கேள்வி கேட்பவர் : நான் பார்க்கிறவரையில் என் உடலில் எந்தத் தவறும் இல்லை அதேபோல் என் உண்மை சொரூபத்திலும். இரண்டுமே என்னுடைய தயாரிப்பு இல்லை. அதை மேன்மைப் படுத்தத் தேவையுமில்லை. எது தவறாக உள்ளதென்றால் 'உள் உடல்'. அதை 'மனம்' என்றோ, உள்ளுணர்வு என்றோ எப்படியெல்லாமோ குறிப்பிடலாம். மஹாராஜ் : உன் மனத்தைப் பொறுத்தவரை எது தவறு என்று கருதுகிறாய்? கே.கே : அது நிம்மதியில்லாமல் இருக்கிறது. மகிழ்ச்சியை அடைய பேராசை உடையதாக உள்ளது. அதேபோல் மகிழ்ச்சியற்ற நிலையை எண்ணி பயப்படுகிறது. மஹாராஜ் : மகிழ்ச்சியை நாடுவதிலும், மகிழ்சியற்ற நிலையை உதறுவதிலும் என்ன தவறு இருக்கிறது? துன்பம், மகிழ்ச்சி என்ற இரு கரைகளில்தான் வாழ்க்கை என்ற ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது. எப்போதும் மனம் வாழ்க்கையுடன் பயணிக்கத் தடுமாறும்போதுதான் அது கரைகளில் மாட்டிக்கொள்கிறது. அது ஒரு பிரச்சினையாக உருவெடுக்கிறது. வாழ்க்கையுடன் ஒன்றிப்போவதில் நான் குறிப்பிடுவது ஏற்றுக்கொள்வது என்ன வருகிறதோ அது வரட்டும், என்ன போகிறதோ அது போகட்டும் என்று. எதைப் பற்றியும் ஆசைப் படாதே, எதைப் பற்றியும் பயப்படாதே, எது எப்போது நடந்தாலும் ...