Skip to main content

Posts

'மேலும்' விமர்சன விருது

அழகியசிங்கர் பொதுவாக விமர்சர்களை யாரும் கண்டுகொள்வதில்லை.  ஆனால் üமேலும்ý ஆசிரியர் சிவசு ஒவ்வொரு ஆண்டும் விமர்சகர்களுக்குக் கௌரவம் அளிக்கிறார்.  இந்த ஆண்டு விமர்சன விருது பெறுபவர்கள்: க வை பழனிச்சாமி, வாசுதேவன், சண்முக விமல்குமார்.  மூவருக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.  வரும் 08.07.2018 ஞாயிறு காலை 10 மணியிலிருந்து மாலை வரை தமிழ்த் திறனாய்வில் இருபத்தொன்றாம் நூற்றாண்டின் புதிய போக்குகள் பற்றிய கருத்தரங்கமும் நடத்துகிறார்.  இக்ஷா மையம், எழும்பூரில் நடக்கும் இக் கூட்டத்திற்கு அனைவரும் வரும்படி கேட்டுக்கொள்கிறேன்.  ýகூட்டத்தின் முதல் அமர்வில் üபூக்கோவும் தொல்காப்பியரும்ý என்ற தலைப்பில் ராஜா அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்.  பூக்கோவையும் தொல்காப்பியத்தையும் எப்படி தொடர்பு படுத்திப் பேசப் போகிறார் என்பதை அறிய ஆவலாக உள்ளேன். கூட்டத்திற்கான அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளேன்.  

திருக்குறள் சிந்தனை 19

திருக்குறள் சிந்தனை 19 அழகியசிங்கர் கேள்வி கேட்பாளர் : ஏன் திருக்குறளை இப்போது படிக்கிறீர்கள்? அழகியசிங்கர் : திருக்குறளைப் பற்றி ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருந்தேன்.  அதுவரை திருக்குறளைப் பற்றி ஞாபகம் இல்லாமல் இருந்தேன்.  அக் கூட்டத்திற்குப் பிறகு திருக்குறளைப் படிக்க வேண்டுமென்று படிக்கிறேன். கே.கே : திருக்குறள் என்ன சொல்கிறது? அழகியசிங்கர் : திருக்குறளில் காணப்படும் சொல் நயமும், வார்த்தை ஜாலமும் என்னை ஆச்சரியப்பட வைக்கிறது.  அந்தக் காலத்தில் அவர் எழுதியதை இப்போது பொருத்திப் பார்க்க விரும்புகிறேன். கே.கே : தினமும் படிப்பீர்களா? அழகியசிங்கர் : படிக்க முடியுமென்று நினைக்கிறேன்.  கே.கே : மேலோட்டமாகவா ஆழ்ந்தா அழகியசிங்கர் : ஆழ்ந்துதான் படிக்க எண்ணி உள்ளேன்.  ஆழ்ந்துதான் திருக்குறளைப் படிக்க முடியுமென்று நினைக்கிறேன். கே.கே : உங்களை குறள் மாற்றியிருக்கிறதா? அழகியசிங்கர் : ஒரு குறள் மாத்திரிம் என் ஞாபகத்தில் இருந்துகொண்டே இருக்கும்.  அது எந்த அதிகாரத்தில் வந்திருக்கிறது என்று தெரியாது.   கே.கே : குறளை சொல்ல...

