அழகியசிங்கர் எனக்கு ம வே சிவக்குமார் பற்றி வட்டம் என்ற சிறுகதை கணையாழி இதழிலில் வந்தபோதே தெரியும். நான் அக் கதையைப் படித்தபோது என்ன ஜோல்னா பை வைத்திருக்கும அறிவு ஜீவிகளை கிண்டல் செய்திருக்கிறாரே என்று நினைத்தேன். அதன்பின் அவர் பேங்க் ஆப் பரோடா வங்கிக் கிளையில் பணிபுரிந்தபோது அறிந்திருக்கிறேன். அவர் அலுவலகம் பீச் ரயில் நிலையத்தின் எதிரில் இருந்தது. என்னுடைய அலுவலகம் அவர் அலுவலகத்திற்குப் பின்னால் இருந்தது. கடைசியாக அவரைப் பார்த்தது மயிலாப்பூர் சங்கீத சபாவில் அவருடைய புத்தக வெளியீட்டு விழாவின் போது. அப்போது அவர் பரபரப்பாகக் காணப்பட்டார். சமுத்திரகனி, எஸ் வி சேகர் போன்ற பிரபலங்கள் அக் கூட்டத்திற்கு வந்திருந்தார்கள். அப்போதுதான் தெரிந்தது அவர் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தார் என்று. அந்த முயற்சியை எஸ்வி சேகர்தான் தடுத்தார் என்பதையும் அக் கூடடத்தில் அறிந்து கொண்டேன். சிவாஜி மாதிரி நடித்து தானே படம் எடுத்து கொண்டு வரவேண்டும் என்ற அவர் ஆசையை அப்போது வெளியிட்டார். தூர்தர்ஷனில் தான் எழுதியது ...