Skip to main content

Posts

Showing posts with the label தொகுப்பாளர் : அழகியசிங்கர்

பூனைகள்.....பூனைகள்.....பூனைகள்...27

பூனை ப.மதியழகன் ஆட்களை கண்டால் உற்று நோக்கும் மாயக் கண்களில் ஆயிரம் மர்மங்கள் புதைந்திருக்கும் அதுவும் கறுப்புப் பூனையைக் கண்டாலே மனசு விதுக்கென்று இருக்கும் நாய் வீட்டில் நல்லது நடக்கும் நாலுவாய் சோறு திங்கலாம் என்று நினைத்திருந்தால் பூனை எப்ப இழவு விழும் யாருமற்ற வீடாகும் என்று நினைக்கும் புழங்காத இடம் தேடியலையும் பூனை மனிதர்களும் உலகில் உண்டு பதுங்கிப் பாயும் புலியினமாயிற்றே பூனை!

பூனைகள்.....பூனைகள்.......பூனைகள்......26.

பூனைக் கவிதைகள் செல்வராஜ் ஜெகதீசன் 01 கடைசியாய் காரொன்றில் அடிபட்டு இறக்குமுன் அந்தக் கறுப்புப் பூனை முழித்தது யார் முகத்திலோ? o 02 திருடனொருவனை காட்டிக்கொடுத்த அடுத்த வீட்டுத் திருட்டுப் பூனைக்கு அதற்குப் பிறகும் அதே பெயர்தான். O 03 இருந்தும் கடந்தும் போயின எத்தனையோ. இன்னும் பல எங்கோ எப்படியோ இருந்து கடக்க. O

குட்டிக்கதைகள்

ஒரு தேதி அ வன் கதவைத் திறந்துகொண்டு படிக்கட்டில் உட்கார வந்ததுமே ஒரு பழுப்பு நிற பூனைக்குட்டி விருட்டென்று பாய்ந்தோடியது. சற்று நேரத்திற்கு முன்தான் மழை பெய்து ஓய்ந்திருந்தது. சுற்றிலும் ஈரம் புற்களும் சின்னஞ்சிறு செடிகளும் ஆங்காங்கே மழையில் பளிச்சென்றிருந்தன. சாலையின் இரண்டு புறங்களிளும் எதிரெதிராய் இரண்டு தெரு நாய்கள் ஒன்றையொன்று கடந்தன. மாலை மணி ஐந்திற்கே மணி ஆறுபோல் ஒளி மங்கியிருந்தது. வானத்தின் நீலம் முற்றிலும் மறைந்து கொஞ்சம் கொஞ்சம் இடைவெளி விட்டு மேகங்கள் திரண்டிருந்தன. அந்த இடைவெளியில் வெள்ளை நிற மேகங்கள் முன்முகம் காட்டிக் கொண்டிருந்தன. திடீரென்று பூனைக்குட்டி பக்கத்தில் வந்து அதனுடைய ஓசையை எழுப்பத் துவங்கிற்று. எட்டிப் பார்த்தான். உருண்டைக் கண்கள் இரண்டையும் விழித்தபடி அவனைப் பார்த்து கத்திக் கொண்டிருந்தது. அதனுடைய இடத்திற்கு தான் வந்து தொல்லை கொடுத்து விட்டோமோ என்று எண்ணினான். சிறிது நேரத்தில் பூனைக்குட்டி ஓடிப்போய் தூரத்திலிருந்து கத்திக் கொண்டிருந்தது. அவன் உட்கார்ந்த இடத்திற்குப் பின்னால் சிறிய கறுப்பு எறும்புகள் சென்று கொண்டிருந்தன. படிக்கட்டுகளில் இரண்டிர...

