அழகியசிங்கர் எங்கள் அலுவலகத்தில் மதியம் ஒன்றிலிருந்து, இரண்டு மணிவரை உணவு அருந்தப் போவோம். உண்மையில் அரைமணி நேரம்தான் உணவு இடைவெளி. நாங்கள் ஒரு மணிநேரம் எடுத்துக்கொள்வோம். இப்போது பிரபலமாக இருக்கும் யோகா வகுப்பில் என் அலுவலக நண்பர் என்னையும் சேர்த்துவிட்டார். நான் சொல்லும் இந்தக் கதை பத்தாண்டுகளுக்கு முன்பு நடந்தது. நான் யோகா கற்றுக்கொண்டு விட்டேன் என்ற கர்வத்தில் இருந்தேன். மதியம் சாப்பிடுவதற்கு முன் சூன்ய தியானத்தை ஆரம்பிக்க வேண்டும். ஒரு இடத்தில் கண்ணை மூடிக்கொண்டு கைகள் இரண்டையும் கோர்த்துக்கொண்டு உட்கார வேண்டும். பின் எந்த யோசனையும் இல்லாமல் இருக்க வேண்டும். வெளியில் நடக்கும் எந்தச் சப்தமும், அசைவும் மனதில் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதுதான் சூன்ய தியானம். கண்ணை மூடியவுடன் தத்ரூபமாய் ஆழ்ந்த யோக நிலையில் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். அலுவலகக் கட்டடத்தில் மூலையில் நான் கற்றுக்கொண்ட புதியதில் கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்துவிடுவேன். பெரும்பாலும் யாரும் என்னைப் பார்க்க முடியாத இடத்தில்தான் உட்கார்ந்த...