Skip to main content

Posts

இரு கவிதைகள்

அவசரக் கூட்டம் உறுப்பினர் வருகை சந்தேகமே நாளை நடத்தலாம் அவசரக் கூட்டம் நாளை என்ன நடந்திடுமோ மறுநாள் ஒருநாள் கணக்கில் வை பிறிதொரு நாளும் காரியம் ரத்து நானும் நீயும் கூடிடலாம் இருவர் சூழலும் இணைய மறுப்பின் ஏண்டா இப்படி அபசகுனம்? தீர்மானங்கள் நிறைவேறும் கவலை வேண்டாம் மாவீரா கூட்டம் நடந்ததாய்க் கணக்கில் வை. அன்னம், கிளி, மயில், மேகம்.......ஆனந்த் நாய்க்குட்டியைத் தூதுவிட்டுநித்யாவைக் கவர்ந்தவன் யார் நம்ம சிவலிங்கம் ஜோடிக் கிளியைப் பரிசளித்து ராமகிருஷ்ணன் கவர்ந்துவிட்டது யாரை நம்ம மீனாட்சியை புத்திசாலிப் பசங்க இந்த மதன்தான் தப்பு செய்து விட்டான் கீர்த்தியைக் கவர்ந்திழுக்க ஆனந்த்தைத் தூதுவிட்டான் அபாயத்தில் குரைக்கவும் தெரியாத நெல்மணிகளைக் கொத்தவும் பயனிலாத அசட்டு ஆனந்தைக் கண்டவுடன் செருப்பைக் காடடினாள் கீர்த்தி செருப்பு விடு தூது பற்றி ஆனந்த் படித்த இலக்கியம் வாழ்வோடியைந்து போனதே மதன்.

என் இனிய இளம்கவி நண்பரே

அன்றைக்கு நீங்களும் நானும் சேர்ந்து குடித்தோம் வழக்கம்போல எப்பொழுதுமே நம் சந்திப்பு இப்படித்தான் தொடங்கும் (அனேகமாக இன்றைய தினம் குடிக்காத இளம்கவிஞர்களே இல்லைதான்) நிறைபோதையில் கட்டற்ற சுதந்திரவெளியில் மிதந்து கொண்டிருந்தோம் இதுதான் பிரச்னையே இல்லையா உங்களுக்கு ஏன்தான் அந்த யோசனை தோன்றியதோ அந்தத் தோழரின் வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போனதில் அரசியல் இல்லையென்று நம்பமுடியவில்லை ஒரு காலத்தில் நீங்கள் எல்லோரும் ஒன்றாக இருந்தவர்கள்தாம் உங்களை வைத்துத்தான் அவரைத் தெரியும் ஏற்கனவே தோழரும் குடித்திருந்தார் மேலும் நாம் குடித்தோம் ஏதோ ஒரு புள்ளியில் பேச்சுத் தொடங்கியது பிறகு அது சர்ச்சையாக மாறியது உங்களைவிடவும் அமைப்பு சார்ந்த அந்த இளம்கவிஞருக்குத் தரப்படும் முக்கியத்துவத்தை கேள்வி கேட்டிருக்கக் கூடாது நான் இது இயல்புதானே அவர்களுக்கு (கள்ளின் இன்னொருபெயர் உண்மைவிளம்பி தெரியுமா குடித்திருக்கையில் ஒளிவு மறைவு கிடையாது) தோழருக்கு நியாயம் பேசமுடியவில்லை தவிரவும் அவர் நிதானத்தில் இல்லை உங்களிடம் காட்டமுடியாத கோபத்தை என்னிடம் பிரயோகித்தார் புகைத்துக்கொண்டிருந்த சிகரெட்டை என்மேல் விட்டெறிந்தார் வேட்டி தீப...

