Skip to main content

Posts

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 115 அழகியசிங்கர் கதவு கல்பனா ரத்தன் எங்கள் மூதாதையர் காலத்தில் கதவுகள் வைக்கவில்லை. எங்கள் பாட்டி காலத்தில் கதவு இருந்தது மூடியே... என் அம்மா காலத்தில் நிழலான வெளியுலகம் என் காலத்தில் அவ்வப்போது வேடிக்கை பார்க்க அனுமதி என் மகள் காலத்தில் விரும்பிய இடத்தில் கதவு வைக்க உரிமை. ஆனாலும் எங்களிடம் ஒருபோதும் இல்லை கதவின் சாவி. நன்றி : மனம் உதிரும் காலம் - கல்பனா ரத்தன் - கல்பதரு பதிப்பகம், 7 சேர்மன் சண்முகம் சாலை, சிவகாசி - 626 123 - தொலைபேசி : 9791065284 - பக்கங்கள் : 96 - விலை : ரூ.100

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 114

அழகியசிங்கர்    டீ குடிக்கி செல்வசங்கரன் நல்லவேளை டீ குவளையை அடைந்துவிட்டார் ஒரு டீயைக் குடித்து முடிப்பதற்கு இவ்வளவு நேரமென ஒரு நேரம் கிடையாது அதன் சூடு போவதற்குள் குடித்து முடிப்பதே நல்ல டீ குடிக்கிக்கான சவால் சூடு போய்க்கொண்டிருக்கிறது பாதி முடித்துவிட்டார் முழுவதும் அதன் கதையை முடித்து அங்கிருந்து கிளம்ப, இன்னொரு மலையையும் கடக்கவேண்டும் ரம்மியமான மலை இருபத்தைந்து ஆண்டுகளாக கடந்துகொண்டுதானே இருக்கிறார் அவரது நாற்காலிக்குக் கீழிருந்து விரியும் பழைய பூ போட்ட கல் படியிறங்கி வரும் வளைவில் திரும்பி சிறிது தூரம் நடந்தால் அந்த டீயை அடைந்துவிடலாம் இங்கிருந்தென அங்கிருந்தென அதற்காக அவர் நடந்து போய் வருவதைப் பார்த்தால் போங்கடா மயிருங்களாயென்று ஒரு நாள் எல்லாவற்றையும் உதறி அப்படியே கிளம்பிடுவாரோ என யாருக்கும் வரலாம் அப்படியரு கூத்து அப்படியரு லயிப்பு இருக்கையிலிருந்து எழுந்து செருமியபடி சமஸ்தானம் கீழிறங்க ஆரம்பித்துவிட்டால் அங்கு எதுவும் நடக்கலாம். நன்றி : கனிவின் சைஸ் - மணல்வீடு, ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல். மேட்டூர் வட்டம், சேலம் மாவட்டம் - 6364...

நீங்களும் படிக்கலாம் - 47

ஆல்பெர் காம்யுவின் அந்நியன்.. அழகியசிங்கர்  ரொம்ப நாட்கள் கழித்து இந்தப் புத்தகத்தைத் தூசித்தட்டிப் படிக்க ஆரம்பித்தேன். 1980 ஆண்டு க்ரியாவில் வாங்கியது.   எல்லாம் மறந்து விட்டது.  ஆனால் கொஞ்சமாக ஞாபகத்தில் அம்மா   முதியோர் இல்லத்தில் இறந்ததை ஒட்டி மெர்சோ என்பவன் ஊருக்குச் செல்வான் என்று படித்திருந்தேன். அந்த ஊரில் அம்மாவை சவ அடக்கம் செய்யும் வரை அம்மாவின் இறந்த தோற்றத்தைப் பார்க்க விரும்ப மாட்டான்.  ஏன்? இயல்பாக இருப்பான்.  அம்மா இறந்து விட்டாள் என்று அழ மாட்டான்.   இப்படி மெர்சோ நாவல் முழுவதும் வருகிறான்.  அவன் காதலி மேரி அவனிடம் கேட்கிறாள்.  தன்னைத் திருமணம் செய்துகொள்ள விருப்பமா? என்று. அதற்கு மெர்சோ, திருமணம் செய்துகொள்வது கொள்ளாதது எல்லாமே ஒன்றுதான் என்கிறான். வேலை மாற்றமாக பாரிஸில் செல்ல விருப்பமா என்று கேட்கிறார் மெர்சோவின் முதலாளி.   மெர்சோ இதற்குப் பதில் அளிக்கும்போது அவனைப் பொருத்தவரை இப்போது இருக்குமிடத்தில் இருப்பதாகக் கூறுகிறான்.  உண்மையில் இது குறித்து அவனுக்கு எந்தவித அபிப்பிரா...

