Skip to main content

Posts

Showing posts from August, 2013

கண் கூசும் வெயில்

செ .சுஜாதா வர்ணஜாலங்கள்   காட்டிய   நீர்க்குமிழிகள்   வலுவற்று உடைந்து சிதறுகின்றன     வீடற்ற வெற்று கதவுக்கு இத்தனை வேலைப்பாடுகள்   ஏன் ?   நம்பிக்கை உடைசல்கள் மண்டிய   அவ்இடத்தைவிட்டு விலகி நடக்கிறேன்     அழுந்த சாயம்பூசிய உதடுகளும்   வீச்சம் ஒழுகும் குறிகளும்   மலக்காடென வழியெங்கும்   சிதறிக்கிடக்கின்றன     மிதித்துக்கொள்ளாமல் கடக்க   ப்ரயத்தனங்களை கால் கட்டைவிரல்   நுனியில் நிறுத்தி இருக்கிறேன்     கூக்குரலிட்டு அழும்   மனசாட்சி எனும் மண்ணாங்கட்டியை   உருட்டி  குட்டிச்சுவரில் அடித்துவிட்டுத் தொடர்கிறேன்   மேலும்   படகுக்குள் துள்ளும் மீனாய்   சுவாசம் கேட்டுத் தவிக்கும்   இருப்பு   எந்தக் கண்ணாடியிலும் பிம்பமாக இல்லை. பச்சை வாசனை வீசும்   விரிந்த மரத்தின் வேர்களில்   என் தலை சாயும் காட்சி கால்கள் தள்ளாட  தளர்ந்து  சரியும்   இந்நினைவில் கடைசியாய் நிற்கிறது  

நானும் பார்க்கிறேன் உலக சினிமாக்களை

அழகியசிங்கர்  சமீபத்தில் நானும் சில உலகச் சினிமாக்களைப் பார்த்துவிட்டு எனக்குத் தோன்றுவதை எழுதலாம் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டுள்ளது. உண்மையாகவே பல உலகச் சினிமாக்களை ஒரு 20 அல்லது முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் பார்த்திருக்கிறேன். அப்படிப் பார்த்தாலும் என் கவனத்திற்கு அது எப்போதும் போனதில்லை. ஒரு படத்தை இயக்கியவர் யார்? ஒரு படத்தின் சிறப்பம்சம் என்ன? போன்ற கேள்விகளுக்கு நான் போவதில்லை. படம் பார்ப்பேன். பார்த்த திருப்தியுடன் வந்துவிடுவேன். சில நாட்கள் அந்தப் படம் பற்றிய ஞாபகம் இருக்கும். பின் அதுவும் மறந்து விடும். யார் அந்தப் படத்தை இயக்கினார்கள். எப்படி அது சிறந்த படமாக இருக்கிறது என்றெல்லாம் யோசிப்பது இல்லை. ஆனால் இப்போது ஒரு படத்தைப் பார்த்துவிட்டு அந்தப் படத்தைப் பற்றி எதாவது எழுதினால் என்ன என்று தோன்றுகிறது. அது என்னால் முடியுமா என்பதைப் பார்க்க விரும்புகிறேன். முன்பெல்லாம் உலகச் சினிமாப் படங்களைப் பார்க்க சில அமைப்புகள் இருந்தன. அதை நடத்துவது என்பதும் சாதாரண விஷயமில்லை. இப்போது அதெல்லாம் இருப்பதில்லை. காலம் மாறிவிட்டது. ஒரு படத்தை அப்படி ஒரு இடத்த

சார்த்தின் தத்துவத்தில் மனிதனின் குணாதிசயம்

அம்ஷன் குமார் ( இக்கட்டுரை திருச்சியிலிருந்து வெளிவந்த மானுடம் சிற்றிதழில் மே 1982 ல் வெளியானது) சுதந்திரம் பற்றி ஜீன் பால் சார்த் கூறுவனவற்றிற்கு ஐரோப்பாவில் ஒரு நீண்ட பாரம்பரியம் இருக்கிறதெனினும் அவற்றில் பல கருத்துகள் புதிய பாட்டிலில் புதிய ஒயின். சார்த் சுதந்திரம் பற்றி தரும் எண்ணற்ற விளக்கங்களுக்கு அறிவுலகம் அவருக்கு நிறைய கடமைப்பட்டிருக்கிறது. மனிதன் என்பவன் சுதந்திரம். அவன் தன்னை மாற்றியமைத்துக் கொள்ளவும் புதிய வழியில் தன்னை நடத்திச் செல்லவும் அவனுக்கு உரிமை உண்டு. கைகால்களில் விலங்கிடப்பட்ட நிலையில் மனதளவில் உணரும் ஆன்ம சுதந்திரம் பற்றி சார்த் இங்கே பேசவில்லை. நிகழ் உலகில் மனிதன் தன்னுடைய செயல்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் சுதந்திரமே சார்த் பேசுவது. ` அடிமையானாலும் அவன் தன்னுடைய விலங்குகளை உடைத்தெறிவதற்கு சுதந்திரமானவன் `. இத்தகைய சுதந்திரம் அவனை உண்மையாய் இருக்கத் தூண்டுகிறது. இதன் விளவு அச்சுதந்திரத்தை பிரயோகிப்பவனுக்கு சாதகமாய் இருக்கும் என்று சொல்வதற்கில்லை. மனிதனின் சுதந்திரம் வெற்றியைத் தேடித்தரும் என்று சொல்வதற்கில்லை. மனிதனின் சுதந்திரம் வெற்றிய