சிறு கவிதைகள்

01 அழைத்துப் போய்வந்த ஆசிரியரின் அத்தனை கெடுபிடிகளுக்குப் பின்னும் இன்னமும் நினைவில் அந்த ஸ்கூல் பயணம் இன்பச் சுற்றுலா என்றே. o 02 இலவசமாய் அரிசி டிவி இயற்கை உபாதைக்கு கட்டண கழிப்பிடங்கள். o 03 எதிர்வரும் பேருந்தில் அடிபடும் அபாயம். இடப்புறம் நகர்ந்து நடந்தேன். இளவயது மாதொருத்தியை இடித்தபடி. o 04 யாருமற்ற பூங்காவில் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருக்கிறான் என் மகன். எவரையோ சேருமென்று கவிதைகள் எழுதிக்கொண்டிருக்கிறேன் நான். o 05 ஏதோவொன்றின் தொடர்பாகவே எதுவொன்றின் நினைவும்.

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்

11 விளையாடும் பூனைக்குட்டி க நா சு மல்லாந்து படுத்துக் கால்நீட்டிக் குறுக் கிக்கயிற்றின் நுனியைப் பல்லால்கடித் திழுத்துத் தாவி எழுந்து வெள்ளைப் பந்தாக உருண்டோடிக் கூர்நகம் காட்டி மெலிந்து சிவந்த நாக்கால் அழுக்குத் திரட்டித் தின்னும் பூனைக்குட்டி - என்னோடு விளையாடத் தயாராக வந்து நின்று, என் கால்களில் உடம்பைச் சூடாகத் தேய்த்துக் கொண்டு நிமிர்ந்து அறிவு ததும்பும் கண்களுடன் என்னைப் பார்க்கிறது. அப்போது நான் சிலப் பதிகாரம் படிந்திருந்து விட்டேன் பின்னர் நான் அதை விளையாட 'மியாவ் மியாவ் ஓடி வா' என்று கூப்பிடும் போது நின்று ஒய்யாரமாக ஒரு பார்வையை என் மேல் வீசிவிட்டு மீன் நாற்றம் அடிக்கும் கொட்டாவி விட்டுக்கொண்டே அடுப்படியிலே போய்ச் சுருண்டு படுத்துக்கொள்கிறது பூனைக்குட்டி (எழுத்து / ஏப்ரல் 1959)

இப்படி ஒரு பயணம் சி.மணி - (1936-1979)

சி.மணி மறைந்து விட்டார் நேற்று, என்று நண்பரும் விருட்சம் என்னும் சிறுபத்திரிகாசிரியருமான அழகியசிங்கர் தொலைபேசியில் சொன்னார். கொஞ்ச காலமாக அவர் உடல் நிலை சரியில்லாது இருக்கிறார் என்று க்ரியா ராம க்ரிஷ்ணனும் எனக்குச் சில மாதங்கள் முன் தொலைபேசியில் சொல்லியிருந்தார். ஐந்தாறு வருடங்களுக்கு முன் சேலத்தில் காலச்சுவடு நடத்திய சி.சு.செல்லப்பா - கு.ப.ராஜகோபாலன் பற்றிய கருத்தரங்கின்போது தானே நடக்க சக்தியில்லாத ஒரு தளர்ந்த முதியவரை கைத்தாங்கலாக ஹாலுக்குள் அழைத்து வந்து ஓர் இருக்கையில் அமர்த்தினர். பக்கத்தில் இருந்தவரிடம் (அனேகமாக சச்சிதானந்தமாக இருக்கவேண்டும்), "யார் அவர்?" என்று விசாரித்தேன். "யோவ், சி.மணிய்யா அது!" என்று என் அறியாமையை இடித்துப் பேசும் குரலில் அதிர்ந்து போனேன். உடனே அவரிடம் விரைந்து சென்று, என்னை அறிமுகப் படுத்திக்கொண்டேன். அவரது தளர்ந்த நிலை, என் அறியாமை, அதிர்ச்சி, என்னை அவருக்கு நான் அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டி வந்த நிலை எல்லாம் எல்லாம் ஒரு விதத்தில் சொல்லப் போனால், தமிழ் உலகம் தன்னை அறிமுகப் படுத்திக்கொள்ள வேண்டிய இன்றைய நிலையின் அன்றைய முன் அறிவிப்...