திருக்குறள் சிந்தனை 18

திருக்குறள் சிந்தனை 18 அழகியசிங்கர் காலையில் எழுந்தவுடன் மடிப்பாக்கம் சென்று விட்டேன்.  பெண் வீட்டிற்கு.  திருக்குறள் இன்று காலையில் படிக்கவில்லை.  இதோ இப்போதுதான் திருக்குறளை வைத்துக்கொண்டு படிக்கிறேன்.  மணி  மாலை 7.30 ஆகிவிட்டது.  -ஒரு கேள்வி என்னுள் எழுந்தது.  திருக்குறள் என்னைப் படிக்கிறதா? நான் திருக்குறளைப் படிக்கிறேனா என்று. 18வது குறள் இப்படிப் போகிறது. சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு வானம் வறண்டு மழை பெய்யாவிட்டால் சிறப்பாக வானோர்க்குச் செய்யும் பூசைகளும் நின்றுவிடும் என்கிறார் வள்ளுவர்.  நானும் மழையைப் பற்றி அதிகமாகக் கவிதைகள் எழுதியிருக்கிறேன். மழை 1, மழை 2, மழை 3 என்றெல்லாம் எழுதியிருக்கிறேன்.  இதில் மழை 1 என்ற கவிதையை மட்டும் இங்கு கொடுக்க விரும்புகிறேன். மழை பெய்தது தெரு நனைந்து மிதக்க இரண்டு பூனைக்குட்டிகள் இடுக்கில் குளிருக்குப் பயந்து தாய் மடியில் பதுங்க தாய்ப்பூனை குட்டிகளைப் பற்றி யோசனையில் கீழே  அப்பா பாட்டி தம்பி மூ...

திருக்குறள் சிந்தனை 17

அழகியசிங்கர் மழை பெய்யாவிட்டால் என்னன்ன ஆபத்துக்கள் காத்திருக்கும் என்று பத்து குறள்களில் திருவள்ளுவர் சொல்லிக்கொண்டே போகிறார்.   எப்படி மழையைப் பற்றி திருவள்ளுவர் அந்தக் காலத்தில் யோசித்தார் என்பது எனக்கு ஆச்சரியம்.  மழை இல்லாமல் வாரம் ஒருமுறை தண்ணீர் விலைக்கு வாங்கி பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் எங்கள் வீடுகளில்.  இன்றைய காலத்தில் திருவள்ளுவர் அவதரித்தால் இதையும் தன் குறளில் பாடிவிடுவார். நான் குறளில் வான்சிறப்பு படித்துவிட்டு எழுதிக்கொண்டிருப்பதால், திருவள்ளுவர் கருணையால் நேற்று இரவு நல்ல மழை.   இன்றைய குறளைப் பார்ப்போம்.   நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்துஎழிலி தான்நல்காது ஆகி விடின். மழைபெய்யாவிட்டால் கடல்நீரின் அளவுகூட குன்றிவிடும் என்கிறார்.  உண்மையில் கடல்நீரிலிருந்து உருவாகும் மேகம்தான் மழையாக உருமாறுகிறது.  மழையாக வராவிட்டால் கடல் கூட தன் வளத்தில் குறையும்.   இந்தக் குறளில் தடிந்துஎழிலி என்ற வார்த்தைப் பிரயோகம் பிடித்திருக்கிறது.   நவீன கவிஞர்கள் யாரும் மழையைப் பற்றி எழுதுவதில் சளைத்தவர...

திருக்குறள் சிந்தனை 16

திருக்குறள் சிந்தனை 16 அழகியசிங்கர் வள்ளுவர் சிலை அருகில்தான் சந்திப்போம்  ஞானக்கூத்தன் முன்னால் வந்து உட்கார்ந்து விடுவார்.  பின் நான், காளி-தாஸ், ஆனந்த், ராஜகோபாலன், ஸ்ரீனிவாஸன், வைத்தியநாதன் போன்ற நண்பர்கள்.  எல்லோரும் தமிழில் அப்போது எழுதுகிறவற்றைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்போம்.  அதெல்லாம் இனிமையான பொழுதுகளாக இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.  ஆத்மாநாமும் அடிக்கடி அங்கு வந்து சந்திப்பார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.  நான் இவர்களைச் சந்தித்தபோது ஆத்மாநாம் இல்லை.  இதில் வேடிக்கை என்னவென்றால் வள்ளுவர் சிலை அருகில் நாங்கள் சந்தித்தாலும் வள்ளுவர் குறித்துப் பேசியதில்லை.  ஒருமுறை கூட திருக்குறளைப் பற்றிப் பேசியதில்லை.  ஏன்?  இப்போது யோசித்துப் பார்க்கிறேன்.  காரணம் புரியவில்லை.   இன்றைய திருக்குறளைப் பார்ப்போம் விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண்பு அரிது. வானிலிருந்து மழையின் துளிகள் விழாவிட்டால் பூமியில் முளைக்கும் புல் பூண்டு கூட காண்பது அரிது என்கிறார் திருவள்ளுவர். ...