பூனைகள்.....பூனைகள்........பூனைகள் - 24

ஐயப்ப மாதவன் அணிற்பிள்ளைகள்...பூனைகள் மாமல்லன் தெருவில் அதிகம் பூனைகள் இருக்கின்றன பல்வேறு நிறங்கள் ஒவ்வொன்றுக்குள்ளும் ஒவ்வொரு விநோதம் சில அணில்பிள்ளைகளை கொன்று தின்கின்றன பசியின் வெறியோடு சில எஜமானர்களின் அன்பு பிடிக்குள் கிடைக்கும் எலும்புகள் அதிகம் கலந்த மாமிசத் துண்டுகளை முட்களோடு ஒட்டிய சிறிய சதைப்பகுதியோடு கூடிய மீன்களை உண்டு மகிழ்கின்றன அவனது மாடியில் எப்போதும் ஒரு பூனை சதா அலைந்துகொண்டு விசுவாசத்தின் அடையாளமாக மேலும் அவன் உதடசைவுகளுக்கு ஏற்றவாறு தன் நடத்தையை மாற்றியவாறு அவனை விரும்பும் அது ஒரு பெண் பூனை குரல்வழியே துரத்தும் ஓரிரு சமயங்களில் எதாவது தேவைப்படின் அப்புறம் படுத்துக்கிடக்கிறது நிலவின் நிழல்போல பெரிதாயிருந்த அதன் வயிற்றின் எடை குறைந்தவேளை அதைச் சுற்றி மூன்று சிறு குட்டிப்பூனைகள் அவனுக்கு பொறுப்பு கூடிவிட்டதாக் நினைத்துக்கொண்டான் மாடிக்கு வரும் தருணங்களில் அவற்றிற்காக எதாவது தருகிறான் அவ்வாறான பொழுதில் வன்மத்திலிருந்து ஒரு கிழட்டு ஆண் பூனை அங்கு வந்துவிட்டது அவன் அதை அங்கிருக்கும் பொழுதுகளில் விரட்டியடிக்க...

பூனைகள்.....பூனைகள்.......பூனைகள்.....பூனைகள்....23

தாரா கணேசன் அனாதை இல்லத்து சயாமிப் பூனைக்குக் கண்கள் குருடு அறை மூலை மென்னிருக்கையில் தன் அரூபக்கனவின் மீசைகள் துடிக்க கைகள் தந்து சந்தித்தது அது என்னை முதன் முதலாய் தூக்கியெடுத்து மீசையுரசிக் கொஞ்சித் திரும்ப பிரியத்தின் கண் இடுங்கச் சோம்பல் முறித்தது அங்குமிங்கும் அலைந்தன கண்ணாடி விழிகள் தேவதையின் இறக்கைகளுடன் கனவின் அடுக்குகள் ஒளிர மதில் மேல் சயனித்திருந்த அதன் கூவலில் கலைந்தது உறக்கம் மருண்ட பார்வையில் நானும் அதுவும் மயங்கி நின்றவள் துயருற்று நடுங்கும் மென்கரத்தால் கண்கள் சுழற்றி அதற்குப் பொருத்தினேன் அந்தப் பூனை பறவையாகிப் பறந்தது அன்றிலிருந்து இரவுகளில் பூனைக்குரலில் பேசும் பறவையொன்று பின் தொடர விநோதங்கள் நிறைந்த பூனைகளின் தீவில் அலைகிறேன் கோமேதகக் கண்களுடன்.

