Skip to main content

Posts

தந்த கோபுரங்கள்   அரசானாலும் கம்பெனியானாலும் தந்தகோபுரத்தின் மீதிருப்பார்கள் உயர்நிலையதிகாரிகள் அவர்களின் தலைமுடியெப்போதும் ஆகாயத்தைத் தொட்டுக்கொண்டிருக்கும் ஏனென்றால் அவர்கள் நவீன வெள்ளைத்துரைகள் கோட்டு சூட்டோடு பிறந்தவர்கள் கோட்டுகளில் வசதிகளதிகம் உள்பாக்கெட்டுகள வெளிபாக்கெட்டுகள் நிறைய. அதிகாரிகளின் கண்களுக்கு அலுவலர்கள் புழுக்களாகத் தெரிவதால் கொட்டிக்கொண்டேயிருப்பார்கள். பிராணிகளாகத் தெரிவதால் மிரட்டிக்கொண்டிருப்பார்கள் மந்திரியை மோசடிப் பெருவணிகனை, சேலைகளை பார்த்த கணமே பல்வரிசை முழுக்கத் தெரியும். பூச்சாண்டியெல்லாம் ஆபீசில்தான் வீட்டில் ஆட்சி மதுரைதான். வருடமிருமுறை பழையகார்போய் புதுக்கார் வந்தாகவேண்டும். இல்லையென்றால் இல்லறம் இடியாப்பம்தான் ஐயாக்களின் லீலைகளத்தனையும் தனிச்செயலாளரெனக்கு அத்துபடி சிலர் போர்த்திப் படுப்பார்கள் சிலர் படுத்துப் போர்த்துவார்கள் மாற்றல்கேட்ட மணிமேகலையின் ...
அவர்களின் கதைகள் கதகதப்புக்காக மூட்டியத் தீயைச் சுற்றிக் கிழிந்த கம்பளிகள் பழைய சாக்குகளுக்குள் தமைக் குறுக்கிக் குழுமியிருந்தனர் கதை பேச. அவர்களுக்காகவே அவர்கள் புனைந்து கொண்ட கதைகளில் அவர்களுக்கு மட்டுமே திறப்பதாகக் கருவூலக் குகைகள் தற்காலிகமாகவேனும் வறுமையை மறக்க. அவர்களைத் தவிர எவராலும் விடுவிக்க முடியாத புதிர்களை ஆலோசித்து உருவாக்கிப் பெருமிதத்துடன் சிரித்துக் கொண்டார்கள் ஏளனங்களை மறக்க. அவர்களால் மட்டுமே அழிக்க முடிகிற அரக்கர்களையும் அவர்களை மட்டுமே நேசிக்கிற தேவதைகளையும் உலவ விட்டார்கள் ஒடுக்கப்படுவதையும் ஒதுக்கப்படுவதையும் மறக்க. மீளாத் துயருடன் நாளும் அக்கதைகளைக் கேட்டபடி அவர்களுக்காகவே மின்னிக் கொண்டிருந்தன.. ஆதிக்கவாதிகளால் நலிந்து அழிந்து போன அவர்களது உறவுகள், நட்சந்திரங்களாக வானத்தில். *** -ராமலக்ஷ்மி
எல்லாருக்குமான நதி எல்லாருக்குமான நதியாய் இருப்பதிலே தான் எப்பொழுதும் திருப்தி எனக்கு தாகம் தணித்துவிடவோ கறைகளை கழுவிடவோ பச்சைகளை செழித்து விடவோ கூரான கற்களை முனைமழுக்கிடவோ இறுமாந்திருந்த கற்களை துகள்களாக்கிடவோ கரைப்புரண்டு ஓடி கடலில் கலந்திடவோ தான் தீராமல் ஓடிக்கொண்டிருக்கிறேன் சில வேளைகளில் பிண்டங்களும் கீழத்தெருக்களின் எச்சில் இலைகளும் எருமைகளின் சாணக்கழிவுகளும் திருமணவீட்டின் எஞ்சிய விருந்தும் ஒன்றாகவே கலந்து மிதந்துவருகின்றன. இருந்தும் ஒவ்வொருவருக்கான நதியாகத்தான் என்னை எல்லாரும் பார்த்துக்கொண்டிருக்கின்றனர் - கவி.