நீங்களும் படிக்கலாம் - புத்தக எண் : 42

அழகியசிங்கர்  அன்புள்ள மோஹினிக்கு, வணக்கம். கடந்த சில மாதங்களாக நான், நீங்கள், ஜெகன் மூவரும் சந்தித்துக்கொள்ள முடியவில்லை.   உங்களுக்கு உடல்நலம் சரியில்லை என்று அறிந்தேன்.  வயிற்றில்தான் ஏதோ பிரச்சினை என்று ஜெகன் குறிப்பிட்டார்.  உண்மையில் நாம் வயிற்றைத்தான் சரியாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.  இன்னொன்றும் ஜெகன் சொன்னார்.  இப்போது நீங்கள் பரவாயில்லை என்று.   நாம் மூவரும் ஒவ்வொரு முறையும் சந்தித்துக் கொள்கிறோம்.  அதோடு அல்லாமல் புத்தகங்களைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்.  யாராவது புத்தகங்கள் படிப்பதில் விருப்பமில்லாதவர்கள் நாம் பேசுவதைக் கேட்டால் பைத்தியம் பிடித்து ஓடிப்போய்விடுவார்கள்.  ஜெகன் சொன்னார் நீங்கள் முடிச்சூர் ரோடிலிருந்து வருவதாகவும் அவர் மடிப்பாக்கத்திலிருந்து வருவதாகவும்.  நீங்கள் இருவரும் அவ்வளவு தூரத்திலிருந்து என்னைப் பார்க்க வருவது மகிழ்ச்சிதான்.  நான் இதைக் கூட தெரிந்து கொள்ளாமல் இருந்தது தப்புதான்.  ஒரு முறை நானும் நீங்கள் இருக்குமிடத்திற்கு வருகிறேன். புத்தகங்களைப் ப...

திருக்குறள் சிந்தனை 15

அழகியசிங்கர் காலையில் எழுந்தவுடன் திருக்குறள் படிக்காமல் இருக்க முடியாது என்ற நிலை எனக்கு வந்து விட்டதுபோல் தோன்றுகிறது.  ஒரு நாளைக்கு ஒரு குறள் விதம்தான் படிக்கிறேன்.  அப்படிப் படிக்கும்போது நேற்று அதன் முதல் தினம் படித்தக் குறள்களையும் திரும்பவும் எடுத்துப் படிக்கிறேன்.   திருக்குறள் மூலம் நமக்கு என்ன கிடைக்கிறது.  வான்சிறப்பு என்ற பெயரில் ஒவ்வொரு குறளாக எடுத்துப் படித்துக்கொண்டிருக்கிறேன்.  மழை என்ற ஒன்று இல்லாவிட்டால், நம்மால் வாழவே முடியாது என்பதைக் குறள் அழுத்தமாக வலியுறுத்துகிறது. என் பள்ளி பருவத்தில் திருக்குறளைக் கண்டாலே எனக்குப் பிடிக்காது.  ஏன்னென்றால் நான் மனப்பாடம் செய்து தேர்வில் கேள்வி கேட்டால் எழுத வேண்டும்.  இப்படி மனப்பாடம் செய்து ஒப்பிப்பதை நான் விரும்பி ஏற்றுக்கொண்டதில்லை.  ஒன்றரை அடியில் அழுத்தம் திருத்தமாக தன் கருத்துக்களைச் சொல்வதோடல்லாமல் போதிக்கும் தன்மையாகவும் திருக்குறள் தென்படுகிறது.  ஒருவர் ஒரு திருக்குறளைப் படித்துவிட்டு அதை விட்டு வெளியே வரும்போது எந்த மன நிலையில் இருப்போம் என்பதையும் யோச...