அழகியசிங்கர் சில தினங்களாக திரும்பவும் திருக்குறளைப் படிக்க மறந்து விட்டேன். இன்று ஞாபகம் வந்தது. விருட்சம் நூலகத்தில் இருந்தபோது (நான் மட்டும்தான் நூலகத்தைப் பயன்படுத்துகிறேன்) என் கண்ணில் ஒரு புத்தகம் தட்டுப்பட்டது. ஐக்கூ வடிவில் திருக்குறள் கருத்துகள் என்ற புத்தகம். முனைவர் யு ஜெயபாரதி, முனைவர் ந தேவி, திருமதி சுபாஷிணி தயாரித்தப் புத்தகம். என்னடா இது என்று தோன்றியது. ஏற்கனவே எளிய வடிவில் திருக்குறள் இருக்கிறது. அதையும் தாண்டி இன்னும் எளிய வடிவில் ஒரு புத்தகமா? சரி நான் பேசப்போகிற குறளுக்கு ஐக்கூ வடிவில் திருக்குறள் எப்படி இருக்கிறது என்று புரட்டிப் பார்த்தேன். அரிய செயல் செய்பவர் - பெரியோர்! அவ்வளவுதான். ரொம்ப சுலபமாக ஐக்கூ எழுதி விட்டார்கள். ஆனால் குறள் இப்படி இருக்கிறது. செயற்கரிய செய்வார் பெரியார் சிறியர் செயற்கரிய செய்கலா தார். பலராலும் செய்வதற்கு அரியனவாகும் செயல்களைச் செய்பவர் பெரியார் என்றும் அவ்வாறு செய்ய முடியாதவர்கள் சிறியோர் என்றும் இக் குறள் கூறுகிறது. இதை ...