அன்றைக்கு நீங்களும் நானும் சேர்ந்து குடித்தோம் வழக்கம்போல எப்பொழுதுமே நம் சந்திப்பு இப்படித்தான் தொடங்கும் (அனேகமாக இன்றைய தினம் குடிக்காத இளம்கவிஞர்களே இல்லைதான்) நிறைபோதையில் கட்டற்ற சுதந்திரவெளியில் மிதந்து கொண்டிருந்தோம் இதுதான் பிரச்னையே இல்லையா உங்களுக்கு ஏன்தான் அந்த யோசனை தோன்றியதோ அந்தத் தோழரின் வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போனதில் அரசியல் இல்லையென்று நம்பமுடியவில்லை ஒரு காலத்தில் நீங்கள் எல்லோரும் ஒன்றாக இருந்தவர்கள்தாம் உங்களை வைத்துத்தான் அவரைத் தெரியும் ஏற்கனவே தோழரும் குடித்திருந்தார் மேலும் நாம் குடித்தோம் ஏதோ ஒரு புள்ளியில் பேச்சுத் தொடங்கியது பிறகு அது சர்ச்சையாக மாறியது உங்களைவிடவும் அமைப்பு சார்ந்த அந்த இளம்கவிஞருக்குத் தரப்படும் முக்கியத்துவத்தை கேள்வி கேட்டிருக்கக் கூடாது நான் இது இயல்புதானே அவர்களுக்கு (கள்ளின் இன்னொருபெயர் உண்மைவிளம்பி தெரியுமா குடித்திருக்கையில் ஒளிவு மறைவு கிடையாது) தோழருக்கு நியாயம் பேசமுடியவில்லை தவிரவும் அவர் நிதானத்தில் இல்லை உங்களிடம் காட்டமுடியாத கோபத்தை என்னிடம் பிரயோகித்தார் புகைத்துக்கொண்டிருந்த சிகரெட்டை என்மேல் விட்டெறிந்தார் வேட்டி தீப...