துளி : 56 - சிறுகதையை கொண்டாடுவோம்

அழகியசிங்கர் கடந்த இரண்டாண்டுகளாக தினமணி சிவசங்கரி போட்டி வைத்து பரிசுக்குரியவார்களுக்கு நேரிடையாக பரிசு வழங்குகிறார்கள். சிறுகதைப் போட்டி வைக்கும் எந்தப் பத்திரிகையாவது இதுமாதிரி செயல்படுகிறதா?  இல்லவே இல்லை என்று சொல்ல வேண்டும். இன்று இரண்டாவது காட்சி அரங்கமானது.  பரிசுக்குரியவர்கள் எல்லோரையும் அழைத்து கவிக்கோ அரங்கத்தில் பெரிய கூட்டத்தைக் கூட்டிவிட்டார்கள்.   இதை வரவேற்க வேண்டிய ஒன்று என்று எனக்குத் தோன்றியது.  உண்மையில் சிறுகதைகளை கொண்டாடுகிறார்கள்.   ஒரே ஒருவரைத் தவிர பரிசுக்குரியவர்கள் எல்லோரும் வந்து விட்டார்கள்.  கவிக்கோ அரங்கம் முழுவதும் நிரம்பி விட்டது.  சிறப்புரை மாலன்.  பாராட்டுரை நீதியரசர் ஆர் மகாதேவன்.   போன ஆண்டு விட கதைகள் எண்ணிக்கை அதிகமாக வந்திருந்தாலும்,  குறிப்பிடும்படியான கதைகள் வரவில்லை என்றார் மாலன். ஆனால் உலகம் முழுவதும் கதை சொல்லும் முறையை உருவாக்க வேண்டும் என்று சொன்னார்.  தினமணிகதிர் ஆசிரியர் வைத்தியநாதன் பேசும்போது பள்ளி வகுப்பிலிருந்து எல்லாம் கதை சொல்லும் முறை வரவேண்டுமென்றார்....

பிரெஞ்சு இலக்கியமும் நானும் - 3

செவாலியர் விருதுபெற்ற வெ. ஸ்ரீராம் அவர்கள் 15.06.2019 அன்று பிரெஞ்சு இலக்கியமும் நானும் என்ற தலைப்பில் சனிக்கிழமை ஆற்றிய உரையின் கடைசிப் பகுதி ஒளிப்பதிவை வெளியிடுகிறேன்.  கண்டிப்பாக கண்டு மகிழவும்.   அழகியசிங்கர்

பிரெஞ்சு இலக்கியமும் நானும் - 2

செவாலியர் விருதுபெற்ற வெ. ஸ்ரீராம் அவர்கள் 15.06.2019 அன்று பிரெஞ்சு இலக்கியமும் நானும் என்ற தலைப்பில் சனிக்கிழமை ஆற்றிய உரையின் இரண்டாம் பகுதி ஒளிப்பதிவை வெளியிடுகிறேன். கண்டிப்பாக கண்டு மகிழவும். அழகியசிங்கர்

பிரெஞ்சு இலக்கியமும் நானும் - 1

செவாலியர் விருதுபெற்ற வெ. ஸ்ரீராம் அவர்கள் 15.06.2019 அன்று பிரெஞ்சு இலக்கியமும் நானும் என்ற தலைப்பில் சனிக்கிழமை ஆற்றிய உரையின் முதல் பகுதியை வெளியிடுகிறேன். அழகியசிங்கர்