை உபன்யாசம் நடக்கும். எனக்குக் கடவுள் நம்பிக்கை கொஞ்சம் குறைவு. ஆனால் நாத்திகன் கிடையாது. என் வீட்டில் உள்ளவர்கள் அயோத்தியா மண்டபம் போக வேண்டுமென்று சொன்னால், அயோக்கியா மண்டபமா என்று கேட்பேன். உடனே வீட்டில் உள்ளவர்கள் திட்டுவார்கள். நான் சிரித்துக்கொள்வேன். நாங்கள் போஸ்டல் காலனி இடத்திலிருந்து ராகவன் காலனி என்ற இடத்திற்கு வந்து விட்டோம். என் அப்ப