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்......20

மீனுவும் பூனையும் குமரி எஸ்.நீலகண்டன் மீனு அவளது அம்மாவிடம் அநியாயத்திற்கு கோபப்படுவாள். அம்மாவைப் பற்றியே அம்மாவைப் பிடிக்காதவர்களிடம் ஆயிரம் குசும்பு சொல்லி இருக்கிறாள் கணவன் ஏதாவது சொன்னால் பாம்பாய் படமெடுப்பாள் மாமியாரிடம் மணிக் கணக்கில் சண்டை போடுவாள் அவளை யாரும் குத்தம் சொன்னால் கொத்துகிற பாம்பாய் விஷத்தை பீய்ச்சுவாள் ஆனால் மீனு அவளது பூனையுடன் மட்டும் மிகுந்த அன்பு காட்டுவாள். அதற்கு நேரம் தவறாமல் பால் கொடுப்பாள் அதன் பஞ்சு போன்ற முதுகைத் தடவிக் கொடுப்பாள். அதனை ஷாம்பு போட்டு நாள் தவறாமல் குளிப்பாட்டுவாள். பூனையோடு கொஞ்சியும் விளையாடுவாள் பூனையின் காலில் ஏற்பட்ட சிறிய காயத்திற்காக அண்டை அயலாரிடம் ஐயோ பாவம் ஐயோ பாவமென துக்கித்து துவண்டு போனாள். எல்லோரும் அந்த பூனையை பதுங்கி பதுங்கி ஒரு திருட்டுப் பார்வையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்......18

பூனையாய்... புதுவை சீனு. தமிழ்மணி வீடில்லை பல்லாண்டுகளாக கட்டச்சொல்லி அலுத்துப் போனாள் - இல்லாள் 8 x 10 அளவுள்ள வீட்டில் இல்லாள், இருமகள்கள், வீடு முழுக்கப் புத்தகங்கள் எனப் படுக்கவும் முடியாத வீட்டில் பூனையொன்று வந்தது - மூன்று குட்டிகளோடு வாடகை வீட்டில் வாடகை இல்லாமல்

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்......18

த.அரவிந்தன் பிரசவம் --------------- பிரசவத்திற்காக வந்திருக்கிறது வெள்ளைப் பூனை. பரண் மேல் ஒண்டியிருக்கும் அதற்கு குளிரூட்டப்பட்ட அறையில் காற்றால் நிரம்பிய மெத்தையமைத்துக் கொடுக்கலாம் நாலைந்து மருத்துவர்களை எப்போதும் உடனிருக்க வைக்கலாம் பிரசவ வலி தெரியாதிருக்க அதன் தலையை, உடலைக் கோதி விடலாம் ஈன்று சோர்கையில் பெரிய வஞ்சீர மீனை உண்ணக் கொடுக்கலாம் பத்தொரு தாதிகளை நியமித்து குட்டிகள் உடலில் பிசுபிசுக்கும் பனிக்குட நீரைக் கழுவலாம் பால் காம்புகளை சிறு நேரமும் தேட விடாமல் முதல் பருகலுக்குத் துணை புரியலாம் நாய்கள் கழுகுகள் வாகனங்கள் நுழையாத கூரை வேய்ந்த மைதானம் அமைத்து அவற்றை விளையாட விடலாம் இன்னும் இன்னும் என் குழந்தைகளுக்குச் செய்வதுபோல என்ன வேண்டுமானாலும் செய்யலாம் அதற்கு முன்- என் மீதான அதன் நடுக்கத்தைப் போக்க என்ன செய்ய?

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்......17

பூனை ஆலா எலிமட்டும் பிடிப்பதில்லை எல்லோர் வீட்டிலும் பூனை பூரான், தேள், பல்லியென பசியெடுத்தால் நச்சுயிரியைப் பிடித்துத் தின்னும் எங்கள் வீட்டு வாசலில் ஒருநாள் கொம்பேறிமூக்கன் குட்டியொன்றை வாயில் கவ்வி வந்தது பூனை பின்னங்காலால் தூக்கியெறிந்து முன்னம் வேடிக்கைப் பார்த்தது. ஓடவிட்டு பாம்பைப் புரட்டி எடுத்தது துண்டாடித் துண்டாடித் தின்று தீர்த்தது பால் குடிப்பதும் பசிக்குச் சோறு தின்பதும் இயல்பல்லவே. யாரும் பார்க்காத நேரத்தில் குழித்தோண்டி மலம் மறைக்கும் இயற்கையின் எழில் உருவே பூனை புலியினம்தான் பூனையும் போனதெப்படி அதன் போர்க்குணம்? இந்தியாவில் ஒண்டி வாழும் தமிழர்களைப்போல் மரபணுவின் வீரம் மங்கி விட்டதோ அண்டிப் பிழைப்பது அழகல்ல ஆகவே எனக்குப் பூனையைப் பிடிக்காது புலியைப் பிடிக்கும்

