ஐராவதம் பக்கங்கள்.... நான்காவது சிங்கம் - செல்வராஜ் ஜெகதீசன் - கவிதைகள் - பக்கம் 71 - விலை ரூ.60 - பிரதிகள் 600 - காலச்சுவடு பதிப்பகம் இது கவிஞரின் நான்காவது கவிதைத் தொகுப்பு. முன்னரே 'அந்தரங்கம் (2008)', 'இன்னபிறவும்' (2009), 'ஞாபகம் இல்லாது போகுமொரு நாளில்' (2010) ஆகிய மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளாராம் ஆசிரியர். தமிழ்ப்பட உலகில் ஒரு படம் எடுத்துவிட்டு ஓய்ந்துபோன இயக்குநர்கள் இருநூறுக்குமேல் உள்ளனராம். அதேபோலவே கைக்காசு போட்டு ஒரு புத்தகம் எழுதி ஓய்ந்துபோன கவிஞர்களும் நூற்றுக்கணக்கில் இருக்க வேண்டும். இத்தகைய சூழ்நிலையில் ஆசிரியர் காலச்சுவடு போன்ற பிரசித்துப் பெற்ற பதிப்பகம் மூலம் நாலாவது புத்தகம் வெளியிட முடிந்திருப்பது அவருக்கு கவிதைத் துறையில் உள்ள தொடர்ந்த ஈடுபாட்டைக் காட்டுகிறது. ஆனால் பதிப்பாளர்களும் ஏமாந்தவர்கள் அல்ல. அறுநூறு பிரதிகள்தான் அச்சிட்டு உள்ளார்கள். 2009க்குப் பிறகு தமிழக நூலக துறையினர் புத்தகங்கள் எதுவும் வாங்காத சூழ்நிலையில் இதுவே அதிகம். 'எப்போதும்போல' (பக்கம் 68) என்ற கவிதை 6 வரிகள் கொண