கவிதை புரிய வேண்டுமா வேண்டாமா

இரண்டு வாரங்களுக்கு முன் திரிசூலம் ரயில்வே நிலையத்தில் அமர்ந்திருந்தபோது எங்களுடைய முதல் கேள்வி கவிதை புரிய வேண்டுமா வேண்டாமா என்பதுதான். எங்களிடையே பலத்த சர்ச்சையை இந்தக் கேள்வி ஏற்படுத்தியது. என்னைப் பொறுத்தவரை கவிதை புரிய வேண்டும் என்ற கட்சியைச் சேர்ந்தவன். ஆனால் கவிதை மனதிலிருந்து எழுதுவதால் புரியாமல் போக வாய்ப்புண்டு. கவிதையை எழுதுகிற மனமும், கவிதையை வாசிக்கிற மனமும் வேறு வேறு தளங்களில் இயங்குபவை. அதனால் கவிதை புரியவில்லை என்று ஒரு வாசிப்பவன் சொல்லி கவிதையைத் தூக்கிப் போட்டுவிட முடியும். என் நண்பர்கள் சிலர் கவிதை புரியவில்லை என்றே சொல்லாதே என்று அறிவுரை கூறுவார்கள். ஏனெனில் கவிதை புரியவில்லை என்று சொன்னால் எழுதுபவர்களுக்குப் பெரிய கித்தாப்பு ஏற்பட்டுவிடும். ஆனால் கவிதை எளிதாகப் புரியவேண்டும் என்று பாரதியார் கூறியபடி எளிதாக பல கவிதைகளைப் படைத்திருக்கிறார். சிலசமயம் கவிதை புரியும் ஆனால் கவிஞர் என்ன சொல்ல வருகிறார் என்பது தெரியாது. அதனால் கவிதையைப் பொருத்தவரை இரண்டுவிதமான அபிப்பிராயங்கள் தோன்றாமல் இருப்பதில்லை. ஒன்று கவிஞரின் அபிப்பிராயம். இரண்டாவது வாசகனின் அபிப்பிராயம். எனக்குத் த...

நான்கு கவிதைகள்

கவிதை ஒன்று ஓடிக்கொண்டிருந்தது நதி. கரையில் அமர்ந்திருந்தேன். வெயில் தாழ குளித்துக் கரைமீண்டாய் நீ நதியின் சுழல், ஆழம், குளிர்மை z எனப் பேசிக்கொண்டே போனாய். ஓடிக்கொண்டிருந்தது நதி. கேட்டுக்கொண்டிருந்தேன் ஒரு முடவனைப் போல. ஏதோ ஒரு தருணத்தில் உன் தலை சிலுப்பில் பூ தூறலாய் விழுந்தது நதி என் மேலும். நீந்த முடியாத நதி. கவிதை இரண்டு அம்மா காத்திருப்பாள் அப்பாவிற்காக. மிடறு தண்ணீரும் கவளம் சோறும் இறங்காது. தகிக்கும் வெயிலில். வெறிச்சோடிய தெருவும். ஆண்டணா கம்பிகளும் - ஒதிய மரமும் மெளனமாய் அம்மாவைப் பார்த்துக் கிடக்கும் அம்மா காத்திருப்பாள் அரவமற்ற வெளியில் ஏதோ ஒரு தேவகணத்தில் மலரும் கருஞ்சிறகுகள் அம்மாவின் மனங்குளிர. கவிதை மூன்று விரிந்த வானம். யாரோ இறைத்துபோன தானிய மணிகள்போல இறைந்து கிடக்கும் நட்சத்திரம் - முற்றம் வழி கூடம் நிறைக்கும் நிலவு என்பதாய் இருந்தது அப்பாவின் இரவுகள் எனக்குக் கிடைத்தது துண்டு வானம் - முட்டம் இல்லாத நாளில் இரண்டொரு நட்சத்திரம் சாளரம் வழியே கொஞ்சம் நிலவு. உன் வீடுதான் காரணமென்றாலும் நீயும் சொல்லக்கூடும் என் வீடு உன் வானத்தை மறைப்பதை. கவிதை நான்கு மிகவும் அழகானது நீ உட...