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்......16

பூனை மழலை கல்யாண்ஜி சமீப வார நாட்களில் அலுவலகத்தில் பூனைச் சத்தம் அதிகமாகக் கேட்கிறது. உணவு இடைவேளையில் முன்பு ஒரே ஒரு பூனைதான் மீன் முள்ளுக்கும் மிச்ச மாமிசத்துக்கும் சாப்பாட்டு மேஜையைச் சுற்றிவரும். சேவை / வாடிக்கைக்கு மத்தியில் இருபுறமும் இருந்து சிந்துகிற வணிகமொழிக்கிடையில் பூனைக்குட்டிகளின் குரல் இப்படிக் கேட்பது புத்துணர்வு தருவதுதான் என்னைப் போன்ற ஒருவனுக்கு. எனினும் - அந்த ஒற்றைப் பூனையைப்போல இந்த மூன்றோ நான்கோ சாப்பாட்டு மேஜையடியில் பசித்துக் கெஞ்சுகிற காட்சியின் கற்பனை பதற்றம் கொள்ள வைக்கிறது ஒவ்வொரு பூனை மழலை ஒலிக்கும் போதும்.

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்......15

ஏழு ஜென்ம வதைப்படுத்தி எம்.ரிஷான் ஷெரீப் உன் மௌனத்தில் வலியுணர்த்தி எதுவும் பேசாமல் நின்று நின்று பார்த்தபடியே மெல்ல நகர்கிறாய் நீ காயப்பட்டவுன்னிதயத்துக்கு ஆறுதலாகவொரு துளிக்கண்ணீரோ ஒரு கண அரவணைப்போ தரவியலாத் துயரத்தோடு நான் எந்த நம்பிக்கையிலுன் சிறு ஜீவனை எனதூர்தியின் நான்கு சக்கரநிழலுக்குள் நீ வந்து உறங்கவைத்தாய் நசுங்கிச் சிதைந்தவுன் வாரிசின் சடலத்தைக் காணநேர்ந்த பிற்பாடும் எந்தவொரு அனல்பார்வையோ, சாபமிடலோ,வைராக்கியமோ இன்றி ஒதுங்கிப் பார்த்திருக்கிறாய் ஆறறிவாய் நீ கணங்களைச் சப்பிவிழுங்கும் பணியின் அவசரநிமித்தம் ஒரு நிமிடமொதுக்கி வண்டியின் கீழ்ப் பார்க்கமறந்து ஏழேழு ஜென்மத்துக்குமான வேதனையில் சிக்கித் தவிக்கும் ஐந்தறிவாய் நான்

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்......14

வித்தியாசமான மியாவ் சுந்தர ராமசாமி எனக்குத் தெரிந்த பூனை ஒன்று நேற்று இறந்தது. சவ அடக்கத்துக்கு நாங்கள் போயிருந்தோம். என் நண்பனின் மனைவி அழத் தொடங்கியபோது என் மனைவியும் அழுதாள். குழந்தைகள் அழுதன. சில வார்த்தைகள் பேசும்படி என் நண்பன் என்னைக் கேட்டுக்கொண்டான். நான் பேசத் தொடங்கினேன்: இந்தப் பூனையின் மியாவ் மியாவ் வேறு பூனைகளின் மியாவ் மியாவிலிருந்து வித்தியாசமானது மேலும்...

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள் 13 ......