க.நா.சு யார்? அழகியசிங்கர் சமீபத்தில் க.நா.சுவிற்கு ஒரு இலக்கியக் கூட்டம் நடந்தது.  அவரது நூற்றாண்டை ஒட்டி இக்கூட்டம் நடந்தது. நடத்தியது சாகித்திய அகாதெமி என்ற அமைப்பு. அதில் பேசியவர்களில் ஒருசிலரைத் தவிர பலர் க.நா.சு யார் என்று கேட்பவர்கள்.  சில ஆண்டுகளுக்கு முன் நான் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்தேன்.  அக்கூட்டத்தில் நான் ஒரு கட்டுரை வாசித்தேன்.  கட்டுரையின் தலைப்பு க.நா.சு யார் என்பதுதான்.  க.நாசு மட்டுமல்ல, இன்னும்கூட பல எழுத்தாளர்களை நாம் யார் என்றுதான் கேட்போம்.  மெளனி யார்?  புதுமைப்பித்தன் யார்?  சி சு செல்லப்பா யார்? ந.பிச்சமூர்த்தி யார்?  என்று பல யார்களை வைத்திருப்போம்.  தமிழர்களிடையே இதுமாதிரியான அவலமான நிலைக்கு ஏற்பட்டுள்ளது.  கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் நமது கேரளா அல்லது மேற்கு வங்காளம் சேர்ந்த மக்கள் எல்லாம் ஓரளவு அவர்களுடைய எழுத்தாளர்களைப் பற்றிய அறிவை தக்க வைத்திருக்கிறார்கள். சிசு செல்லப்பா மரணம் அடையும் தறுவாயில் அவரைச் சுற்றி அரசாங்கத்தில் பெரிய பதவியில் இருக்கும் முதலமைச்சர் வந்துகூடப் பார்க்கவில...
பந்தநல்லூரில் கிடைத்த பதவி உயர்வு அழகியசிங்கர் 7. நான் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தாலும் என் சிந்தனை முழுவதும் என் குடும்பத்தைப் பற்றியே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது.  நான் எடுத்த முடிவு சரிதானா என்றெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தேன்.  என் தம்பி எனக்கு போன் பண்ணி விஜாரித்தான்.  ''என்ன உனக்கு கலெக்டர் உத்தியோகமா கொடுத்துள்ளார்கள்.  ஏன் போகணும்னு ஆசைப்படறே? கீழே இருக்கிறவனும் உன்னை மதிக்க மாட்டான்.  அதேபோல் மேலே இருக்கிறவனும் மதிக்க மாட்டான்.  பெரிய சம்பளமும் கிடையாது. '' அவன் சொன்னது நூத்துக்கு நூறு உண்மை என்பதை நான் உணர்ந்தேன். இதை அங்கே சென்றபிறகுதான் உணர்ந்தேன்.  தம்பி பெரிய பதவியில் இருப்பவன்.   என் முட்டாள்தனத்தை நினைத்து பெரிதாக வருந்துவதைவிட வாய்விட்டுச் சிரித்தால் சரியாகிவிடும் என்று தோன்றும்  நான 50வது வயதை எட்டிக் கொண்டிருக்கிறேன்.  என் பெண்ணிற்கு திருமணம் ஏற்பாடு செய்து விட்டேன்.  ஆனால் திருமணம் நடக்கும் தருணத்தில் பெண்ணுடன் இல்லாமல் பந்தநல்லூரில் இருக்கிறேன்.   விடுமுறை எடுத்துக்கொண்டு வருவத...
 வீடு வந்த நாளிலிருந்து இந்த வீட்டில் நான்கு அறைகளிலிருந்தன இரண்டு கூடங்கள் பெரிதாக இருந்தன சமையல் செய்ய தாராளமான இடம் முகம் கழுவ பாத்ரூம் போக என பலருக்கும் இடங்கள் பரந்து வீற்றிருந்தன தேவையான நீர் எல்லோருக்கும் கிடைத்தது. தெரு முனையில் கடையில் எல்லாம் கிடைத்தன நின்றால் பஸ் எளிதாக வர பஸ் ஸடாண்டுகள் சில நாட்கள் மட்டும் வீட்டில் கூட்டம் நிரம்பி வழிந்தன ஒவ்வொருவராய்ப் போக கூட்டம் இல்லாமல் இருக்க வேண்டியவர்கள் மட்டும் இருந்தார்கள். கூடத்தில் கலகலவென்று பேசிய பேச்சுக் குரல்கள் முற்றிலும் அடங்கி விட்டன. இப்போது வீட்டில் நானும் வீடும்தான் பேசிக் கொண்டிருக்கிறோம். அழகியசிங்கர்.
சாகசம் கருவறைச் சிசுவின் தரையிறங்கும் தருணம் தாய்வசமில்லை. கொடியறுந்து தனியான மினிமனிதனுக்குப் பசி முதற்பாடம். முலைப்பால் ருசி தனிப்பெருங்கருணை. தேனீக்குப் பூ, மீனுக்கு மீன் மானுக்குப் புல், புலிக்கு மான் வேடனுக்குப் புலியென சங்கிலித்தொடர் ரகசியம் மூளைக்குளத்தில் பூ விரியும் ஆகாயத்தில் அந்தரவிளக்குகள் அகிலத்தில் இருள்விலக்கும் படைப்பு நுணுக்கமாய் திட்டமிட்டதுபோல. கண் காட்சி காணும் மனம் சிருஷ்டி ரகசியம் தேடும் கடவுள்துகளை விண்டு பார்க்கும் கண்டிராத முதல் கடவுள்துகளைத் தேடும் அண்டப்பெருவெளியளக்கும் சாகசம் நிகழ்த்தும் எறும்பு. \ லாவண்யா