சுகுமாரன் பூனை... மனிதர்கள் தவிர மற்ற பிராணிகளுடன் பழக்கமில்லை எனக்கு எனினும் உள்ளங்கைச் சூடுபோல மாறாத வெதுவெதுப்புள்ள பூனைகளின் சகவாசம் சமீப காலமாய்ப் பழக்கமாச்சு மயிலிறகை அடை வைத்த பருவத்தில் கால் குலுக்கக் கை நீட்டி விரல் கிழித்த பூனையால் 'மியாவ்' என்று நீண்ட நாள் பயந்தேன் இதயத்தின் தசையில் மனிதக் கீறல்கள் வடுவாக மிஞ்சிய இப்போது பூனைப்பயம் பொய்த்துப் போச்சு வீடு மாற்றியபோது புரிந்தது - நன்றியின் சொரூபம் நாய்களல்ல பூனைகள் நாய்கள் மாநிதரைச் சார்ந்தவை சுதந்திரமற்றவை எப்போதோ சிரட்டையில் ஊற்றிய பாலின் நினைவை இன்னும் உறிஞ்சியபடி காலி வீட்டில் பூனைக்குரல் குடியிருந்தது பூனைகள் வீடுகளைச் சார்ந்தவை சுதந்திரமானவை நாய்களின் பார்வையில் அடிமையின் குழைவு பூனையின் பார்வையில் நட்பின் கர்வம் உலர்ந்த துணியில் தெறித்த சொட்டு நீர் ஓசையுடன் நடக்கும் பூனைகளுடன் இப்போது பகையில்லை எனக்கு உடல் சுத்தம் சூழ்நிலைப் பராமரிப்பு ரசனையுள்ள திருட்டு காதல்காலக் கதறல் பொது இடங்களில் நாசூக்கு - என்று பூனைகளைப் புகழக் காரணங்கள் பலப்பல எனினும் என்னைக் கவரக் காரணங்கள் இரண்டு ஒன்று: எனக்குத் கடவுளுக்கும் வாகனமாய்ப...

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்......

12 பூனைகள் அழகியசிங்கர் மியாவ்வென்று ஸ்நேகமாய்க் கத்தாமல் குட்டிகளைப் பெற்றுக்கொண்ட பூனையொன்று என் வீட்டில் அதிகம் உபயோகப்படுத்த முடியாத அறையொன்றில் போய்க் குடியிருக்க அனுமதி கேட்கத் தவற குட்டிகளோ தாய்ப் பூனையுடன் சாமர்த்தியமாய்ச் சேர்ந்தடித்தன லூட்டி ஆளைக் கண்டால் பதுங்கும் பாவனை போனால் போகிறதென்று ஓட்டைக்கொட்டாங் குச்சியில் பாலை வைத்தால் நம்மெதிரில் குடிக்க வராமல் பதுங்கிப் பதுங்கி ஆளில்லா நேரமாய்த் தொட்டு கவிழ்க்கும் அவசரமாய் முகமெல்லாம் பால் துடிக்கும் இரவில் பூனைகளின் புணர்ச்சியின் சத்தம் குழந்தையின் அழுகையாய்க் காதிலறையும் கேட்டுத் தூக்கி வாரிப்போடும் தேகம் என்றோ ஒருநாள் நடந்தது குட்டிகளுடன் தாய்ப் பூனை வெளியேற்றம் வெள்ளை நிறத்தில் பூனையொன்று இன்னொரு நாள் வரக்கண்டேன் படுக்கை அறையில் சம்சாரக் கட்டிலில் பகல் பொழுதொன்றில் சொகுசாய்ப் புரளும் காட்சியைக் கண்டு பதறிப்போனேன். பார்ப்பதற்குப் பிடிக்காத குண்டுப் பூனையொன்று மாமிசம் விரும்பாத என் வீட்டில் மீன்களைக் கடித்துத் துப்ப அண்டை வீட்டாரின் தேவை இல்லாத மனவிரிசல்களுடன் நாற்றம் குடலைப் புடுங்கியது. அட்டகாசம் பண்ணும் பூனைகளே போய் வாருங்க...

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்

11 விளையாடும் பூனைக்குட்டி க நா சு மல்லாந்து படுத்துக் கால்நீட்டிக் குறுக் கிக்கயிற்றின் நுனியைப் பல்லால்கடித் திழுத்துத் தாவி எழுந்து வெள்ளைப் பந்தாக உருண்டோடிக் கூர்நகம் காட்டி மெலிந்து சிவந்த நாக்கால் அழுக்குத் திரட்டித் தின்னும் பூனைக்குட்டி - என்னோடு விளையாடத் தயாராக வந்து நின்று, என் கால்களில் உடம்பைச் சூடாகத் தேய்த்துக் கொண்டு நிமிர்ந்து அறிவு ததும்பும் கண்களுடன் என்னைப் பார்க்கிறது. அப்போது நான் சிலப் பதிகாரம் படிந்திருந்து விட்டேன் பின்னர் நான் அதை விளையாட 'மியாவ் மியாவ் ஓடி வா' என்று கூப்பிடும் போது நின்று ஒய்யாரமாக ஒரு பார்வையை என் மேல் வீசிவிட்டு மீன் நாற்றம் அடிக்கும் கொட்டாவி விட்டுக்கொண்டே அடுப்படியிலே போய்ச் சுருண்டு படுத்துக்கொள்கிறது பூனைக்குட்டி (எழுத்து / ஏப்ரல் 1959)

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்......

10 பூனையைப்போல அலையும் வெளிச்சம் குட்டி ரேவதி கதவுகளை ஓசைப்படாது திறந்து மழைபெய்கிறதாவென கைநீட்டிப் பார்க்கிறது வெளிச்சம் தயங்கியபடி பின் இல்லையென்றதும் மரவெளியெங்கும் நிழற்கடைவிரித்து கூடார முகப்பில் ஏறி அமர்கிறது வேடிக்கைப் பார்க்க பூமியெங்கும் பூனை உடலின் நிற அழகுகள் தனது நிழலே தன்னை தின்னத் துவங்கியதும் சரசரவென மரமிறங்கிப் பாய்கிறது மாடத்துச் சுடருக்கு மதில் சுவரென விடைத்து நிற்கும் இரவு முதுகின் மீதமர்ந்து கூடலின் பேரொளியை சுவீகரிக்கும் நிலவின் அகன்றவிழியால்

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்......

எஸ்.இராமநாதன் குழந்தை நள்ளிரவில் வந்த பூனை கண்டு, பரண் ஏறி அமர்ந்து கொண்டது அது- அதை விரட்டச் சொல்லி நச்சரிக்கும் இவள்முன் என் எல்லாச் சாமர்த்தியங்களும் தோற்றுப்போக, அநேகப் பூனைக்கதைகளைச் சொல்லத் இவள் பயம் உடைபட்டு குழந்தை தூங்கவென்று. நேரம் செல்லச் செல்ல தன் குட்டிக்குப் பால் கொடுத்துத் தூங்குகிற வளர்ந்த பெரிய பூனையாய் இவள் மாறக்கண்டு ஒடுங்கிப் போனேன் பயத்தில் நான்.

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்......

பாவண்ணன் பூனை காவல் பலிக்கவில்லை தினமும் பால்திருட் எதேச்சையாய்ப் பார்த்ததும் நின்று முறைக்கிறாய் முன்வைக்கவோ பின்வைக்கவோ உனது தந்திரம் புரியவில்லை துடிக்கும் மீசையில் கர்வம் கண்களில் கவியும் குரூரம் உடம்பில் புரளும் முறுக்கு உன் கண்களுக்கு எதுவாய்த் தெரிகிறேன் நான் எலியாகவா எதிரியாகவா @@ சாத்திய ஜன்னல்கள் நடுவில் கசியும் உன்குரல் இரக்கம் மிக்கது சோறு உனக்குப் பிடிப்பதில்லை கறி நான் சமைப்பதில்லை குழந்தையிருக்கும் வீடு பால் மிஞ்சினாலும் கொடுப்பதற்கில்லை நேற்றுவரைக்கும் உன் திருட்டின் ஆட்டத்தால் எச்சரிக்கையானது வீடு இன்றுமுதல் இன்னொரு வீட்டுக்குத் திருடப்போ @@ எச்சில் மீன் தலையைத் துப்ப என் வாசலா கிடைத்தது அதட்டலின் அர்த்தம் குழப்பிவிட்டது உன் நகங்களின் ஆத்திரப்பதிவில் பாதத்தில் கசியும் ரத்தக்கோடுகள் என்ன புரிந்து எகிறினாய் உன் மீன் எனக்கு இரையாகுமா என் வாசல் தூய்மை தவறாகுமா

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்......

த.அரவிந்தன் பூனையின் உலக இலக்கியம் --------------------------------------------------- எலி சாப்பிடாத ஒரு பூனையை எனக்குத்தெரியும் வீட்டிற்கு வரும் லியோடால்ஸ்டாய், அன்ரன் செக்கோவ், பியோதர் தஸ்தயேவ்ஸ்கி காப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸ், ஜோர்ஜ் லூயி போர்ஹே மரீயாலூயிஸு பொம்பல், மார்கெரித் யூர்ஸ்னார், இஸபெல் அலெண்டே, நவ்வல் அல் ஸுதவி நதீன் கோர்டிமர், ஆல்பெர் காம்யூ, ஆஸ்கர் ஒயில்ட் - எனச் சகலரின் எழுத்தையும் படிக்கும் மழையில் நனையும் ஒரு பூனைக்குட்டி மீது பரிதாபம் கொள்ளும் பெண் பற்றி எர்னஸ்ட் ஹெமிங்வே எழுதிய 'மழையில் பூனை' * சிறுகதையை ஒருகுளிர்காலத்தில் சொன்னதிலிருந்து அந்தப் பூனைக்குக் கட்டுப்படாத பூனைகளே இல்லையாம் உச்சிவெயில் ஒழுகிக்கொண்டிருந்த சன்னலோரம் ஒருநாள் சினுவா ஆச்சிபி "சிதைவுகள்' நாவலின் இருபதாம் அத்தியாயத்தைப் படித்துக் கொண்டிருந்தபோது எதேச்சையாய் அதனிடம் கேட்டேன்: 'திருட்டுத்தனமாய் நீ எலிகளைச் சாப்பிடுகிறாயாமே' வீட்டிற்கு வருவதையே நிறுத்திவிட்டது. * தமிழில்: திலகவதி

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்......

8 பூனை........ காசியபன் எங்கிருந்தோ ஓடி வந்து என்னுடன் குடியிருந்த அழையாத விருந்தே எங்களில் ஒன்றாகி இங்கிதோ என்னைப் புல்கி அன்பிலொன்றி நிற்கின்றாய். பொன்வெள்ளி பகட்டும் பஞ்சுரோம மார்தவமும் கண்களில் குறும்பும் பேசாத பேச்சும் கேட்காத கேள்வியும் மெளனம் மெளனத்துக்கு விடை கொடுக்க அந்தரங்க இரகசியங்கள் மின்னாக கலக்கும் உன் குழந்தை முகத்தூய்மையில் காலம் தரும் ஞானமெல்லாம் கண்டு வியக்கின்றேன் உன் பூனை நடையினிலே சலனத்தின் தத்தவமும் வாலின் நெறியினிலே வாழ்க்கையின் கதியும் வண்ண வேற்றுமையிலே பிரபஞ்ச பிரிவுகளும் நன்றாக உணருகின்றேன் அடுக்களை பாலும் படுக்கையறை கரப்பும் கலவறை எலியும் மரத்து ஓணானும் நீயும் நானும் போல உன் நெடுநாளையத் தொந்தம் நேற்றின்று வந்ததன்று.